Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1311
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    மசாஜ் பற்றிய மெசேஜ்

    மூட்டுப் பிரச்னை வராமல் இருக்க எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாமா என்பது பலருக்கு எழக்கூடிய கேள்வி...

    தினசரி வேலைக*ளை ஒழுங்காகச் செய்தாலே நம் மூட்டுகள் போதிய பயிற்சி பெற்றுவிடும். தசைகளுக்கு தற்காலிகப் புத்துணர்வை வேண்டுமானால் மசாஜோ எண்ணெயோ கொடுக்கலாம். மசாஜ் செய்து கொள்வதால் மனரீதியாக, புத்துணர்வு கிடைக்கலாம். ஆனால், இந்த மசாஜ் விஷயங்கள் அளவுக்கு மீறினால் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும். முக்கியமாக எந்த இடத்திலாவது ரத்தம் கட்டிக் கொண்டு வீக்கம் தோன்றியிருந்தாலோ, எலும்பு முறிவு அல்லது விரிசலுக்கு வாய்ப்பு உண்டு என்று தோன்றினாலோ அந்த இடத்தில் ஒரு போதும் மசாஜ் செய்யக்கூடாது.



    Sponsored Links
    Sriramajayam and ashsuma like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1312
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    வந்தாச்சு கேப்ஸ்யூல் பேபி!

    வந்தாச்சு கேப்ஸ்யூல் பேபி! - டாக்டர் விகடன் - 2014-01-16

    கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே... என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் வகையில் மருத்துவ அறிவியலும், ஆராய்ச்சியும், டெக்னாலஜியும் படுவேகமாக வளர்ந்து நம்மை வியக்கவைக்கின்றன.

    பணம் அதிகம் செலவழித்து, சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் தம்பதிகளின் வயிற்றில் பால்வார்க்கும் செய்திதான்!

    டாக்டர் விகடனில் வெளிவந்த சிறப்பு கட்டுரையை முழுமையாக படிக்க..

    வந்தாச்சு கேப்ஸ்யூல் பேபி! - டாக்டர் விகடன் - 2014-01-16




    Sriramajayam and ashsuma like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1313
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    எப்படி சாப்பிடலாம்?

    * ஏற்கெனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை உணவை சாப்பிடுங்கள்?

    * ஆற, அமர உட்கார்ந்து சாப்பிடுங்கள். மென்று விழுங்குங்கள்.

    * மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ சாப்பிடாதீர்கள். சாப்பிடும்போது பேசுவதும் நல்லதில்லை.

    * கோபம், தன்னிரக்கம், மனவருத்தம் என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.
    * பசி இல்லாதபோது சாப்பிடாதீர்கள். பசிக்கும்போது சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

    * சாப்பிட்டதும் படுக்காதீர்கள் சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்துத் தூங்குவதுதான் நல்லது

    * எப்போதும்.உணவை வீணாக்காதீர்கள்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1314
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப்!

    அதிக கொழுப்பு மற்றும் கலோரி நிறைந்த உணவை சாப்பிடும்போது, தேவைக்கு அதிகமான கலோரிகள் பயன்படுத்தப்படாமல் உடம்பில் அதிகக் கொழுப்பு சேர்ந்து ஒபிஸிட்டியை ஏற்படுத்தும்.

    காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது ஒபிஸிட்டிக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது. சுக்கு சூப் செய்வது சுலபம்தான்.

    ஒரு டேபிள்ஸ்பூன் சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு பரங்கிக்காயை பொடியாக நறுக்கி க் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

    தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.


    cuteyammmu05 and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1315
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    கொழுத்தவனுக்கு கொள்ளு!

    100 கிராம் கொள்ளு பயறில் புரதம் - 22 கிராம், மாவுச்சத்து - 57.2% எனர்ஜி - 321 கி.கலோரி,கால்சியம் - 287 மி.கி, பாஸ்பரஸ் - 311 மி.கி, இரும்பு - 6.77 மி.கி, நார்ச்சத்து - 5.3% அளவில் சத்துக்கள் இருக்கின்றன.

    நார்ச்சத்து, தாதுப் பொருகள் இதில் அதிக அளவு இருப்பதால் உடல்பருமனை குறைக்கும். அதே சமயம், இதில் ஆசாலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கொள்ளுப் பயறை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், சிறுநீரகத்தில் கல் வரவும் வாய்ப்பு இருக்கிறது. கொள்ளுப் பயறை கூட்டாக, சுண்டலாக செய்து சாப்பிடும் போது, அதிக அளவு தண்ணீரைப் பருகவேண்டும். இதன் மூலமும் கல் வராமல் தடுக்கலாம். உடல் பருமனும் குறையும்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1316
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    சுரைக்காயில் இருக்கு சூப்பர் பலன்!

    சுரைக்காயை பொடியாக நறுக்கி, உப்பு, சீரகம், மஞ்சள்தூள், ஒரு தக்காளி சேர்த்துவேக வைத்து, வெந்தப் பயத்தம் பருப்பு சேர்த்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

    சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. உடல் சூட்டை குறைக்கும். மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்று புண் சரியாகும். தாய் பால் சுரக்கும். மூல நோய் விலகும். ரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு அருமருந்து. உடல் பருமனைக் குறைக்கும். அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சுரைக்காய் சாறு அருந்தலாம்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1317
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    பசியை போக்கும் பயறு வகை!

    எல்லோருக்குமே பயறு ஏற்றது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்குதான் அடிக்கடி அதிகப் பசி எடுக்கும். இதனால் திடீர் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பசியைப் போக்க, சர்க்கரை உயராமல் தடுக்க பயறு வகைகள்தான் பெஸ்ட்.

    முளைகட்டிய பாசிப்பயறு (அ) கொண்டைக்கடலை இவற்றை ஊற வைத்து சுண்டலாக செய்து வைத்துக் கொள்ளலாம். அதீத பசியை குறைக்கும். வயிறும் நிரம்பும். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கும்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1318
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info



    laddubala and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1319
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    வாழை இலையின் வியத்தகு பலன்கள்!

    * வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

    * சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

    * பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

    * காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

    * சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

    * சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

    * வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு)சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும




    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1320
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    கீரையில் உள்ள சத்து உடலில் கிரகிக்க...

    கீரைகளில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடென்ஸ் மற்றும் பல்வேறு தாது உப்புக்கள், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் இருக்கிறது. வேக வைத்த கீரை நன்றாக ஆறியதும், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிடுங்கள். இதனால் கீரையில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் அப்படியே கிரகிக்கும். தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நோய்கள் வராமல் நம்மை காத்துக் கொள்ளலாம்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter