Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #221
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips




    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health Tips-12715625_10205670144620579_8704518740427162713_n.jpg  
    Last edited by jv_66; 6th May 2016 at 12:33 PM.
    sumitra likes this.
    Jayanthy





  2. #222
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

    குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

    தேவையான பொருட்கள்
    :முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4, பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

    செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

    இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


    sumitra likes this.
    Jayanthy





  3. #223
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    விஷத்தை விரட்டி அடிக்கும் அருகம்புல் !

    புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.பொதுவாக செயற்கை பானங்களை உட்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு, இயற்கையின் வரப்பிரசாதங்கள் பற்றியும், அதன் மகத்துவங்கள் பற்றியும் தெரியாமல் உள்ளது.இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளின் மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம், கற்றாழை, வேப்பிலை மற்றும் துளசி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்.ஆனால் அருகம்புல் என்பது விநாயக இறைவனுக்கு செலுத்துவது மட்டுமல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

    [ 01 ] அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.[ 02 ] சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இந்த வேர் மிகவும் சிறந்ததாகும்.[ 03 ] உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் அரும்புல் ஒரு சிறந்த மருந்தாகம்[ 04 ] ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் அருகம்புல் ஜூஸ் திறமையானது.[ 05 ] அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.[ 06 ] தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.
    அருகம்புல் ஜூஸ்

    அருகம்புல் ஜூஸ் தயாரிப்பதற்கு இளம்புல்லாக பார்த்து வாங்குவது அவசியம். இளம்புல்லை நன்றாகக் கழுவ வெறுமனே அரைத்து அப்படியே குடிக்கலாம். ருசியாக இருக்க வேண்டுமென்றால், அரைமூடி எலுமிச்சைச்சாறு கலக்கலாம்.சுவையாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால், அருகம்புல்- அரை கப், மிளகு- 2, சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- அரை டீஸ்பூன், சர்க்கரை- அரை டீஸ் பூன், எலுமிச்சைச்சாறு- அரை கப் ஆகியவற்றைக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம்

    sumitra likes this.
    Jayanthy





  4. #224
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    கேன்சருக்கு மருந்து கண்டுப்பிடிப்பத்தைவிட முக்கியம், கேன்சரைப் பற்றி அனைத்துத் தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு கொண்டுவருவதே. நம் நாட்டில் கேன்சரால் இறப்பவர்களைவிடக் கேன்சர் நோயின் மீது உள்ள தவறான புரித்தலால் இறப்பவர்கள் அதிகம். கேன்சர் நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்கபடவில்லை என்பது உண்மைதான்.

    ஆரம்பத்திலேயே அதனைக் கண்டறிந்தால் தாக்கத்தைக் குறைத்து அதிலிருந்து விடுபடலாம். ஆனால், பலர் கேன்சருக்கு மருந்து கண்டுப்பிடிக்கவில்லை என்று சிகிச்சை எடுக்காமலும், தவறான மருந்துகளை உட்கொண்டும், கேன்சர் என்று புரிந்துக்கொள்ளாமலும் தான் இறக்கிறார்கள்.

    பல ஆய்வுகள், 'மற்ற புற்று நோய்களால் தாக்கபட்டவர்களை விட மார்பகப் புற்று நோயால் தாக்கப்பட்டவர்கள் மிகவும் தாமதமாக மருத்துவமனையை நாடுக்கிறார்கள்' என்கிறது. இதை மருத்துவ உலகில் 'சைலன்ட' நோய் என்பார்கள். பெண்களுக்கு வரும் இந்த மார்பகப் புற்று நோயை, ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம், அதன் பாதிப்புகளைப் பெருமளவு குறைத்துவிடலாம். சரியான சிகிச்சைச் செய்தால் முற்றிலுமாககூடக் குணமடைய வாய்ப்புகள் இருக்கிறது.

    சரி அதை எப்படி ஆரம்பக் காலத்திலேயே கண்டறிவது? அமெக்காவின் கேன்சர் சொசைட்டி, ''25வயதுக்கு மேற்பட்ட எல்லாப் பெண்களும் மாதத்துக்கு ஒரு முறை (Breast self examination) பிரெஸ்ட் செல்ப் எக்ஸாமினேஷன் எனப்படும் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்கிறது. இதன் மூலம், மார்பகத்தில் எதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.

    மார்ப்பகத்தில் ஏதேனும் கட்டி வந்தாலோ, பாலைத் தவிர வேறு எதாவது சுரந்தாலோ, மார்ப்பகத்தில் உறுத்தல் இருந்தாலோ, காம்புகளில் வலி ஏற்பட்டலோ, நிறம் மாறி இருந்தாலோ உடனே மருத்துவர்களை அனுகுங்கள். மார்ப்பகத்தில் வரும் பெரும்பாலான கட்டிகள் மார்பக புற்று நோயாக இருக்கும்" என்கிறார்கள் மருத்துவர்கள்.

    கிளினிக்கல் எக்ஸாமினேஷன், அதாவது தேர்ந்த மருத்துவரை கொண்டு மார்பகத்தின் தன்மையை மூன்று வருடத்துக்கு ஒரு முறைக் கண்டறிய வேண்டும். மாமோகிராபி எனப்படும் இந்தப் பரிசோதனையானது, எக்ஸ்ரே மூலம் நடத்தபடும். மார்ப்பகத்தில் தேவையற்ற திசுக்கள் வளர்ந்தால், அதனை உடனே கண்டறிந்துவிடலாம்.

    40லிருந்து 50 வயது வரை இருக்கும் பெண்கள் அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒருமுறை, மார்பக புற்று நோய்கான அறிகுறித் தென்படாவிட்டாலும் பரிசோதனைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்துக்கு ஒரு முறை மார்பக புற்று நோய்க்கான அறிகுறித் தென்படாவிட்டாலும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.


    sumitra and kiruthividhya like this.
    Jayanthy





  5. #225
    kiruthividhya's Avatar
    kiruthividhya is offline Friends's of Penmai
    Real Name
    KIRUTHIGA
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    chennai
    Posts
    362

    re: Health Tips

    Thanks for the information jayanthi madam

    jv_66 and sumitra like this.

  6. #226
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    Quote Originally Posted by kiruthividhya View Post
    Thanks for the information jayanthi madam
    Welcome Vidhya. Just call me "akka"....no need of Mam.

    sumitra likes this.
    Jayanthy





  7. #227
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Health Tips

    Hi Jayanthy,,wonderful information !thank you!

    jv_66 likes this.

  8. #228
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    Quote Originally Posted by sumitra View Post
    Hi Jayanthy,,wonderful information !thank you!
    Welcome sister

    Jayanthy





  9. #229
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Health Tips

    Very Useful to all.Thank U for sharing sister.

    jv_66 likes this.

  10. #230
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips



    Attached Thumbnails Attached Thumbnails Health Tips-10153841_10205868435737733_2353301028292434325_n.jpg  
    Last edited by jv_66; 11th May 2016 at 01:31 PM.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter