மறதி பிரச்னையை தடுக்கும் வைட்டமின் ஈ!


ஆக்சிடேஷன் எனப்படும் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனானது உடலுக்கு எதிரான பொருளாக மாறும் தன்மையைத் தடுக்கும் ஆற்றல், இந்த வைட்டமினுக்கு உண்டு. அதனால் இதை மிகச் சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் என்று சொல்வார்கள். சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கவும், புறஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து சருமத்துக்கு நிறம் கூட்டி பாதுகாப்பு அளிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், வயதானவர்களுக்கு அல்சீமர் எனப்படும் மறதிநோய் பாதிப்பைத் தடுக்கும் ஆற்றலும் வைட்டமின் ஈ-க்கு உண்டு. ஒரு நாளைக்கு 15 மி.கி. வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. ஆனால் ஒருவரால் 55 சதவிகிதம் அளவுக்குத்தான் பெற முடிகிறது.

வைட்டமின் ஈ உணவு சமைத்தலின்போதும், உணவு பதப்படுத்தும்போதும் எளிதில் மறையக்கூடியது. விதைகள், சூரியகாந்தி விதை, எண்ணெய், கீரை, பாதாம், வால்நட் மற்றும் பப்பாளி, கிவி போன்ற பழங்களில் வைட்டமின் ஈ உள்ளது.Similar Threads: