Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #251
    savithiri is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Coimbatore
    Posts
    428

    re: Health Tips

    Thank u very much mam.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #252
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    Quote Originally Posted by savithiri View Post
    Thank u very much mam.
    Welcome Savithiri

    Jayanthy





  3. #253
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    இயற்கை மருத்துவம் :-
    ******************************


    1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
    ""நெல்லிக்கனி.""


    2) இதயத்தை வலுப்படுத்த
    ""செம்பருத்திப் பூ"".


    3) மூட்டு வலியை போக்கும்
    ""முடக்கத்தான் கீரை.""


    4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
    ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).


    5) நீரழிவு நோய் குணமாக்கும்
    ""அரைக்கீரை.""


    6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
    ""மணத்தக்காளிகீரை"".


    7) உடலை பொன்னிறமாக மாற்றும்
    ""பொன்னாங்கண்ணி கீரை.""


    8) மாரடைப்பு நீங்கும்
    ""மாதுளம் பழம்.""


    9) ரத்தத்தை சுத்தமாகும்
    ""அருகம்புல்.""


    10) கான்சர் நோயை குணமாக்கும்
    "" சீதா பழம்.""


    11) மூளை வலிமைக்கு ஓர்
    ""பப்பாளி பழம்.""


    12) நீரிழிவு நோயை குணமாக்கும்
    "" முள்ளங்கி.""


    13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
    "வெந்தயக் கீரை.""


    14) நீரிழிவு நோயை குணமாக்க
    "" வில்வம்.""


    15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
    ""துளசி.""


    16) மார்பு சளி நீங்கும்
    ""சுண்டைக்காய்.""


    17) சளி, ஆஸ்துமாவுக்கு
    ""ஆடாதொடை.""


    18) ஞாபகசக்தியை கொடுக்கும்
    "வல்லாரை கீரை.""


    19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
    ""பசலைக்கீரை.""


    20) ரத்த சோகையை நீக்கும்
    "" பீட்ரூட்.""


    21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
    "" அன்னாசி பழம்.""


    22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
    (முள் முருங்கை)


    23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் -
    கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.


    24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
    ""தூதுவளை""


    25) முகம் அழகுபெற
    ""திராட்சை பழம்.""


    26) அஜீரணத்தை போக்கும்
    "" புதினா.""


    27) மஞ்சள் காமாலை விரட்டும்
    “கீழாநெல்லி”


    28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
    “வாழைத்தண்டு”.


    sumathisrini likes this.
    Jayanthy





  4. #254
    savithiri is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Coimbatore
    Posts
    428

    re: Health Tips

    Dear Jayanthi mam how to reduce sugar in home medicine (daily morning take ayurvedic powder) you have any ideal tell me mam i am waiting for your good suggestion regards savithiri

    jv_66 likes this.

  5. #255
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம். சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெப்பத்தை தணிக்கும் காய்கறிகள்!!! அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது. அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள்!!! இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும். மேலும் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

    கொலஸ்ட்ரால் குறையும் வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்

    உடல் சூடு குறையும் உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.

    இதய நோய் வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

    நீரிழிவு வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

    மலச்சிக்கல் வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

    செரிமான பிரச்சனைகள் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்

    எடை குறையும் வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

    மார்பகத்தை பெரிதாக்க,,, நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால், வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

    சிறுநீரகம் சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், சிறுநீரகத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.

    இரத்த ஓட்டம் மேம்படும் வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

    டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் வெந்தயம் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க உதவும்.

    net source

    Jayanthy





  6. #256
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    உங்களுக்கு வேலை செய்யும் பொது கை நடுங்குகிறதா..?கவலை வேண்டாம் ..!
    காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.
    வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்


    net source


    sumathisrini likes this.
    Jayanthy





  7. #257
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    சின்னஞ்சிறு கடுகு செய்யும் ஆச்சர்யம் நிறைந்த அழகு விந்தைகள் .!

    கண்களுக்கு கீழே பை தொங்குகிறதா?

    கடுகைப் பொடி செய்து சலித்து அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்களுக்கு கீழே தடவுங்கள்.


    கடுகு எண்ணெய் 6 சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்துவிடும். ஒரு வாரம் வரை கூட இதனை செய்யலாம்.


    கறுத்த முகத்தை ஜொலிக்க வைக்க கொஞ்சம் கடுகு கொஞ்சம் பயத்தம்பருப்பை தயிரில் கலந்து ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வரலாம்.

    முட்டிப் பகுதிகளின் கருமையைப் போக்க சிறிதளவு கடுகை நீரில் ஊறவைத்து குழைத்து தடவி வரவும்.


    கர்ப்பகால வயிற்று வரிகளை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும்.


    எலும்புகள் உறுதிபட கடுகு எண்ணெயை சூடாக்கி உடல் முழுதும் தடவி கடலை மாவு தேய்த்து குளிக்கவும்.

    கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வைத்திருந்தால் வெடிப்புகள் மறையும்.


    தலை முடிக்கு ஷாம்பூ வேண்டாம்! கடுகு 100, சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி நிலைக்கும்.

    netsource


    Last edited by jv_66; 13th May 2015 at 01:00 PM.
    Jayanthy





  8. #258
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    உடல் ஆரோக்கியத்தைப் பெற சூப்.!
    எந்த கிழமைகளில் என்ன சூப் சாப்பிடலாம்..?

    கூல்ட்ரிங்க் என்ற பெயரில் கெமிக்கலை குடிப்பதை விட
    தினம் ஒரு சூப் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கிட்டும்.


    ஞாயிறு :-

    ஞாயிற்று கிழமை மணத்தக்காளி சூப் சாப்பிடுங்கள்
    இந்த சூப் சாப்பிட்டால் வாய்ப்புண் ,வயிற்றுப் புண் ,வயிற்று வலி குணமாகும்.


    திங்கள்:-

    திங்கள் கிழமை முடக்கத்தான் சூப் சாப்பிடுங்கள்
    இந்த சூப் சாப்பிட்டால் வாத நோய்கள்,கை,கால், மூட்டுவலி,நாள்பட்ட
    இருமல்,மார்பு நோய் ,வீக்கம்,ஆஸ்துமா,காசநோய் ,தலைவலி,காமாலை,
    கழுத்து வலி ஆகியவை குணமாகும்.


    செவ்வாய்:-

    செவ்வாய் கிழமை வெள்ளை முள்ளங்கி சூப் சாப்பிடுங்கள்
    இந்த சூப் சாப்பிட்டால் வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், சிறுநீரக கோளாறுகள்,,இருமல் ,கல்லடைப்பு,ஆகியவை குணமாகும்.ஆண்மை
    பெருகும்.


    புதன் :-

    புதன்கிழமை சிறு கீரை சூப் சாப்பிடுங்கள்
    இந்த சூப் சாப்பிட்டால் கண் நோய்கள,புண்கள்,சிறுநீர் எரிச்சல்,வீக்கம்,பித்தநோய் ஆகியவை தீரும். குரல் வளமையடையும்.
    உடல் வலிமை பெறும்.


    வியாழன்:-

    வியாழன் கிழமை அகத்தி கீரை சூப் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
    பித்தம் குறையும், சைனஸ் நீங்கும், பீடி,சிகரெட்டினால் உள்ள நஞ்சு நீங்கும்.


    வெள்ளி :-

    வெள்ளிக்கிழமை முட்டைகோஸ் சூப் சாப்பிடுங்கள்
    இந்த சூப் சாப்பிட்டால் வயிற்றுப் புண்,வயிற்று வலி தீரும்.
    இரும்பு சத்து நிறைந்தது.



    சனி:-


    சனிக்கிழமை வாழைத்தண்டு சூப் சாப்பிடுங்கள்
    இந்த சூப் சாப்பிட்டால் சிறுநீர் கோளாறுகளை போக்கும்.சிறுநீரக
    கற்களைக் கரைக்கும்.உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
    நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.


    குறிப்பு:-

    சூப் போடும்பொழுது உள்ளி ,பூண்டு,சீரகம்,பெருஞ்சீரகம்,நல்ல மிளகு,
    வெந்தயம்,கறிவேப்பிலை,மல்லிக்கீரை,சிறிது உப்பு இவைகளை போட
    வேண்டும்.

    உள்ளி ,பூண்டு,இவைகளை லேசாக நசுக்கிப் போட வேண்டும்.
    மற்றவைகளை ஒரு கரண்டி வீதம் போடவும்.
    ஐந்து கரண்டி மல்லியை லேசாக வறுத்து போடவும்.ருசிக்கு
    தகுந்த உப்பு போடவும்.

    பிற்சேர்க்கை :-
    தினசரி இஞ்சி ,பூண்டு இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது
    நல்லது.
    இவைகள் இரத்த குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.
    மாரடைப்பை தடுக்கும்.
    இரத்த நாள செயல் பாட்டை சரி செய்யும்.

    netsource


    Jayanthy





  9. #259
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    மண்பாண்டத்தின் மகிமை!
    “மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.
    மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

    வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

    செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

    எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

    ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.

    இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
    இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!

    sumathisrini likes this.
    Jayanthy





  10. #260
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips









    Attached Thumbnails Attached Thumbnails Health Tips-food-poisoning.jpg   Health Tips-home-remedies-food-poisioning.jpg  
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter