Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #291
    marclewis is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jul 2014
    Location
    USA
    Posts
    441

    Re: Health Tips

    Some of the Health Tips:

    • Daily exercise
    • Healthy diet
    • Weight loss
    • Regular physical exams
    • Less stress
    • Drink water
    • Limit alcohol intake
    • Meditation
    • Doing household chores
    • Get adequate rest daily
    • Take care of your teeth
    • Multivitamins and nutritional supplements
    • Slow and deep breathing
    • Surround yourself with positive energy
    • Engage in social work



    Sponsored Links
    jv_66 likes this.

  2. #292
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்...

    * ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயைவாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.


    * தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.


    * தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க் கோர்வை போன்றவை சரியாகும்.


    * குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.

    * கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.
    இந்த இயற்கை முறைகளை பின்பற்றி சைனஸ்சால் வரும் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்யலாம்


    Jayanthy





  3. #293
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    Please click the below link to know about

    Health tips to be followed after the Floods

    Jayanthy





  4. #294
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    எளிய சித்த மருத்துவம்.....

    * மிளகை நெய்யில் வறுத்து கொள்ளவும், அதை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். அதில் வெல்லப்பாகை சேர்த்து உருண்டை தயாரித்து கொள்ளவும். அந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வர சளி, இருமல் ஒழியும். குரல் கர கரப்பு நீங்கும்.


    * ஒரு வயதுக்கு அதிகமான குழந்தைக்கு வெற்றிலை சாற்றில் சிறிது தேன் சேர்த்து தந்தால் ஜலதோசம் ஓடிவிடும். சுக்கு, திப்பிலி, மிளகு எல்லா வற்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் அதே அளவு பெருங்காயத்தை எடுத்து பொரித்து பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு தினம் சிறிது சாப்பிட்டுவர வாயுத்தொல்லை, அஜீரணம் ஒழியும்.


    * இடுப்பு வலி தொடர்ந்து பெண்களுக்கு இருந்தால் உளுந்தை வறுத்து பொடி செய்து சர்க்கரை கலந்து தினம் மூன்று நெய் கரண்டி அளவு சாப்பிட்டால் போதும்


    * துளசி, வெற்றிலை, ஆடாதொடை, கண்டங்கத்திரி, சிற்றரத்தை, தூதுவேளை ஆகி யவற்றின் சாற்றை கசாயமாக்கி கொடுத்தால் கபத்தினால் ஏற்படும் நோய்கள் தீரும்.


    * லவங்கம், ஓமம் இரண்டையும் பொடிசெய்து அத்துடன் சிறிதளவு கற்பூரத்தையும் சேர்த்து சொத்தையுள்ள பல், வீக்கமுள்ள ஈறுகளின் மீது சில சிட்டிகை எடுத்து அப்பி, பின்னர் பத்து நிமிடம் கழித்து வாயை கொப்பளித்துவிட வேண்டும்.


    * வசம்பை சுட்டு சாம்பலாக்கி தினந்தோறும் வேளைக்கு ஒரு அரிசி எடையுடன், சிறிது தேன் சேர்த்து மூன்று வேளை தந்தால் கக்குவான் இருமல் சட்டென்று நிற்கும்.



    Jayanthy





  5. #295
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    தினமும் 21 முறை குனிந்து உங்கள் கால் பெருவிரலை கைவிரலால் தொட்டு நிமிர்ந்தால் . . .

    இந்தக்காலத்தில் எல்லாமே உட்கார்ந்த இடத்திலேயே வந்து விடுகிறது. மேலும்
    பணிச்சுமையும் அதிகம், அதுவும் இரவுபகல் பாராமல், எந்நேரமும் கணிணி முன்பு அமர்ந்து உடல் சோர்ந்து போனால் விடாப்பிடியாக இருந்து வேலை செய்து கொ ண்டேஇருப்ப*து. இந்த காரணங்களினால் முதுகுஎலும்பு விரைவில் பலவீனமடைந்து விடும் என்று மருத்துவர் கள் எச்ச*ரிக்கிறார்கள்.



    முதுகெலும்பு நலமாக இருக்க தினமும் கீழ்க்காணும் சாதரணமான பயிற்சிகளை செய்தாலே போதுமானது.

    1.தினமும் 21 முறையாவது குனிந்து கால் பெருவிரலை உங்கள் கையில் உள்ள ஆள்காட்டி விரலால் தொட்ட பின் நிமிருங்கள்

    2. எப்போது எங்கே அமர்ந்தாலும் நன்றாக நிமிர்ந்து அமருங்கள். முதுகை வளைத்து உட்கார்ந்தால் முதுகெலும்புக்கு பிரச்சனை தேடி வரும்

    3. எங்கேயும் எப்போதும் முதுகை நிமிர்த்தி நிமிர்ந்து நில்லுங்கள்

    4. படுக்கையில் படுக்கும்போது சுருண்டு படுக்காதீர்!

    5. கடினமான கனமான தலையணைகளைத் தூக்கி யெறிந்து மிருதுவான தலையணை வாங்கி பயன் படுத்துங்கள்

    6. ஒருநாளைக்கு 23 நிமிடங்கள் வேகமாக நடந்து செல்ல*வேண்டும்.

    7. ஒரே இடத்தில் 1 மணிநேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக உட் காராமல், 1 மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடை நடந்து வாருங்கள்.



    8. இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது குனிந்து உட்கா ர்ந்து ஓட்டாமல் நன்றாக முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து ஓட்டுங்கள்

    9.அதீத எடையுள்ள பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காமல், முதுகை நிமிர்த்தி கால்கை மட்டும் மடித்து அந்த எடையுள்ள பொருளை தூக்கவும்.

    10. காலை மாலை என இருவேளையும் சுமார் 20 தடவைகள் உங்களது கை களை வானம் நோக்கி உயர்த்தி நீட்டுங்கள். பின் மடக்குங்கள்.

    Last edited by jv_66; 10th Dec 2015 at 12:17 PM.
    gkarti likes this.
    Jayanthy





  6. #296
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!




    செரிமானத்தை அதிகரிக்கும் :-

    உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

    எடை குறைவு :-

    உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

    உயர் இரத்த அழுத்தம் :-

    உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.

    ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது :-

    உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.

    இதய நோயைத் தடுக்கும் :-

    ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.

    புற்றுநோயைத் தடுக்கும் :-

    ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.

    எலும்புகளை வலிமையாக்கும் :-

    ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.

    நீரிழிவிற்கு நல்லது :-

    உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.

    இரத்த சோகையை தடுக்கும் :-

    உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.

    இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் :-

    அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம்


    Jayanthy





  7. #297
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    சிறுநீர் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிய வீட்டு வைத்திய வழிமுறைகள்!!!

    சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் நிறைய பிரச்சனை ஏற்படலாம்.சிலருக்கு சீராக சிறுநீர் வராது. அவசரமாக வருவது போல இருக்கும் ஆனால் குறைவாக தான் வெளிப்படும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், மற்றும் நீர் கடுப்பு என பல பிரச்சனைகள் ஏற்படலாம். இவை அனைத்திற்கும் எளிய வீட்டு வைத்திய முறையில் தீர்வு காண வழிகள் இருக்கின்றன



    நீர் கடுப்பு குணமாக..

    வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி. பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால், நீர்க்கடுப்பு விரைவில் குணமாகும். அல்லது வெங்காயத்தை அப்படியே பச்சையாகவும் கூட சாப்பிடலாம்.

    அன்னாசிப்பழம்...

    அன்னாசிப் பழத்தின் தோலைநீக்கிய பிறகு அதை பொடி பொடியாக நறுக்கி, அரைத்து சாறு பிழிந்து, அந்த அன்னாசிப்பழச் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

    சிறுநீர் கோளாறுகள் குணமாக..

    நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட அணைத்து கோளாறுகளும் குறையும்.

    தாமரை, ரோஜா இதழ்கள் :-

    தாமரை பூவின் இதழ்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.

    சிறுநீர் சுருக்கு சரியாக..

    பனங்கற்கண்டை நன்கு பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் சுருக்கு குறையும் என்று கூறப்படுகிறது

    பெர்ரி :-

    சுத்தமான பெர்ரி பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேவையான அளவு நீர் விட்டு தினமும் காலை, மாலை குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட* எல்லா கோளாறுகள் குறையும்.

    எலுமிச்சையும், கற்கண்டும்:-

    வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.
    சந்தனமும், பசும் வெண்ணையும் சந்தனம்,
    பசும் வெண்ணெய் ஆகியவற்றை சிறிதளவு எடுத்து முக்கள் டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.


    indiragandhi28 likes this.
    Jayanthy





  8. #298
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

    பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சளி, இருமல் அல்லது வேறுஏதேனும் சுவாச பிரச்சனை இருந்தால் பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடிப்பார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் இது நல்ல நிவாரணம் வழங்கும். இதற்கு காரணம் மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-கார்சினோஜெனிக் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் தான்


    அதுமட்டுமின்றி, மஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது. அதேப்போல் பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 உள்ளது


    சளி, இருமல் :-

    சளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகள் நீங்கள் சந்தித்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், இப்பிரச்சனைகளுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்.

    இரத்தம் சுத்தமாகும் :-

    உங்கள் உடலில் உள்ள இரத்தத்தை தினமும் சுத்தம் செய்ய நினைத்தால், பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள். இதனால் மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.

    எலும்புகளை வலிமைப்படுத்தும் :-

    பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

    நல்ல தூக்கம் :-

    தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமெனில் இன்று முயற்சித்துப் பாருங்கள்.

    தலைவலி நீங்கும்:-

    மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    மாதவிடாய் கால வயிற்று வலி :-

    பெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்.

    எடை குறையும் :-

    மஞ்சளில் உள்ள சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்து, உடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

    சரும அழகு அதிகரிக்கும் :-

    முக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.


    indiragandhi28 likes this.
    Jayanthy





  9. #299
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    ஆண்களின் வழுக்கை பிரச்சினைக்கு தீர்வு தரும் இயற்கை மருந்துகள் ....
    வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது.

    1) எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளருவதை ஊக்கப்படுத்தும்.


    2) ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவது வரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும்.


    3) அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். பொடுகை நீக்கும்.


    4) ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும்.


    இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம்.


    5) கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம். நன்றாக முடி வளரும்.



    indiragandhi28 likes this.
    Jayanthy





  10. #300
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    இலவங்கப்பட்டை - மருத்துவப் பயன்கள்!

    நீரிழிவு நோய்க்கு

    நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

    வாய் துர்நாற்றம் நீங்க

    வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

    செரிமான சக்தியைத் தூண்ட

    எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

    இருமல், இரைப்பு

    சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

    விஷக்கடிக்கு

    சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

    வயிற்றுக் கடுப்பு நீங்க

    வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.


    பெண்களுக்கு

    குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.

    தாது விருத்திக்கு

    தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.


    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter