Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1171
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    Quote Originally Posted by vijivedachalam View Post
    ok ok durga sister ippo doubt clear aagiduchi........neenga ennai vida senior ah junior..ungala akka nu koopidanumaa illai name solli koopidanuma..pls sollunga
    im 28.here after u hav to decide.enna sis nu kooptalum k than name solli kooptalum no prob.............ippo neenga than sollanum na seni or juni...


    Sponsored Links
    datchu likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  2. #1172
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    பாத வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்....!!!!


    தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!

    • ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

    • ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மென்மையாக மாறுவதை காணலாம்.

    • வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் மிருதுவாகும்.

    • மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

    • உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.

    • டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1173
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    மூலிகைகளும், தீரும் நோய்களும்...

    1. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

    2. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

    3. கீழாநெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

    4. குப்பை மேனி: தோல் நோய்கள், மூலம், பவுத்தரம், குடல் பூச்சிகள்

    5. சிறு குறிஞ்சான்: சர்க்கரை வியாதி, அதிமூத்திரம், உடல் சூடு

    6. சிரியா நங்கை: கடி விஷங்கள், மதுமேகம், உடல் பலவீனம்

    7. சீந்தல் கொடி: மதுமேகம், மலேரியா, பித்தம், தாது பலவீனம்

    8. தும்பை: சொரி, சிரங்கு, விஷங்கள், பீனிசம் வாதடர் தாமரை

    9. பொடுதலை: இடுப்பு பிடிப்பு, ரத்த மூலம், மதுமேகம், தோல் நோய்கள்

    10 பொன்னாங்கண்ணி: கண் நோய்கள், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

    11. புதினா: ருசியின்மை, வாந்தி, பசிமந்தம், அதிமலக்கழிவு

    12. மணத்தக்காளி: அல்சர், மூலம், வாய் நாக்கு புண்கள், மூலம்

    13. மகாவில்வம்: பித்தம், மேகம், அல்சர், கண் கோளாறுகள்

    14. மருதாணி: தோல் நோய்கள், வெட்டை, மதுமேகம்

    15. மஞ்சள் கரிசாலை: காமாலை, ஆஸ்துமா, ஈரல் குற்றங்கள்

    16. முசு முசுக்கை: இருமல், சளி, ஆஸ்துமா, சிறுநீரக கோளாறுகள்

    17. முருங்கை: உடல் சூடு, கண் நோய்கள், தாது பலவீனம்

    18. வாத நாராயணன்: வாத மூட்டுப் பிடிப்புகள், பாரிச வாதம், தண்டுவட வலிகள்

    19. வேம்பு: வயிற்று பூச்சிகள், சொறி சிரங்கு, விஷ கடிகள்

    20. வெள்ளனுகு: வெள்ளை, வெட்டை, வாதம், தோல் நோய்கள்

    21. அத்தி: மூலம், வயிற்றுக் கடுப்பு, அல்சர், மலச்சிக்கல், நீரழிவு

    22. அரச இலை: உடல் காங்கை, தாது நஷ்டம், பெண்மலடு நீங்கும்

    23. அம்மான் பச்சரிசி: உடல் எரிச்சல், நமைச்சல், வெள்ளை முட்டை

    24. அவுரி இலை: கீழ் வாதம், சளி, சகல விஷங்கள்

    25. ஆடு தீண்டா பாளை:வயிற்றுப்பூச்சி, சொறி, சிரங்கு, விஷ கடிகள்

    26. ஆல இலை: வயிற்று கடுப்பு, வெள்ளை விழுதல், மேகநீர்

    27. கல்யாண முருங்கை: மூத்திரக் கோளாறுகள், வாய் மற்றும் உள் வேக்காடுகள்

    28. கற்பூர வள்ளி: சளி, இருமல், காசம், வாதக் கடுப்பு

    29. துத்தி: மூலம், அல்சர், கிட்னி வலிகள், நீர்ச்சுருக்கு

    30. நாயுருவி: மூலம், கபம், தேமல், மேக நோய்கள்

    31. நொச்சி: சகல வாதங்கள், பீனிசம், இரைப்பு, இருமல்

    32. பூவரசு: விஷக் கடிகள், பெருவயிறு வீக்கம், சொறி சிரங்கு

    33. மா இலை: தோல் நோய்கள், நீரேற்றம், மலடு

    34. கிச்சிலி கிழக்கு: குளியல் பொடியல் சேர்க்க தோல் நோய்கள் தீரும்

    35. நிலப்பண்ண கிழங்கு: இடுப்பு வலி, மூலம், மூத்திர நோய், தாது நஷ்டம்

    36. பூமிச்சக்கரை கிழங்கு: மூலம், கீழ்வாதம், வயிற்றுவலி, வெள்ளை

    37. சதா வேரி கிழங்கு: வெள்ளை, உட்சூடு, மேக எரிச்சல், தாது பலவீனம்

    38. சர் பகந்தி: ரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி

    39. நித்ய கல்யாணி வேர்: மதுமேகம், மூத்திர தாரையின் சகல கோளாறுகள்

    40. வெட்டிவேர்: பித்தம், தலை மற்றும் கழுத்து நோய்கள் சுக்கில நட்டம்

    41. கடலழிஞ்சல்: நீரழிவு, மதுமேகம், முத்தோஷ நீர்ப்போக்குகள்

    42. கோரை கிழங்கு: பித்தம், தாகம், தேக எரிச்சல், கபம் வாதம்

    43. மருதம்பட்டை: ரத்தப்போக்கு, இருதய வியாதிகள், அதி - மூத்திரம்

    44. அசோகபட்டை: மூலம், பெண்களின் அதிரத்தப்போக்கு நீங்கும்

    45. பாகற்காய்: மூலம், சர்க்கரை வியாதி, மலக்கிருமி தொந்தரவு

    46. நெருஞ்சில்: நீர்க்கடுப்பு, நீரடைப்பு, கல்லடைப்பு, நீர் எரிச்சல்

    47. மங்குஸ்தான் ஓடு: அல்சர், ரத்த பேதி, வயிற்றுக் கடுப்பு, நீர் எரிச்சல்

    48. மாதுளை ஓடு: வாய்ப்புண், வயிற்றுக் கோளாறுகள், தாது நட்டம்


    ashsuma likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1174
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    உடம்பு இளைக்க இஞ்சி சாறு



    டம்பு இளைக்க இஞ்சி சாறு

    இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


    இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.


    இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.


    இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக் கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.


    இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.


    காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.


    பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1175
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

    அருகம்புல் சாறு.: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும். ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும். தாய்பாலை அதிகரிக்க செய்யும். உடலில் நச்சுத்தன்மையை அகற்றும். கொழுப்பு சத்தை குறைக்கும்.

    துளசி இலைச்சாறு: காய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும்.

    தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.

    மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு: உடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

    பொண்ணாங்கண்ணி சாறு: உடலுக்கு வலிமை ஊட்டும். பொன் போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும்.

    வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.

    வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும்.. காலாரா குறையும்.

    புதினா இலைச்சாறு: வாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.

    நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்

    வாழைத்தண்டு சாறு: சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். ரத்தம் சுத்தமாகும்.

    கேரட் சாறு: கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும்.

    அரச இலைச்சாறு: மலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.

    கொத்தமல்லி சாறு: பசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்.

    dinakaran



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1176
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    சில மருந்துகள் எப்படித் தூங்க வைக்கின்றன?

    சில மருந்துகள் நம்முடைய நடுவண் நரம்பு மண்டலத்தின் மீது சோர்வைச் செலுத்தி அதனைக் குறைந்த ஆற்றலுக்குள்ளாக்குகின்றன. விழிப்பு-உறக்கச் சுழல் முறையை நடத்திச் செல்லும் மூளைப்பரப்பில் துயிலூட்டும் மருந்துகள் செயல்பட்டு மாற்றுகின்றன. இதனால் நமக்கு தூக்கம் ஏற்படுகிறது. மருந்துகள் மிக வேறுபாடுகள் கொண்டுள்ளன. தேவையான மருந்தளவு, அவை செயல்படுத்தும் கால அளவு, உதவியளவு, அபாய அளவுகளை அறிந்து, அவை பாதுகாப்புத் தரும் எல்லை ஆகியவற்றிற்கேற்ப அம்மருந்துகள் வேறுபாடு உடையன.

    பினோபார்ப்பிடோன் (Phenobarnitone) அல்லது லூமினால் (Luminal) போன்ற நீண்ட நேரச் செயல்பாடு விளைவிக்கும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் (Barbiturates) ஆறுமுதல் பத்து மணி நேரத்திறன் கொண்டுள்ளன. தொடர்ந்து பயன்படுத்துபவர்க்கு அடுத்தநாளில் மந்தமான மன நிலையையும், உறங்கி வழிகிற நிலையையும் அவை உண்டாக்கலாம். இடை நிலையில் செயல்படும் மருந்துச் சரக்குகள், பூட்டோபர்பிடோன் (Butobarbitone), சொனாரில் (Soneryl), அமிலோபார்பிடோஸ் (Amylobarbitone) அல்லது அமிடால் (Amytal) போன்றவை ஐந்து முதல் ஆறுமணியே செய்கை புரியும்.

    பென்டோபார்பிடோன் (Pentonarbitone) அல்லது நெம்பூடல்(Nembutal) போன்ற குறுகிய காலத்தில் செயல்படுத்தும் மருந்துகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரமே பயன்படும். கடுந்தீவிரமான குறை காலமுடையவை (Ultra-Short drugs) தியோபென்டோன் (Thiopentone) அல்லது பென்டோதால் (Pentothal) போன்றவை மயக்கமூட்டுவதற்கு முன்பாகக் கொடுக்கப்படுகின்றன. தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் கடுந்தீங்குகளை விளைவிக்குமாதலால் கட்டாயமாக மருத்துவர் மேற்பார்வையில் மட்டுமே இது உட்கொள்ளத்தக்கது.


    (உடலும் மருந்தும் நூலிலிருந்து)



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1177
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து

    ஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகலாம். வீட்டில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் என அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்தை காப்பதற்கு மிகவும் உதவுகிறது. சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, நீர் மோர் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும்.


    ஓமம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், பூண்டு 50 கிராம், கறிவேப்பிலை 100 கிராம், தோல் நீக்கிய சுக்கு 200 கிராம் இவற்றை லேசாக நல்லெண்ணையில் வறுத்துப் பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர சொரிமானம் ஆகி வயிற்றுக் கோளாறுகள் இன்றி இருக்கலாம்.


    விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிட்டால் அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், உடல் வலி, அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் மிகவும் நல்லது. 2 பெரிய துண்டு சுக்கு, 2 ஏலக்காய் இவற்றை நசுக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, முக்கால் டம்ளராக வற்றியதும் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலநது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது. உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.

    மேலும் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், ஜீரணமாகும். சுக்குப் பொடியுடன் சுடுநீரைச் சேர்த்துக் குடிக்கக்வேண்டும். குடித்து முடித்த பின், சுமார் 15 நிமிடங்கள் இடது பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள். ஜீரணம் ஆவதில் சிக்கல் இருக்காது. ஒரு கைப்பிடி துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், பெரிய துண்டு பெருங்காயம், 2 கைப்பிடி அரிசி, ருசிக்கு உப்பு, பத்து மிளகாய் வற்றல் இவற்றை சிறு தீயில் எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 3 கைப்பிடி பொட்டுக் கடலை சேர்த்துப் பொடி செய்து பாடடிலில் நிரப்பிக் கொள்ளவும். சூடான சாதத்தில் எண்ணை அல்லது நெய் சேர்த்து சாப்பிட அஜீரணம் போகும். பசி எடுக்காமல் அவதி படுவோர்க்கு பசி எடுக்கும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1178
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    முதுமையிலும் இளமையாக வாழலாம்


    மழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமைப் பருவம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டிஏஜிங் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.




    இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்னைக்கு உணவு, உடற்பயிற்சிகளால் தீர்வு காண முடியும். நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

    கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டாகரோட்டீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

    பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது. முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது. குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

    அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டாகரோட்டீன் அதிகம் உள்ளன. பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடு இருக்கலாம். தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கு மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

    சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.


    நடந்தால் நாடும் உறவாகும்
    படுத்தால் பாயும் பகையாகும்


    உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு, உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும். நிம்மதியான தூக்கம் வரும். எந்த பக்கவிளைவும் இல்லாதது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி. எனவே, உடற்பயிற்சியின் மூலம் உற்சாக வாழ்வை வாழலாம்.

    வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது, மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும்.

    அவசியம் தேவை

    அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்று இருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். அதிக பருமன் இல்லாத, நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும் ஒருவருக்கு, 1,800 முதல் 2,000 கிலோ கலோரி தேவை. உடலில் புரதச்சத்து குறைந்தால், உடலில் சதை பலவீனம் அடைந்து, உடல் இளைத்தது போல் ஆகிவிடும். உடல் எடையின் அளவைப் பொறுத்து, அதே அளவை கிராமில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, ஒருவர் 55 கிலோ எடை இருந்தால், தினசரி உணவில் 55 கிராம் புரதச்சத்து தேவை.

    காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களில் அதிக அளவில் இருக்கிறது. அந்தந்த பருவத்தில் கிடைக்கும், அந்தந்த ஊரில் விளையும் காய்கறி, பழங்களை எடுத்துக்கொண்டால், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பழங்களை, உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    எப்படி சாப்பிட வேண்டும்?

    காலை ஆறு மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிடுங்கள். சுகமான காற்று முகத்தில்படும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். பிறகு, அரை மணி நேரம் கழித்து பால், காபி, டீ என ஏதாவது ஒன்றைக் குடிக்கலாம். 8 மணிக்கு 3 இட்லி, தோசை, இடியாப்பம் என எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். மதியம் 1 மணிக்கும், இரவில் 8 மணிக்கும் சாப்பிட வேண்டும். கண்டிப்பாக 10 மணிக்கு மேல் தூங்கிவிட வேண்டும். இதுபோன்று கடைப்பிடித்தால் கண்டிப்பாக முதுமையிலும் இளமையாக வாழ முடியும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1179
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    வசம்பு

    விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

    அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.

    இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம். அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.

    பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.


    * சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

    * வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.

    இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

    * இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

    * கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. * பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1180
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்....!!!!


    1.நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது... எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்து
    க்கிறது

    2. உடலின் pH ஐ சீராக்குகிறது... எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது

    3. உடல் எடையைக் குறைக்கிறது... எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை

    4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது

    5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்
    கிறது

    6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது

    7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது

    8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது

    9. stress ஐ குறைக்கிறது. இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை. 10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter