Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #281
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    Quote Originally Posted by sriju View Post
    Super sharing aunty

    Sitharkal sonnatha ellam konjam serious ah eduthukanum polaye!!
    Aamaada Sriju


    Sponsored Links
    sriju likes this.
    Jayanthy





  2. #282
    sharamsn's Avatar
    sharamsn is offline Commander's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    puducherry
    Posts
    1,344

    Re: Health Tips

    superb.....
    Intha 8 kkulla ivlo viisayama?? nice.Thnx a lot for info...

    jv_66 likes this.
    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

  3. #283
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    Quote Originally Posted by sharamsn View Post
    superb.....
    Intha 8 kkulla ivlo viisayama?? nice.Thnx a lot for info...
    Welcome Sharmi.

    Jayanthy





  4. #284
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்:-
    குழந்தைகளின் சளிக்கு: ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.
    பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு: இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து, பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
    இருமல் விலக: அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊறவச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக்குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்.
    மாந்தம் போக்க: ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் துளசிச்சாறை கொடுத்தால்... மாந்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓடியே போகும். குழந்தையும் அழுகையை நிறுத்தி நிம்மதியாகத் தூங்கும்.
    மூச்சு விடத் திணறுபவர்கள் துளசி இலையை காயவைத்து அரைத்து, அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் நீங்கும். துளசி இலையை தண்ணீரில் போட்டுக்குடித்தால், தொடர் இருமல் தொல்லை நீங்கும். சுடுநீரில் துளசி இலையைப் போட்டு ஆவிபிடித்தால், சளி, மண்டைக் குத்தல் குணமாகும். பேறுகாலம் முடிந்த பெண்கள் துளசி விதையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வேண்டாத அழுக்கு நீங்கும்.
    அடிவயிற்றுக் குத்தல், வலி சரியாகும். ஒரு கைப்பிடி துளசிக் கொழுந்தை இஞ்சி சேர்த்து அரைத்து, மாத்திரை போல் உருட்டி, காயவைத்து எடுத்து, தேனில் கலந்து கொடுத்தால், வறட்டு இருமல் காணாமல் போகும். கட்டிகள் இருந்தாலோ, வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது வண்டு கடித்திருந்தாலோ அந்த இடத்தில் துளசியை அரைத்துப் பூசினால், உடனடி குணம் கிடைக்கும். துளசியை ரசமாக செய்து சாப்பிட்டால் வாய்கசப்பு முற்றிலும் நீங்கி, ஜூரமும் வந்த வேகத்தில் ஓடிவிடும்.



    Jayanthy





  5. #285
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    இரத்த அழுத்தம் குணமாக இயற்கை வைத்தியம் !!!

    இரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.


    குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும்.


    இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது. சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.


    பாதுகாப்பு முறை :-

    முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.


    இயற்கை வைத்தியம் :-

    1. முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம், இதய நோய்கள் குணமாகும்.

    2. பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றில் 5 கிராம் சீரகத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

    3. முசுமுசுக்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.

    4. ஆரைக்கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால், இரத்த அழுத்த நோய் குணமாகும்.

    5. மணலிக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.

    6. சுக்குக்கீரையுடன் ஒரு கைப்பிடி அளவு துளசியைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குணமாகும்.

    7. அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.

    8. அமுக்காராவை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.

    9. ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.

    10. ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

    11. இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துப் பொடியாக்கிகொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

    12. இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

    13. எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும்.

    14. கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.

    15. கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.

    16. சர்ப்பகபந்தா வேரை பொடி செய்து தினமும் அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும்.

    17. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
    மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.


    SADAIYAN likes this.
    Jayanthy





  6. #286
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!

    பருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!


    * குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.


    * காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.


    * மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.


    * மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.


    * தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.



    சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

    *மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.


    பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

    * இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.


    மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

    * ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

    இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.
















    Jayanthy





  7. #287
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    * கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

    * மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.


    * மணலிக்*கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.


    * நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.


    * மருதம் இலையை அரைத்து ஒ*ரு கிராம் அளவு எடுத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர நாட்பட்ட வயிற்று வலி குணமாகும்.


    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.


    * அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.


    * எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கால் வெடிப்புகளில் பூசினால் கால் வெடிப்பு மறைந்து கால் பளபளப்பாக மாறும்


    * தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதை தடுக்கலாம்



    Jayanthy





  8. #288
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

    1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!


    2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.


    3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.


    4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.


    5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.


    6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.


    7. கடுமையான இரும*ல் இரு*ந்தா*ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.


    8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை*த்து அழு**த்*தி வரவு*ம். வ*லி குறையு*ம்.


    9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ*ட்டு குளிக்கவும். *விரை*வி*ல் தழு*ம்புக*ள் மறையு*ம்.


    10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா*ல் *விரை*வி*ல் இரும**ல் *நி*ற்கு*ம். கா*ய்*ச்ச*ல் குறையு*ம்.


    11. காரட் மற்றும் தக்கா*ளி*ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட*ல் வ*லிமை பெரும்.


    12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.



    Jayanthy





  9. #289
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

    • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.


    • அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.


    • பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.


    • சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.


    • மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.


    • துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.


    • மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.


    • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.


    • பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.


    • வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.


    • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.


    • வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.


    • அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.


    • அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.



    Jayanthy





  10. #290
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    இருமல் :-
    இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது.


    குமட்டல் :-

    சிறு துண்டு எலுமிச்சை அல்லது இஞ்சியை வாயில் வைத்து சப்பி சாப்பிட்டால் குமட்டல் நின்றுவிடும்.


    தீக்காயங்கள் :-

    ஒருவேளை தீக்காயங்கள் எற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் கற்றாளை இலையின் உள்ளிருக்கும் சாற்றை எடுத்து தடவினால் சீக்கிரம் காயம் குணமடையும்.


    பல் வலி :-

    பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.

    பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.



    குடல் பிரச்சனைகள் :-

    டான்டேலியன் (மஞ்சள் மலர் கொண்ட சிறிய செடி வகை), இதை டீயில் கலந்து பருகி வந்தால் குடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்றளவிலும் இது நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.


    சிறுநீர் உபாதை :-

    குருதிநெல்லி சிறுநீர் உபாதைகளுக்கு நல்ல தீர்வளிகிறது


    மாதவிடாய் கோளாறுகள் :-

    வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்ல மூன்று வெற்றிலையின் சாரை கலந்து பருக வேண்டும். பின்னர் ஒரு நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை பருக வேண்டும். இவாறு செய்து வந்தால் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம்.


    மாதவிடாய் கால மாற்றம் :-

    மாதவிடாய் ஏற்படும் நாட்களில் மாற்றங்கள் ஏற்படும் பிரச்சனை சரியாக வேண்டும் எனில், எலுமிச்சை ஜூஸில் கொஞ்சம் இலவங்கப் பட்டையை போடி செய்து கலந்து தினம் தோரும் பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும்.


    அஜீரண கோளாறு :-

    ஆரஞ்சு ஜூஸில் கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுப் பொடியை கலந்து தினமும் பருகி வந்தால், நாளடைவில் அஜீரண கோளாறு சரியாகிவிடும்.


    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter