Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #271
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    re: Health Tips

    • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

    • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.


    • அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.


    • பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.


    • சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.


    • மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.


    • துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.


    • மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.


    • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.


    • பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.


    • வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.


    • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.


    • வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.


    • அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.


    • அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    facebook




    Sponsored Links
    sumathisrini and fatima15 like this.
    Jayanthy



  2. #272
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    re: Health Tips

    இளமை காக்கும் தலை மை

    இளநரை


    இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.



    தலைக்குச் சாயம் (Hair Dye)


    சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.



    ஷாம்பூ (Shampoo)


    அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. சோறுவடித்தெடுத்தபின் கிடைக்ளகும் கஞ்சிநீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும். அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வழவழா என்று வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ. இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும். சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் லு பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.



    வழுக்கை (Baldness)


    வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.


    அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.



    முடி உதிர்தல் (Hair loss)


    முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.



    பிருங்காமல தைலம்


    நல்லெண்ணெய் 1 லிட்டர்

    கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்
    நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்
    பசுவின்பால் 4 லிட்டர்
    அதிமதுரத்தூள் 60 கிராம்
    கரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர்.

    இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன்கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.



    நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.



    கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப் போக்கும்.



    பேன் (Tics)


    சில வீடுகளில் பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்குத் தாயார் படாத பாடுபடுவாள். பேனைக் கொல்ல ஏதாவது மருந்திருக்கிறதா என்று கேட்பாள். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும். கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும். வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும். எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை. சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.



    பொடுகு (Dandruff)


    இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும். பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வராமலிருக்க ஊமத்தையிலையால் காய்ச்சப்பட்ட துர்தூர பத்ராதித் தைலத்தைப் பயன்படுத்தவும். கேரளத்தில் சில பெண்கள் தேங்காய்ப்பாலைத் தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளருகிறது. எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் இதுபோல் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடிகளை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சவேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு உபயோகிக்கலாம். அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காயெண்ணெயில் காய்ச்சினால் அது நல்லதொரு முடிவளரும் தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியைத் தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.



    தேவையற்ற முடியை அகற்றுவது (Removing unwanted hairs)


    பழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள். இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள். குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும். மஞ்சளை அரைத்துத் தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் அது மயிர்களை அகற்றும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பலன் கிடைப்பதில்லை. Waxing மற்றும் Electrolysis சில நேரங்களில் நன்றாகப் பயன்படுகிறது.

    -டாக்டர் எல். மகாதேவன்


    sumathisrini and fatima15 like this.
    Jayanthy



  3. #273
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    re: Health Tips

    சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்

    *தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


    * ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


    * முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.


    * பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.


    * நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


    * கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.


    * தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.


    * வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.


    * இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.


    * கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


    * இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.


    * ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.


    * முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.


    * மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.


    * பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

    * ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
    * பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
    * தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
    * தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
    * தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

    facebook

    sriju and fatima15 like this.
    Jayanthy



  4. #274
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    Re: Health Tips



    Attached Thumbnails Attached Thumbnails Health Tips-.jpg  
    sriju and fatima15 like this.
    Jayanthy



  5. #275
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    Re: Health Tips



    Attached Thumbnails Attached Thumbnails Health Tips-.jpg  
    sriju and fatima15 like this.
    Jayanthy



  6. #276
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    Re: Health Tips

    வெங்காயம் -- எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந்தாக மாறும் - தீரும் நோய்கள் என்ன.?
    1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
    2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
    3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
    4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
    5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
    6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
    7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
    8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
    9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
    10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

    11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
    12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
    13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
    14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
    15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
    குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

    16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
    17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
    18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
    19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
    20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
    21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
    22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
    23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
    24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
    25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
    26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
    27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
    28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
    29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
    30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
    31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
    32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
    33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
    34. காலரா பரவியுள்ள நேரத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
    35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
    36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
    37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
    38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
    39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
    40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

    41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
    42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
    43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
    44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
    45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
    46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
    47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
    48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
    49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
    50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.


    sriju and fatima15 like this.
    Jayanthy



  7. #277
    sharamsn's Avatar
    sharamsn is offline Citizen's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    pondy
    Posts
    801

    Re: Health Tips

    nice sharing ,thnx a lot....

    jv_66 likes this.
    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

  8. #278
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    Re: Health Tips

    Quote Originally Posted by sharamsn View Post
    nice sharing ,thnx a lot....
    Welcome Sharmi begum

    Jayanthy



  9. #279
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    Re: Health Tips

    "எட்டு" போடுகிறவனுக்கு "நோய்" எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

    மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம், அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு வருகிறது "நோய்".


    நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.


    சித்தர் வழி என்பது அனைத்துக்கும் தெளிவான விடைகளை தருகிறது.


    சித்தர்கள் :

    "எட்டுப் போடு!
    எல்லாம் பறந்தோடும்!"

    என்கிறார்கள்.

    நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர் அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம், மார்புச்சளி போன்றவைகளால் மிக பாதிப்படைந்திருப்போம்.


    எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
    கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.


    இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும் நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர் சித்தர்கள்.


    இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
    கொடுத்துள்ளனர்.


    காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்)
    எட்டு போடுகிற
    வடிவத்தில்
    குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்ய வேண்டும்.


    முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க
    வேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும்.


    காலையும், மாலையும் வேளைகள் மிக வசதியாக இருக்கும்.


    இதை செய்வதால் என்ன நடக்கும்!


    1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம்.


    2. இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
    அர்த்தம்.


    3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை,
    மருந்துகள் தேவை இல்லை).


    4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்.


    5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.


    6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.


    7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.


    8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.


    9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.


    10. பாத வலி, மூட்டுவலி மறையும்.


    11. சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.

    சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும்.

    "8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்,


    அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
    ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம நிலை படுத்துகிறது.


    இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த சித்தர்கள், இதையே "வாசி யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
    உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?


    விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்!

    ஆனந்தம் ஆரோக்கியம்!!!

    sriju likes this.
    Jayanthy



  10. #280
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,756

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter