Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1381
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    இரவில் பால் குடிக்கலாமா...?

    டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?

    'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.

    என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாக மாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

    வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம். பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.

    ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள்,உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

    Today's  Medical Info-graphics-milkman-555702.gif

    நன்றி :- Pasumai Vikatan



    Sponsored Links
    sumathisrini and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1382
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    re: Today's Medical Info

    Thanks for the above info sir.

    datchu and Sriramajayam like this.

  3. #1383
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Always u r welcome my dear friend

    Today's  Medical Info-t1612.gif



    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks for the above info sir.


    sumathisrini likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1384
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...!

    படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

    * கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

    * கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும்,உறக்கமும் ஏற்படும்.

    *பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

    * ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

    * மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

    * தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

    * பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

    * இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

    * மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

    * இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

    இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்
    பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில்சரக்குகள் கையாள பயன்படும்.

    மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

    நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.

    Today's  Medical Info-1655931_759276017423781_231290858_n.jpg


    நன்றி :- சாம் மகேந்திரன்


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #1385
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,
    விலகி ஓடும் பி.பி., சுகர்...!

    சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் ஷேர் செய்யுங்கள்...

    "காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.

    இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!

    இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

    காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

    உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.

    இந்த முறையைக் கையாண்டால்...

    உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

    இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..!

    ஒன்று நிச்சயம்...

    இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

    நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே....!!


    நன்றி :- மைலாஞ்சி


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1386
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    கோவைக்காய்

    வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.




    இரத்தம் சுத்தமடைய:

    காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

    கண் நோய் குணமாக:

    கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

    தோல் கிருமிகள் நீங்க:


    தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

    உடல் சூடு : தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .


    வியர்க்குருவை தடுக்க

    சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

    தாது புஷ்டியாக

    இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

    கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1387
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    நம்ம ஊரு வைத்தியம்


    கடுகு சிறுத்தாலும்... காரம் குறையாது!' காரம் மட்டுமில்லீங்க... அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. எந்த சமையலா இருந்தாலும், அதைத் தாளிக்கறதுக்கு கடுகை பயன்படுத்தறத பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்களே... புண்ணியவானுங்க அதைத்தான் பெருமையோட சொல்றேன்!

    கை-கால் வலி, மூட்டுவலி, வாயு பிடிப்பு, அடிபட்டு ரத்தம் கட்டுதல்னு பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும். பாதிக்கப்பட்ட இடத்துல பூசுறதுக்கு தேவையான அளவு கடுகை எடுத்து, தண்ணி விட்டு அரைச்சுக்கங்க. பிறகு, அதை லேசா சூடு காட்டி பத்து போட்டா... கை-கால் வலியில இருந்து எல்லா பிரச்னைகளும் சரியாகும். தேவைப்பட்டா... கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துக்கிடலாம்.

    மேல சொன்ன பிரச்னைகளுக்கே... இன்னொருவிதமான கடுகு வைத்தியமும் கைவசம் இருக்கு. அதாவது... 10 கிராம் முருங்கைப்பட்டை, பெருங்காயம் ஒரு புளியங்கொட்டை அளவு, கடுகு ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணி விட்டு மையா அரைக்கணும். பிறகு, அதை கொதிக்க வெச்சு பொறுக்குற சூட்டுல பத்து போட்டா... எல்லா வலிகளும் பறந்துரும். ஒருநாளைக்கு ஒருவேளை வீதம், மூணு நாளைக்கு இப்படி பூசிட்டு வந்தா... நல்ல குணம் கிடைக்கும்.

    சிலர் தொடர்ந்து இருமிக்கிட்டே இருப்பாங்க. இதுக்கு கடுகை பொடியாக்கி, அரை கிராம் அளவு எடுத்து தேன் சேர்த்து காலை, மாலைனு 2 நாள் சாப்பிட்டு வந்தா... கட்டாயம் பலன் கிடைக்கும்.

    இப்படித்தான் 25 வயசு மதிக்கக் கூடிய ஒரு இளைஞர் தொடர் இருமல்ல அவதிப் பட்டிருக்கார். இதுக்கு என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்கல. இருமி கிட்டே என்கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னார். 'இந்த கடுகுப்பொடியை சாப்பிடுங்க..'னு சொல்லி அனுப்பினேன். சொன்னபடியே ரெண்டு நாளைக்குச் சாப்பிட்டவர்... ''ஐயா, நீங்க சொன்னபடியே இருமல் நின்னுபோச்சு''னு அவர் போன் பண்ணினப்ப, எனக்கு அத்தனை சந்தோஷம்!



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1388
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    அதிமதுரத்தில் இத்தனை நன்மைகள் உண்டா...?


    கையில் வேர்ப்பகுதி மட்டும் மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தயவர்களுக்குத்தான் தெரியும். அதை நீங்களும் அறிந்துகொள்ளலாமே...

    *
    அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருள், உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

    *
    ஊட்டச்சத்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

    *
    அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலேசாக வறுத்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

    *
    அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்திவிடலாம்.

    *
    அதிமதுரச் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மைப் பலவீனம் நீங்கும். உடல் பலமும் ஆரோக்கியமும் கூடும்.

    *
    பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.

    *
    அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, இரவு படுக்கும்போது சிறிது பாலில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் இருக்காது.

    *
    சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

    *
    அதிமதுரச் சூரணம், தூய சந்தனச் சூரணம் இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து பாலில் கலந்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருவது நிற்கும். உடல் உள்உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1389
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்


    `இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ – இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.


    பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும்.


    இப்படித்தான் ஒரு நண்பர் வேலை நிமித்தமாக நிறைய ஊர்களுக்குச் சென்று விட்டு, கடைசியாக திருநெல்வேலி பக்கமுள்ள கடையத்திற்குச் சென்றுள்ளார்.


    பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த களைப்பு, ஆங்காங்கே குடித்த தண்ணீர் என இருமல், சளி என்று மாட்டிக்கொண்டார்.


    கடையத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டு திண்ணையில் இருந்த பெரியவர் ஒருவர், நண்பரின் இருமல் சத்தம் கேட்டு அவரை அழைத்தார்.


    “என்ன தம்பி, இப்படி இருமுறீக… என்ன உங்களுக்கு உடம்புக்கு…?”


    “ஒண்ணுமில்ல, தாத்தா. அங்கங்க சுத்துனது ஒத்துக்கல. அதான் இருமல் அதிகமாயிடுச்சி”


    “அவ்வளவுதானே, பக்கத்துல இருக்கற பால் கடையில போய், மஞ்சள், மிளகுத்தூள் போட்டு ஒரு பால குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாப் போயிடும்” – என்றார் பெரியவர்.


    அதேபோல் நண்பரும், மிளகுப் பொடி, மஞ்சள் தூள் கலந்து ஒரு 200 மி.லி. அளவு பாலை குடித்து விட்டு அன்று நிம்மதியாகத் தூங்கியுள்ளார். அடுத்த நாளே நல்ல பலன் தெரிந்ததாகக் கூறி, புளகாங்கிதம் அடைந்தார் அவர்.


    சரி, விஷயத்துக்கு வருவோம். நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது.


    விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.


    இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.


    மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.


    பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.


    அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.


    மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1390
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    மலச்சிக்கலை நீக்கும் அதிமதுரம், சோம்பு


    பொதுவாக இயற்கை உணவுகளை உண்ணும் பழக்கமுடையவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. மலச்சிக்கல்தான் எல்லா நோய்களுக்கும் முதல் காரணம் ஆகும். நெல்லிக்காய் தூள், கடுக்காய்த்தூள் முதலியவற்றையும் தினசரி கால் தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம். இரவு உணவில் இரண்டு வாழைப் பழங்களை சாப்பிடும் பழக்கம் மலச்சிக்கலை நீக்கிவிடும். இதற்கு மேலும் மலச்சிக்கல் இருந்தால் அதிமதுரம் 100gm. சோம்பு 100gm. இரண்டையும் கலந்து பவுடராக்கி காலை, மதியம், இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் மலச்சிக்கல் மறையும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter