Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes

Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்


Discussions on "Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்" in "Health" forum.


  1. #21
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேக வைத்து, மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலி இருக்காது

    சின்ன வெங்காயத்தைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சி அடையும்

    மெனோபாசை நெருங்கும் பெண்களுக்கு சில சமயம் முடி கொத்து கொத்தாக உதிர்ந்து சிறுசிறு சோட்டைபோல் தலையில் தோன்றும். அதைப் போக்க கரிய பவழத்தை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) அரைத்து, அந்த விழுதை சோட்டையில் தடவி வந்தால் சில நாட்களில் சோட்டை இடத்தில் பழையபடி முடி வளரத் தொடங்கிவிடும்


    Sponsored Links

  2. #22
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    சர்க்கரை வியாதி
    36. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

    சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

    குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.


  3. #23
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    . மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்

    இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

    *

    கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்

    . பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.


    . சிரங்கு தொல்லையா?

    சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்

    தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

    . இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.

    சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.


    வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

    பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

    தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

    கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.


  4. #24
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.


    . மெலிந்த உடல் பருக்க

    1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

    2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

    3. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

    4. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

    5. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

    6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

    7. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.


    *

    . இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

    *

    . சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

    *


  5. #25
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    . வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.


    . காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

    . உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.


    காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.


    மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.


    . இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

    . சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.


  6. #26
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    இலைகளின் மருத்துவ பயன்கள்!

    * வாழை இலை: தினமும் வாழை இலையில் சாப்பிட, கண் பார்வை பலப்படும். உணவின் சுவை கூடும்.

    * வில்வ இலை: இத்துடன் மிளகு 4 சேர்த்து மென்று தின்று, தண்ணீர் குடிக்க ஆஸ்துமா மட்டுப்படும்.

    * செம்பருத்தி இலை: இலையினை பச்சையாக அரைத்து தலைக்கு தேய்த்துக் குளிக்க, தலைமுடி சுத்தமாகும். தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துவர, முடி மிருதுவாகும்.

    * முருங்கை இலை: வதக்கிச் சாப்பிட, இரும்புச் சத்து கிடைக்கும். தாய்ப்பால் பெருகும்.

    * பாகல் இலை: பாகல் இலையுடன், உப்பு மஞ்சள் சேர்த்து சொறி சிரங்குகளுக்குப் பூச, குணமாகும்.

    * மணத்தக்காளி இலை: கூட்டு செய்து சாப்பிட, வாய்ப்புண் குணமாகும்.

    * கருவேப்பிலை: வதக்கியோ, பச்சையாகவோ துவையல் செய்து சாப்பிட கண்களுக்கு நல்லது. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவர முடி கருகருவென வளரும்.

    * துளசி இலை: தண்ணிரில் போட்டுப் பருக இருமல் கபம் குறையும். புத்துணர்ச்சி ஏற்படும்.

    * மருதாணி இலை: குளிர்ச்சி தரும். மஞ்சளுடன் அரைத்துப் பூச பித்த வெடிப்பு, சேற்றுப் புண் குணமாகும்.

    * வெற்றிலை: விரைவில் ஜீரணம் ஆகும். இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து கிடைக்கும்.

    * கீழா நெல்லி இலை: அரைத்து வெறும் வயிற்றில் குடிக்க, மஞ்சள் காமாலை குணமாகும்.

    * வேப்பிலை: கொழுந்தாக எடுத்து, அரைத்துக் குடிக்க வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும். சிறந்த கிருமி நாசினி!

    * கற்பூரவல்லி இலை: சூடாக்கி நெற்றியில் பற்றுப் போட, சளி குணமாகும்.
    * முடக்கத்தான் இலை: நீரில் கொதிக்க வைத்து நீரைப் பருக வாயுப் பிடிப்பு நீங்கும்.

    * குப்பைமேனி இலை: இத்துடன் உப்பு சேர்த்து அரைத்து, சொறி சிரங்குகளுக்குப் பூச, குணம் தெரியும்.

    * நொச்சி இலை: வெந்நீரில் போட்டு, குளிக்க, உடல் வலி நீங்கும்.

    * நித்தியமல்லி இலை: இந்த இலைகளோடு, சிறிது மஞ்சள் சேர்த்து விழுதாக்கி, வெண்ணெய் கலந்து முகத்தில் தடவி, சிறிது ஊறிய பின், அலம்ப, பருக்கள் மறையும்.


  7. #27
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    தொலைதூரப் பிரயாணம் செல்லும் போது, தேவையான உடமைகளுடன் மருந்துகளையும், மருத்துவரின் தொலைபேசி எண்ணையும் எடுத்துச் செல்வது நல்லது. செல்லும் இடங்களில் மருந்துகள் கிடைக்காமல் போனாலோ, நெருக்கடியான சமயங்களிலோ மருத்துவரைத் தொடர்பு கொள்ள உதவும்.

    பருவமடைந்த பெண்களுக்கு இரவில் மண் பானையில் பாசிப் பருப்பை ஊறவைத்து காலையில் பச்சையாகச் சாப்பிடக் கொடுத்து, பால் கொடுக்க வேண்டும். உடல் உஷ்ணம் குறைவதோடு கருப்பை வளர்ச்சிக்கும் இது உதவும்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்று உடனே குணமாகாவிட்டால், வேறு மருத்து வரிடம் போகக் கூடாது. மீண்டும் அவரிடமே செல்ல வேண்டும். மருத்துவரை மாற்றிக் கொண்டே இருந் தால் சிகிச்சை பலனளிக்காது; நோயின் தீவிரம்தான் அதிகரிக்கும்.

    சின்னக் குழந்தைகளை ஆரம்பத்தில் வெறுங் காலுடன் நடக்க பழக்குவதுதான் நல்லது. தரையில் கால் விரல்களை ஊன்றி அவர்கள் தடுமாற்றமின்றி நடக்க ஆரம்பித்தபின் ஷூ அணிவிக்கலாம்

    உயரமான அல்லது மிருதுவான தலையணையைப் பயன்படுத்துவது கழுத்து வலிக்கு, சர்விகல் ஸ்பான்டிலைடிஸுக்கு வழிவகுக்கும். அதைத் தவிர்க்க அதிக உயரம் இல்லாத கெட்டித் தலையணையைப் பயன்படுத்தலாம்.

    கணு அன்று சிவப்பு சாதம் கலக்க சுண்ணாம்பு, சோப் பயன் படுத்துவதைத் தவிர்த்து, கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும். சுண்ணாம்பு கலந்த சாதம் பற வைகளுக்கு கெடுதல் ஏற்படுத்தலாம்

    விக்கலை நிறுத்த முடியவில்லையா? ஒரு டீஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு அது கரையும் முன்பே விழுங்கவும். மணலாகத் தொண்டைக்குள் இறங்கும் சர்க்கரை, அங்குள்ள நுண்ணிய நரம்பு முனைகளை வருடி, விக்கலுக்குக் காரணமான ஃப்ரீனிக் என்னும் நரம்பை அமைதிப் படுத்துவதால் விக்கல் விரைவில் நின்றுவிடும்

    மருந்து, மாத்திரை வாங்கும் போது மருத்துவர் பரிந்துரைத்த முழு அளவையும் வாங்காமல் ஓரிரு வேளைக்கு மட்டும் வாங்கலாம். மருந்து உடலுக்கு ஒவ்வாமல் அலர்ஜி ஏற்பட்டால், மருத்துவரிடம் உடனே சென்று மாற்று மருந்து பெறுவதோடு, வீண் செலவையும் குறைக்க முடியும்.


  8. #28
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், முதன்முறையாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் முன், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். அதேபோல், உரிய பயிற்சியாளரின்றி சிரமமான ஆசனங்களைச் செயக்கூடாது.

    அரிசி உப்புமா, பிடி கொழுக்கட்டை செய்யும்போது அரிசி ரவைக்குப் பதிலாக கோதுமை ரவையை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து உபயோகித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாகும்.

    தினமும் ஒருமுறையாவது தரையில் அமர்ந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். தரையில் உடட்கார்ந்து எழுவது யோகா செய்வதுபோல். தொந்தியும் போடாது. எங்கும் போனாலும் டைனிங் டேபிள் இருக்கும் என எதிர்பார்க்க முடியாதே.

    அசைவ உணவை உண்டபின் சிறு துண்டு வெல்லம் அல்லது எலுமிச்சை சர்பத் சாப்பிடுவது செரிமானத்தைத் துரிதப்படுத்தும்.

    இரவில் நன்றாக உறங்க உங்கள் தலையணையைத் தலையிலிருந்து கழுத்துவரை பதியும் விதமாக அமைப்பாக வைத்துப் படுக்கவும்.

    தூதுவளை இலையின் முட்களை நீக்கிவிட்டு, அதனுடன் நான்கு மிளகை வைத்து மடித்து வெற்றிலை போல மென்று சாப்பிட்டால், இரண்டே நாளில் மார்புச் சளி கரையும்.

    வெள்ளைப் பூசணி சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்து சாப்பிட்டால் உடல் இளைக்கும்

    வெறும் வரட்டு இருமல் படுத்திக் கொண்டே இருந்தால், இரண்டு அல்லது நான்கு மிளகை வெறுமனே வாயில் போட்டு மென்று, அதன் சாறை விழுங்கினால் இருமல் கட்டுப்படும். அல்லது மிளகைப் பொடியாக்கி, பாலில் கலந்தும் குடிக்கலாம்

    நரம்புத் தளர்ச்சிக்கு மனமே 75% காரணமாகிறது. உடல் 25%தான். எனவே, மனத்தில் கவலை, உளைச்சலின்றி அமைதி குடி கொண்டிருக்கும் விதத்தில் வாழ பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.


  9. #29
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

    2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

    3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

    4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

    5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

    6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

    7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

    8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

    9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


  10. #30
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,020

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    பெண்களுக்காக...


    10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

    11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

    12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

    13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter