Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree4822Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1461
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    வாய்வுத் தொல்லை நீங்க:


    வெந்தயக்கீரை சிறிதளவு கழுவி எடுத்துக்கொண்டு தண்டோடு சேர்த்து எடுத்துக்கொள்ளவும். ஒரு குவளை தண்ணீரில் போட்டு அதனுடம் சிறிதளவு மிளகு,இரண்டு பூண்டு, சிறிது இன்சு, சிறிது ம் சீறகம் அனைத்தையும் லேசாக தட்டி கீரையோடு சேர்த்து போட்டு கொதிக்க விடவும் , தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடிகட்டி பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்.



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1462
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,693
    Blog Entries
    1717

    re: Today's Medical Info

    நோய்க்கு ‘நோ’ சொல்லும்
    ‘எக்ஸ்ட்ரா’ எதிர்ப்பு சக்தி

    வெள்ளைப் பூண்டும் வெங்காயமும்

    எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்லதோர் மருந்து. நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை பூண்டுக்கு உண்டு.

    பாக்டீரியாவுக்கு எதிராக செயலாற்றும் தன்மை பூண்டுக்கு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

    பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    கொழுப்பைக் குறைக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் இருப்பதால் கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் ‘ஆன்டி- ஆக்சிடன்ட்’ இருப்பதால் உடலுக்கு கூடுதல் நலம்.


    Dr Vikatan


    datchu, durgasakthi and fatima15 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #1463
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,693
    Blog Entries
    1717

    re: Today's Medical Info

    உடற்பயிற்சி தேவையா?
    - ஒரு டெஸ்ட்!

    * ஒரு மைல் தூரம் நடக்கும்போதோ, இரண்டு மாடிகள் ஏறும்போதோ உங்களுக்குக் களைப்பு, மூச்சு வாங்குவது இருக்கிறதா?
    * கால்களை அருகருகே வைத்து முழங்கால் முட்டிகளை மடக்காமல் குனிந்து உங்கள் இரு கைகளாலும் உங்கள் கால்களின் பெருவிரல்களைத் தொட முடிகிறதா?
    * வேகமாக நடக்கும்போது உங்களால் தயக்கமின்றிப் பேசிக் கொண்டே வரமுடிகிறதா? அல்லது தடையின்றி பாடமுடிகிறதா?

    இதெல்லாம் முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமான உடல் திறனாளிகள்தான்! நீங்கள் தினந்தோறும் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. அன்றாட வேலைகளே போதுமானது.

    Today's  Medical Info-image.jpg


    Dr Vikatan


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1464
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,693
    Blog Entries
    1717

    re: Today's Medical Info

    தர்பூசணி

    தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் ‘அர்ஜனைன்’ (Arginine)என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது.

    இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது.

    தர்ப்பூசணியில், ‘ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்-பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது.

    தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும்.

    இதில், மகிழ்ச்சிக்கான ‘டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

    Today's  Medical Info-image.jpg


    Dr Vikatan


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #1465
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,693
    Blog Entries
    1717

    re: Today's Medical Info

    வெயிலே வெயிலே ஓடிப்போ!
    --


    மழை ஒழுங்கா பெய்யுறதில்ல, ஆனா வெயில் மட்டும் வெளுத்து வாங்குது. பருவ காலங்கள் முன்ன மாதிரி இல்லை, ஏறுக்கு மாறா... ஏட்டிக்கு போட்டியா போய்க்கிட்டு இருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம். வெயில் இப்பவே வறுத்தெடுக்கத் தொடங்கிட்டு. ஏற்கனவே வெயில் காலங்கள்ல அம்மை, வேர்க்குரு, கொப்புளம், வயித்துக்கடுப்பு, வயித்துவலினு வந்து பாடாப்படுத்தும். ஆனா இப்போ புதுசு புதுசா... தினுசு தினுசா நோய்கள் வந்து மனுசன ஒருவழி பண்ணிட்டு போயிருது. அறிவியல் என்னதான் வளர்ச்சி அடைஞ்சாலும் இந்த நோய்களை கண்டுபிடிக்க முடியலை. இந்த நோய்கள் வர்றதுக்கு ரெண்டே காரணந்தான். ஒண்ணு உடல் உழைப்பு குறைஞ்சு போனது, ரெண்டாவது நாம சாப்பிடுற சாப்பாடு.

    சரி நேரடியா விஷயத்துக்கு வருவோமா?...

    வறுத்தெடுக்கும் கோடை வெயில்ல இருந்து நம்மளை காத்துக்கிடணும்னா கீழே சொல்லப்பட்டிருக்கிறதல சிலதை மட்டும் பின்பற்றினாலே போதும், கைமேல் பலன்.
    கோடை வர்றதுக்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துட்டு. விலை குறைவா உள்ள இந்த தர்பூசணியை சாப்பிட்டா உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கிறதோட தாகம் தணியும். என்ன ஒண்ணு அடிக்கடி சிறுநீர் போகும், அவ்வளவுதான். அதேபோல எல்லா காலத்துலயும் தாராளமா கிடைக்கக்கூடிய இளநீரை குடிக்கலாம். இதுவும் சூட்டை தணிக்கும். ஆனா என்ன... விலைதான் விர்ருன்னு தென்னைமரம் மாதிரி ஏறிப்போச்சு.

    இளநீர் குடிக்கிறதுல தப்பில்லை, கடைக்குப்போனா எளநி வியாபாரி, ‘வழுக்கையா, தண்ணியா’ன்னு கேப்பாரு. சிலபேரு வழுக்கையா பாத்து போடுங்கன்னு வாங்கி ‘மடக் மடக்’குனு குடிப்போம். லேசான வழுக்கை ருசியாத்தான் இருக்கும். ஆனா இப்பிடி தொடர்ந்து வழுக்கையா வாங்கி சாப்பிட்டா காலப்போக்குல அது பசியைக்குறைச்சி குன்மம்னு சொல்லக்கூடிய வயித்து நோய் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால எப்பவுமே புதுசா பறிச்ச இளநீரை வாங்கி குடிச்சா உடம்புக்கு நல்லது, அதாவது வெறும் தண்ணியா உள்ள இளநீரா பார்த்து வாங்கி குடிங்க. கூல் கூல்..!

    வெயில் காலத்துல வீட்டுக்கு வீடு மண்பானையில தண்ணி ஊத்தி வச்சி குடிப்போம், நல்லதுதான். சும்மா வெறுமனே தண்ணியை ஊத்தாம காய்ச்சி ஆற வச்ச தண்ணியை மண்பானையில ஊத்தி வச்சி குடிக்கலாம். தண்ணியை ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம். தண்ணி கொதிக்கும்போது கொஞ்சம் சீரகத்தை அள்ளிப்போடுங்க. உடம்புக்கு குளிர்ச்சி தர்றதோட உள்உறுப்புகள் சரியாகும். மண்பானையில வெட்டிவேரை ஊறப்போட்டு குடிச்சாலும் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது நாட்டு மருந்துக்கடைகள்ல கிடைக்கும். ஜன்னல் ஓரங்கள்ல வெட்டிவேர்ல செஞ்ச தட்டியை பயன்படுத்தினா குளிர்ச்சியான காத்து கிடைக்குறதோட நல்ல வாசமா இருக்கும்.

    வெட்டிவேர் மாதிரியே நன்னாரி வேரும் நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. இதை வாங்கி இடிச்சி தண்ணியில போட்டு கொதிக்க வச்சி சூடு ஆறுன உடனே சீனி (சர்க்கரை) சேர்த்து குடிச்சா ஒண்ணுக்கு போகும்போது வரக்கூடிய எரிச்சல் சரியாகும். கடைகள்ல விற்கக்கூடிய நன்னாரி சர்பத் குடிக்க டேஸ்டா இருக்கலாம், ஆனா சுகம் கிடைக்காது. இது எந்தவித கலப்பு இல்லாத சூப்பர் சர்பத்.

    கோடை காலத்துல புழுக்கம் வர்றது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிலபேருக்கு எரிச்சல், கோபம், படபடப்பு, குழப்பம் வரும். சிலபேருக்கு தலைசுத்தலும், மயக்கமும் வரும். இந்த மாதிரி பிரச்னை வந்தா செம்பருத்திப்பூ சர்பத் குடிச்சா நல்லது. அதென்ன செம்பருத்தி பூ சர்பத்துன்னு கேக்குறீங்களா? எங்க ஊர்ப்பக்கம் தடியங்காய்னு சொல்வாங்க, அதோட பேரு கல்யாணபூசணிக்காய். திருஷ்டிக்கு உடைப்பாங்களே, அதே காய்தான். அதுல ஒரு ஓட்டை போட்டு 50 இல்லைனா 100 செம்பருத்திபூவை உள்ள திணிச்சி மூடி வச்சிரணும். மறுநாள் அதை உடைச்சி சதை பகுதியை எடுத்து சாறு பிழிஞ்சி சம அளவு சீனி (சர்க்கரை) சேர்த்து தேன் பதத்துல காய்ச்சி ஆற வச்சா செம்பருத்தி பூ சர்பத் ரெடி. இதுல 4 ஸ்பூன் சர்பத் 4 ஸ்பூன் தண்ணி சேர்த்து குடிச்சா படபடப்புல தொடங்கி ஆயாசம், கண் எரிச்சல்னு எல்லாம் ஓடிப்போயிரும்.

    இதுபோக வெயில் காலத்துல கிடைக்கக்கூடிய நொங்கு (பனைநுங்கு), எலுமிச்சை ஜூஸ் சாப்பிடறதால பிரச்னைகள்ல இருந்து தப்பிக்கலாம். எலுமிச்சை ஜூஸை தண்ணி, சீனி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து குடிங்க. அதிகமா புளிப்பு இருந்தா அமிலம் இருக்குன்னு அர்த்தம். அது உடம்புக்கு அவ்வளவு நல்லதில்லை. மத்தபடி வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம், பானகம் குடிக்கலாம். பானகம் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேருக்கு தெரியாது.

    புளியை தண்ணியில ஊறப்போடுங்க. ஊறின தண்ணியோட கொஞ்சம் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து கரைச்சி குடியுங்க. வயித்துக்கடுப்பு, சொட்டு மூத்திரம்னு அது தொடர்பான எல்லா கோளாறுகளும் சரியாயிரும். சூடும் தணியும். அந்த காலத்துல சனிக்கிழமையானா எண்ணெய் தேய்ச்சி குளிப்பாங்க. இப்போ அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குன்னு சொல்லி சமாளிக்கிறாங்க. உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரை குளிரக்குளிர நல்லெண்ணெய் தேய்ச்சிட்டு ஒரு மணி நேரம் கழிச்சி குளிச்சி பாருங்க, அப்பிடியே சொர்க்க லோகம் தெரியும்.


    -தமிழ்குமரன் Via Vikatan


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1466
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,693
    Blog Entries
    1717

    re: Today's Medical Info

    பித்தத்தை தடுக்கும்
    வடிகஞ்சி சூப்

    ‘‘செலவே இல்லாத சூப் இது. அந்தக் காலத்துல என் அம்மா, சாதத்தை வடிச்சதும், அந்த வடிகஞ்சியில் மிளகு, சீரகம் பொடிச்சுப் போட்டு, தினமும் காலையில் எங்களுக்-குத் தருவாங்க. நல்ல தெம்பா இருக்கும். இதனால் எங்கள் வீட்டில் யாருக்கும் வயிறு தொடர்பான பிரச்னையே வந்தது இல்லை. இப்போ, என் கணவருக்கும் மகனுக்கும் கஞ்சியில் காய்கறிகளைச் சேர்த்து, சூப் மாதிரி செஞ்சு தர்றேன். ருசியோட வாசனையாவும் இருக்கும். உடலுக்கு ரொம்பக் குளிர்ச்சி.’’ என்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்ரமணியன்.

    வடிகஞ்சி சூப் செய்யும் முறை:

    தேவையானவை: சாதம் வடித்த கஞ்சி & 2 கப், புளித்த மோர் & அரை கப், இஞ்சி & சிறிய துண்டு, பச்சை மிளகாய் & 2 முதல் 3, கறிவேப்பிலை, மல்லித்தழை & சிறிதளவு, உப்பு, விரும்பிய காய்கறிக் கலவை & கால் கப், எண்ணெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சியை நீளவாக்கில் நறுக்கவும். எண்ணெயில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கி, காய்கறிக் கலவையையும் சேர்த்து, வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு இறக்கிவைத்து, கடைந்த மோரை அதனுடன் சேர்க்கவும். இறுதியாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    டாக்டர் வேலாயுதம், சித்த மருத்துவர்: வடிகஞ்சி சூப், உடலை உரமாக வைத்திருக்க உதவும். காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், நார்ச் சத்து மற்றும் கஞ்சியில் உள்ள கார்போஹைட்ரேட், குளூகோஸ், தையமின் போன்றவை உடலால் நேரடியாகக் கிரகிக்கப்படும். இஞ்சி சேர்ப்பதால், காலையில் குடிப்பதன் மூலம், மதியம் பித்தம் ஏறாமல் தடுக்கலாம். மோர், நல்ல பாக்டீரியாவைக் கொடுப்பதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது.

    Today's  Medical Info-image.jpg


    Dr Vikatan


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #1467
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,693
    Blog Entries
    1717

    re: Today's Medical Info

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #1468
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    புத்துணர்சியாக்கும் பிளம்ஸ் பழம்


    நமது நாட்டில் மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம்ஸ். நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.


    மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும். சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.

    ரத்தத்தை சுத்தப்படுத்த

    ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்த சுத்தத்திற்கு பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.


    ஜீரண சக்கியைத் தூண்ட

    உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவானது நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

    உடல் புத்துணர்ச்சிக்கு


    உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் அதிக சோர்வடைகிறது. இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக் கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம். பிளம்ஸ் பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1469
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,693
    Blog Entries
    1717

    re: Today's Medical Info

    பொடுகு போயே போச்!

    பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டிய சில எளிய சிகிச்சை--முறைகளைப் பற்றி சித்த மருத்துவர் முகமது மாலிக் சொல்லும் டிப்ஸ்.

    கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறைக் கலந்து, அந்த நீரில் குளித்தால் பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    தலையில் அதிக எண்ணெய்ப் பசையுடன், பொடுகுத் தொல்லையும் இருந்தால் முடி உதிரலாம். இந்தப் பிரச்னைக்கு குளிக்கும் முன்பு தயிர் அல்லது மோரினை தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறிய பிறகு குளித்தால், எண்ணெய்ப்பசை நீங்கும். முடியும் வலுவாகிப் பளபளப்பு கூடும்.

    மஞ்சள்தூளை, தண்ணீரில் கலந்தோ அல்லது, ஷாம்பூவுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.

    அருகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை குளிரவைத்து, இரண்டு நாட்களுக்கு வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து தலைக்குப் பயன்படுத்தலாம்.

    Today's  Medical Info-image.jpg


    Dr Vikatan


    datchu and fatima15 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #1470
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,693
    Blog Entries
    1717

    re: Today's Medical Info

    அரிசிக்கும் உருளைக்கும் ஒத்துவராது!

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கில் செய்த உணவு என்றால், ஒரு கை பார்த்துவிடுவது வழக்கம். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து இல்லாததால், சரியாக செரிமானம் ஆகாமல் மிக அதிகமான வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அரிசியில் இருக்கும் அதே கார்போஹைட்ரேட் தான் உருளையிலும் இருக்கிறது. எனவே, அரிசி உணவு சாப்பிடும்போது, உருளைக்கிழங்கு நமக்குத் தேவையில்லை. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சாம்பார் சாதத்துக்கு உருளைக்கிழங்கை ரோஸ்ட் செய்து விரும்பி சாப்பிடுகிறோம். அரிசி உணவே இல்லாத சமயத்தில் கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் உருளைக்கிழங்கை வேகவைத்துதான் உண்ணவேண்டும். எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து இல்லாததால், இரவில் சாப்பிடக்கூடாது. ஆனால், இதனுட*ன் நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், அதன் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.


    Dr Vikatan


    datchu and fatima15 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter