Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

மாத்திரைகளை இப்படி சாப்பிடக் கூடாது!


Discussions on "மாத்திரைகளை இப்படி சாப்பிடக் கூடாது!" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    மாத்திரைகளை இப்படி சாப்பிடக் கூடாது!

    மாத்திரைகளை இப்படி சாப்பிடக் கூடாது!


    காபியோ, டீயோ, ஜூஸோ... எதனோடும் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சிலருக்கு வழக்கம். `எதோட முழுங்கினாலும் மாத்திரை உள்ளத்தானே போகப் போகுது’ என நினைப்பவர்களுக்குத்தான் இந்தத் தகவல்!``ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை போன்ற சிட்ரஸ் வகை பழங்களின் சாறுகளோடு மாத்திரைகளை சாப்பிடக் கூடாது.

    உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஒவ்வாமை மற்றும் நாள்பட்ட நோய்கள் உடையவர்கள் இந்தப் பழச்சாறுகளோடு மாத்திரைகளை சாப்பிடும்போது அதன் செயல்திறன் குறைவதாக கனடா நாட்டைச் சேர்ந்த மேற்கத்திய பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது’’ என்று இந்திய மருத்துவ கழக செயலாளரும் மருத்துவருமான கே.கே.அகர்வால் எச்சரிக்கிறார்.

    ``சிட்ரஸ் பழச்சாறுகளோடு மாத்திரைகளை சாப்பிடும்போது ரத்தத்தின் அமில-கார தன்மைகள் மாற்றமடைவதால் மாத்திரையின் தன்மைகள் கிரகிக்கப்படுவது குறைகிறது” என்கிறார் கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் கழக இயக்குநரும், மருத்துவருமான எஸ்.கே.சாரின். மேலும் தகவல்கள் அறிய கல்லீரல் மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் விளக்கமாக கேட்டோம்...

    ``சிட்ரஸ் வகை பழங்களின் சாறுகளோடு மாத்திரைகளை சேர்த்து சாப்பிடுவதால், மாத்திரைகளின் செயல்திறன் குறையும். அந்தப் பழங்களில் உள்ள சிட்ரஸ் அமிலம், ரத்தத்திலுள்ள அமில-கார சமநிலைத் தன்மையை மாற்றமடையச் செய்வதே அதற்கு காரணம். வாய் வழியாக சாப்பிடும் மாத்திரைகள் அனைத்தும் நமது இரைப்பையில் உள்ள நீர், அங்கு சுரக்கும் அமிலங்கள், கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், கணையத்தில் சுரக்கும் நொதிகள் போன்றவற்றால் ஜீரணமடைந்து ரத்தத்தில் கலக்கிறது.

    ரத்தத்தின் மூலமாக உடல்பாகங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு நோய்களை குணப்படுத்துகிறது. சிட்ரஸ் அமிலமானது குறிப்பிட்ட சில மருந்துகளின் செயல்திறனைக் குறைப்பதால், அந்த நோய் குணமடைவது தள்ளிப்போகிறது. சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே மாத்திரைகளை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவதே சரியான வழிமுறை.

    அதுமட்டுமல்ல மாத்திரைகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்த சந்தேகங்களை, அந்த மாத்திரைகளை பரிந்துரைத்த மருத்துவரிடம் தெளிவாக கேட்டு சாப்பிடலாம். மருந்தகங்களில் உள்ளவர்களுக்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிடும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்கிறார் மருத்துவர் ஜாய் வர்கீஸ்.


    Similar Threads:

    Sponsored Links
    ahilanlaks likes this.

  2. #2
    ahilanlaks's Avatar
    ahilanlaks is online now Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,221

    Re: மாத்திரைகளை இப்படி சாப்பிடக் கூடாது!

    Very nice sharing

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter