Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1351
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Today's  Medical Info-1896913_753745984643451_1250088915_n.jpg




    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1352
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    குதிகால் வலியை விரட்ட......

    ன்றைய பரபரப்பான சூழலில் உடல் எடையை கட்டுக்குள் வைத்து பேணிகாப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் அதற்கு தகுந்தாற்போல் உயரத்திற்கு தகுந்த அளவில் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் குதிகால் வலி ஆகியவற்றை தவிர்க்கலாம். உடலின் மொத்த எடையையும் தாங்குவது குதிகால் என்பதால் அதற்காக அதிக கவனம் அவசியம்.

    பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தை தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகம் உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. இதையடுத்து குதிகால் மற்றும் இடுப்பு வலி அதிகரிக்கும். முதலில் வலி அதிகரிக்கும்போது எலும்புகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவரை அணுகி எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். குதிகால் வலி வராமல் தடுக்க இயற்கையான முறையில் பல வைத்தியங்கள் உள்ளன.



    காலை முதல் இரவு வரை ஓயாமல் நடப்பவர்களுக்கும், வீட்டு வேலைகளை செய்வோருக்கும் இரவில் குதிகால் வலி ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதனை தடுக்க இரவில் படுக்கும் முன்பும், காலையில் குளிப்பதற்கு முன்பும் உள்ளங்கால்களுக்கு சுத்தமான எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். இதுதவிர மேலும் பல வழிகளும் உள்ளன. சஹசராதி தைலம் 100 மில்லியும், கர்ப்பூராதி தைலம் 100 மில்லியும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை (10 மில்லி) சூடு செய்ய வேண்டும்.

    இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்ய (20 நிமிடங்கள் வரை) வேண்டும். வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் மூழ்குமளவு 5 அல்லது 10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலை துடைக்க வேண்டும். அதன்பிறகு படுக்கச்செல்லவும். காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோல செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபயோகிக்கவும். கால்களை தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதை தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.

    திராட்சைப் பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும்போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும். சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.

    முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக் கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டுவலி குணமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.


    உடல் எடையை குறைக்க...

    அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வர காரணமாகிறது. இது ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது. இதை தடுக்க உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் அதிகப் படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். இவை 200 மி.லி அளவில் கிடைக்கும். 3 டீஸ்பூன் மருந்துடன் 12 ஸ்பூன் கொதித்து ஆறிய தண்ணீர் மற்றும் கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

    காலையில் மருந்து சாப்பிட்டதும் அரைமணி நேரம் இடதுபக்கமாக சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாக தண்ணீரை குடிக்கவும். உடல் பருமனை குறைக்க இது நல்ல கஷாயம். தயிரை தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். கால் டீஸ்பூன் தேனை சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 டீஸ்பூன் (5 கிராம்) ஆகியவற்றை 80 மி.லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறியபிறகு, கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்கு பிறகு உடனே அருந்த வேண்டும். அதன்பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி மிகவும் அவசியம் குதிகால் வலியை போக்க உடல் எடை குறைப்பு அவசியமாகிறது. எனவே காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும். சர்வாங்காசனம், ஹலாசனம் மற்றும் சிரசாசனமும் வலி குறைக்கும். கோடை கால சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    புளித்த மோரை சிறிது சூடாக்கி 70 முதல் 100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். சோப்புக்கு பதிலாக ‘ஏலாதி சூர்ணம் கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையை குறைக்கவும் முடியும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1353
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...!

    இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

    கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

    இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

    தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..

    சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

    கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

    மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

    கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

    பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

    கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

    குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

    வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

    கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள்கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

    கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

    Today's  Medical Info-1017635_754201711264545_1852781912_n.jpg



    datchu and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1354
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    பித்த வெடிப்பு

    ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து பூசவும்.வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்த வெடிப்பு நீங்கும்.சுண்ணாம்பு, விளக்கெண்ணை சம அளவு எடுத்து வெடிப்பில் தடவவும்.வெடிப்புகளில் வேப்பிலை, மஞ்சள் அரைத்துப்போட்டுவரவும். மருதானி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் விரைவில் குணமாகும்.

    Today's  Medical Info-1782133_753965387954844_1411947339_n.jpg



    durgasakthi and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #1355
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Dubai
    Posts
    95

    re: Today's Medical Info

    nice use ful information

    sumitra and Sriramajayam like this.

  6. #1356
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்


    தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


    தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:


    1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.
    2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.
    3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.
    4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.


    மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.


    தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:


    1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.


    2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.


    3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.


    4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.


    5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.


    6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.


    7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.


    8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.


    9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.


    10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.

    ramyaraj, sumitra and Sriramajayam like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  7. #1357
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்...!

    தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது. தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

    1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.
    2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.
    3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.
    4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.

    மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.

    தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:

    1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

    2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

    3. தேனும் வெங்காயச்சாறும்கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

    4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

    5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

    6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

    7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

    8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

    9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

    10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.

    Today's  Medical Info-1660216_754606537890729_824827602_n.jpg


    நன்றி :- ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.


    ramyaraj likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #1358
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    re: Today's Medical Info

    Hi Friends

    Intha paguthila vara ellaa thakavalkalum romba payan ullathu.
    you people are really doing excellent job. keep Rocking...

    durgasakthi and Sriramajayam like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  9. #1359
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    துளசி விதை இருமலுக்கு சிறந்த மருந்து...!

    துளசி செடி மூலிகை வகைகளில் குறிப்பிடத்தக்கஒரு இரசாயன கலவைகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பண்புகள் உடல் நலம் சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் மிகச்சிறந்ததாகும். துளசி மூலிகையில் ஒரியாண்டின் மற்றும் விசெயின் பாலிபினாலிக் ஃபிளவனாய்டுகள் கொண்டுள்ளது.

    துளசி இலை உடல் நலம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறது.யூஜினால், சிட்ரோநெல்லோல்,லினாலோல், சித்திரல்,லிமோனின் மற்றும் தேப்பினியோல் போன்ற முக்கியமான எண்ணெய்கள் உடல் சுகாதாரத்திற்குநன்மை சேர்க்கிறது. இந்த சேர்மங்கள் எதிர்ப்பு சக்தி கொண்ட பாக்டீரியல் பண்புகளை கொண்டிருக்கிறது.

    இந்த மூலிகை மிகக் குறைந்த கொ-ழுப்பு சத்துகள் மற்றும் கலோரி வகைகளை கொண்டுள்ளது. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்து பொருட்களான தாதுக்கள் மற்றும் சுகாதாரத்திற்குஇன்னியமையாத வைட்டமின்களை ஆதாரமாக கொண்டுள்ளது
    துளசி விதை இன்ஃப்ளூயன்ஸா, மற்றும் காய்ச்சல், குளிர் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கின்றது. இந்த விதை வலிப்பு குறைவு மருந்துகளின் பயன்களை கொண்டுள்ளதால் கக்குவான் இருமல் சிகிச்சைக்கு துளசி விதையை பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக துளசி இருமலுக்கும் குழந்தைகளின் சளித்தொல்லையை போக்கவும் சிறந்தது.



    (Mukkiya Seithikkal)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #1360
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    கண் எரிச்சலா... கவலை வேண்டாம்...!

    கண்களை அழகாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க பிரபல அழகுக்கலை நிபுணர் மகாலட்சுமி தரும் அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக...

    உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.

    கண்கருவளையம் நீங்க சற்தனக்கல் லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும். நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும்.

    பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத்தரும்.

    வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும். திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.

    கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.

    தினமும் காலையில் எழுந்தவுடன் கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5-6 முறை செய்யவும். கண்களை இறுக்கமாக மூடித்திறக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும்.

    Today's  Medical Info-shedding-tears.gif


    ramyaraj likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter