Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


 1. #1041
  mrlakshmim is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Apr 2013
  Location
  villupuram
  Posts
  69

  re: Today's Medical Info

  இதய நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள 3 வழிகள்

  இதய நோய்.. அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீணி பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.இதனை தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் ஆயில், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், க்ரிக் நாடுகளில் தங்களது பழமையான உணவுப் பழக்கத்தைக் கையாறும் மக்களுக்கு இதய நோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.சிகரெட் பிடிக்காதீர்இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியமான விஷயமாக உள்ளது. இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால், மோசமான செய்தி என்னவென்றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய் ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.நடையை ஓரம்கட்டாதீர்பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந்தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள். இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைபயணம் மேற்கொள்வோம்.  Sponsored Links
  Sriramajayam likes this.
  Thanks,

  MR.Lakshmim.

 2. #1042
  mrlakshmim is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Apr 2013
  Location
  villupuram
  Posts
  69

  re: Today's Medical Info

  நா வறட்சிக்கு சில யோசனைகள்

  சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் நா வறட்சி குறைவதில்லை. நா வறட்சியைப் போக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள்
  நல்லெண்ணெய் மற்றும் தேங்காய்ப்பாலை வாயில் விட்டுக் கொப்பளித்துத் துப்புவதால் வாய் வறட்சியையும் நாக்கு வறட்சியையும் போக்கிக் கொள்ள முடியும். எள்ளை மென்று வெகுநேரம் வாயில் வைத்திருந்து பிறகு உமிழ்ந்து கொப்பளிப்பதும் நல்லதே.
  இரவில் சாப்பிடும் உணவு மாவு வகைகளாகிய இட்லி, தோசை என்று அமைந்திருந்தால், நடு இரவில் நாக்கு உலர்ந்துபோய் அதிக தண்ணீரின் தேவையை உணர்த்தக் கூடும். மாவினுடைய அம்சம் ரத்தத்தில் கலந்திருக்கையில் அதை நீர்க்கச் செய்து, செரிமானம் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உடல் ஆட்படும்போது, நீரின் தேவைக்கான உத்தரவை நீர் வேட்கையின் மூலம் உத்தரவிடுகிறது. அதனால் நீங்கள் மாவுப் பண்டங்களை இரவில் சாப்பிடாமல், கோதுமையை உப்புமா, சப்பாத்தி என்ற வகையில் மாற்றி அமைத்துச் சாப்பிடவும்.
  பகல் வேளைகளில் ஆடை சத்து முழுவதும் எடுத்துக் கடைந்த தயிரில் நிறைய நீர் சேர்த்து, நீர் மோர் தயாரித்து கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை உப்பு சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. நல்ல குளிர்ச்சியானது. நா வறட்சியைப் போக்கும்.
  இரவில் அதிகம் தண்ணீர் பருகினால், சிறுநீரின் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் தூக்கம் கெட்டுவிடக் கூடும். தூக்கம் குறைந்தால் அனேக உபாதைகள் தலைதூக்கிவிடும். அதனால் உலர்ந்து போய்விட்ட நாக்குக்கு வெட்டி வேர் போட்டு ஊறிய மண் பானைத் தண்ணீரை, நாக்கின் மீது படர விட்டு, சிறிதுநேரம் வைத்திருந்து சிறிய அளவில் பருகினால், மேலும் மேலும் ஏற்படக் கூடிய நாவறட்சியை எளிதில் போக்கிக் கொள்ளலாம்.

  Sriramajayam likes this.
  Thanks,

  MR.Lakshmim.

 3. #1043
  durgasakthi's Avatar
  durgasakthi is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  chidambaram
  Posts
  6,098

  re: Today's Medical Info

  வேலைக்குச் செல்லும் பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த சூப் :


  மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
  ஆரைக்கீரை - 1 கைப்பிடி
  கொத்தமல்லி - 1 கொத்து
  கறிவேப்பிலை - 2 இணுக்கு
  சின்ன வெங்காயம் - 3
  பூண்டு - 2 பல்
  இஞ்சி - 1 துண்டு
  காரட் - 1
  புதினா - சிறிதளவு
  சீரகம் - 1 ஸ்பூன்
  மிளகு - 5
  சோம்பு - 1 1/2 ஸ்பூன்
  இலவங்கப்பட்டை - 1


  இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து வாரம் இருமுறை சூப் செய்து அருந்தி வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

  Sriramajayam likes this.
  Regards,
  Durgasakthi

  Beaded & Quilling Earrings

 4. #1044
  durgasakthi's Avatar
  durgasakthi is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  chidambaram
  Posts
  6,098

  re: Today's Medical Info

  புதினாவில் உள்ள சத்துக்கள்:


  நீர்=85%
  மாவுப்பொருள்=6%
  புரதம்=4%
  கொழுப்பு=0.5%
  தாது உப்புக்கள்=1.6%
  கால்சியம்=0.2%
  பாஸ்பரஸ்=0.08%
  இரும்புத் தாது=15.6 யூனிட்
  வைட்டமின் A=2700 யூனிட்


  இவை அனைத்தும் 100 கிராம் புதினாச்சாறில் உள்ள சத்துகள்.


  மருத்துவக் குணங்கள்:


  வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும்.
  உடல் தொப்பை, பருமன் குறைகிறது.
  அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது.
  சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.
  தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறுகின்றது.
  மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

  Sriramajayam likes this.
  Regards,
  Durgasakthi

  Beaded & Quilling Earrings

 5. #1045
  durgasakthi's Avatar
  durgasakthi is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  chidambaram
  Posts
  6,098

  re: Today's Medical Info

  ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து இருக்கிறது. குளித்து முடித்ததும், சருமம் மென்மையாக இருக்கும் நேரத்தில் சுத்தமான ஆலிவ் எண்ணெயை லேசாக உடலில் தடவிக் கொண்டால், தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராது.

  Sriramajayam likes this.
  Regards,
  Durgasakthi

  Beaded & Quilling Earrings

 6. #1046
  durgasakthi's Avatar
  durgasakthi is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  chidambaram
  Posts
  6,098

  re: Today's Medical Info

  பாட்டி வைத்தியம்

  பித்தவெடிப்பு மறைய:

  காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

  தொண்டை வலிக்கு:

  பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

  இருமல் தொல்லைக்கு:

  தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ*ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

  கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்:

  கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

  இருமல் சளிக்கு:

  தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்*ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

  கட்டிகள் உடைய:

  மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

  பேன் தொல்லை நீங்க:

  வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

  மேனி பளபளப்பு பெற:

  ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

  தும்மல் வராமல் இருக்க:

  தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

  கரும்புள்ளி மறைய:

  எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

  தொண்டை கரகரப்பு நீங்க:

  அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

  கருத்தரிக்க உதவும்:

  அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 100 கிராம் எடுத்து தண்ணீ*ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

  இருமல் சளி குணமாக:

  சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.


  Sriramajayam likes this.
  Regards,
  Durgasakthi

  Beaded & Quilling Earrings

 7. #1047
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  re: Today's Medical Info

  குண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர்

  உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை உடல் பருமன். கண்ட நேரத்தில் சாப்பிடுவது. நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் என சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது. இதனால் இதயநோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் குறையும் என்று தெரியவந்துள்ளது.

  யோகர்ட் என்பது கொழுப்பு நீக்கப்பட்டு நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்ட தயிர். இதில் உடல் பருமனை குறைக்கும் பாக்டீரியாக்கள் உள்ளனவாம்.
  பொதுவாக தயிரில் புரதச் சத்து, கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை காணப்படுகின்றன.

  மாரடைப்பை தடுக்கும்:
  தயிர் எளிதாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

  நறுமணத் தயிரிலுள்ள நுண்ணுயிர்கள் அபாயகரமான நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வாய்ந் தவை. இதனால் வயிற்றுப் போக்கு மலச்சிக்கல் போன்றவைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப் பையும் தடுக்கின்றது.

  உடல் பருமன் குறையும்:
  அமெரிக்காவின் மிசௌரியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் உடல் பருமன் குறித்தும் அதை குறைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நொறுக்குத் தீனி அதிக அளவில் சாப்பிடுவதால், உடல் பருமனை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாவது நிரூபிக்கப்பட்டது. உடல் பருமனுக்கு காரணமாக இந்த பாக்டீரிக்களை கொல்லும் சக்தி, யோகர்ட்டில் உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  எனவே, உடல் பருமனை தவிர்க்க விரும்புகிறவர்கள் தினமும் யோகர்ட் சாப்பிடலாம் என்று ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவும் என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உடல் பருமன் நிபுணர் ஜெப்ரே பிளையர் கூறியுள்ளார். உடல் பருமன் கட்டுப்படுத்தப்பட்டாலே இதயநோய்கள், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எட்டிப்பார்க்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  Sriramajayam likes this.

 8. #1048
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  re: Today's Medical Info

  ரோஜா “குல்கந்து”

  ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.

  குல்கந்து செய்முறை:
  நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். ரோஜா இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும்.

  இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.

  ஜீரணக் கோளாறு நீங்கும்:
  குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

  ஆண்மை பெருக்கி:
  குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கின்றனர் என்று கூறப்படுகிறது.
  பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

  இதயத்திற்கு ஏற்றது:
  ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.

  இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிடலாம் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

  குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

  Sriramajayam likes this.

 9. #1049
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  re: Today's Medical Info

  நெல்லிக்காய் மோர்

  நெல்லிக்காய் – 4
  மோர் – ஒரு கப்
  உப்பு, பெருங்காயம் – தேவையான அளவு.

  செய்முறை:

  நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பருகலாம்.

  குறிப்பு:

  வைட்டமின் ‘சி’ நிறைந்த இந்த எனர்ஜி டிரிங், வயதானவர்களுக்கு மிகவும் ஏற்றது.

  Sriramajayam likes this.

 10. #1050
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  re: Today's Medical Info

  ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

  செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.

  உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

  திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

  அடங்கியுள்ள சத்துக்கள்:

  உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

  ரத்தசோகையை கட்டுப்படுத்தும்:

  ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

  காமாலை நோய் குணமடையும்:

  மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

  உடல்புஷ்டிக்கு:

  இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

  குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

  தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.

  மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

  பெண்கள் நோய் தீரும்:

  உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீ*ரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீ*ரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்.

  Sriramajayam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter