Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1471
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    சிறுநீரகப் பிரச்சனைக்கு மருந்தாகும் நன்னாரி

    வெட்டி வேர், நன்னாரி இந்த பெயர்கள் அதன் வேர் வாசனையை நம் நாசியில் தடவும். சூட்டைத் தணிப்பதில் நன்னாரி பெரிய டாக்டர் என்றே சொல்லலாம். பல்வேறு சிறுநீரகப் பிரச்சனைகளுக்கும் நன்னாரி சிறந்த மருந்தாக செயல்படுகிறது. நன்னாரியில் பல்வேறு மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளது. நன்னாரியை உடல் நோயகளுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது.

    நன்னாரி வேரை இடித்து சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து குடித்தால் அஜீரணப்பிரச்சனை குணமாகும். நன்னாரி வேரை ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் 2தம்ளர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் குடித்தால் வாத நோய்கள் தீரும். நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து காலை, மாலை, இரண்டு வேளையும் குடித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகும். நன்னாரி, வெட்டிவேர் இரண்டையும் சமஅளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் பித்தம், உடல் சூடு தணியும்.

    நன்னாரி சதகுப்பை இரண்டையும் சமஅளவு எடுத்து கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள் கரையும். நன்னாரி, தனியா, சோம்பு மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊர வைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும், இதயம் வலுவடையும். இவ்வாறு சித்த மருத்துவர்கள் கூறினார்கள்.


    dinakaran



    Sponsored Links
    jv_66, Sriramajayam and fatima15 like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1472
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    அதியச பாணம்.

    a + b + c ..... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.

    விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .

    இந்த பானம் அருந்துவதால் பயன்கள் :


    *புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.

    *ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

    *மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது
    நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

    *உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

    *இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.

    *பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.

    *மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.

    *உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

    **கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.

    அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும் .



    Ani01, jv_66, Sriramajayam and 1 others like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1473
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    நோயை தூர ஓட்டும் இலைச்சாறுகள்


    அருகம்புல் சாறு.: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும் உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும்.


    ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும் தாய்பாலை அதிகரிக்க செய்யும் உடலில் நச்சுத்தன்மையை அகற்றும் கொழுப்பு சத்தை குறைக்கும்..


    துளசி இலைச்சாறு: காய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும்.


    தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.


    மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு: உடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.


    பொண்ணாங்கண்ணி சாறு: உடலுக்கு வலிமை ஊட்டும். பொன் போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும்.


    வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.


    வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும்.. காலாரா குறையும்.


    புதினா இலைச்சாறு: வாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.


    நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்


    வாழைத்தண்டு சாறு: சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். ரத்தம் சுத்தமாகும்.


    கேரட் சாறு: கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும்.


    அரச இலைச்சாறு: மலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.


    கொத்தமல்லி சாறு: பசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்….!


    Ani01, jv_66, Sriramajayam and 1 others like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1474
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    “ஜெனரிக்’ மருந்துகள்"


    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, “ஜெட்’ வேகத்தில் உயரும் விலை உயர்வுக்கு, மாத்திரை, மருந்துகள் மட்டும் விதிவிலக்கா என்ன? காய்ச்சல், தலைவலிக்கு வாங்கும் பாரசிடமால் முதல், புற்றுநோய் ஹீமோதெரபி சிகிச்சைக்கு உதவும் மருந்துகள் வரை, கடந்த 10 ஆண்டுகளில் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், சராசரி இந்தியர்கள் மருத்துவத்துக்கு செலவிடும் தொகையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என, ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில், தொற்று நோய்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    “சர்க்கரை நோயாளிகளின் தலைநகர் இந்தியா’, என்ற அபாயகரமான சூழல் உருவாகி வருகிறது. இந்த நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போட வேண்டியது அவசியம். இதனால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை மருந்துக்காக செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் நீண்ட காலம் சிகிச்சைக்கான மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, “ஜெனரிக்’ மருந்துகள் எனப்படும் “பிராண்ட் நேம்’ இல்லாத மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அரசு அனுமதிக்க அளித்தது.

    ஒரு நிறுவனம் தயாரிக்கும் மருந்தை, வேறொரு நிறுவனம், சிறிய மாற்றங்களுடன் வர்த்தக பெயர் இல்லாமல், அதில், உள்ளடங்கிய மருந்தின் பெயரைக் கொண்டு விற்பனை செய்வதே ஜெனரிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, “கால்பால்’ பராசிடமால் மருந்தில், “கால்பால்’ என்பது வர்த்தக பெயர். இதில் “பாரசிடமால்’ என்பது மருந்து. வர்த்தக பெயர் இல்லாமல், மருந்தின் பெயரான, “பாரசிடமால்’ என குறிப்பிட்டு விற்கப்படுவதே ஜெனரிக் மருந்து. பிரதான மருந்தின் காப்புரிமை காலம் முடிந்த பிறகே, ஜெனரிக் மருந்துகளை தயாரிக்க முடியும். ஏற்கனவே ஒரு நிறுவனம் தயாரித்த மருந்தை, கிட்டத்தட்ட காப்பி அடித்து மீண்டும் தயாரிக்கும்போது உற்பத்தி செலவும் கணிசமாக குறைகிறது.

    இதனால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது. நுகர்வோர் பயனடைய வேண்டும் என்பதற்காக ஜெனரிக் மருந்து அனுமதிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது நடக்கவில்லை. “ஸ்டாக்கிஸ்ட்’ குமார் என்பவர் கூறும்போது, “பிராண்ட் நேம்’ மருந்துகளின் அடக்க விலை 7 ரூபாய், விற்பனை விலை 10 ரூபாய். அதேவேளையில், ஜெனரிக் மருந்து அடக்க விலை 3 ரூபாய்தான். ஆனால் 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இடையில் உள்ள 5 ரூபாய் வியாபாரிகளுக்கு சென்று விடுகிறது. சில மருந்துகளில் 80 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது. இதனால் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டிய பயன், சில்லறை வியாபாரிகளுக்கும், ஸ்டாக்கிஸ்ட்களுக்கும் சென்று விடுகிறது’ என்றார்எனவே, உற்பத்தி செலவுக்கு மேல், 20 அல்லது 25 சதவிகிதம் லாபம் கிடைக்கும் வகையில் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    மேலும், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், இந்த மருந்துகளை மொத்தமாக வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், மருந்து ஸ்டாக்கிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரைப்பதற்காக டாக்டர்களுக்கு பெரும் பணம் செலவு செய்வதும் விலை உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

    எனவே, டாக்டர்கள் மருந்தை பரிந்துரைக்கும்போது, “பிராண்ட் நேமை’ எழுதாமல் மருந்தின் பெயரை மட்டும் எழுத வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, “டாக்டர்கள் மருந்தின் “பிராண்ட் நேமை’ மருந்து சீட்டில் பரிந்துரைக்க, தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க, மத்திய அரசு குழு அமைந்துள்ளது. அந்தக் குழு அறிக்கையின், அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்’ என்றார். பெரம்பூரை சேர்ந்த ஸ்டாக்கிஸ்ட் மோகன் கூறும்போது, “ராம் விலாஸ் பாஸ்வான், மத்திய ரசாயன துறை அமைச்சராக இருந்தபோது, அத்தியாவசிய மருந்துகள் என கருதப்படும் 350 மருந்துகளை பட்டியலிட்டு, குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுத்தார். அதுபோல், இப்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் .

    மருந்து வாங்குவதில் உள்ள ஆபத்து : டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல், நேரடியாக மருந்து கடைகளில் மாத்திரை, மருந்துகளை வாங்குவது ஆபத்தானது. பெரும்பாலான மருந்து கடைக்காரர்கள், தரம் என்பதை விட, தனக்கு அதிக லாபம் தரும், தரம் குறைந்த மருந்தையே கொடுக்க வாய்ப்புள்ளது. மேலும், மருந்துகளை எடுத்துக் கொடுக்க, மருந்தாளுனர் பட்டம் அல்லது பட்டயம் பெற்ற தகுதியான நபர், மருந்து கடைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. கடை ஊழியர், தனது அனுபவ அறிவைக் கொண்டே, மருந்துகளை எடுத்துக் கொடுக்கிறார். கவனக் குறைவாகவோ அல்லது தெரியாமலோ, மருந்தை மாற்றிவிட்டால் ஆபத்தில் முடிந்துவிடும். அதுபோல், “டாக்டர் சீட்டில் குறிப்பிட்டுள்ள மருந்து இல்லை. அதே வகையான மருந்து தான் இது’ என்று மருந்து கடைக்காரர் கொடுக்கும் மருந்தை வாங்கக் கூடாது. தரம் குறைந்த, தனக்கு அதிக கமிஷன் கிடைக்கும் மருந்தை, அவர் கொடுக்க வாய்ப்புள்ளது.

    நன்றி-தினமலர்


    Ani01, jv_66, Sriramajayam and 1 others like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1475
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    பெண்களுக்கு உகந்த பப்பாளி பழம்


    தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலம் பால் பெருகும்.

    நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும்.

    பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன.

    குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு.

    100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள்.

    சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டால் அவர்களது தாம்பத்ய சக்தி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள்.

    அந்த பாதிப்புளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என் சைம்க்கு இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.



    Ani01, jv_66, Sriramajayam and 1 others like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1476
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    தலைவலிக்கான ஆலோசனைகள்

    காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

    தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

    தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

    dinakaran


    Ani01, jv_66, Sriramajayam and 1 others like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1477
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    இதய நோயாளிகளின் உணவு முறை

    இதயத் துடிப்பு உயிருக்கு முக்கியம். இதயம் நன்றாக வேலை செய்ய வேண்டுமானால், இதயத் தசைகள் நன்றாக வேலை செய்வது அவசியம். வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இதய நோய் பிரச்னை பல பேருக்கு உள்ளது.

    வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இன்றைய இளைஞர்களும் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளனர். பெரியவர்களுக்கு ரத்தக் குழாயின் குறுக்கு விட்ட அளவு குறையத் தொடங்கி, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

    இந்த இடத்தில்தான் இதய நோயாளிகளுக்கு கொழுப்புச் சத்து குறைவான உணவு முக்கியத்துவம் பெறுகிறது. சர்க்கரை நோயாளிகளும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    குளிர் பானங்கள், சர்க்கரை உள்ளிட்ட இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகி, கொழுப்புச் சத்தாக உருமாறும்.

    இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும். இவ்வாறு ரத்தக் குழாய்களில் அடைப்பு – அதைத் தடுப்புதற்கு உணவு முறை முக்கியப் பங்காற்றுகிறது.

    ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் – காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி உள்ளிட்ட பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம்.

    உணவில் உள்ள கரையும் நார்ச்சத்து (பருப்பு, ஓட்ஸ் உள்ளிட்ட தானிய வகைகள், பழ வகைகளில் இத்தகைய நார்ச்சத்து உள்ளது.) ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிப்பதைத் தடுக்கிறது. எனவே இத்ககைய உணவு இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    சர்க்கரை நோயாளிகளைப் போலவே இதய நோயாளிகளும் உணவு ஆலோசனை நிபுணன் மதிப்பீட்டீன்படி, தேவையான கலோரிச் சத்தைக் கொண்ட உணவுத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஏனெனில் இதய நோயாளி இஷ்டம்போல் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் – இதயம் திணறும். தீவிர உடற்பயிற்சியை இதய நோயாளிகள் செய்ய முடியாது. இதனால்தான் உணவில் அக்கறை செலுத்தி உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    இதய நோயாளிகள் காலை எழுந்தவுடன் ஒரே நேரத்தில் அதிக அளவு குடிநீர் குடிக்கக் கூடாது. நாள் முழுவதும் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக குடிநீர் குடிக்கலாம். இதய நோயாளிகள் சப்பாத்தி மட்டுமே சாப்பிட வேண்டும் என நினைக்க வேண்டாம்.

    கலோரிச் சத்து குறைவான-ஊட்டச்சத்து நிறைந்த உணவை இடைவெளி விட்டுச் சாப்பிடலாம். இதய நோயாளிகள் வாக்கிங் உள்பட உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ரத்த அழுத்தம் உயரும் அளவுக்கு இதை பதற்றத்துடன் செய்யக் கூடாது.


    வாணிஸ்ரீ சிவகுமார் -


    jv_66, Sriramajayam and fatima15 like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1478
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஊளைச் சதையை குறைக்க: அடிக்கடி சோம்பு நீர் பருகி வரலாம்.

    சதைபோடுவதை தடுக்க: வாழைத்தண்ட ு சாறு, பூசனி சாறு, அருகம்புல் சாறு ஏதாவது ஒன்று தொடர்ந்து சாப்பிடலாம ்.

    உடல் எடை குறைய: தினசரி வெறும் வயிற்றில் காலையில் ஒரு ஸ்பூன் தேனுடன் சுடுநீர் பருகலாம்

    உடல் எடை குறைய: பொன்னாவரைக ் கீரை அடிக்கடி சாப்பிட குறையும்

    தேவையற்ற கொழுப்பு குறைய: பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் குறையும்.

    பருத்த உடல் மெலிய: மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தலாம் .

    சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.

    கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

    கொள்ளு முளை கட்டி சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

    உடல் மெலிய பப்பாளிக்க ாயைச் சமைத்து உண்டு வரலாம்.


    Ani01, jv_66 and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1479
    janu23 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    New Delhi
    Posts
    323

    re: Today's Medical Info

    hi friend
    thanks for very useful tips. It can be followed easily in day to day life also
    Janu

    Sriramajayam likes this.

  10. #1480
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க...!

    வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள்
    குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக
    விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர்.

    இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும்
    வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற
    உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உடலில் உள்ள அதிகப்படியான
    கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிப்பதில்
    வெங்காயத்தின் நறுமணம் மற்றும்
    அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது.

    நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணிக்க
    வைப்பதுடன் தேவையான சத்துக்களை உடலின் தேவைக்கேற்ப
    பிரித்துக் கொடுக்கிறது.

    பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக்
    கொள்வதால் உடலில் உள்ள நோய்கிருமிகள்
    அழிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும்
    அதிகரிக்கிறது. பச்சை வெங்காயத்தின்
    அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து மனிதர்களைக்
    காக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.


    Mukkiya Seithikal


    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter