Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1231
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு தவிர்க்கவேண்டிய உணவுகள்..

    நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம்.

    ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம். அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள். .

    பால்

    பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். .

    உணவிற்கு பின்பு டெசெர்ட்

    உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள். .

    மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

    மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்.

    Today's  Medical Info-food-drinks-vegetables-444824.gif



    Sponsored Links
    datchu and durgasakthi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1232
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட் .. ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ? கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ? கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது .. கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ? தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது மினரல் ஆயில் என்றால் என்ன ? பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் .. கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும்.கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .. பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .. சாம்பிளுக்கு சில படங்கள். பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ... மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ? தோல் வறண்டு போகும் முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும் அரிப்பு வரும் .. ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .. சாம்பிளுக்க்கு மினரல் ஆயில் எப்படி வறட்சியை உண்டாக்க்கும் தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள் குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.


    Tamil News


    datchu and durgasakthi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #1233
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    பல்லுப் போனால் சொல்லுப் போகும் – வெண்மையான பற்களை பராமரிப்பது எப்படி ?

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. முகத்தின் அழகு பற்களில் தெரியும் என்பது அனைவருக்கும் ஏற்ற மொழி.

    முப்பத்திரண்டு பற்களும் சேர்ந்து தான் உங்கள் முகத்தின் அமைப்பை முழுமைப்படுத்தும் தூண்கள் என்பதை சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா! இந்த பற்களை பாதுகாப்பது தொடர்பான விளம்பரங்கள், விதவிதமான டூத் பேஸ்ட், பாதுகாப்பு லோஷன்கள் என தினசரி விளம்பரங்களை பார்க்காமல் நமது நாட்களும் செல்வதில்லை.

    பளிச்சிடும் பற்களை கொண்டிருப்பவர்கள் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், சிரிப்பதற்கும் என்றும் தயங்குவதில்லை. இந்த பற்களின் உபயோகங்கள் பலவிதம். அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் பலவிதம்.

    உங்கள் பற்கள் பேசுவதற்கும், மெல்லுவதற்கும் மட்டுமன்றி, உங்கள் தோற்றத்தையும் மாற்றும். பல் மருத்துவத் துறை இன்று பற்களை வெண்மையாக்கும் வழிமுறைகளையும், விலை உயர்ந்த பல சிகிச்சை முறைகளால் முத்துப் போன்ற பற்களை பெற வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் நாங்கள் கொடுத்துள்ள 20 டிப்ஸ்கள் மூலம் உங்கள் புன்னகை இயற்கையான வெண்மையை அடைய உதவுகிறோம்.

    மவுத் வாஷ், காபி, சோடா

    காபி, சோடா மற்றும் சில சமயங்களில் மவுத் வாஷ் கூட மஞ்சள் கறையை பற்களில் உண்டாக்கிவிடும். எனவே, இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

    ஒரு நாளுக்கு இரு முறையாவது பல் தேய்க்கவும்

    ஒரு நாளுக்கு இரு முறையாவது பல் தேய்ப்பது மிக அவசியமானது. ஏனெனில் அது பற்களிலும் பற்களின் இடையிலும் படிந்திருக்கும் துணுக்குகள் மற்றம் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை வெளியேற்றும். ஆதலால் மஞ்சள் கறை படிவதிலிருந்து விடுபட பல் தேய்ப்பது அவசியம்.

    பழமே பலம்!

    சில நேரங்களில் நீங்கள் அவசரத்தில் பல் தேய்ப்பதை விட்டு விடுவீர்கள். அந்நேரங்களில் நீங்கள் நார்ச்சத்து மிக்க பழங்களை உண்ணலாம். அது இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்கிறது. சிட்ரஸ் பழங்கள் பற்களில் படிந்திருக்கும் கறைகளை இயற்கையான முறையில் வெளியேற்றுகின்றன. இப்பழங்கள் எச்சில் அதிகமாக ஊறவும் பற்களை சுத்தப்படுத்தி வெண்மையாக்குகின்றன. வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஸ்ட்ராபெர்ரி, கிவி ஆகியவை ஈறுகளை வலுவாக்குகின்றன. மேலும் ஆப்பிளும், பேரிக்காயும் அதிக தண்ணீர் கொண்டுள்ளதால் எச்சில் ஊறச் செய்து உதவுகிறது.

    ஃப்ளாசிங்

    ஃப்ளாசிங் என்றாலே நிறைய மக்கள் அது தங்கள் ஈறுகளை காயப்படுத்தி கசிவை ஏற்படுத்தும் என்று பயப்படுவதுண்டு. ஆனால் கவனத்துடனும், பொறுமையுடனும் செய்தால் அது பற்களின் நலனை பாதுகாத்து கறைப் படிவதிலிருந்து பாதுகாக்கும்.

    பால் பொருட்கள்

    பாலினால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை குறைத்து, பற்களின் வெண்மையை உயர்த்தவும், பாதுகாக்கவும் செய்கிறது. பற்களிலுள்ள எனாமலை பாதுகாத்தும், வலுவூட்டுவதும் மட்டுமல்லாமல் செடார் எனும் கெட்டியான பாலாடை பற்களை வெண்மையாக்குவதிலும், தூய்மையாக்குவதிலும் சாதாரண பாலாடையை விட சிறந்த பலன் தரவல்லது.

    எள்

    எள் பற்களில் உள்ள துணுக்குகளை அழித்து பற்களின் எனாமலை வளர்ச்சியடையச் செய்கிறது. இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளதால் பற்களையும், ஈறுகளையும் சுற்றியுள்ள எலும்புகளை பாதுகாக்கிறது. சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்களையும் உற்பத்தி செய்கின்றன. சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடவும் மற்றும் பற்களில் கறை படிவதை தவிர்க்கவும் முடியும்.

    ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்

    ஸ்ட்ரா பயன்படுத்துவதால் பற்களில் ஏற்படும் கறைகளை தவிர்க்கலாம். குளிர்பானங்கள் பருகும் போது பற்களில் படியும் கறைகளை ஸ்ட்ரா பயன்படுத்துவதால் தவிர்க்க முடியும். ஸ்ட்ரா பயன்படுத்துவதால் பற்களின் மேல் குளிர்பானம் படாமல் நேரடியாக வாயின் உள்பகுதியில் இறங்கிவிடும்.

    காய்கறிகள்

    வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகளான ப்ராக்கோலி, கேரட், பூசணி போன்றவை பற்களின் எனாமல் வளர உதவி செய்கிறது. இவ்வகை காய்களை பச்சையாக உண்ணுவது நல்லது. ஏனெனில் இவை ஈறுகளை இயற்கையாக மசாஜ் செய்து, பற்களின் நடுவே தூய்மையாக்கி வெண்மையை பாதுகாக்கிறது.

    எலுமிச்சை மற்றும் உப்பு சேர்ந்த கலவை

    சிட்ரிக் அமிலம் இருப்பதால் எலுமிச்சையுடன் உப்பு சேர்ந்த கலவையை கலந்து குடித்தால் பற்களை பளீச்சென்று மாற்ற முடியும். ஆகவே வெண்மையான பற்கள் வேண்டுமானால் இந்த கலவையால் தொடர்ந்து பல் தேய்க்கவும்டூத் பிரஷ் மாற்றம் சரியான தருணத்தில் பிரஷ்ஷை மாற்றுவது மிக முக்கியமானதாகும். அது நல்ல பலனையும் தரும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஃப்ரஷ்ஷில் உள்ள நாறுகள் மிக கடினமடைவதால் எனாமலை காயப்படுத்தி கறை ஏற்படுத்தச் செய்யும்.

    கால்சியம் கலந்த உணவு

    கால்சியம் கலந்த உணவை உட்கொள்வதால் பற்களை வலுவடையச் செய்து பற்களின் அமைப்பை பாதுகாக்கின்றது

    பாதுகாப்பான இடத்தில் ப்ரஷ்ஷை வைக்கவும்

    ப்ரஷ்ஷை கழிப்பறையில் இருந்து குறைந்தது 6 அடி தூரத்தில் வைத்தால் தான் காற்றில் கலக்கும் கிருமிகளை தவிர்க்க இயலும். இதனால் பற்களை ஆரோக்கியமாகவும், பற்கள் பாதிப்படையாமலும் பாதுகாக்கவும் முடியும்.

    பல் மருத்துவரை தொடர்ந்து அணுகுதல்

    பற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உங்கள் பல் மருத்துவரை அவ்வப்போது அணுகுவது அவசியமாகும். பற்களை வருடத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்தாமல் இருப்பவர்கள், தொடர்ந்து பல் மருத்துவரை அணுகுபவர்களை விட, அதிகளவில் சிதைந்த பற்களையோ அல்லது மோசமான பல் தொடர்பான பிரச்சனைகளையோ சந்திக்க ஏற்படும்.

    பற்களை வெண்மையாக்கும் சிகிச்சை

    உங்கள் பற்களில் உள்ள கறை மோசமாக இருந்தாலோ அல்லது தீர்வு காண முடியவில்லையெனில் அதை வெண்மையாக்க சிகிச்சை மேற்கொள்ளலாம். இது உங்கள் பற்களை நன்கு வெண்மையாக்கும்.

    அதிக அளவு புதினா உள்ள பேஸ்ட்

    பேஸ்ட்டுகளில் புதினா அதிக அளவு இருப்பது நல்லது. ஏனெனில் புதினா பற்களை வெண்மைப் படுத்துவதில் மிக சிறந்த பலனளிக்கும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இது உடனடியாக இல்லாவிட்டாலும் சில காலங்களுக்குள் நல்ல பலனை தந்துள்ளது.

    பரம்பரை காரணங்கள்

    பெரும்பான்மையான நேரங்களில் மக்கள் பற்களில் ஏற்படும் கறைகளுக்கு பரம்பரை காரணங்களும் உள்ளன. இதனை பெரும்பாலானவர்கள் அறிவதில்லை. ஆதலால் பல் மருத்துவரை அணுகி சரியான பற்களில் கறை ஏற்படுவதற்கான சரியான காரணத்தை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

    அதிக அளவு ஆன்டி-பயாடிக்ஸ் வேண்டாம்

    அதிக அளவு ஆன்டி-பயாடிக்ஸ்கள் பற்களின் நிறத்தை பாதிக்கின்றன. ஆதலால் தேவையற்ற போது இத்தகைய மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

    சோனிக் டூத் பிரஷ் உபயோகிக்கவும்

    சோனிக் டூத் பிரஷ் உபயோகித்தால் பெரும்பான்மையான வேலையை அதுவாகவே செய்து விடும். சாதாரண டூத் பிரஷ்ஷால் கடினமாக அழுத்தம் கொடுத்து பிரஷ் செய்யும் போது காயம் ஏற்படுவதுண்டு. இதனால் ஈறுகளில் பாதிப்பு ஏற்பட்டு பற்கள் சிதையத் தொடங்குகின்றன. சோனிக் டூத் பிரஷ் உபயோகித்தால், இத்தகைய பிரச்சனைகளை தவிர்த்து பற்களை வெண்மையாக்க முடியும்.

    பற்களை வெண்மையாக்கும் கருவிகள்

    பற்களை வெண்மையாக்கும் கருவிகள் பற்களை வெண்மைபடுத்த மிக உதவியாக உள்ளது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதிலும் உங்கள் மருத்துவரிடம் சென்று எந்த வகை கருவிகள் சிறந்தது என்று கேட்டறிந்து பயன்படுத்துவது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    தவறான வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல்

    உடலின் வளர்ச்சிதை மாற்றம் சரியில்லையெனில் பற்களின் வெண்மை குறையும். ஆகவே உணவு முறையை சரி செய்தல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், அதீத மன அழுத்தத்தை தவிர்த்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.




    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1234
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    'A Must Read'

    Your Mother carried you inside of her womb for nine whole months, she felt sick for months with nausea, then she watched her feet swell and her skin stretch and tear. She struggled to climb stairs, she got breathless quickly and even a simple task like putting her shoes on was a huge struggle for her. She suffered many sleepless nights while you kicked and squirmed inside of her and while you demanded that she scoffed junk at 3am, she then went through EXCRUCIATING PAIN to bring you into this world. She became your nurse, your chef, your maid, your chauffeur, your biggest fan, your teacher, your agony aunt and your best friend. She's struggled for you, cried over you, fought for you, put herself second for you, hoped the best for you and has driven herself insane with worry for you but never has she asked for anything in return because she loves you and did it all on love alone! Most of us take our Mums for granted but there are people who have lost or have never even seen theirs. If you have a loving Mother who did all of this for you, you are very lucky, never devalue her worth because one day, you'll wish you hadn't!

    What are you still waiting for?.....
    'SHARE' this with friends




    datchu and durgasakthi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #1235
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    எப்படி சாப்பிடலாம்?

    * ஏற்கெனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை உணவை சாப்பிடுங்கள்?
    * ஆற, அமர உட்கார்ந்து சாப்பிடுங்கள். மென்று விழுங்குங்கள்.
    * மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ சாப்பிடாதீர்கள். சாப்பிடும்போது பேசுவதும் நல்லதில்லை.
    * கோபம், தன்னிரக்கம், மனவருத்தம் என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.
    * பசி இல்லாதபோது சாப்பிடாதீர்கள். பசிக்கும்போது சாப்பிடாமல் இருக்காதீர்கள்.
    * சாப்பிட்டதும் படுக்காதீர்கள் சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துத் தூங்குவதுதான் நல்லது
    * எப்போதும்.உணவை வீணாக்காதீர்கள்.


    Dr Vikatan



    Last edited by Sriramajayam; 7th Jan 2014 at 06:46 AM.
    datchu and durgasakthi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1236
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    ஏலக்காய்
    ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.


    ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.


    * சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.


    * ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.


    * ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.


    * தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.


    * ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.


    * ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.


    * நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.


    * ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.


    * வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.


    * சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.


    * ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.


    * அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.


    * சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.


    * ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.


    * திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.


    * ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.


    * செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.


    * வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படு


    * ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.


    * ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.


    * குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.





    datchu and Sriramajayam like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  7. #1237
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    தக்காளி விதைகள்

    சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.


    datchu and Sriramajayam like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  8. #1238
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    தயிர்

    * தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.



    * தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.


    * தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.


    * உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.


    * தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.


    * சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.


    * குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.


    * தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.


    * ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.


    * தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.


    * நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.


    * தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.

    datchu and Sriramajayam like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #1239
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    எள்ளின் மருத்துவக் குணங்கள் !!

    • படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.

    • காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.

    • 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.

    • ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.

    • நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும்.

    பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1240
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க -இயற்கை வைத்தியம்:-

    சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

    மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

    மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

    சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

    ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும். சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

    திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

    அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

    சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

    ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது


    Last edited by datchu; 8th Jan 2014 at 07:09 PM.
    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter