தொண்டையில் எரிச்சல்

''பொதுவாகத் தொண்டையில் எரிச்சல் வருவதற்குக் காரணம் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் தொண்டையை நோக்கி வருவதே.

வயிற்றின் உட்பக்கத்தில் உள்ள சதையின் செயல் இழப்பினால் இந்த அமிலத்தின் இடப்பெயர்வு நடைபெறுகிறது.

பெரும்பாலும் இதற்கானக் காரணம் அல்சர்தான்.

காரமான உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே அல்சர், தொண்டை எரிச்சல் போன்றவை வருவது இல்லை.

டீ, காபி, தயிர், பால் போன்ற பால் பொருட்களில் உள்ள லாக்டிக் அமிலமும் கூடுதல் அமிலத்தை வயிற்றுக்குள் சுரக்கச் செய்யும். அதிகப்படியான இந்த அமிலம்கூட வயிற்றின் உட்புறச் சதையை செயல் இழக்கவைக்கும்.

தொடர்ச்சியாகப் புகை பிடிப்பது, மது அருந்துவது, தினமும் அதிக நேரம் பயணம் செய்வது, பீட்சா, பர்கர் போன்ற மைதா மாவால் தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதுபோன்ற காரணங்களாலும் தொண்டை எரிச்சல் ஏற்படலாம்.

அதிக மன அழுத்தத்தினாலும்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

இதைத் தடுக்க சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். குறிப்பாகப் பழ வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

தொண்டை எரிச்சலுடன் எடை இழப்பு, பசியின்மை, மலம் கழிக்கும்போது ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகளும் உங்களுக்கு இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துகொள்ளுங்கள். ஏனென்றால், வயிற்றில் புண் இருந்தால், எச்.பைலோன் என்ற பாக்டீரியா வளர்ச்சி அடைந்து புற்றுநோயை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. இதைக் கண்டறிய 'எண்டோஸ்கோப் பரிசோதனை’ தேவை என்பதால், உடனடியாக மருத்துவரை அணுகுவதே நல்லது.''

Similar Threads: