Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1301
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

    பருப்பை வேகவிடும்போது, சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் வெந்தயம், சிறிது மிளகு, சீரகம் சேர்த்தே வேகவிடலாம். இதனால் ஒருநாள் வரை பருப்பு கெடாமல் இருக்கும். உடலில் சத்துக்களும் சேரும். காய்கறிகள், கூட்டு, சாம்பார் என எல்லாவற்றிலும் மஞ்சள்தூளைச் சேருங்கள்.

    நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு நார்ச் சத்து 20 முதல் 40 கிராம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் அன்றாடம் சாப்பிடுவதன் மூலம், ‘இன்டஸ்டினல் கேன்சர்’ வராமல் தடுக்கலாம்.

    உணவில் தினமும் இரண்டு மூன்று வகைத் தானியங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

    மூன்று நான்கு வகை வெவ்வேறு நிறப் பழங்களை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    பிங்க் கலர் முட்டைக்கோஸ், வெள்ளை நிற வெங்காயம் மிகவும் நல்லது. தினமும் உணவில் வெங்காயம் சேருங்கள். கோஸை பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

    தினமும் தக்காளி சேர்த்து ரசம், சாம்பார் செய்யுங்கள். தக்காளித் தொக்காகவும் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.

    காரம் தேவையெனில் மிளகாய் சேர்ப்பதைத் தவிர்த்து, மிளகு சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கும் நல்லது.



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1302
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1303
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    மன அழுத்தமும் சர்க்கரை நோயும்

    கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம் போன்றவற்றால் மன அழுத்தம் (ஸ்டிரஸ்) ஏற்படும்போது, நம் உடலில் அட்ரீனல், நார் அட்ரீனலின், குளுக்கான், கார்டிசோல், குரோத் ஹார்மோன் போன்றவை அதிகம் சுரந்து, இன்சுலின் செயல்பாட்டைக் குறைக்கின்றன. இதனால், சர்க்கரை நோய் ஒருவருக்குப் புதிதாக வரலாம். அல்லது ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் அது அதிகரிக்கலாம்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1304
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1305
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    பாலில் கால்சியம் எவ்வளவு?

    வலுவான எலும்புக்கு கால்சியம் மிகவும் அவசியம். வயதுக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் கால்சியம் தேவைப்படுகிறது. சிறுவர்களுக்கு தினசரி 1200 மி.கி. தேவை. 200 மி.லி. பாலில் 300 மி.கி கால்சியம் உள்ளது. காலை, மாலை, இரவு என 3 வேளை பால் சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைத்துவிடும்.

    பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் மோர், தயிர், பாலாடை, பால்கோவா, வெண்ணெய் என்று பாலில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடலாம். அசைவப் பிரியர்கள் நெத்தில், வஞ்சரம், மத்தி, கெளுத்தி போன்ற மீன் வகைகைளச் சாப்பிடலாம்.

    கீரைகளில் முள்ளங்கிக்கீரை, பசலை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. அதேபோல தர்பூசணிப் பழத்தில் கால்சியம் நிறைவாக உள்ளது.






    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1306
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    தொடர் விக்கலைப் போக்க சில எளிய வழிகள்!

    * பிராணாயாமப் பயிற்சி சிறந்தப் பலனைத் தரும்.

    * உட்கார்ந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

    * 20 எண்ணும் வரை மூச்சை நன்றாக அடக்கிக் கொள்ளுங்கள். இப்படி ஐந்து முறை செய்யுங்கள்.

    * தும்மலைக்கூட வரவழைத்துக் கொள்ள*லாம்.

    * ஒரு காகிதக் கவரை வைத்து ஊதி, திரும்பவும் அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும். இதுபோல் இருபது முறை செய்வ*தன் மூலம் கரிமிலவாயு அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் விக்கல் நிற்கும்.


    Sriramajayam and ashsuma like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1307
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    தலைமுடி காக்கும் உணவுகள்

    இரும்புச் சத்துள்ள உணவுகள்: எல்லா கீரைகளிலும் இரும்புச்சத்து உள்ளது. அவற்றில் பசலைக்கீரையும், முருங்கைக்கீரையும் முக்கியமானவை. சுண்டைக்காய் குழம்பு வாரம் இருமுறை சாப்பிடலாம்.

    முட்டையில் மஞ்சள் கரு, கல்லீரல், கோழி முதலிய அசைவ உணவுகளிலும் இரும்புச் சத்து உள்ளது.

    தினமும் தேனில் ஊறவைத்த பேரீச்சை, கடலை மிட்டாய், வெல்ல மிட்டாய், உலர்ந்த திராட்சை சாப்பிட்டுவந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும்.


    Sriramajayam and ashsuma like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1308
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    சிறுநீரக கல் உள்ளவர்களுக்கு...

    டாக்டர் விகடன் இதழில் இருந்து

    ‘நீரின்றி அமையாது உலகு’ இது உலகுக்கும் பொருந்தும்... உடலுக்கும் பொருந்தும். நம் உடலின் செயல்பாட்டுக்கு, தண்ணீர் மிக முக்கியம். தினமும் உடலுக்கு, போதிய தண்ணீர் இல்லாமல் போகும்போது, சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும். அதுவே, சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு மிக முக்கியக் காரணம். அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், கல் அடைப்பு உருவாகாமல்தடுக்கும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமே கல் அடைப்பு வராமல் காக்கலாம்.

    ‘கால்சியம் கல்’ இருப்பவர்களுக்கான உணவுப் பட்டியல்:

    பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச் சத்துடைய காய்கறிகள். சூப், சாலட், பொரியல் செய்து உண்ணலாம்.

    கதக்காளி, வெண்டைக்காய் சாப்பிடக் கூடாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இரண்டு காய்களையுமே சாப்பிடலாம்.

    அத்திப்பழம் மற்றும் விளாம்பழம் தவிர, அனைத்துப் பழங்களையும் சாப்பிடலாம்.

    அசைவ உணவில் நண்டு தவிர மற்ற அனைத்து இறைச்சி மற்றும் மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

    அனைத்து தானிய வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.

    பாலில் அதிக கால்சியம் இருப்-பதால், குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. எல்லோரும் ஒரு நாளைக்கு 500 மி.லி. பால் அருந்தலாம் என்றால், கால்சியம் கல் உள்ளவர்கள் 250 மி.லி.தான் (தயிரையும் சேர்த்து) அருந்த வேண்டும்.

    வாரம் ஒரு முறை கால்சியம் செரிந்த கேழ்வரகு, கீரை (கூட்டு, கடைசல், பொரியல் தவிர்த்து, குழம்பு அல்லது அடை-யில் சேர்க்கலாம்), வாரம் ஒருநாள் மட்டும் அனைத்து வகைக் கிழங்குகள்.

    கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


    Sriramajayam and ashsuma like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1309
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    புத்துணர்ச்சித் தரும் அரோமா குளியல்

    * நறுமண எண்ணெய் தயாரிக்க...

    மல்லிகைப்பூ, மனோரஞ்சிதம், ரோஜா, மகிழம்பூ, ஆவாரம் பூ இவற்றை தலா 100 கிராம் வாங்கி, அரைக் கிலோ தேங்காய் என்ணெயில் போட்டுக் காய்ச்சுங்கள். வடிகட்ட வேண்டாம்.

    இந்த எண்ணெயை சிறிது எடுத்து தினமும் உடல் முழுவதும் தடவி, மிதமான மசாஜ் செய்யுங்கள்.

    வாரம் ஒருமுறை இந்த மலர் எண்ணெயைத் தேய்த்து தலைக்கு குளித்து, நறுமணக் குளியல் பவுடரால் அலசலாம்.

    * நறுமண குளியல் பவுடர் தயாரிக்க...

    மல்லிகை, தவணம், மரிக்கொழுந்து, ரோஜா, செம்பருத்தி, புங்கங்காய்த் தோல், வெட்டிவேர், பாசிப்பருப்பு இவற்றை சம அளவு எடுத்து காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    சரும நோய் கிட்ட நெருங்காது. சரும சுருக்கம் மறையும். உடலுக்கு நல்ல நிறத்தை தரும். புத்துணர்ச்சியைக் கொடுக்கும்


    Sriramajayam and ashsuma like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1310
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்


    டாக்டர் விகடன் இதழில் இருந்து...

    அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

    கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்
    கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.

    நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்
    நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.

    டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்
    இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் ‘டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்து விடுங்கள்.


    Sriramajayam and ashsuma like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter