Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?


Discussions on "வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,906

    வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

    வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?
    'பெரும்பாலான நோய்களுக்கு மூலக்காரணமே வெறும் காலில் நடப்பதுதான். வீட்டிற்குள் ஒன்று, வெளியே ஒன்று எனத் தனித்தனி செருப்புகளை உபயோகிப்பது நல்ல பழக்கம்தான். அதே நேரம், வெளியே சென்று வரப் பயன்படுத்தும் செருப்பை வீட்டில் பயன்படுத்துவதுதான் பெரும் ஆபத்து.

    சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இனம் தெரியாத பல நோய்கள் படையெடுப்பதற்கும் இதுவே காரணம். காலில் ஆணி, மரு, பித்தவெடிப்பு போன்றவை இருந்தால் அது இன்னும் பெரியதாகி, பிரச்னையை ஏற்படுத்தும். வைரஸ் தொற்று, காலில் நகச்சுத்தி போன்றவை ஏற்படும்.

    அதிலும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்குக் கால் பராமரிப்புதான் முக்கியம். காலில் காயம் ஏற்பட்டால், சீக்கிரத்தில் ஆறாது. அவர்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கு என்று, பிரத்யேகமாக விற்கக்கூடிய வி.சி.ஜி மற்றும் வி.சி.ஸி போன்ற செருப்புகளைத்தான் உபயோகிக்க வேண்டும். தப்பித் தவறி அசுத்தமான செருப்புகளுடனோ அல்லது வெறும் காலுடனோ நடந்தால் தேவை இல்லாத பிரச்னைகளைச் சந்திப்பதோடு, சில சமயங்களில் காலை எடுக்கக்கூடிய அபாய நிலையும் ஏற்படலாம்.

    வீட்டு வாசலில் தொடங்கி, தோட்டம் வரை வீட்டின் ஒவ்வோர் அறைக்கும் தனித்தனி மிதியடிகளை உபயோகிப்பதன் மூலம், செருப்பில் இருக்கும் தூசுகள் மிதியடிகளில் படிந்து எளிதில் சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன், வீட்டிற்கு வெளியிலேயே செருப்பைக் கழற்றிவிடவேண்டும். கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி செருப்பில் ஒட்டி இருக்கலாம். இதுவே, உடலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். செருப்பை அதற்கு உரிய இடத்தில் வைத்து கை, காலினை நன்றாகக் கழுவ வேண்டும்.

    பாத்ரூமிற்கு என்று தனியாக செருப்பைப் பயன்படுத்துவது நல்லது. இதையும் பாத்ரூம் அருகிலேயே தனியாக வைத்துவிடுங்கள். அதனை மற்ற அறைகளுக்குள் கொண்டு போவதால், அலர்ஜி, ஆஸ்துமா, இடைவிடாத தும்மல் போன்றவை வந்து பாடாய்ப்படுத்தும். மேலும், அலர்ஜியால் வாந்தி, பேதி, காய்ச்சல் எனத் தேவை இல்லாத நோய்களும் வர வாய்ப்பு உண்டு.'' என்கிறார் டாக்டர் ரவிசந்திரன்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 8th Sep 2016 at 09:09 PM.
    gkarti and ahilanlaks like this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,723

    Re: வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

    Correct! Good Sharing Lakshmi..


  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

    Good sharing Lakshmi sis, enga vittula ellorukum thani thaniya garden slippers, bathroom slippers then vittukulla vera slippers nu irukkum.

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter