Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1181
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    கொழுப்பைக் விரட்டும் கொடம்புளி

    கொடம்புளி …! எங்கோ கேள்விப்பட்ட பெயராகத் தோன்றுகிறதா? இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள். கொடம்புளியின் பூர்வீகம் இந்தியாதான்! தமிழ், மலையாளத்தில் இதற்கு பெயர் கொடம்புலி. சமஸ்கிருதத்தில்Vrikshamla, தெலுங்கில் Sima chinta, ஆங்கிலத்தில் Brindel berry. இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது.


    உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இந்த கொடம்புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெரும் வகையில் உதவுகிறது. உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது. இந்த மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. கொடம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும். புளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

    கொடம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த குற்றத்தைச் சீர்படுத்தும். இலங்கை மக்களும், கேரள மக்களும் பழங்காலம்தொட்டே இந்த கொடம்புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். நாமும் கொடம்புளியை உணவில் சேர்த்து அதன் பயன்களை அடைவோம். உடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி!

    தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். அட.. நில்லுங்க …! சட்டுன்னு ஷட் டவுன் பண்ணிட்டு அதுக்குள்ள கொடம்புலி வாங்க கிளம்பிட்டீங்க! அப்போ ஹெல்த் விஷத்துல நீங்க புலிதான் போங்க!




    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1182
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ பற்றிய 7 தகவல்கள்!!!

    மழைக்காலம் என்றாலே ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தயாராக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி அது தொடர்பான அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதும் மிக அவசியம் அல்லவா.!

    அதற்கு பேப்பர் மற்றும் டி.வியில் தொற்று வியாதிகள் தொடர்பான செய்திகளை கவனமாக பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் பகுதியில் ஏதேனும் இதுப்போன்ற பரவலான நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும். எனவே இது போன்ற செய்திகளை தவறாமல் கவனிக்க வேண்டும். இங்கு ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ பற்றிய ஒருசில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

    ஒரு ‘சின்ன' விஷயத்தை செய்ய மறக்க வேண்டாம்.
    அது வேறு ஒன்றுமில்லை - உங்கள் கைகளை அவ்வப்போது சுத்தமாக கழுவிக்கொள்வதுதான்!. 20 நொடிகளுக்கு நன்கு இரண்டு கைகளையும் தேய்த்து கழுவவேண்டும். ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ காய்ச்சல் போன்றவை நம் கைகளில் ஒட்டிக்கொள்ளும் கிருமிகள் வழியாகத்தான் அதிகம் பரவுகின்றன.

    உடற்பயிற்சி கூட ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை விரட்டும் தெரியுமா?!
    உடலுழைப்போ அல்லது உடற்பயிற்சியோ சீராக மேற்கொண்டு வரும் பட்சத்தில் நமது உடலுக்கு தேவையான எதிர்ப்புச்சக்தி கிடைத்துவிடுகிறது. அது மட்டுமன்றி ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்றவை வந்தாலும் எளிதில் குணமடைந்துவிடும் வலிமை உடலுக்கு வாய்க்கிறது. எனவே உடற்பயிற்சி என்பது ஒரு நோய்த்தடுப்பு மருந்தும்கூட என்பதை மறந்துவிடக்கூடாது. (அதற்காக சளிபிடித்து காய்ச்சல் அடிக்கும்போது பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ள புறப்படக்கூடாது)

    ஃப்ளூ காய்ச்சலை லேசாக நினைக்காதீர்கள்!
    1918 மற்றும் 1919ம் ஆண்டுகளில் சுமார் 50 மில்லியன் மக்கள் அதாவது அப்போதைய மொத்த உலக மக்கள் தொகையில் 3-5 சதவீதம் பேர் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ' எனும் நோயால் மாண்டு போயினர். இந்த எண்ணிக்கையானது 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த போர்களில் மாண்டவர்களைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஃப்ளூ காய்ச்சல் என்பதை ஒரு பயங்கரமான தோற்று நோய் என்றே சொல்லலாம். தற்போதைய நவீன மருத்துவ யுகத்தில் இதுபற்றி அந்த அளவுக்கு மிரள வேண்டியதில்லை என்றாலும், இப்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோய் தொற்றுக்கு பலியாகின்றனர். கடந்த 30 வருடங்களில் அமெரிக்க நாட்டில் 3000 முதல் 49000 மக்கள் இறந்துள்ளனர்.

    ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கிருமியானது 6 அடி சுற்றளவில் பரவும் சக்தி கொண்டது!
    ஜலதோஷமோ அல்லது ஃப்ளூ காய்ச்சலோ உள்ள ஒருவரிடமிருந்து நீங்கள் 6 அடி சுற்றளவில் இருந்தாலே போதும், அந்த நோய் உங்களுக்கும் தொற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்களிடமிருந்து இந்த 6 அடி தூரத்தில் தள்ளி இருப்பது நல்லது. மூக்கை ‘சிந்த' ஒரு முறை இருக்கிறதா? உண்மையில் அப்படி ஏதுமில்லை. இருந்தாலும் ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டிருக்கும் போது, ஒரு மூக்கை அழுத்திக் கொண்டு மற்றொன்றால் மெதுவாக சிந்த வேண்டும். கன்னாபின்னாவென்று மூக்கை உதறி அழுத்தி இழுத்து துடைத்து சரி செய்ய நினைத்தால், பிரச்சனை இன்னும் அதிகமாகி காது வலியில் சென்று முடியும்.

    ஃப்ளூ தடுப்பூசி போட்டிருந்தாலும் ஃப்ளூ காய்ச்சல் வரக்கூடும்!
    ஆமாம். அது உண்மைதான். நாம்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டோமே - நமக்கு வராது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. அதே சமயம், எல்லாம் ஒன்றுதானே என்று தடுப்பூசி போடாமலும் இருக்கக்கூடாது.

    பாட்டி வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் போன்றவையே நல்லது!
    சிலது பலனளிக்கும் சிலது பலனளிக்காமல் போகலாம் என்பதுதான் உண்மை. பொதுவாக வைட்டமின் சி மற்றும் சிக்கன் சூப் போன்றவை இந்த வியாதிகளுக்கு ஏற்றவையாக சொல்லப்படுகிறது. நம்ம ஊர் மருத்துவ பாரம்பரியம் இந்த வகையில் ஒரு நீண்ட பட்டியலையே வைத்திருக்கிறது. பலவகை கஷாயங்கள், ஆவி பிடிப்பது என்று ஏராளம் இருக்கின்றன. அவற்றில் நம்மால் முடிந்ததை நமக்கு ஏற்றதை மட்டும் முயற்சிக்கலாம்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1183
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    இளநரை போக்க மூலிகை எண்ணெய்..!


    இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

    இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

    பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

    உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

    இளநரை போக்க மூலிகை எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
    சீரகம் - 1 ஸ்பூன்
    சோம்பு - 1/2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 3
    கறிவேப்பிலை - 2 இணுக்கு
    கொத்தமல்லலி - சிறிதளவு
    நெல்லி வற்றல் - 10 கிராம்
    வெட்டிவேர் - 5 கிராம்

    இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநறை நீங்கும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1184
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    re: Today's Medical Info

    கோவைக்காய் மருத்துவ குணங்கள்

    புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. இவற்றின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.

    தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

    கோவைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

    பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு – கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும்.

    இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது.

    ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும்.


    Ani01, datchu and Sriramajayam like this.

  5. #1185
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    re: Today's Medical Info

    இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட சில டிப்ஸ்...!

    தேங்காய் நார்கள்
    தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள் வீட்டில் பாத்திரங்கள் கழுவ பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது.

    எவ்வாறென்றால் இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கடைகளில் கூட கிடைக்கிறது.

    மாலை நேரத்தில் நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கு புகையை காட்டி, சிறிது நேரம் கழித்து பார்த்தால் கொசுக்களை மாயமாய் மறைந்துவிடும். இயற்கை நார்களில் இருந்து வரும் புகையால் எந்த பாதிப்பும் வராது.

    பச்சை கற்பூரம்
    கொசுக்கள் அழிவதற்கு முக்கியமாக பொருள் சல்பர், இந்த சல்பர் இருக்கும் எங்கு இருந்தாலும் கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது.

    ஒரு பாத்திர தண்ணீரில் பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் அதில் இருந்து வரும் வாசனையால் கொசுக்கள் அருகில் வராது.

    கெரோஷின் மற்றும் கற்பூரம்
    இந்த இரண்டுமே கொசுக்களை அழிப்பதில் வல்லமைமிக்கது. கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாக்களில் கெராஸினை விட்டு சிறிது கற்பூரத்தையும் கலந்து பிளக்கில் மாட்டி விடவேண்டும். அதனால் ஏற்படும் வாசனையால் கொசுக்கள் வராமல் இருப்பதோடு, உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

    datchu and Sriramajayam like this.

  6. #1186
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    அதிமதுரம் டீ ! சளித்தொல்லை நீங்க…

    மார்கழியில் குளிரும் பனியும் இருக்க அத்துடன் சளி சம்பந்தப்பட்ட உபாதைகளும் சேர்ந்தே நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலையில் எழுந்தவுடன் சூடான, ஆரோக்கியமான பானத்திற்காக ஏங்குவோர், இங்கே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை ட்ரை செய்து பாருங்களேன்…

    அதிமதுரம் டீ

    தேவையான பொருட்கள்

    அதிமதுரம் தூள் – 1 ஸ்பூன்
    தண்ணீர் – 200 மில்லி
    தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – சுவைக்கேற்ப

    செய்முறை

    அதிமதுரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி நிழலில் காய வைத்து, சுத்தம் செய்து பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பொடியை நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வடிகட்டி பருகவும். இது தீராத தாகத்தை தணிக்கவல்லது, சளிக்கு நல்லது. தொண்டை புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.

    இஞ்சி கசாயம்

    தேவையானவை

    இஞ்சி சாறு – 4 ஸ்பூன்
    தேன் – 4 ஸ்பூன்
    லெமன் ஜுஸ் – 2 ஸ்பூன்
    தண்ணீர் – ¾ டம்ளர்

    செய்முறை

    இஞ்சி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். தேன், லெமன் ஜுஸ் மற்றும் தண்ணீரோடு கலந்தால் கசாயம் தயார். இது அஜீரணக் கோளாறுக்கு நல்ல மருந்து.




    Amirporkodi likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #1187
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    re: Today's Medical Info

    உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள்

    குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சயை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச்... சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.

    இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-

    குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

    பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.

    இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


  8. #1188
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    re: Today's Medical Info

    மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

    1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, ம...ூளை அழிவுக்குக் காரணமாகும்.

    2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

    இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

    3. புகை பிடித்தல்

    மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

    4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

    நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

    5. மாசு நிறைந்த காற்று

    மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

    6.தூக்கமின்மை

    நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

    7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

    தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

    8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

    உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

    9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

    மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

    10. பேசாமல் இருப்பது

    அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

    durgasakthi likes this.

  9. #1189
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info



    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #1190
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    தொண்டைக்கு இதமான
    கிராம்பு கஷாயம்


    செய்முறை: 10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும். கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம்.


    பலன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்.

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter