உங்கள் பாதத்தின் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டியவை!

பாதங்கள் மொத்த உடலையும் தாங்குகிறது. ஆனால் பாதத்தை எத்தனை பெர் நாம் கணுகொள்கிறோம். அதிக அழுக்குகள் , கிருமிகள் படிவது முதலில் அங்குதான்.

ஆனால் நாம் எத்தனை பேர் குளிக்கும்போது பாதத்தை தேய்த்து குளிக்கிறோம். பாதங்களி
ல் பொதுவாக சில நோய்கள் தாக்கும் . அவை என்னென்ன, எப்படி பாதுகாக்கலாம் என தொடர்ந்து படியுங்கள்.

கால் ஆணி :
அழுக்கான இடங்களில் , ஈரமான பகுதிகளில் வெறுங்கால்களில், நடக்கும்போது , பாதத்தில் உண்டாகும் பாதிப்புதான் கால் ஆணி. இது (hpv) என்ற வைரஸ் தொற்றினால் உண்டாவது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கும். ஆகவே அழுக்கான இடங்களில் சாக்ஸ் அணிந்து கொள்வது பாதுகாப்பு தரும்.

குதிகால் வலி :
சர்க்கரை வியாதிகாரர்களுக்கு இந்த பாதிப்பு அடிக்கடி வரும். குதிகால்களில் வீக்கம், வலி, மற்றும் கூசுவதைப் போன்ற உணர்வு.

இதற்கு இறுக்கமான ஷூ அணிவதால் நரம்புகளில் உண்டாகும் அழுத்தமே வலி, கூசும் தன்மை போன்றவற்றை தருகிறது.

இன்னொரு முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்கம். குறைவான சக்தி நிறைந்த உணவை சாப்பிடும்போதும் இந்த பிரச்சனைகள் உண்டாகும்.

பாத தசை தளர்ச்சி :
சிலருக்கு 30 வயதை தாண்டியதும் பாதம் அகன்று பெரிதானது போலிருக்கும். இதற்கு பாதத்திலுள்ள தசைகள் தளர்ச்சி அடைந்து விரிந்து பெரிதாகவும் சிலருக்கு வீக்கமகாவும் காணப்படும்.

இதற்காக கவலைப்படதேவையில்லை. நிறைய மினரல் மற்றும் நார்சத்து நிறைந்த உணவுகளிய சாப்பிடும்போது இறுக்கமடையும். இது முக்கியமா
கர்ப்பிணிகளுக்கு உண்டாகும்.

பாதத்தில் நாற்றம் :
சிலருக்கு வியர்வை மற்றும் பேக்டீரியாக்கள் கலந்து பாதத்தில் விரும்பத்தகாத நாற்றத்தை உண்டு பண்ணும். அதிகம் வியர்ப்பவர்களுக்கு இவ்வாறு உண்டாகும்.

இதற்கு எளிய தீர்வு தேநீர் தூளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரில் பாதத்தை அமிழ்த்துங்கள். இவை வியர்வை சுரப்பியை சுருங்கச் செய்யும். கிருமிகளையும் அழிக்கும். நாற்றம் உண்டாகாது.


பாத கட்டை விரல் வலி :
சிலருக்கு பாதத்திலுள்ள கட்டை விரல் வீக்கம்டைந்து தாங்க முடியாத வலி உண்டாகும்.

அதிக நேரம் ஷூ அல்லது பாதத்தை இறுக்கமாக மூடிய வகையில் அணிந்து கொள்ளும் காலணிகளால் அங்கே கட்டை விரலிலுள்ள எலும்பு பாதிக்கப்பட்டு வலி உண்டாகிறது.

இதனை குண்ப்படுத்த, கால் கட்டைவிரலின் கணுவில் இருக்கும் பந்து போன்ற மூட்டு பகுதியில் 10 நொடி அழுத்துங்கள். பின் சில நொடிகள் கழித்து மீண்டும் செய்யவும். இவ்வாறு 5 முறை செய்யுங்கள். வலி குறையும்.
Similar Threads: