Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4812Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1341
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    சீத்தாப்பழம்


    இந்த சீசனில் கிடைக்கும் எளிய பழம். இதன் தாவரவியல் பெயர் Annona squamosa. சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.
    கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும்.

    100 கிராம் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, மணிச்சத்து- 0.9%, நார்ச்சத்து- 3.1%, கால்சியம்- 17 மில்லி கிராம், பாஸ்பரஸ்- 47 மில்லி கிராம், இரும்புச்சத்து- 4.31 மில்லி கிராம், வைட்டமின் சி-37 மில்லி கிராம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%,கலோரி அளவு- 10.4% ஆகும்.

    பலன்கள்

    இந்தப் பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

    காய்ச்சலை குணப்படுத்தும்.

    செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் நீங்கும்.

    இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

    இதில் கால்ஷியம் சத்து இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள்.

    சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு மறைந்துவிடும்.



    Sponsored Links
    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1342
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info




    பொன்னாங்கண்ணி கீரை

    உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி. பலப் பல* மருத்துவ குணங்களை கொண்டது

    இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து,இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

    பலன்கள்

    கண்பார்வைக்கு மிகவும் நலல்து.

    சருமத்துக்கு மிகவும் நல்லது.

    மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.

    ரத்தத்தை சுத்தீகரிக்கும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

    வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

    இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

    இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

    எச்சரிக்கை

    பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பலவித நோய்களையும் தீர்க்கும் இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.

    ஒன்று அலல்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லையே என நினைக்கக் கூடாது. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள், குறைந்தது 12 மாதம் முதல் 13 மாத காலம் வரை சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது உடலில் சார்ந்து நோய் நொடிகளை ஓட ஓட விரட்டும்.



    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1343
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    கொத்தமல்லி


    கொத்தமல்லி (Coriander leaves) விஞ்ஞானப் பெயர் coriandrum sativum. பிறப்பிடம் மத்திய திரைக்கடல் நாடுகள். பழங்கால விவிலிய நூலிலும், சம்ஸ்கிருந்த நூல்களிலும் கொத்தமல்லி பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய சமையலில் 90 சதவிகித செய்முறையில் கொத்தமல்லி பயன்படுகிறது. பிரியாணி வகை அனைத்திலும் அதிக அளவில் கொத்தமல்லி பயன்படுத்துவார்கள்.

    பலன்கள்

    கொத்தமல்லியில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. சுவாசப் பிரச்னைகள் நீங்கும். ஜலதோஷம் மற்றும் வறட்டு இருமல் குணமாகும்.

    ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். ரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    காய்ச்சல், உடல் அசதி போன்றவை ஏற்படும்போது இதை மிளகு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்து வேக வைத்து, வடிகட்டி குடித்தால் உடல் நலம் தேறும்.

    கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

    வாய் துர்நாற்றத்தை நீக்கும். வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1344
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info



    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1345
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info



    பச்சைப் பட்டாணி


    சத்துக்கள்

    காய்கறிகளில் ஊட்டச் சத்து மிக்கது பச்சைப்பட்டாணி தான். பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோப்ளோவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'பி', வைட்டமின் 'சி', நார்சத்துக்கள் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது.

    பலன்கள்

    இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. உயர் இரத்த அழுத்தம் குறையும்.

    ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

    செரிமான உறுப்புகள் நன்றாகும்.

    உடல் வலிமை கூடும்.

    கண்பார்வைத் திறன் மேம்படும்.

    மனநோய் குணமடையும்

    இளமைத் தோற்றதோற்றம் தரும். ஆரோக்கியமாய் வாழலாம்.

    ஒரு எளிமையான ரெசிபி - பச்சைப் பட்டாணி சூப்

    தேவையான பொருட்கள்

    பச்சைப் பட்டாணி - 200 கிராம்
    கார்ன் ப்ளோர் - 2 டீஸ்பூன்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப*

    பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைக்கவும். கொஞ்சம் பச்சைப் பட்டாணியை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை ஒரு சிறிய கரண்டியால் நன்றாக* மசித்துக் கொள்ளவும். கார்ன் ப்ளோருடன் கலந்து நன்றாக* கொதிக்க விட வேண்டும். அதன்பின் தனியே வைத்துள்ள பட்டாணியைச் சேர்க்கவும். கொத்துமல்லியைச் தூவி, வெண்ணெயையும் கலந்து இறுதியில் மிளகுத்தூள் தூவவும். சுவையான* பச்சைப் பட்டாணி சூப் ரெடி.



    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1346
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு!


    எளிமையான கீரையில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. 'பப்பாய்’ என்ற புகழ்பெற்ற கார்ட்டூன் படத்தில்கூட குழந்தைகளுக்குக் கீரையின் நன்மையை உணர்த்த 'பசலைக்கீரை’தான் பாப்பாவுக்கு பலம் தருவதாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கும். இப்படி மகத்துவம் நிறைந்த கீரைகளை உட்கொள்வது பற்றிய பொதுவான சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார் மருத்துவர் சுகந்தி.

    ''பொதுவாக கீரையில் என்ன சத்துக்கள் உள்ளன?''

    ''கீரைகளில் நார்ச் சத்துகள், வைட்டமின்கள் (கி,ஙி,சி,ரி), ஆன்டி ஆக்சிடென்ஸ், பல்வேறு தாது உப்புகள், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் உள்ளன. வேக வைத்த கீரை நன்றாக ஆறிய பின், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிடுங்கள். இதனால் கீரையில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் கிரகிக்கும். தினமும் ஒரு கீரை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நோய்கள் வராமல் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.''

    ''யாருக்கெல்லாம் கீரை மிகவும் அவசியம்?''

    ''கீரை அனைவருக்கும் தேவை. முக்கியமாக, குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், ரத்தசோகை உள்ளவர்கள் நிச்சயம் சாப்பிட வேண்டும். ரத்தசோகையைப் போக்குவதில் பசலைக்கீரைக்கும், முருங்கைக்கீரைக்கும் முக்கியப் பங்கு உண்டு.''

    ''கீரையை அதிகம் சமைக்கலாமா?''

    ''வெளியில் வாங்கும் கீரைகளில், அதிகமாக பூச்சிக்கொல்லி உரங்கள் பயன் படுத்தப்படுவதால், அதனை நன்றாக அலசிய பிறகே சமைக்க வேண்டும். அதிக வெப்ப நிலையில் அதிக நேரம் கீரையைச் சமைக்கக் கூடாது. பசுமை மாறாமல், அதே சமயம் நன்றாக வெந்ததும் சாப்பிட வேண்டும். மண் சட்டி (அ) இரும்புச் சட்டியில் கீரையை சமைப்பதன் மூலம் சத்துகள் அப்படியே நம் உடலில் சேரும்.''

    ''இரவில் கீரை சாப்பிடக் கூடாது என்கிறார்களே, அது ஏன்?''

    ''கீரைகளில் அதிக நார்ச் சத்து உள்ளதால், அது ஜீரணமாக சற்று நேரம் ஆகும். இரவு நேரங்களில் அஜீரணப் பிரச்னைகள் வராமல் தடுக்க கீரையைத் தவிர்ப்பது நல்லது.''

    ''எந்தெந்த கீரையை யார் எல்லாம் தவிர்க்கவேண்டும்?''

    ''முளைக்கீரை, பாலக்கீரைகளில் ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் இருப்பதால் சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடல்ரீதியான பிரச்னை இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப் பெற்று சாப்பிடுவது நல்லது. கீரை சாப்பிட்டவுடன் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1347
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    இதயம் காப்போம்! - சிறப்பு பக்கம்

    விகடன்.காம் - உலக இதய தின சிறப்பு பக்கம்

    இதயம் காக்க... எளிய வழிகள்!


    ஓய்வில்லாமல் துடிக்கும் இதயம் தொடர்பான பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்கள் இதய நோய் நிபுணர் ஜே.கே.பெரியசாமி, இதய மருத்துவர் காஞ்சனா காசிநாதன் மற்றும் டாக்டர் டி.சதீஷ் காந்தி. இதய நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள் எனப் பல தகவல்களை படியுங்கள்; பயன்பெறுங்கள்.

    படிக்க..
    இதயம் காக்க... எளிய வழிகள்!


    Last edited by datchu; 3rd Feb 2014 at 04:55 PM.
    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1348
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    பாகற்காய்.


    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்து பாகற்காய்.

    பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. பாகற்காயின் இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

    சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

    மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தும்.

    உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1349
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info



    'உணவையே மருந்தாகப் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம் என்கிறார் டாக்டர் எல்.மஹாதேவன். 'உணவே மருந்து புத்தகம் இதைப் பற்றிப் பல விஷயங்களை விரிவாகப் பேசுகிறது. ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் மஹாதேவன் எழுதி உள்ள இந்த நூலில், அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, பழரசம், கஞ்சி போன்ற பழமை மாறாத, மருத்துவக் குணம் உள்ள உணவு வகைகள், 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் தொகுக்கப்பட்டு உள்ளன.

    சூப், சாத வகைகள், களி, பொடிகள், 14 வகையான ரசம், பச்சடி, துவையல், தொக்கு, தின்பண்டங்கள் பற்றிய ஏறத்தாழ 115 செய்முறைக் குறிப்புகள் கொண்டது இந்த நூல். கடுக்காய், தாணிக்காய், நெல்லிக்காய், மாதுளம்பழம், நீர்மோர், கறிவேப்பிலை, வெந்தயம், சுக்கு, மிளகு, திப்பிலி, பசுநெய், ஆட்டு மாமிசம் (அசைவப் பிரியர்களுக்கு) ஆகியவற்றை நித்திய ரசாயனம் என டாக்டர் குறிப்பிடுகிறார். அதாவது தினமும் சாப்பிட வேண்டியது என்கிறார்.

    நாம் மறந்துபோய்விட்ட, ஆனால் உடலுக்கு நன்மை தரும் உணவு வகைகளை இந்நூல் நமக்கு நினைவுபடுத்துகிறது. பல விதமான ருசியான சமையல் குறிப்புகளைப் பட்டியலிட்டு ஆரோக்கியமே உணவின் முக்கிய அம்சம் என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறது இந்த நூல். ஒவ்வோர் உணவு வகைக்கும் அதன் செய்முறைக் குறிப்புகளோடு அதில் உள்ள சத்துக்கள்பற்றிய விவரங்களையும் தருகிறார் நூலாசிரியர். அந்த உணவு வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் எதைக் கூட்டும், எதைக் குறைக்கும் என்பன போன்ற கூடுதல் குறிப்புகளும் உண்டு. உணவுகளை, சாத்வீக உணவுகள், ராஜஸிக உணவுகள் மற்றும் தாமஸிக உணவுகள் என மூன்று விதமாகப் பிரித்து, உணவுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார் நூலாசிரியர். அளவோடு உண்ணுதலை அவசியமாக வலியுறுத்துகிறது இந்த நூல்.

    அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய சமையல் பாத்திரங்களின் படங்களும் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டு உள்ளன. நூலுக்குக் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கும் விஷயம் இது. உப்பு சேர்த்துப் புளியைக் கொதிக்கவைத்து முழங்கால்களில் கெட்டியாகத் தடவினால் முழங்கால் வலி மறையும் என்பது போன்ற பயனுள்ள குறிப்புகளும் இதில் நிறைய உண்டு. உணவை எவ்வாறு சாப்பிட வேண்டும், எதனுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது என்பன போன்ற வழிமுறைகள் விளக்கமாகச் சொல்லப்பட்டு உள்ளன. இனிப்பை முதலிலும், கசப்பைக் கடைசியிலும் உணவில் சேர்க்க வேண்டும்; தேனை எக்காரணம் கொண்டும் சூடுபடுத்தக் கூடாது; உணவிற்குப் பின் நீர் அருந்துவதே நல்லது என்பன போன்ற பல பயனுள்ள தகவல்களால் நிரம்பி வழிகிறது இந்தப் புத்தகம்!



    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1350
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற பாடல் வரி, மூலிகை மருத்துவத்துக்கு மிகவும் பொருத்தமானது. 'நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் தீர்வு உண்டு. ஆனால், இன்றைய அவசர உலகில், எது எளிதாக உடனுக்குடன் தீர்வைத் தருகிறதோ, அதை நோக்கியே செல்கிறோம். நம்முடைய வேர்களை நாம் இழந்துவிடக் கூடாது’ என்ற அதீத அக்கறையோடு எழுதப்பட்டிருக்கும் நூல் இது.


    நம் கண் முன்னால் இருக்கக்கூடிய நந்தியாவட்டை, நாவல் மரம், செம்பரத்தை, ஆலமரம், வேம்பு, வல்லாரை, ஆடாதொடை, கீழாநெல்லி, சிறியாநங்கை, பிரண்டை, தூதுவளை ஆகிய தாவரங்களில் இலைகள், வேர்கள், பட்டைகள் என ஒவ்வொரு மூலிகையிலும் உள்ள மருத்துவ குணங்களை மிக அழகாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்ஆசிரியர் டாக்டர் கே.பி.அருச்சுனன்.

    உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தூது செல்லும் தூதுவளை, 'நல்லாரையும் மிஞ்சும் வல்லாரை’, 'முடக்கை அறுக்கும் முடக்கறுத்தான்’, 'உணவை ஊட்டும் தாயைவிட உடலைத் தேற்றும் கடுக்காய்’, 'ஐம்பொறிகளில் தீயை உண்டாக்கும் அகத்திக் கீரை’ என்று ஒவ்வோர் அத்தியாயத்தின் பெயரிலேயே அதன் சிறப்பை, தெளிவுபடுத்திவிடுகிறார் ஆசிரியர்.

    வெண்குஷ்டத்தைக் குணமாக்கும் யானை நெருஞ்சில் ஏரி, ஆறு, குளம் ஆகிய இடங்களில் ஏராளமாக வளரும் செடியினம். இந்த இலையைத் தண்ணீரில் கலக்கினால் சில விநாடிகளுக்குள் தண்ணீரை விளக்கெண்ணெய்போல் தழைச் சத்தாக மாற்றி அமைக்கும் மிகச் சிறந்த சஞ்சீவி மூலிகை. இந்தக் கலவை, மனித உடலில் உள்ள ஜவ்வு மண்டலத்தை வளரவைக்கவும், ஏற்றத்தாழ்வைச் சமப்படுத்தவும், ஜவ்வு மண்டலத்தில் மூக்கு, காது, குரல்வளை ஆகிய உறுப்புகளை எலும்பின் பக்கத்தில் ஒவ்வோர் எலும்புக்கும் ஏற்றாற்போல் உள்ள இயக்கத்தில் ஏற்றத்தாழ்வை சமன்படுத்தி இயல்பாக்கும் அபூர்வ மூலிகை 'யானை நெருஞ்சில்’ என்றும், இதய நோய்க்கு செம்பருத்தி, ரத்த நாளத்தில் அடைப்பை நீக்கும் முருங்கை என்று ஒவ்வொரு மூலிகையின் மகத்துவத்தை விவரித்திருப்பது அருமை.


    durgasakthi and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter