சர்க்கரை வியாதியும் பாலியல் குறைபாடும்


சர்க்கரை வியாதியால் பல்வேறு கேடுகள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு உண்டாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் சுமார் 35 முதல் 75 விழுக்காடு வரை ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கிவிடுகிறது என்பது அனைவரும் அறியாத விஷயம்.

இரத்த நாளச் சுவர்களில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு என்ற இரசாயனப் பொருள் வெளியிடப்பட்டு இரத்தத்தில் கலந்து செல்கிறது. இந்த இரசாயனப் பொருள்தான் 'இரசாயனத் தூதுவர்' மாதிரி செயல்பட்டு ஆணுறுப்பின் மென்மையான தசைகள் மற்றும் இரத்த நாளங்களை விரிவடையுமாறுத் தூண்டுகிறது.

அதிகமான இரத்த சர்க்கரை இருக்கும் போது இரத்தத்தில் கலக்கப்படும் நைட்ரிக் ஆக்சைடு வெளியிடப்படுவதையே தடுத்துவிடுகிறது. இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு குறைந்து விடுவதால் ஆணுறுப்புக்கு வரும் இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. நாளடைவில் இரத்த நாளங்கள் கேடுற்று பழுதாகிச் சிதைந்து விடுகின்றன.

ஆணுறுப்பு இரத்த நாளங்களை மட்டுமின்றி, உடலின் எல்லா பகுதியிலுமுள்ள இரத்த நாளங்களுக்குச் செல்லும் நைட்ரிக் ஆக்சைடையும் சர்க்கரை தடுப்பதால்தான் இரத்த நாள பாதிப்புகள் ஏற்படுகிறது.

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 73 விழுக்காடு அளவிற்கு அதிகமான இரத்த அழுத்தமும், சர்க்கரை வியாதியும் சேர்ந்து இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இரத்த நாளச் சிதைவை உண்டாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகள் இரத்த நாளச் சுவர்களில் படிந்து, அவற்றைச் சுருக்கிவிடுகின்றன. இந்த நிலையில் இரத்த நாளங்கள் விரிவடைவதில் சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒருவேளை விரிவடைந்தாலும் அது நைந்து கிழிந்துவிடுகின்றன. இரத்தக் கொழுப்புடன் சர்க்கரை நோயும் சேர்ந்திருக்கும் போது பாதிப்பின் அளவு அதிகரித்து விரைப்பு ஏற்படாத நிலை உண்டாகிறது.

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இரத்த நாளங்கள் சுருங்குவதால் அவை விரிவடைவதில் சிக்கல்கள் இருக்கும். சர்க்கரை வியாதியும் இதனோடு சேர்ந்து கொள்வதால் இரத்த நாளங்கள் விரைப்படையாமல் ஆண்மைக்குறை ஏற்படுகிறது.

Similar Threads: