இப்படியும் வரும் புற்றுநோய்!

புகை பிடிப்பதாலும், சுற்றுச்சூழலாலும் புற்றுநோய் வருகிறது என்றே பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், தினசரி நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாலும் புற்றுநோய் வருகிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

முன்பெல்லாம் வீடுகளில் எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாகப் பயன்படுத்திவந்தோம்.

கால மாற்றம் காரணமாக இப்போது பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இவற்றில் இருக்கும் கார்சினோஜென் என்கிற வேதிப் பொருள்தான் புற்றுநோயை உண்டாக்கக் காரணியாக இருக்கிறது என்கிறார்கள்.

அதேபோல் மினரல் வாட்டர் பாட்டில்களையும் எல்லோரும் பயன்படுத்திவருகிறோம்.

உலகச் சுகாதார நிறுவனம், 'தண்ணீரை அடைத்துவைத்துக் குடிப்பது தீங்கானது, பெரும்பாலான மினரல் வாட்டர் பாட்டில்கள் தரமற்ற பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுகின்றன என்பதால் மினரல் வாட்டர் பாட்டில்களில் இருக்கும் கார்சினோஜென்னாலும் புற்றுநோய் வரும் என்று தெரிவித்து இருக்கிறது.

Similar Threads: