Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 4 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By safron

செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாதி&#


Discussions on "செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாதி&#" in "Health" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாதி&#

    அன்று விறகு அடுப்பில் சமைத்தார்கள். அதற்கேற்றவாறு மண்பாண்டங்கள், இரும்பு, தாமிரம் என்று பலவகை பாத்திரங்கள் இருந்தன. இன்று காஸ் அடுப்பு, இண்டக்‌ஷன் அடுப்பு என்று சமைக்கும் முறையே பெரிதும் மாறிவிட்டது. சமைக்கும் பாத்திரங்களும் மாறிவருகின்றன. இவற்றில் சமீபகாலமாக செராமிக் பாத்திரங்கள் பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன. இது குறித்து உணவியல் நிபுணரான ஜனனி கூறியதாவது, "அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்பு நான்ஸ்டிக் பாத்திரங்கள் பிரபலமானதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் வந்தது. இப்போது நான்ஸ்டிக்கின் அடுத்த வெர்ஷனாக செராமிக் பாத்திரங்களை வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    நாம் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பீங்கான் பாத்திரத்தைத்தான் ஆங்கிலத்தில் செராமிக் பாத்திரம் என்கிறார்கள். செராமிக் பாத்திரத்தில் பல சாதகமான விஷயங்கள் இருக்கின்றன. பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்கும். அலுமினியப் பாத்திரம், இரும்பு போன்ற உலோகங்களைப் போல அல்லாமல், செராமிக் பாத்திரங்களில் சமைக்கும்போது பாத்திரத்தின் வெப்பம் சீராக இருக்கும். நீண்ட நேரமாக, அதிக வெப்பத்தில் அசைவ உணவு போன்றவற்றை சமைப்பதற்கும் செராமிக் பொருத்தமானது.
    Molten glass powder என்ற கண்ணாடி மூலப்பொருளை வைத்துத்தான் செராமிக் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.



    அதிக வெப்பத்தைத் தாங்கிக் கொள்வதற்குக் காரணம் இந்த
    Molten glass powder தான். செராமிக் பாத்திரம் துருப்பிடிக்காது என்பதும் மற்றொரு பலம். பாலீஷ் செய்யப்பட்டிருப்பதால் சமைத்த பிறகு சுத்தம் செய்வதும் எளிது. நான்ஸ்டிக் பாத்திரங்களில் புற்றுநோய் அபாயம் கொண்ட Teflon, PFOA போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதால், அவற்றைத் தவிர்த்துவிட்டு செராமிக் பாத்திரங்களை சமீபத்தில் அதிகமாக வெளிநாடுகளில் பயன்படுத்துகிறார்கள். அதற்காக, செராமிக் பாத்திரத்தில் பிரச்னையே இல்லை என்று சொல்லிவிட முடியாது.

    செராமிக் பாத்திரத்தின் பளபளப்புக்காக லெட், காட்மியம் போன்ற ஹெவி மெட்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நாட்களாக செராமிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், உணவில் இந்த ஹெவி மெட்டல்கள் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த கோட்டிங் இல்லாத செராமிக் பாத்திரங்களும் வர ஆரம்பித்திருக்கின்றன. கிடைத்தால் அதையும் பயன்படுத்தலாம். நான்ஸ்டிக் பாத்திரங்களில் எண்ணெய் சேர்க்கக் கூடாது என்று சொல்வார்கள். அதற்கு எதிராக, செராமிக் பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்காமல் சமைக்கக் கூடாது என்கிறார்கள்.

    ஆனால், எண்ணெய் இல்லாமல் சமைப்பதற்காகத்தான் செராமிக் பாத்திரங்களையே உருவாக்கி இருக்கிறார்கள். ஒருவேளை பாத்திரம் நீண்ட நாட்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக சொல்வார்கள் என்று நினைக்கிறேன். நாம் கவனமாகப் பயன்படுத்தும்போது எண்ணெய் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்மைப் பொறுத்தவரை எவர்சில்வர் பாத்திரங்கள் ஓரளவு பாதுகாப்பானவை. நிக்கல், குரோமியம் போன்ற வேதிப்பொருட்களின் கலப்பு இருந்தாலும், அவை மிகவும் குறைவான அளவிலேயே இருக்கின்றன. அதனால் எவர்சில்வர் பாத்திரங்கள் அவ்வளவு தீங்கு இல்லை.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாதி&#-cook-n-home.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    48,910

    Re: செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாதĬ

    Hmm Ellathulayum Merits & demerits Undu thane.. BTW Good Sharing Kaa!

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாத&

    Quote Originally Posted by gkarti View Post
    Hmm Ellathulayum Merits & demerits Undu thane.. BTW Good Sharing Kaa!
    Yeah right Karthi, thanks

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    Re: செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாதĬ

    Good sharing sis
    Thank you

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  5. #5
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    Re: செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாதĬ

    Good sharing sis
    Thank you

    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: செராமிக் பாத்திரங்களில் சமைத்தால் பாத&

    Quote Originally Posted by safron View Post
    Good sharing sis
    Thank you
    Welcome Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter