Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #331
    kanikadugal011 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Ludhiana
    Posts
    146

    Re: Health Tips

    Nice dear thanks for sharing


    Sponsored Links

  2. #332
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    1. ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள்
    சாம்பார் வெங்காயம் ஒன்று அல்லது
    இரண்டினை இரவு படுக்கைக்குச் செல்லும்
    முன் நன்கு மென்று தின்றுவிட்டு சுடுநீர்
    பருகிவிட்டு படுக்கைக்கு சென்றால்
    காலையில் ஜலதோசம் பறந்துவிடும்.

    2.) கசகசாவை அரைத்து பாலில் கலந்து
    கொடுத்தால் ஜலதோசம் விலகும்.

    3.) தேங்காய் எண்ணையை சுடவைத்து கற்பூரம்
    சேர்த்து கரைந்ததும் இளஞ்சூட்டில் நெஞ்சு,
    கழுத்து, கை, கால்களில் தடவ சளி குணமாகும்.

    4.) ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை
    லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால்,
    சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர
    மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

    5.) சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும்
    பூண்டு சாறு கொடுத்துவர
    மெல்ல மெல்ல குணம்
    பெறலாம்.

    6.) பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து
    இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு
    மிதமான சூட்டில் அருந்தினால், காலையில்
    ஜலதோசம் பறந்து போகும்.

    7.) மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை
    முகர்ந்தாலும் ஜலதோசம் குறையும்.

    8.) கற்பூர வள்ளி இலையை பறித்து தவாவில்
    வாட்டி சாறு பிழிந்து குழந்தைகளுக்கு
    கொடுக்க சளி தொல்லை தீரும்.

    9.) குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து
    வெறும் வயிற்றில் சிறிது பால்
    கொடுத்து விட்டு பிறகு சாறு
    கொடுக்க வாந்தி வரும் அதனுடன்
    சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும். உடனே
    நிவர்த்தி கிடைக்கும்.

    10.) ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள்
    துளசி, சுக்கு, மிளகு, திப்பிலி, கற்பூரவள்ளி
    பயன்பாடுகள் எத்தகைய
    சளித்தொல்லையாக இருந்தாலும்,
    உடனே நிவர்த்தி கிடைக்கும். சளியை விரட்டியடிக்கும்




    Jayanthy





  3. #333
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    1. கடுமையான இருமல் இருந்தால், மூன்று கப்
    தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும்
    போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

    2. பல் வலி குறைய, துளசி இலை இரண்டு,
    கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள்
    ஆகியவற்றை, வலி இருக்கும் இடத்தில் வைத்து
    அழுத்தி வரவும் வலி குறையும்.

    3. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க,
    குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும்.
    விரைவில் தழும்புகள் மறையும்.

    4. ரத்த அழுத்தம் குறைவா இருக்கறவங்க... 30
    கிராம் இஞ்சியை தண்ணி விடாம அரைச்சு
    சாறு எடுத்து, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேன்
    சேர்த்து குடிச்சீங்கனா... அடுத்த அஞ்சு, பத்து
    நிமிஷத்துல ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்துடும்.
    இதனால வரக்கூடிய தலைவலியும் நின்னுடும்.

    5. வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க
    கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு
    வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு,
    மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க
    கொத்தமல்லி துவையலை ஒரு
    கொட்டைப்பாக்கு அளவு தினமும்
    சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல
    நிவாரணம் கிடைக்கும்.

    6. குழந்தை பெற்ற பெண்கள் உடலில்
    போதுமான சக்தி இருக்காது. அவர்கள்
    அரைக்கீரையைக் கடைஞ்சி சாப்பிட்டால் நல்ல பலம்
    கிடைப்பதுடன் குழந்தைக்கு தேவையான பாலும்
    சுரக்கும்.


    Jayanthy





  4. #334
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    எளிய பாட்டி வைத்தியம் :-

    1) இரண்டு தேக்கரண்டி கீழா நெல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.


    2) மாங்கொட்டைப் பருப்பை நன்றாக காய வைத்து தூள் செய்து தேனில் குழைத்து சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.



    3) கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து மோருடன் கலந்து சாப்பிட்டால் எந்த விஷக் கடியாக இருந்தாலும் விஷம் நீங்கும்


    4) நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொண்டால் சிறிய தேள் ( வீடுகளில் காணப்படும் தேள் ) கடி விஷம் நீங்கும்.


    5) நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து வெட்டு காயத்தின் மீது பூசி வர விரைவில் வெட்டுக்காயம் ஆறிவிடும் .


    6) சிறிதளவு சுக்கு, மிளகு, சீரகம்,மற்றும் பூண்டு இவைகளை சேர்த்து கசாயம் செய்து தினமும் குடித்து வந்தால் மந்தம் குணமாகும்.


    7) ஒரு செவ்வாழைப் பழத்தைத் தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் .


    8) வேப்பங்கொட்டையை நீர் விட்டு காய்த்து அந்த நீரை மத்தைக் கொண்டு சிலுப்பினால் நுரை உண்டாகும். அந்த நீரை தீப்பூண் மீது பூச தீப்புண் மற்றும் வடு மறையும்.


    9) முருங்கை இலைச் சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 வேளை கருப்பு நிறப்படையின் மீது தடவினால் படை நீங்கும்.


    10) தேனையும், சுண்ணாம்பையும், ஒன்றாக குழைத்து பித்த வெடிப்பில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.





    Jayanthy





  5. #335
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    "வாத எண்ணெய்
    இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
    இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
    அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
    என்ற உன்னத நோக்கில்
    இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
    வெளிப் படுத்தி உள்ளோம்
    எண்பது வகை வாதங்களும்
    அனைத்து சூலை நோய்களும்
    மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

    வாத எண்ணெய்
    ௧) எண்ணெய்கள்
    நல்லெண்ணெய் ... நூறு மில்லி
    வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
    விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
    ௨)காடி நீர்
    புளித்த காடி நீர்
    அதாவது புளித்த பழைய சோற்று நீர்
    நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
    ௩)மருந்துப் பொருட்கள்
    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    பூண்டு
    ஓமம்
    பெருங்காயம்
    கிராம்பு
    வசம்பு
    சதகுப்பை
    ௪)மருந்து சாப்பிட
    நாட்டுப் பசும்பால்
    வாத எண்ணெய் செய்யும் முறை
    அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
    சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
    சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

    ஆ)இந்த சூரணத்தில்
    நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
    அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
    நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

    இ)வாணலியை அடுப்பிலேற்றி
    முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
    வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
    விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

    மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
    நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
    சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
    இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
    அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
    நன்கு கொதிக்க விடவும்
    நுரை அடங்கி வரும்

    நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்
    இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
    இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

    இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
    வாத எண்ணெய் என்று பெயர்

    ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை
    உள் மருந்தாக
    நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
    இறக்கி
    குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
    அந்தப் பாலுடன்
    அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து

    உணவுக்குப் பின்
    அரை மணி நேரம் கழித்து
    காலை மாலை என
    தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும்

    வெளி மருந்தாக
    இந்த வாத எண்ணெயை
    தினமும் இரவில்
    கை கால்களில் தேய்த்து
    மென்மையாக மசாஜ் செய்து
    மறு நாள் காலையில்
    இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

    இவ்வாறு தினமும் செய்து வர
    எண்பது வகை வாதங்களும்
    அனைத்து சூலை நோய்களும்
    மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

    நடுக்கு வாதம்
    முடக்கு வாதம்
    கீல்வாதம்
    நரித்தலைவாதம்
    ஆமைவாதம்
    பக்கவாதம்
    கைகால்கள் வீக்கம்
    வலி
    போன்ற அனைத்து வாத நோய்களும்
    அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

    இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
    இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
    அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
    என்ற உன்னத நோக்கில்
    இந்த இரகசிய மருந்து
    தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
    வெளிப் படுத்தி உள்ளோம்

    தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்"




    Jayanthy





  6. #336
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    * தினசரி சில துளசி இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வர தொண்டைப் புண் வராது.

    * பஸ்ஸில் பயணம் செய்யும்போது எலுமிச்சை வற்றலை வாயில் அடக்கிக் கொண்டால் வாந்தி வராது.


    * பொன்னாங்கன்னி கீரையை சூப் செய்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். மூல சூடு ஏற்படாது.


    * அரைக்கீரை இலைகள் 5-10 வரை தினமும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


    * பிஞ்சு புடலங்காயை பச்சடி செய்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். சொறி, சிரங்கு, அரிப்பு நீங்கும்.


    * பிரண்டையை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.


    * வேப்பிலைச் சாறுடன் மோர் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் பூச்சிகளே இருக்காது.


    * தினமும் மதியம் சாப்பிட்ட உடன் ஒரு வெற்றிலையை சிறிது பாக்கு, சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.


    * தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைபாரமாக இருந்தால் கருநொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதன் ஆவியைப் பிடித்தால் உடனே குணமாகும்.


    * சீதாப்பழக் கொட்டைகளைக் காயவைத்து தூளாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் பேன்கள் அழிந்துவிடும்.


    * மூட்டு வலியா? சுக்கை இழைத்து மூட்டுக்களில் தடவினால் குணமாகி விடும்.

    - பி.கவிதா

    * மாதவிலக்கின் போது, இரத்தப் போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் ஒரு டம்ளர் மோர்விட்டுப் பருகினால் இரத்தப் போக்குக் கட்டுப்படும்.


    * முகப் பருவை கிள்ளக் கூடாது. பச்சைப்பயறு மாவை அரைத்து வைத்துக் கொண்டு தினமும் இரவில் பருவின்மேல் பூசி வைத்து , காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் முகப்பரு மறையும்.


    * தோல்வியாதிகள் காரணமாக உடம்பின் மேல்பகுதி தடித்து சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி தழையை நன்றாக அரைத்து சொர சொரப்பாக இருக்கும் இடத்தின் மீது பூசவேண்டும். இவ்வாறு மூன்று நாள்கள் செய்து வர, தடிப்பு மாறி தோல் மிருதுவாகிவிடும்.

    - கே.பிரபாவதி




    Jayanthy





  7. #337
    deepti priya is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    chennai
    Posts
    21

    Re: Jayanthy's tips

    health is wealth. Very useful tips.


  8. #338
    Lakshmi puja is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2017
    Location
    chennai
    Posts
    29

    Re: Health Tips

    Nice thread.Thank you for sharing the useful information.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter