Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1131
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    மருந்தாகும் மலர்கள்



    ஆவாரம் பூ

    ரத்தத்துக்கு மிகவும் பயன்தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல்சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

    நெல்லிப்பூ

    உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச்சிக்கலுக்கு இது உகந்தது.

    செம்பருத்திப்பூ

    இருதய பலவீனமடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

    ரோஜாப்பூ

    இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும்



    Sponsored Links
    Sriramajayam and Amirporkodi like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1132
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    புதினாக்கீரையின் மகத்துவம்

    அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

    எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

    சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக . . .

    சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.

    கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த

    கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.

    புதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது. ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.

    புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும். புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.

    புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது.

    இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.
    புதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேண்டும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும்.


    Last edited by datchu; 28th Nov 2013 at 11:41 PM.
    Sriramajayam and Amirporkodi like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1133
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info

    கவிழ்தும்பை


    குளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன.
    நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.


    இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல் பாட்டை ஊக்குவிக்கின்றன.


    கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.




    With Love,
    Priya

  4. #1134
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    வாழை


    அன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம், வாழை. பல்வேறு உடல்நல பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம்...


    * தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைபட்ட காயம்- பாதிக்கப்பட்ட இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.


    * காயங்கள், தோல் புண்கள்- தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.


    * சின்னம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதும் தேன் தடவி, அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் குணமாகும்.


    * சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையைக் கட்டி வைக்க வேண்டும்.


    * குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி, அந்தச் சாம்பலை கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, இவை சரியாகும்.


    * அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் சரியாகும். தொடர்ந்து 2- 3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.


    * காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.


    * டைபாய்டு, மஞ்சள் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடுவது பலன் கொடுக்கும்.


    * இருமல்- கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்துப் பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.


    * சிறுநீரக நோய்கள், ரத்தக் குறைபாடுகள்- நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன் பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.

    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  5. #1135
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    வாய்ப்புண் தீர

    நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

    பித்தம் குறைய

    15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.









    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  6. #1136
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    முடி கொட்டுவதை நிறுத்த


    வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  7. #1137
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்:


    கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.


    * பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.


    * ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.


    * கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.


    கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்

    பூவரசன் வேர் 30 கிராம்

    வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்

    சிறுநாகப் பூ 15 கிராம்

    வெடியுப்பு 10 கிராம்

    புனுகு 10 கிராம்


    இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


    தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.


    * கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.


    * கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.


    * கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.


    * சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.

    Last edited by durgasakthi; 29th Nov 2013 at 11:34 AM.
    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  8. #1138
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    தொப்பை குறைய

    இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.

    மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.

    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #1139
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    கண்களையும் கவனியுங்கள்


    நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும்.


    கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.


    அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.


    கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.


    கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.


    நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்ச்சி தரும் நீல நிறங்களை பார்க்கலாம்.


    ஆரஞ்சு பழத்தை சாறாக பிழிந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #1140
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Today's Medical Info

    Hi durga ...eyes kum belly kum ne kodutha tips use full ah irunthathu da..thanks for sharing

    life is so beautiful....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter