Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By kirubajp

Best Foods to Eat in the Morning - காலையில் என்ன சாப்பிடலாம்?


Discussions on "Best Foods to Eat in the Morning - காலையில் என்ன சாப்பிடலாம்?" in "Health" forum.


  1. #1
    kirubajp is offline Penman of Penmai
    Blogger
    Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    திருவாரூர்
    Posts
    48

    Best Foods to Eat in the Morning - காலையில் என்ன சாப்பிடலாம்?

    காலையில் என்ன சாப்பிடலாம்?

    அதிகாலை கண் விழித்தவுடன் சில ஆரோக்கியமான வழிகளை பின்பற்றினால் தான் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம்.

    விழித்தவுடன் சுத்தமான தண்ணீர் இரண்டு டம்ளர் அருந்தினால் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
    குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
    கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.
    பாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம்.
    வெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும்.
    தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.
    எதைத் தவிர்க்க வேண்டும்?

    காலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
    மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
    இவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.
    அதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.
    வெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக்கூடியதுமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.







    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and Mythilibabu like this.
    ஜோ கி

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,690

    Re: Best Foods to Eat in the Morning - காலையில் என்ன சாப்பிடலாம்?

    Worth sharing Kiruba, thanks much for sharing.


  3. #3
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Commander's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    1,158

    Re: Best Foods to Eat in the Morning - காலையில் என்ன சாப்பிடலாம்?

    அருமையான பகிர்வு காலை உணவு மிகவும் முக்கியமானது அவசியமானது கூட அதை முறையாக எடுத்தால் ஆரோக்யமாக இருக்கலாம். பகிர்வுக்கு நன்றி நம்பியே.


    DURGA DEVI

  4. #4
    cuteynila is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    chennai
    Posts
    131

    Re: Best Foods to Eat in the Morning - காலையில் என்ன சாப்பிடலாம்?

    useful Info....


  5. #5
    kanikadugal011 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Ludhiana
    Posts
    144

    Re: Best Foods to Eat in the Morning - காலையில் என்ன சாப்பிடலாம்?

    Eat fruits only


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter