Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes

Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்


Discussions on "Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்" in "Health" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,050

    Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    அசிடிட்டிக்கு உண்டான மாத்திரை, மற்றும் ஜெலு சில், டைஜின் போன்ற மருந்து மாத்திரைகளை, சாப்பிடும் முன் அரை மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். அப்போதுதான் காலி வயிற்றில் மருந்து ஒரு கோட்டிங் கொடுக்கும்.-

    கிராம்பு, கடுக்காய், இலவங்கப் பட்டை தலா பத்து கிராம் எடுத்து, வறுத்துப் பொடித்து ஒரு டீஸ்பூன் பொடிக்கு ஒரு டீஸ்பூன் நெய் கலந்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    Migavum arumaiyaana kurippugal. Idu pondra pala arumaiyaana kurippukalai thodarnthu tharungal.


  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    Quote Originally Posted by vijigermany View Post
    அசிடிட்டிக்கு உண்டான மாத்திரை, மற்றும் ஜெலு சில், டைஜின் போன்ற மருந்து மாத்திரைகளை, சாப்பிடும் முன் அரை மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். அப்போதுதான் காலி வயிற்றில் மருந்து ஒரு கோட்டிங் கொடுக்கும்.-

    கிராம்பு, கடுக்காய், இலவங்கப் பட்டை தலா பத்து கிராம் எடுத்து, வறுத்துப் பொடித்து ஒரு டீஸ்பூன் பொடிக்கு ஒரு டீஸ்பூன் நெய் கலந்து சாப்பிட சீதபேதி குணமாகும்.
    nice tips viji, thanks for sharing......



  4. #4
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,050

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    கம்பளிபூச்சி கடி

    கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்க்க அரிப்பு குறையும்.

    முருங்கை இலையை அரைத்து ப*ற்றுப்போட* க*ம்பளிப் பூச்சி க*டித்த* இட*த்தில் அரிப்பு குறையும்.

    கம்பளிபூச்சி கடித்த இடத்தில் வெற்றிலையை சாறு வரும்படி அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.

    சீரகக் குடிநீர்

    சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

    சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

    இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

    ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

    கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

    சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

    வல்லாரை குடிநீர்

    எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

    இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

    காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

    இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.


  5. #5
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,050

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்


    கீரைகளின் மருத்துவ குணங்கள்

    நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரைகளின் மருத்துவ குணங்கள்

    அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

    காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.

    சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.

    பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும்.

    கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

    மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.

    குப்பை கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.

    அரைக்கீரை ஆண்மை பெருக்கும்.

    புளியங்கீரை சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.

    பிண்ணாக்கு கீரை வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.

    பரட்டைக் கீரை பித்தம், கபம், நோய்களை விலக்கும்.

    பொன்னாங்கன்னி மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.

    சீமைப்பொன்னாங்கன்னி மேனியை மினு மினுப்பாக்கும்.

    சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.

    வெள்ளை கரிசலைக்கீரை ரத்த சோகையை நீக்கும்.

    முருங்கைக் கீரை நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.

    வல்லாரை மூளைக்கு பலம் தரும்.

    முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

    பண்ணக் கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும்.

    புதினாக் கீரை ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.

    நஞ்சு முண்டான் கீரை விஷம் முறிக்கும்.

    தும்பை அசதி, சோம்பல் நீக்கும்.


  6. #6
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,050

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    கல்யாண முருங்கை கீரை சளி, இருமலை துளைத்தெறியும்.

    முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும்.

    பருப்பு கீரை பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.

    புளிச்ச கீரை கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.

    மணலிக்கீரை வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.

    மணத்தக்காளி கீரை வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.

    முளைக் கீரை பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.

    சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.

    வெந்தயக் கீரை மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத,
    காச நோய்களை விலக்கும்.

    தூதுவளை ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.

    தவசிக் கீரை இருமலை போக்கும்.

    சாணக் கீரை காயம் ஆற்றும்.

    வெள்ளைக் கீரை தாய்ப்பாலை பெருக்கும்.

    விழுதிக் கீரை பசியைத் தூண்டும்.

    கொடி காசினி பித்தம் தணிக்கும்.

    வேலைக் கீரை தலைவலியை போக்கும்.

    துயிளிக் கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.

    துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

    கார கொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

    மூக்கு தட்டை கீரை சளியை அகற்றும்.

    நருதாளி கீரை ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.

    மேலே குறிப்பிட்ட சில கீரை வகைகளில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால்
    உடலுக்கு சிறு தீங்கு விளைவிப்பவைக்கு உதாரணம்,

    அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.

    பிண்ணாக்கு கீரை வாத கரப்பான் வரும்.


  7. #7
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,050

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    தேன் வகைகளும் மருத்துவ பயன்களும்

    மலைத்தேன்:

    • மலையில் கிடைக்கும் தேன் காசம், விக்கல், கண் விரணம், சுரம், தேகக்கடுப்பு ஆகியவற்றை நீக்கும். இது மருந்து அனுபானங்களுக்கு உதவும். சிறந்த திறனும் உண்டாகும்.

    கொம்புத்தேன்:

    • மாமரம் முதலான மரக்கொம்புகளில் கட்டுகின்ற தேன் திரிதோஷங்களையும், உள் மாந்தத்தையும், அரோசகத்தையும் நீக்கும்.

    மரப்பொந்து தேன்:

    • அதிக வெப்பத்தை உண்டாகும். மந்தம், பலவித விக்கல், அரோசகம், இருமல், சுவாசகாசம், ரோகம் ஆகியவை குறையும்.

    புற்றுத்தேன்:

    • புற்றில் கட்டும் தேன் கப தோஷம், இருமல், ஈளை, வாந்தி, கண் நோய் ஆகியவை குறைக்கும்.

    புதுத்தேன்:

    • புதிய தேனினால் நிறைந்த ஆயுள், உடல் பளபளப்பு உண்டாகும். உடல் வெப்பம் பெறும்.

    பழைய தேன்:

    • இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடைய பழைய தேனானது வாத ரோக கூட்டத்தையும், வயிற்று எரிச்சலையும், வாத மூல ரோகத்தையும் உண்டாக்கும். மருந்தின் நல்ல குணங்களையும் கெடுக்கும்.

    இவை அனைத்தும் தேனின் பல வகைகளும், அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளும் ஆகும். இதை கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான தேனை மட்டும் சாப்பிட்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.


  8. #8
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,050

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    பசு, எருமை, ஆடுகளின் மோர் மற்றும் தயிர் ஏற்படும் நன்மை, தீமைகள்

    பசு தயிர்

    • பசியை உண்டாக்கும். இசிவு , அஜீரணம், தாகம், மயக்கம், காசம், உடல் எரிச்சல் ஆகியவற்றை குறைக்கும்.

    எருமைத்தயிர்:

    • உடல் எரிச்சலும், பித்த கோளாறும் நீங்கும். கரப்பான், கபம், வாத நோய், புத்தி மந்தம் உண்டாகும். கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்.

    வெள்ளாட்டு தயிர்:

    • அதிக சூட்டை உண்டாக்கும். இந்த ஏடு மந்தத்தை உண்டாக்கும்.

    செம்மறியாட்டு தயிர்:

    • கரப்பான், சொறி, மூலக்கடுப்பு, இரத்தமூலம், வாதம் முதலியன அதிகரிப்பதோடு, உடலுக்கு துன்பம் நேரிடும்.

    பசுவின் மோர்:

    • வீக்கம், வயிற்று வலி, பித்தம், கோபம், பேதி, அக்கினி மந்தம், அதிக வெப்பம் ஆகியவை குறையும். சில மருந்துகளால் உண்டாகும் நோய்கள் குறையும்.

    எருமை மோர்:

    • தாகம், ரோகம், சிறுநீர் கழிச்சல், காமாலை, கிருமி ஆகியவை நீங்கும். போக இச்சை உண்டாகும்.சிறந்த மனிதர்களுக்கு கெடாத அமுதம் ஆகும்.

    வெள்ளாட்டு மோர்:

    • பிரமேக நோயை குறைக்கும்.

    ஒட்டகத்தின் மோர்:

    • பித்த, வாத தொந்தரவுகளை குறைத்து அமைதிப்படுத்தும்.



  9. #9
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,050

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    மரத்தின் பிஞ்சு வகைகள் மற்றும் அவற்றின் மருத்துவ நன்மை, தீமைகள்

    வாழை பிஞ்சு:

    • துவர்க்கின்ற வாழைப்பிஞ்சுக்கு இரத்த கடுப்பு, இரத்தமூலம், அதிக அளவில் சிறுநீர், வயிற்று கோளாறுகள் ஆகியவற்றை போக்கும்.

    பலா பிஞ்சு:

    • தாகமும், பித்தம் நீங்கும். சலம், மந்தாக்கினி, குன்மம் ஆகியவை உண்டாகும்.

    அத்தி பிஞ்சு:

    • மூல வாயுவும், இரத்த மூலமும், வயிற்று கடுப்பும் நீங்கும்.

    முருங்கை பிஞ்சு:

    • பக்குவம் செய்து தோலுடன் சாப்பிட்டால் சுரம், எலும்பை உலுக்குகிற வெப்பம், விந்து நஷ்டம் ஆகியவை நீங்கும்.

    நாரத்தங் கச்சல்:

    • இதை போஜன கஸ்தூரி என்று கூறுவர். இவற்ரால் சீதளம், அரோகம், வயிற்று பொருமல், கிருமி ஆகியவை நீங்கும். சுக்கில தாதுவும், தீபாக்கினியும் உண்டாகும். உணவை அதிகம் உட்செலுத்தும்.

    மாதுளம் பிஞ்சு:

    • மலம், சீதம், கலம், இரத்தம் ஆகிய பற்பல அதிசார ரோகங்கள் அகலும்.

    முகிழ் விரியாத கத்தரி பிஞ்சு:

    • இதனால் சுரம், பித்த தாஷம், கபம் ஆகியவை நீங்கும். மலம் இளகி இறங்கும். குரல் தொனி வலிமையாகும்.

    அவரை பிஞ்சு:

    • இரவு உணவுக்கும், மருந்து சாப்பிடுபவர்களுக்கும் நல்லது. வாதாதி முத்தோஷமும், விரணம், சுரம் ஆகியவை குறையும்.

    மாம் பிஞ்சு:

    • இதை சூதப்பிஞ்சு என்றும் கூறுவர். மாம் பிஞ்சால் கிளைத்த வாதாதி முத்தோஷங்கள், அரோசகம், சர்த்தி அக்கினி மந்தம் ஆகியவை குறையும்.

    இத்திக்காய் பிஞ்சு:

    • அதிசாரமும், பெரும்பாடும், உள் சூட்டால் பிறக்கின்ற பிணிகளும் நீங்கும்.



  10. #10
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,050

    Re: Some Medicinal Tips - சில மருத்துவ டிப்ஸ்

    மருந்து மாத்திரைகள் வாங்கும் போதுசில எச்சரிக்கை குறிப்புகள்!!

    மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.

    1. மருத்துவரின் சீட்டு இல்லாமல்வாங்காதீர்கள்!
    தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல்
    நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!

    இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித்தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.
    கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப்பாருங்கள்!

    2. செல்போனில் மருந்துச் சீட்டு
    நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த Message வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.

    3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள்.

    பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.

    4. உதிரிகள் வேண்டவே வேண்டாம்..
    மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின் பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.

    5. வீரியமில்லாமல் காரியமில்லை
    மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.

    6. காலாவதி மாத்திரை
    காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத்திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப்பார்கள். அதையும் சரிபாருங்கள்.

    ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

    சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக் வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter