Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #301
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    உடல் பருமனுக்கான தீர்வுகள்
    உடல் பருமனை குறைக்க என்ன பண்றதுனு யோசிகரிங்களா உடல் பருமன் பிரச்சனையில் இரண்டு வகைகள் உண்டு.

    1. உடல் முழுவதும் பருமனாக இருக்கும் மார்பிட் ஒபிஸிட்டி


    2. தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும் 'அப்டமினல்' அல்லது 'சென்ட்ரீபீடல் ஒபிஸிட்டி' மிக அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு சராசரி ஆயுட்காலத்தைவிட பதினைந்து வருடங்கள் குறைவான ஆயட்காலம் என்பது மருத்துவத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர்களுக்கு இதய நோய்கள், ரத்தத்தில் அதிக கொலஸ்ஸட்ரால், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.


    என்ன கரணம் உடல் பருமனாக?


    *உடல் ஆரோக்யமாக இருக்க உண்ணும் உணவு சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் கார்போ ஹைட்ரேட் புரதம் கொழுப்பு வைட்டமின் மினரல் போன்றவை சமசீர் அளவு இருக்க வேண்டும்.இதில் கார்போஹைட்ரேட் என்பது உடல் இயங்குவதற்கான சக்தியைத் தரக்கூடியது.


    2.புரதம் உடலின் கட்டமைப்புகளில் பங்கேற்கிறது.தசை, கல்லீரல், அடிபட்ட எலும்பைச் சேர்க்கிறதென்றால் அது புரதத்தின் வேலையே!


    *இதன் அடிப்படை அங்கம் அமினோ அமிலம். உணவில் புரதம் சைவமாகவும் இருக்கலாம், அசைவமாகவும் இருக்கலாம். சென்னா, பொரி கடலை, பருப்பு, வகைகள் போன்றவை சைவ புரதம். பால், முட்டை போன்றவற்றில் இருக்கும் புரதம் எளிய அசைவ புரதம். மட்டன், சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றில் இருக்கும் புரம் சிக்கலான அசைவ புரதம்.


    3.கொழுப்பு: வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், சன் பிளவர் ஆயில் போன்றவை சாதாரண கொழுப்பு. மாட்டிறைச்சி, சிக்கன், மட்டன் போன்றவற்றில் இருக்கும் கொழுப்பு அசைவ கொழுப்பு. இதில் சிக்கனில்தான் கொஞ்சம் கொழுப்பு குறைவாக உள்ளது.


    4.விட்டமின்களை உடலால் தனியாகத் தயாரித்துக் கொள்ள முடியாது. அதனை நாம்வெளியில் இருந்து தான் உட்கொள்ள வேண்டும். இது உடலின் பல செயல்முறைகளுக்கான என்சைமாக பயன்படுகிறது.


    *கனிமங்கள், தாதுப்பொருட்களை சோடியம், துத்தநாகம், நிக்கல், கோபால்ட் போன்ற உணவில் சேர்;ந்துள்ள மினரல்களை நாம் தினசரி உணவு லிஸ்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


    *அத்தோடு ஒரு லிட்டரிலிருந்து இரண்டு லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதும் சமச்சீர் உணவில் அடங்குகிறது.உணவில் சரியான விகிதம் பார்க்கும்போது கார்போஹைட்ரேட் 40-50 சதவீதம், புரதம் 30-40 சதவீதம், கொழுப்பு 10 சதவீதம் இருக்க வேண்டும்.


    *மக்கள் நிறைய சாப்பிடுகிறார்கள். ஆனால் சரிவிகித உணவை சரியான அளவில் சாப்பிடுவதில்லை.நெய், வெண்ணெய், எண்ணெய் போன்றவற்றை அளவோடு சாப்பிட்டால் நல்லது. பிஸ்கட், கேக் போன்றவற்றில் வெண்ணெய் இருக்கிறது. உடல்பருமன் இருப்பவர்கள் இவைகளைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய் இல்லா சப்பாத்தி அல்லது சுக்கா ரொட்டி நல்ல செலக்ஷன்.


    *புழுங்கலரிசி போன்றவற்றிலிருந்து சிக்கலான கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.


    புரதத்தில் சைவ புரதம் நன்று.


    *ஆனால் நீங்கள் அசைவ உணவு உண்பதில் நாட்டமுடையவர்களாக இருப்பின் சிக்கன், முட்டை, மீன் எடுத்துக் கொள்வது நல்லது. இரால், மட்டன் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் புரதத்தில் நிறைய கொழுப்பும் இணைந்து வருவதால் முடிந்தவரை அதைத் தவிர்ப்பது நல்லது.


    *பச்சை நிற காய்கறியிலிருந்து விட்டமின்கள், மினரல்கள் நிறைய கிடைக்கும். அதனை உண்பதும் மிக நல்லது. அத்தோடு போதிய தண்ணீர் அருந்துவதும் அவசியம்.


    *மேற்சொன்ன விகிதித்தில் உணவைக் எடுத்துக் கொள்ளாமல் கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொண்டு போதிய உடற்பயிற்சி இல்லாமல் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.




    Sponsored Links
    ponschellam likes this.
    Jayanthy





  2. #302
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    நொச்சி வளர்த்து டெங்கு கொசுவை விரட்டலாம்!




    பெருகி வரும் கொசுத் தொல்லையை சமாளிக்க வீடுகளில் நொச்சிச் செடி வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் நொச்சிச் செடியை வளர்க்க விருப்ப முள்ளவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    க்ரீம், சுருள், மேட், லிக்யூட் என எத்தனையோ விரட்டிகளுக்கும் அடங்காத கொசுக்கள் நொச்சிச் செடிக்கு பயந்து ஓடிவிடுமா? கொசுக்களை விரட்டுமளவுக்கு நொச்சியில் அப்படி என்ன மருத்துவத் தன்மை இருக்கிறது? நொச்சியை வீட்டில் வளர்க்க முடியுமா? பாண்டிச்சேரி இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஜெ.பிரசன்னாவிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

    ‘‘நொச்சிச் செடியின் அறிவியல் பெயர் ‘வைடக்ஸ் நிகுண்டோ’. இது ‘வேர்பீனிஸியா’ குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இந்தியில் ‘நிர்குண்டோ’ என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் நொச்சிச் செடிக்கு 250 சிற்றினங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 14 சிற்றினங்கள் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் நன்றாக வளரக்கூடியது நொச்சி. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

    ஊட்டச்சத்து குறைவாக உள்ள சாதாரண நிலத்திலும் வளரும். செடியாகவும் இல்லாமல், கொடியாகவும் இல்லாமல், சிறிய மரம் போல காணப்படும். நான்கு புறமும் தண்டு நீண்டு இருக்கும். தண்டின் மேல்பக்கம் பச்சையாகவும், கீழே வெண்மையாகவும் இருக்கும். பூக்கள் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும். மேலைநாடுகளில் ‘வைடக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற நொச்சியை, வீடுகளில் அழகுக்காகவும் பூச்சிகள் வராமல் காக்கவும் வளர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் நீர் நொச்சி வகை அதிகமாகக் காணப்படுகிறது...’’ என நொச்சியின் தாவரவியல் பண்புகளை விளக்கும் பிரசன்னா, அதன் மருத்துவ பயன்களையும் பட்டியலிடுகிறார்.

    ‘‘இது மூட்டுவலியைக் குறைக்கும் வலி நிவாரணியாக பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. ‘வைடக்ஸ் ஆக்னஸ் கேஸ்டஸ்’ என்கிற நொச்சி வகை பெண் நலத்துக்கு அருமையான மருந்து. மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்னைகள், ஹார்மோன் குறைபாடுகள், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு உலகெங்கிலும் மாற்று மருத்துவர்கள் நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். சருமப் பிரச்னைகளுக்கு கூட நொச்சி நிவாரணம் அளிக்கிறது.

    நொச்சியின் இலைகளில் இருந்து ‘வாலடைல்’ எனப்படும் ஆயில் எடுக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகக் கூடியது. இந்த எண்ணெய்க்கு கொசு மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை உள்ளது. நொச்சி இலைகளை நெருப்புத் தணலில் போட்டு அதன் மூலம் வரும் புகையை வீடு முழுவதும் பரவவிட்டால் கொசுக்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடும். ‘ஏடிஸ்’ எனப்படும் வரிக்கொசுவை விரட்டிவிடும் நொச்சி இலைகளின் புகை.

    ‘ஏடிஸ்’ கொசு பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் மனிதர்களைத் தாக்கும். இந்த கொசுவை உற்றுநோக்கினால் வரி வரியாக கோடுகள் தெரியும். சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை இந்த கொசுவே பரப்புகிறது. இந்த கொசுவுக்கு நொச்சி இலையின் வாசனையே ஆகாது. அதனால்தான் சென்னை மாநகராட்சியில் கூட நொச்சிச் செடியை வளர்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். வீட்டில் நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் பூச்சிகளையும் எளிதாக தடுக்கலாம். நோய்கள் வராமல் தற்காக்கலாம்.

    நொச்சிச் செடியை விதை போட்டும் வளர்க்கலாம். பதியம் வைத்தும் வளர்க்கலாம். நொச்சிச் செடிகளை வீட்டில் வளர்ப்பது மிக எளிதானது. நொச்சிச் செடி வீட்டில் இருப்பது விலையுயர்ந்த மருத்துவப் பொருட்கள் உங்களிடம் இருப்பதற்கு சமமானது!’’ என ஆர்வம் ஊட்டுகிறார் பிரசன்னா.

    - விஜய் மகேந்திரன்


    ponschellam and Ragam23 like this.
    Jayanthy





  3. #303
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,977
    Blog Entries
    51

    Re: Health Tips

    thanks jeyanthi .........
    intha kosu en pillaikalai padikkave viduvathillai ...........

    jv_66 likes this.

  4. #304
    sharamsn's Avatar
    sharamsn is offline Commander's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    puducherry
    Posts
    1,344

    Re: Health Tips

    good article...TFS

    jv_66 likes this.
    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

  5. #305
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    பாட்டி வைத்தியம்.....

    * கொத்தமல்லி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உற்பத்தியாகும்


    * கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.


    * முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும்.


    * உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும்.


    * முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்ட*லத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்*சனையை குணமாக்கும்.


    * மூட்டு வீக்கத்தால் துன்பப்படும் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் பூவரசம் பூ, காய், பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வீக்கம் குணமாகும்


    * சிறுநீரக செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரக செயல்பாடு சீராக அமையும்


    * இலுப்பை பூக்களை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் இருமல், காய்ச்சல் மற்றும் நீர் வேட்கை ஆகியவை குணமாகும்


    * சோம்புவின் இலையும், விதையும் இரப்பை சம்பந்தமான நோய், சுரம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது



    Jayanthy





  6. #306
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும்.

    சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ:


    * வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும்.


    * கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.


    * இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும். (கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும் சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.


    * பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.


    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.


    * கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.


    * முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.


    * வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.


    * மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.


    * மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்


    * கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்


    * உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.


    * பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.


    * வெங்காயத்தை வணக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.


    குறிப்பு:- கால் வெடிப்பு ஸ்கின் ட்ரை ஆவதால் ஏற்படுகிறது. துணி துவைக்கும் போது சோப்பு தண்ணீரில் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும். அதே போல் காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும்.





    Jayanthy





  7. #307
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் எளிய இயற்கை வைத்தியம் :-


    வயிற்றுப் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இந்த புழுக்கள் ஓர் ஒட்டுண்ணிகள். இந்த புழுக்கள் உணவுகள் மூலமாகவும், சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும், உடலினுள் நுழையும். அதுமட்டுமின்றி நன்கு சமைக்காத உணவுகள் மூலமாகவும் இவை நுழையும்.



    வயிற்றில் புழுக்கள் இருந்தால், அடிவயிற்றில் வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலப்புழையில் அரிப்பு, தூக்கமின்மை, குமட்டல், எடை குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


    * வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள். அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.



    * மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும். மேலும் பசியின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல மருந்து.



    * தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் பூண்டை பச்சையாக சாப்பிடவுடன் சற்று வெது வெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.



    * ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம். இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.



    * எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.


    Jayanthy





  8. #308
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    சித்த மருத்துவம்

    * சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

    * அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

    * விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

    * கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்
    .

    * சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

    * நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

    * வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

    * பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

    * புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

    * பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

    * கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

    * சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

    * முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

    இருமல், தொண்டை கரகரப்பு
    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

    *சளி
    பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.


    டான்சில்

    வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.




    Jayanthy





  9. #309
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான்.

    இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம்.

    இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும்.

    காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.


    ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.


    திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.



    ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.



    மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.


    வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி



    பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.



    நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்...!


    Jayanthy





  10. #310
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    இன்னும் ஒரே மாதத்தில் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

    இன்றைய காலத்தில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மேலும் ஒருவருக்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை முன்பே யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மக்கள் நினைகின்றனர். ஆனால் மாரடைப்பு வரப் போகிறது என்பதை ஒரு வாரத்திற்கு முன்பே ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும். அதைக் கூர்ந்து கவனித்தால், நிச்சயம் மாரடைப்பினால் இறப்பதைத் தடுக்கலாம்.





    இதய நோய்க்கான அறிகுறி ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபடும் என்று பலர் நினைகின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. வேண்டுமெனில் பெண்களுக்கு 1 மாதத்திற்கு முன்பே மாரடைப்பு வரப் போகிறது என்பதை அறியலாம். மற்றபடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே அறிகுறிகள் தான். இங்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உடனே மருத்துவரை அணுகுங்கள்.





    மிகுந்த சோர்வு அல்லது தூக்கமின்மை

    நீங்கள் சில நாட்களாக மிகுதியான சோர்வு அல்லது தூக்கமின்மையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியெனில் உங்கள் இதய தமனிகள் கடுமையாக குறுகியுள்ளது என்று அர்த்தம். இப்படி இதய தமனிகள் சுருங்கும் போது, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதோடு, இதயத்தின் செயல்பாடு மிகவும் கடினமாக இருக்கும். இதன் காரணமாகத் தான் நீங்கள் மிகுந்த சோர்வு அல்லது தூக்கமின்மையை சந்திக்கிறீர்கள்.


    மூச்சுவிடுவதில் சிரமம்

    உங்களால் மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேர்ந்தால், அதுவும் மாரடைப்பு வரப் போவதற்கான அறிகுறிகளுள் ஒன்று. ஏனெனில் இதயம் மற்றும் சுவாச மண்டலம் ஒன்றோடொன்று சார்ந்துள்ளது. ஒருவேளை உங்கள் இதயம் குறைந்த அளவிலான இரத்தத்தைப் பெற்றால், நுரையீரல் ஆக்ஸிஜனை இழந்து, அதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.


    பலவீனமான தசை

    உங்கள் தசை பலவீனமாக இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளதோடு, ஆக்ஸிஜன் அளவும் குறையும். எப்போது ஒருவரின் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளதோ, தசைகளால் தனது முழு செயல்பாட்டையும் செய்ய முடியாமல் போய் பலவீனமாகிவிடும்.

    மயக்கம், குமட்டல், வியர்வை

    உங்களுக்கு சில நாட்களாக வியர்வை அதிகம் வெளியேறினாலோ, குமட்டல் அல்லது மயக்கம் வருவது போன்று இருந்தாலோ, அது இதய பிரச்சனைகளுக்கான அறிகுறிகளுள் ஒன்று. அதிலும் உட்கார்ந்து திடீரென்று எழும் போது , மூளைக்கு வேண்டிய இரத்தம் கிடைக்காமல், அதன் காரணமாக தலைச்சுற்றல் ஏற்படுகிறது. எனவே இந்த அறிகுறிகளை சமீப காலமாக நீங்கள் சந்தித்தால், உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.


    மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு
    நீங்கள் உங்கள் மார்பகத்தில் அசௌகரியத்தை உணர்ந்தால், அதாவது திடீரென்று மார்பகத்தில் சுரீர் என்று வலி ஏற்பட்டால், கரோனரி தமனிகள் சுருக்கமடைகிறது என்று அர்த்தம். இந்நிலையில் முதலில் அவ்வப்போது லேசான வலியை உணர்ந்து, சாதாரண நிலைக்கு வரக்கூடும். இருப்பினும் இதனை சாதாரணமாக நினைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது உங்கள் உயிருக்கே உலை வைத்துவிடும்.

    குறிப்பு:
    மேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் சமீப காலமாக உணர்ந்து வந்தால், அவற்றை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையைக் கூறி உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதனால் மாரடைப்பினால் உயிரை விடுவதைத் தடுக்கலாம்.






    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter