Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1331
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    தொண்டைக்கு இதமான
    கிராம்பு கஷாயம்


    செய்முறை: 10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும். கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம்.

    பலன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்.



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1332
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    வாழைப்பூ வடகம்

    தேவையானவை: வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

    செய்முறை: வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.

    பலன்கள்:

    மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும்.

    அதிக ரத்தப்போக்கை (அது மூலமாக இருந்தால்கூட) நிறுத்த வல்லது.


    Last edited by datchu; 3rd Feb 2014 at 03:05 PM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1333
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    தயிரின் அற்புதங்கள்

    ''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'

    நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லி மாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

    நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.

    இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

    ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.

    இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.


    நன்மைகள்

    வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.

    உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.

    தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.

    உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.

    கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.

    சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

    கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1334
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info



    சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான ரெசிபி!


    இந்த இதழ் டாக்டர் விகடனில், சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான ரெசிபிக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இருந்து...

    முளைகட்டிய பாசிப்பயறு சூப்

    தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு & அரை கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி.

    செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1335
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    சின்ன விஷயங்களின் பெரிய அற்புதம்!


    மஞ்சள்

    இந்தியக் கலாசாரத்தில் மஞ்சளுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. வாயிற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும் மஞ்சள் கரைத்த தண்ணீரை வீடுகளில் தெளிப்பதற்கும் அதில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மையே காரணம். மஞ்சள் நிறத்துக்கு நுண் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும் அதிகப்படுத்தும் திறன் உண்டு என்றும் அதன் வாசனை மன நிம்மதியைத் தரும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது. இது உணவுகளில் பயன்படுத்துகின்ற ஒரு சாதாரணப் பொருளாக மட்டுமின்றி, உலக நாடுகளே பிரமிக்கின்ற அளவு மருத்துவத் தன்மை கொண்டுள்ளது. அந்த மஞ்சளை எளிய முறையில் பயன்படுத்தி அதன் அபார ஆற்றலைப் பெற்று உடலினை உறுதி செய்வோம்!

    என்ன செய்ய வேண்டும்?

    இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்து சூடான பாலிலோ அல்லது நீரிலோ போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்கவும்.

    என்ன பலன்?

    * நிறத்தைக் கூட்டும் வைட்டமின்கள் இருப்பதால், உடலுக்கு நல்ல நிறத்தையும் மேனி எழிலையும் உண்டாக்கும்.

    * ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.

    * சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பில்லாமல் தோலினைப் பாதுகாக்கும் அற்புதமான சக்தி மஞ்சளில் அடங்கியிருக்கிறது.

    * மஞ்சளில் உள்ள குர்குமின் புற்று நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    * சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும்.

    * மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் நோய்த்தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

    * வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி பெருமளவில் உள்ளது.

    யாருக்கு எல்லாம் முக்கியம்?

    உடல் நலனில் அக்கறை வைத்து, கிருமித்தொற்றின் பிடியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் அத்தனை பேருக்கும் முக்கியம்தான்.




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1336
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கான பொது விதிகள்

    எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும் என்ற உணவுக்கட்டுப்பாடு மிகமிக முக்கியம். இது உடலுக்கு சரிவிகித ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

    அதிக அளவு கலோரி உள்ள, அதேநேரம் ஊட்டச்சத்து சிறிதும் இல்லாத கூல் டிரிங்ஸ், நொறுக்குத் தீனி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    அதிக அளவில் கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்கு அதிக வைட்டமின், தாது உப்பு மற்றும் நார்ச் சத்துக்கள் கிடைக்கின்றன.

    வயிறு நிறைந்துவிட்ட உணர்வை மூளை அடைய, குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும். எனவே, அவசர அவசரமாக உணவை எடுத்துக்கொள்ளவேண்டாம். உணவு சாப்பிடும் நேரம் மிக நீண்டதாக இருக்கட்டும்.

    கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டியது இல்லை. அப்படித் தவிர்ப்பதன்மூலம் அது நம் உடலில் ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையை ஏற்பட்டு, உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.

    சூப், ஜூஸ், பால்... என போன்ற நீராகாரங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு, பசி உணர்வு தோன்றாமல் பார்த்துக்கொள்ளும்.

    ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க, உடல் பருமன் குறைப்பு வல்லுனரின் ஆலோசனையைப் பெறத் தயங்காதீர்கள். ஒருவருக்குப் பரிந்துரைக் கப்பட்ட டயட் உணவை, மற்றவர் பின்பற்றுவது மிகவும் தவறு.




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1337
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    அத்திப்பழம்


    சத்துக்கள்

    அத்திப்பழத்தில் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கால்ஷியம், ஃபைபர், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, பி 12 உள்ளது. இதில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    பலன்கள்

    பித்தம் தணிக்கும்.
    உணவை எளிதாக செரிக்கச் செய்யும்.
    ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
    உடலை சுறுசுறுப்படைய வைக்கும்.
    மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
    அத்திப்பழச் சாறு வயிற்றுப் பிரச்னைகளுக்கு நல்லது.

    போதைப் பழக்கம் மற்றும் மற்ற* வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஏழு நாட்கள் ஊற வைத்த*பின், தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிட வேண்டும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1338
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    வாய் மணமணக்க புதினா சாப்பிடுங்க..!


    புதினா பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். பலபேர் கறிக்குழம்பு வைக்கும்போது சேர்த்துக்கிடுவாங்க, மத்தபடி தனியா புதினாவை அதிகமா யாரும் பயன்படுத்துறதில்ல. வயித்துவலி, வயித்துப்புண், வயித்துப்போக்குன்னு வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த புதினா நல்ல மருந்து.

    சின்னக்குழந்தைங்களுக்கு சிலநேரம் வாந்தியும், வயித்துப்போக்கும் வந்து பாடாப்படுத்தும். அந்த மாதிரி நேரங்கள்ல அஞ்சாறு புதினா இலையை எடுத்து (எண்ணெய் வேண்டாம்) சட்டியில போட்டு வதக்கணும். பிறகு அது முங்குற அளவுக்கு தண்ணி ஊத்தி கொதிக்க வைக்கணும். தண்ணி நல்லா வத்தினதும் 2 மணி நேரத்துக்கு ஒருதடவை குடிக்க கொடுத்துட்டு வந்தா வாந்தியும், வயித்துப்போக்கும் நின்னுரும். புதினாவை கசாயம் இல்லைனா சூப்பா செஞ்சி குடிச்சிட்டு வந்தா இருதயம் சம்பந்தமான நோய் சரியாயிரும். மத்தபடி தொடர்ந்து பயன்படுத்திட்டு வந்தா ஜீரணக்கோளாறு சரியாகுறதோட மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

    ரத்தத்தை சுத்திகரிக்குறதுல இந்த புதினா சூப்பர் மருந்து.

    பொதுவா புதினாவை துவையல் செஞ்சி சாப்பிடுவாங்க. வெறுமனே துவையல் செஞ்சா சாப்பிடுற மாதிரி இருக்காது. அதனால கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கிட்டா சாப்பிட டேஸ்ட்டா இருக்கும். புதினா சாதமும் செய்யலாம்.

    புதினாக்கீரைல சூப்பர் பல்பொடி செய்யலாம். வெயில்ல நல்லா காய வச்சி, அதோட தேவையான அளவு கல் உப்பு சேர்த்து பொடியாக்கணும். இதை வச்சி பல் விளக்கிட்டு வந்தா வாய் நாத்தத்துல தொடங்கி பல் சம்பந்தமான எல்லா கோளாறுகளும் சரியாப்போயிரும். நாலுபேர் மத்தியில என்னால பேச முடியலை, அந்த அளவுக்கு வாய் நாத்தம் அடிக்குதுனு கவலைப்படுறீங்களா? பச்சையா புதினா இலையை வாயில போட்டு மென்னு சாப்பிட்டாகூட நாத்தம் அடிக்காது, வாய் மணமணக்கும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1339
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!


    செல் அளவில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் வீக்கங்கள்தான் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம். திராட்சையில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வேதிப்பொருட்கள், ஒரு புற்றுநோய்த் தடுப்பாக மாறுகிறது. மார்பகப் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிரான ஆற்றல் திராட்சையில் உள்ளதாக, பல ஆய்வுகள் கூறுகின்றன. உலர் திராட்சையிலும் கூட அதிக மருத்துவப் பலன்கள் உண்டு.

    டாக்டர் விகடனில் வெளிவந்த கட்டுரையை முழுமையாக படிக்க..

    http://bit.ly/1iqe3Fz



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1340
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    ஆலிவ் எண்ணெய்


    வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.

    இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

    உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை குறைக்கிறது. HDL(High-density lipoprotein ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது. ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

    சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும்.தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

    தினந்தோறும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு (28 கிராம்)ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் நல்லது. அன்றாட சமையலில் அனைத்துப் பதார்த்தங்கள் தயாரிக்கவும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். வதக்குவது, பொறிப்பது, தாளிப்பது, பூரி செய்வது போன்றவற்றுடன் இட்லிப் பொடியைக் குழைத்துச் சாப்பிடுவதற்கும் ஏற்றது.

    எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆயில் மற்றும் ரீஃபைன்டு ஆலிவ் ஆயில் என்ற இரண்டு வகைகளில் கிடைக்கிறது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter