Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1491
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    ரணசிகிச்சையின்காயத்தைவிரைந்துஆற்றுகிறது. மூலநோய்உள்ளவர்களின்
    ரத்தப்போக்கைதுரிதமாகக்கட்டுப்படுத்துகிறது.

    ரத்தக்குழாய்களில்உள்ளகொலஸ்டிராலைகரைக்கிறது. சர்க்கரைநோயாளிகளுக்குகாலில்மரத்துப்போகும்தன்மை, கண்புரைவளருதல்ஆகியவற்றைதடுக்கிறது. கண்புரைவந்தாலும்நீக்குகிறது.

    சிறுநீரகக்செயல்பாட்டின்குறைகளைசரிசெய்யப்பயன்படுகிறது.
    மாலைக்கண்நோய்நீக்கிகண்களில்ஒளியைத்தருகிறது.



    Sponsored Links
    jv_66 likes this.

    KOTHAISURESH

  2. #1492
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்கவல்லதாக உள்ளது.

    நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும்புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

    இவ்வளவு அருமை வாய்ந்த திராட்சை விதைகளை வீசியெறிந்து விட்டு வெறும் தசைகளைமட்டும் தின்று பயன் என்ன, சொல்லுங்கள்?

    jv_66 likes this.

    KOTHAISURESH

  3. #1493
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    re: Today's Medical Info

    Thank you Kothai aunty very informative.

    kvsuresh likes this.
    Ramya Rajan
    Not all of us can do great things. But we can do small things with great love. ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  4. #1494
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    welcome dear, ennakku kidaicha news ellorukkum usefula irukkumenu share pannen, thanks.


    KOTHAISURESH

  5. #1495
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிரண்டையின் மருத்துவ குணங்கள்!

    பிரண்டை என்ற மூலிகையைப் பற்றியும் அதன் சிறந்த மருத்துவ குணங்களைப் பற்றியும், பிரண்டை உப்பு என்ற அதன் ஆண் - Bi - product பற்றியும் அதை எப்படித் தயாரிப்பது, சாப்பிட வேண்டிய அளவு ஆகியவற்றைக் கூறவும். நீரிழிவு, உடல் வலி, H-Pylori போன்றவை பிரண்டையின் உபயோகத்தால் சரியாகிவிடும் என்று பலரும் சொல்கிறார்கள். இது சரியா?
    புவனா நடராஜன், சென்னை-28.


    கொடி இனத்தைச் சேர்ந்தது பிரண்டை. இதில் கணு நிறைய இருக்கும். சுவையில் இனிப்பும் கார்ப்புமுள்ளது. வீரியத்தில் சூடானது. ஜீரணத்தின் இறுதியில் புளிப்பாக மாறக் கூடியது. கப - வாத தோஷங்களைக் குறைக்கக் கூடியது. பித்த தோஷத்தைத் தூண்டிவிடும்.

    பசியை நன்றாகத் தூண்டிவிடும். அப்பளத் தயாரிப்பாளர்கள், அப்பளத்தால் பசி மந்தம் ஏற்படக்கூடாது என்றெண்ணி அப்பளத் தயாரிப்பில் பிரண்டையைச் சேர்ப்பார்கள். வயிற்றில் கீரிப் பூச்சி, ஆசனவாய் அரிப்பு, மூல உபாதையில் இரத்தப் போக்கு உள்ளவர், மூல முளைகள், ரத்தபேதி, பசியின்மை, வயிற்றுவலி போன்ற உபாதைகளுக்கு பிரண்டையை நெய்விட்டு வதக்கி தனித் துவையலாக்கிச் சாப்பிட்டால் மிகவும் நல்லது. இவற்றை உடனே குறைக்கும்.

    பிரண்டையை இடித்து அதிலிருந்து கிடைக்கும் சாற்றை கோபி சந்தனம் அல்லது பூங்காவியுடன் சாப்பிட, மேற்குறிப்பிட்ட உபாதைகள் குணமாகும். மூக்கில் நிறைய ரத்தம்வரும்போது 2 -3 சொட்டு இதன் சாற்றை விட உடனே ரத்தம் நிற்கும்.

    கணுவும் தோலும் நீக்கிய பிரண்டையை உளுந்துடன் ஊற வைத்து, வடை போல் தயார் செய்து சாப்பிட, வயிற்றில் அடிக்கடி வாயு நிறைந்து அடைத்து, மூச்சுவிடத் திணறலும் வலியும் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும் குடல் வாயு, கிருமி, வறண்ட மூலம் ஆகியவற்றிலும் நல்லது.

    எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டால் இதன் சாற்றையோ, இதனைக் கணு நீக்கி வதக்கியோ சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் சாற்றைத் தடவுவது, சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துத் துணியை நனைத்து, எலும்பு முறிவின் மீது பட்டி கட்டி விடுவது போன்றவை, அங்கு ஏற்பட்ட வலியைக் குறைக்கும். சவரத்தின்போது ஏற்படும் வெட்டுக்காயம், கத்தி வெட்டு முதலியவற்றில் ரத்தக் கசிவை நிறுத்த இதன் சாற்றைத் தடவலாம். காதுகளில் சீழ் வரும்போது காதைத் துடைத்துப் பின் இதன் சாற்றைவிடலாம்.

    கணுவையும் பட்டை ஓரத்தையும் கத்தியால் சீவி அகற்றி அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன் உப்பு சேர்த்துச் சாப்பிட, கடுமையான வயிற்றுவலி நீங்கும். இளம் தண்டுகளை பாத்திரத்தினுள் மூடிக் கரியாக்கி 1 -3 சிட்டிகை தண்ணீரில் கரைத்துச் சாப்பிடுவதும் நல்லதே. இதுவே பிரண்டை உப்பு என்று அழைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. சித்த மருத்துவர்கள் பலரும் பிரண்டை உப்பு பற்றிய விளக்கங்களைத் தரக்கூடும்.

    நீரிழிவில் இதன் பயன்பாடு பற்றி ஆயுர்வேதம் எதுவும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருந்தாலும் கப - வாத தோஷங்களால் ஏற்படக்கூடிய நீரிழிவு உபாதைக்கு பிரண்டையைப் பயன்படுத்தலாம். வயிற்றிலுள்ள வலியைப் போக்குவதால், உடல் வலியையும் குறைக்கக் கூடும். குடல் கிருமிகள் பலதும் அழிவதால் H - Pylori யின் தாக்கம் குறையவும் பிரண்டையைப் பயன்படுத்தலாம்.

    கசப்பான பிரண்டைத் துண்டு, நல்ல ஒரு மலமிளக்கியாகும். உளுந்துடன் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால், ஆண்களுக்கு சம்போக சக்தி வளரும். கண்புரை நோய் மாற, பிரண்டையைத் துவையலாக்கிச் சாப்பிடலாம். உடல் வலுவின்மை, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, மூட்டுகளில் ஏற்படும் வலி, பால்வினை நோய் போன்றவற்றுக்குப் பிரண்டையை உள்ளுக்கு உணவாகச் சாப்பிட்டுப் பயன் பெறலாம். நெய்யில் பிரண்டையை வதக்கி, கோலரக்கு, கோதுமை மாவு, மருதம் பட்டை பொடி சேர்த்துப் பாலுடன் கலந்து பருக, முட்டியில் ஏற்படும் வலி குறையும். எலும்பு முறிவு விரைவில் கூடிவிடும் என்று சக்ரதத்தர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். பிரண்டையை இடித்துப் பிழிந்த சாறுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து, பிரண்டையின் தண்டை அரைத்து கல்கமாகச் சேர்த்து எடுத்து இளந்தீயில் காய்ச்சி, மாதவிடாய் முடிந்த மறுநாள் முதல் பெண்கள் சாப்பிட, குழந்தைப் பேறு உண்டாகும் என்று வைத்ய மனோரமாவில் குறிப்பு காணப்படுகிறது.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்
    dinamani july152012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1496
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சுத்தத்தைத் தரும் சிகிச்சை முறைகள்!

    என் வயது 40. வயிற்றுப் பகுதியை ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் FATTY LIVER என்றும் GALL BLADDER (பித்தப்பை) பெரிய அளவிலும் POLYPS உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளனவா?
    கமால், சென்னை.

    மருத்துவம் செய்து கொள்ள வேண்டிய நோயாளிகள் இருவகைப்படுவர். அதனால் மருத்துவமும் இருவகைப்படும். ஒன்று ஸந்தர்ப்பணம் - அதாவது உடலுக்கு வலிமையையும், மனதிற்கு களிப்பையும் உண்டு பண்ணுவது. மற்றொன்று அபதர்ப்பணம்- அதாவது உடலை இளைக்கச் செய்வது, மனதுக்குத் துன்பத்தைத் தருவது. நிலம் மற்றும் நீரின் ஆதிக்கப் பூதங்களால் உருவான மருந்துகளால், உணவு வகைகளால், செய்கைகளால் மேற்கொள்ளப்படும் முறையானது, ஸந்தர்ப்பணம் சிகிச்சை முறையாகும். நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பூதங்களின் ஆதிக்கத்தால் உருவான மருந்து, உணவு, செய்கைகளின் வாயிலாகச் செய்யப்படும் சிகிச்சை முறையானது, அபதர்ப்பணம் என்ற வகையைச் சார்ந்தது.

    மாமிச உணவை அதிகம் சாப்பிடுவது, இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை கொண்ட உணவு வகைகளைச் சாப்பிட்ட பிறகு, பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுவது, நொறுக்குத் தீனியை அடிக்கடி வாயில் போட்டு அரைத்துக் கொண்டே ஒரே இடத்தில் நிறைய நேரம் அமர்ந்து கொண்டு மற்றவர்களுடன் அரட்டை அடிப்பது, கவலையேதுமில்லாமல் மன மகிழ்ச்சியுடன் அமைந்துள்ள சோம்பேறித்தனமான வாழ்க்கை போன்ற சில காரணங்களால் உடலின் உட்புற உறுப்புகளின் மந்தமான செயல்பாடுகளுக்கு வழி வகுக்கின்றன. இதனால் நீங்கள் குறிப்பிடும் கல்லீரல், பித்தப்பை உபாதைகள் தலை தூக்குகின்றன. மேலும் குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால், மேற்படி காரணங்களால் உட்புற உறுப்புகளில் நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டன என்று கூறலாம். அதனால் ஸந்தர்ப்பண சிகிச்சைக்கு நீங்கள் தகுதியற்றவர் என்றும் அபதர்ப்பண சிகிச்சைக்கு மட்டுமே பொருத்தமானவர் என்றும் உறுதிபடக் கூறலாம்.

    இந்த அபதர்ப்பண சிகிச்சை முறையானது இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அவற்றுக்குச் சோதனம் என்றும் சமனம் என்றும் பெயர். சோதனம் என்றால் உடல் உட்புறக் கழிவுகளை வெளியேற்றிச் சுத்தப்படுத்துதல் என்று அர்த்தமாகும். ஐந்து வகையான பிரிவைக் கொண்ட இந்த சிகிச்சைக்கு பஞ்சகர்மா என்று பெயர். மருந்தைக் கொடுத்து வாந்தி எடுக்கச் செய்து தேவையற்ற கபத்தை வெளியேற்றுவது, பேதி மருந்து கொடுத்துப் பித்தத்தை வெளியேற்றுவது, கஷாய வஸ்தி எனும் எனிமா முறையால் குடலில் வாயுவின் தேக்கத்தை ஆசனவாய் வழியாக அப்புறப்படுத்துவது, மூக்கினுள் மருந்தைச் செலுத்தி, தலைப்பகுதியை சுத்தப்படுத்துவது, ரத்தக் குழாய்களைக் கீறி கெட்ட ரத்தத்தை வெளியேற்றுவது என்ற ஐந்து உடல் சுத்தத்தைத் தரும் சிகிச்சை முறைகளால், நிலம் மற்றும் நீரின் ஆதிக்கத்தை, உடல் உட்புறப் பகுதிகளிலிருந்து பிரித்து வெளியேற்றிவிடலாம். இந்த சிகிச்சை முறைகளைக் கையாள்வதற்கு நோயாளிக்கு உடலில் வலு தேவை. நோயும் வலுவான நிலையிலிருந்தால் இந்த வைத்திய முறை சிறந்தது.

    சிலர் நோஞ்சானாக இருப்பார்கள். உடல், மன வலுவும் சரி, நோயின் தன்மையும் சரி, குறைவான அளவில் இருக்கும்.

    அவர்களுக்குச் சமனம் அதாவது தோஷத்தை வெளியேற்றாமல், சிகிச்சை செய்ய வேண்டிய தோஷத்தைத் தவிர, மற்ற தோஷங்களுக்குக் கேடு ஏற்படுத்தாமல், சீற்றமடைந்த தோஷத்தை அதன் இருப்பிடத்திலேயே அமைதி அடையும்படி செய்யும் சிகிச்சையாகும். அது ஏழு வகைப்படும். பாசனம் - செரிக்காமல் இரைப்பையில் கிடக்கும் உணவை, மருந்தின் மூலம் செரிக்க வைப்பது. தீபனம் - பசித் தீயைத் தூண்டுவது, க்ஷத் - பட்டினியிருத்தல், த்ருட் - தண்ணீர் தாகத்தை அடக்காதிருத்தல், வ்யாயாம: - உடற்பயிற்சி, ஆதப - வெயில் உடலில் படும்படி அமர்ந்திருத்தல் மற்றும் மாருதா: - காற்று உடலில் நன்றாகப்படும்படி நடத்தல்.

    மேற்கண்ட சிகிச்சை முறைகளை நீங்கள் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கிச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்பிரிவுகளில் எது உகந்தது என்பதை மருத்துவர்களே தீர்மானிக்கட்டும். உணவில் நீங்கள் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள், காலையில் ஒரு கைப்பிடியாக வகைக்கு, கொள்ளு, காராமணி, பார்லி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை எடுத்துத் தனித்தனியாக வெள்ளைத் துணியால் மூட்டை கட்டி, 3 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, அரை லிட்டராகக் குறுகியதும், துணி மூட்டைகளை அகற்றி கஞ்சியின் சூடு அடங்கியதும் 1 ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடவும். கல்லீரல் அடைசல், பித்தப்பை டஞகவடந ஆகியவற்றை இந்த உணவு வகை, உரசி வெளியேற்றும். நெருப்பு, வாயு, ஆகாயத்தை அதிகம் கொண்ட உணவு வகை என்பதால், நிலம், நீரின் ஆதிக்கத்தை வெளியேற்றும் திறன் கொண்டது. மதிய உணவாகச் சிறிது சாதம், சாம்பார் சாதம், மோர் என்று சாப்பிட்டு, தேன் கலந்த தண்ணீரைச் சிறிது பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்படும் வகையறாக்களை மட்டுமே சாப்பிட்டு, தெளிந்த மோரைப் பருகவும். கறிவேப்பிலை, சுக்கு, கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் "காலசாகாதி' எனும் கஷாய மருந்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிடவும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன்
    dinamani 22nd july2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1497
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: எலும்பு மஜ்ஜையை மாற்றுவதற்கு முன்பு...

    என் 5 வயது மகன் ரஞ்சித் குமாருக்கு BRUTTONS HYPOGAMMA GLOBULINEMIA என்ற குறைபாடு உள்ளது. 1 வயதாக இருக்கும்போது இதற்குத் தீர்வாக IVIG என்ற மருந்தை 21 நாட்களுக்கு ஒருமுறை வாழ்நாள் முழுவதும் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். மருந்தின் விலை ரூ.15 ஆயிரம். இந்த ஆண்டு மகனை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பற்றிக் கூறினார்கள். அதற்கு ரூ.30 லட்சம் செலவாகும் என்றும் குணமாகும் வாய்ப்பு 70% தான் இருப்பதாகவும் கூறினார்கள். எங்களுக்கு வசதி இல்லை. இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு உள்ளதா?
    பி.சுரேஷ்குமார், சேலம்.


    "மஜ்ஜா மஜ்னா' என்று ஒரு குறிப்பு ஆயுர்வேதத்தில் உள்ளது. அதாவது, மஜ்ஜை உடலின் உட்புறத்தில் குறைந்து போனால், மிருகங்களின் எலும்பினுள்ளே அமைந்துள்ள மஜ்ஜையையே முக்கிய உணவாகச் சாப்பிட வேண்டும் என்று அதற்கு விளக்கம் தரலாம். ஆனால் மஜ்ஜையை அவ்வளவு எளிதாகச் செரிக்கச் செய்ய முடியாது. அதைச் செரிக்க வைத்து குடல் வழியாக தாதுக்களில் பரவச் செய்து, தாத்வக்னி எனப்படும் தாதுக்களில் பரவி நிற்கும் நெருப்பில் வேக வைத்து, உடல் அந்த வெளிப்புற மஜ்ஜையை தன் வசம் சேர்த்து, உட்புற மஜ்ஜைப் பகுதியை புஷ்டிப்படுத்துவதற்கு அடிப்படை ஆதாரமாக ஜாடராக்னி (ஜடரம் - வயிறு, இரைப்பை முதல் பெருங்குடல் வரை உள்ள பகுதி, அதிலுள்ள சூடு) எனும் பசித்தீயின் துணையில்லாமல் செய்ய இயலாது. உங்களுடைய மகனுக்கு இந்த ஜாடராக்னி அநேகமாக மந்தமான நிலையில் இருக்கக் கூடும். அதனால் வயிற்றுப் பகுதியில் போதுமான அளவு சூடு இல்லாமல் சில்லிட்டிருந்தால், தாது போஷணைக்கு வழி இல்லாமல் அவஸ்தைகள் பல நேரிடும். ஒரு சில உணவுமுறைகளால் ஜாடராக்னியை சூடேற்றி, நன்றாக எரியும்படி செய்து விட்டால், மஜ்ஜையை உணவாக ஏற்று, அறுவைச் சிகிச்சையைத் தவிர்க்கலாம்.

    காலை உணவாக ஒரு டம்ளர் (சுமார் 250 - 300 கிராம்) புழுங்கலரிசியுடன் வகைக்கு 2 கிராம் வீதம் சுக்கு, தனியா மற்றும் அரிசித் திப்பிலியைச் சேர்த்து வெண்கலப் பாத்திரத்தில் கொதிக்கவிடவும். சாதம் நன்றாக வெந்தவுடன் கஞ்சியை மட்டும் வடிகட்டி அரை ஸ்பூன் அஷ்ட சூரணம் எனும் ஆயுர்வேத பொடி மருந்தைக் கலந்து சிறிது பசு நெய் கலந்து, 2 -3 கிளாஸ் வெதுவெதுப்பாக குடிக்கக் கொடுக்கவும். நார்த்தங்காய் வற்றலைச் சிறிது கடித்துக் கொள்ளலாம்.

    மதியம் சூடான சாதம், எலுமிச்சம் பழ ரசம், கறிவேப்பிலைத் துவையல், வெங்காய தயிர்ப்பச்சடி, கடைந்து வெண்ணெய் நீக்கிய சூடாக்கி, மஞ்சள் தூள், நல்லெண்ணெய்யில் ஓமம் தாளிதம் செய்த மோர் என்ற வகையில் உணவை வீட்டிலேயே தயாரித்து, பள்ளிக்கு எடுத்துச் சென்று ஊட்டி விடவும். அரவிந்தாஸவம் என்ற ஆயுர்வேத மருந்தை 2 ஸ்பூன் (10 மி.லி.) உணவை உண்ட பிறகு சாப்பிடக் கொடுக்கவும்.

    மாலையில் பிஸ்கட் இல்லாமல், சர்க்கரை கலந்த சூடான வெதுவெதுப்பான பால் சாப்பிடக் கொடுக்கவும். இரவு ஏழுமணிக்கு சூடான சாதத்தில் மறுபடியும் அரை ஸ்பூன் அஷ்ட சூரணம், நெய் கலந்து முதல் கவளத்தைச் சாப்பிடக் கொடுக்கவும். அப்பளம் போட்டு செய்த வற்றல் குழம்பைச் சாதத்துடன் கலந்து, நல்லெண்ணெயுடன் பிசைந்து, தயிர்ப் பச்சடியில் தோய்த்து ஊட்டிவிடவும். அதன் பிறகு அரை கிளாஸ் மோர் பருகச் செய்யவும். பிப்பல்யாஸவம் 10 மி.லி. சாப்பிட வேண்டும். இப்படியாக 2 -3 மாதங்கள் தொடர்ந்து செய்து வர எதையும் செரிக்கச் செய்யும் சக்தியை ஜாடராக்னி பெற்றுவிடும். இந்த அக்னியையை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தாத்வக்னிகளும் வலுவடைந்துவிடுவதால், மஜ்ஜையையே பிரதான உணவாக அதன் பிறகு கொடுக்கலாம். வயிறு மற்றும் தாதுக்களின் பகுதிகளனைத்தும் ஒரு கதகதப்பான சூழ்நிலையை மேற்குறிப்பிட்ட உணவு மற்றும் மருந்துகளின் வழியாக உங்கள் மகன் அடைந்துவிட்டால், கிருமித் தொற்றை அழிக்க முடியும். உணவின் சாராம்சம் உடலில் நன்கு சேரத் தொடங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சில்லிட்டுப் போன ஓர் இருண்ட குகையினுள்ளே எடுத்துச் செல்லப்படும் சூடான தீப்பந்தத்தைப் போல மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறையினால், மகனுடைய வாழ்வு ஆரோக்கியமான வழியில் மலரக்கூடும். காரணம் குடல் மற்றும் உணவை ஏற்றிச் செல்லும் பாதை சுத்தமானதாகவும், சூடானதாகவும் இருக்கும் சூழ்நிலைதான்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன்
    dinamani 29 july 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1498
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info



    திருமணத்துக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் ஒரு சில தடாலடி வைத்தியமுறைகள் அவருக்குப் பயன் தரலாம். தலையணையின்றி மல்லாந்து படுத்து, தலையைச் சிறிது முகவாய்க்கட்டை மேலெழுமாறு வைத்துக் கொண்டு, குங்குமாதி தைலம் (கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை மருந்து) ஓரிரு சொட்டுகளை இரு மூக்குத் துவாரங்களிலும்விட்டு நன்றாக உறிஞ்சி, நெற்றி, மூக்கின் இருபுறங்கள், மென்னி இவற்றை அழுத்தித் தேய்த்துவிட்டுக் கொள்ளவும். காலை, இரவு

    பல் தேய்த்த பிறகு இதுபோல தொடர்ந்து செய்து வந்தால், அவருடைய முகத்தில் மழமழப்பு, பூரிப்பு, இளமை ஆகியவை கூடிவிடும். முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறையும்.

    மஸுரப் பருப்பை (மஸுர் டால்) பால் விட்டரைத்து, அந்த விழுதில் பசு நெய் சேர்த்து முகத்தில் பூச முகம் சிவந்து அழகு பெறும். தலைக்குப் பிருங்கா ஆமலகாதி தைலத்தைப் பூசி 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குக் குளிக்கவும். முக்கியமாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தலைக்குத் தேய்த்துக் குளிப்பது நலம். அரிசி மாவு அல்லது பச்சைப் பயறு மாவு அல்லது கடலை மாவு இவற்றின் வடித்த கஞ்சியிலோ, சிறிது புளித்த கெட்டி மோரிலோ குழப்பித் தலைக்குத் தேய்க்கலாம். சிறிது அரப்புத்தூள் அல்லது சீயக்காய்த்தூளைச் சேர்த்தும் பயன்படுத்தலாம். அழுக்கைத் துப்புரவாய் அகற்றும். எலுமிச்சம் பழத்தின் உலர்ந்த தோலின் பொடி, அழுக்கையும் எண்ணெய்ப் பிசுக்கையும் போக்கும். வெண்மை தரும்.

    அரிமேதஸ் எனும் தைலத்தை 1-2 ஸ்பூன் அளவு வாயிலிட்டு நன்கு கொப்பளிக்கவும். வாயில் உமிழ்நீர் நிரம்பியதும் துப்பிவிடவும். பிறகு வெந்நீர் விட்டுக் கொப்பளிக்கவும். இரவில் படுக்கும் முன் இவ்வாறு செய்யவும். இதனால் குரல் தெளிவாக மென்மையுடன் இருக்கும். கன்னங்கள் பூரித்து முகம் உருண்டையாகப் புஷ்டியுடன் இருக்கும்.

    அஞ்சனக்கல் என்றொரு மருந்து சரக்கு, 15 கிராம் அளவு வாங்கி இரும்புக் கரண்டியில் போட்டு அனலில் நன்கு சுட வைத்துப் பாலில் சூட்டுடன் போட வேண்டும். பால் 100 மி.லி. போதுமானது. பாலில் போட்ட அஞ்சனக்கல்லை எடுத்து அலம்பி உலர்த்தி மெல்லிய தூளாக்கிக் கொண்டு, தேன் அல்லது நல்லெண்ணெய் விட்டரைத்து மையாக்கிக் கொள்ளவும். இதனைத் தினமும் காலையில் கண்ணிலிட்டுக் கண்களை மூடி சிறிது நேரம் பொறுத்திருந்து கண்களைத் திறந்து ஒரு மெல்லிய வெள்ளைத் துணியால் துடைத்துவிட வேண்டும்.

    இதனால் கண்கள் அழகாகவும், கூரான பார்வையுள்ளவையாகவும் இருக்கும். கண்களிலுள்ள கறுப்பும் வெளுப்பும் சிவப்பும் தெளிந்து தனித்துக் காணும். நெய்ப்புடன் இமைகள் வழவழவென்றிருக்கும். இதற்கு மாற்றாக கண்ணில் 2 சொட்டு விட்டுக் கொள்ளும் இளநீர்க் குழம்பும் பயன்படுத்தலாம்.

    கஸ்தூரி மஞ்சள், மாகாளிக் கிழங்கு, வெண்கோஷ்டம், நன்னாரிவேர், விலாமிச்சம் வேர், மருக்கொழுந்து, மகிழம்பூ, கார்போகரிசி, பூலாங்கிழங்கு, ரோஜா மொட்டு இவை வகைக்கு 5 கிராம், வெந்தயம் 15 கிராம், உலர்ந்த எலுமிச்சை பழத்தோல் 50 கிராம் மிஷினில் அரைத்துக் கொள்ளவும். நீர்விட்டுக் குழப்பி சுமார் 15 நிமிடங்கள் வைத்திருந்து, உடலில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும். தோலின் அழுக்கைச் சுத்தம் செய்யும். உடலுக்கு நல்ல நிறத்தையும், மிருதுத்தன்மையையும் அளிக்கக் கூடிய வாசனைப் பொடி.

    பெண்மையை மலரச் செய்யும் பலசர்ப்பிஸ் எனும் மூலிகை நெய் மருந்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 10 மி.லி. உருக்கிச் சாப்பிடலாம். சதாவரீகுலம் எனும் லேகியத்தை மதிய உணவுக்கு 1 மணி நேரம் முன்பாக 10 கிராம் நக்கிச் சாப்பிடலாம். குமார்யாஸவம் 30 மி.லி. இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடவும். திருமணத்துக்குப் பிறகு கருத்தரிப்பதற்கு இம்மருந்துகள் உதவிடக் கூடும். தேன் கலந்த தண்ணீரை (5 மி.லி. தேன், அரை கிளாஸ் தண்ணீர்) காலை, இரவு உணவுக்குப் பிறகு அரை மணி நேரம் கழித்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. ஏலாதி சூரணத்தைத் தயிர்த் தெளிவுடன் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவப் பயன்படுத்தி வந்தால், முகத்தில் எண்ணெய் படிதல் எனும் தொல்லையிலிருந்து நிவாரணம் பெறலாம். முன் குறிப்பிட்ட பிருங்காமலகாதி தைலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் முடியிலுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம்.

    (தொடரும்)


    dinamani 4.08.2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1499
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குளிர்ச்சியும் வாயுவும்!

    எனக்கு வயது 64. காலையில் படுக்கையில் இருந்து எழுந்தால் நடுமுதுகு மற்றும் இடுப்பில் வலி உள்ளது. அரை மணி நேர நடமாட்டத்துக்குப் பிறகுதான் இயல்புநிலை வருகிறது. இந்த உபாதை மாற ஆயுர்வேத சிசிக்சை முறைகள் ஏதேனும் உள்ளதா?
    டி.என்.வி.நீலகண்டன், பள்ளிக்கரணை, சென்னை.


    வாத தோஷத்தின் சேர்க்கை இல்லாமல் உடலில் வலி ஏற்படுவதில்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதிகமாக வேலை செய்வதால் சிலருக்கு வலி ஏற்படும். வாதம் பிற தோஷங்களால் தடுக்கப்படாமல் தன் தனி சுதந்திரமான சீற்றத்தினால் ஏற்படும் இந்த வகை வலிக்கு "கேவலவாயு கோபம்' என்று பெயர். நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்திருந்து எழும்போதோ, படுத்து உறங்கிவிட்டு எழும்போதோ சிலருக்கு வலி ஏற்படும். நகரும் தன்மையுடைய வாயுவை மற்ற தோஷங்கள் சூழ்ந்து கொள்வதால் அதன் இயல்பான தன்மைக்கு ஏற்படும் தடையினால் ஏற்படும் வலியானது "ஆவரண வாயு' என்று பெயர் பெறுகிறது. நீங்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருக்கிறீர்கள்.

    ஆவரண வாயு ஏற்படக் காரணமென்ன? படுக்கும் படுக்கை விரிப்பு சில்லிட்டிருந்து அதன் மேல் வெற்றுடம்பாகப் படுப்பதாலும், குளிரூட்டப்பட்ட அறையில் உடலைக் கம்பளியால் போர்த்திக் கொள்ளாமல் படுப்பதாலும், குளிர்ந்த நீரைப் பருகிய பிறகு இரவில் படுத்தாலோ, குளிர்ச்சியான உணவையும் பானத்தையும் பருகிய பிறகு படுப்பதாலோ, இரவில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப் படுப்பதாலோ, இந்த ஆவரண வாயுவின் உபாதை ஏற்படக் கூடும்.

    "ஸ்தம்பனம்' அதாவது விரைத்துக் கொள்ளும் உடல் நிலையை இதுபோன்ற காரணங்கள் ஏற்படுத்துவதால், வாயுவின் கதி முடக்கம் ஏற்பட்டு தசையிலும், மூட்டுகளிலும் வலியை ஏற்படுத்துகிறது. குளிர்ச்சியான ஸ்தம்பனம் எனும் விரைப்புத் தன்மைக்கு நேர் எதிரான சூட்டைத் தரும் "ஸ்வேதனம்' அதாவது வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை முறையினால் } ஆவரணம் எனும் சூழலிருந்து வாயுவை விடுபடச் செய்யும் சிகிச்சை முறையால் } உங்களுக்கு நிவாரணம் ஏற்படக்கூடும்.

    "நாடீஸ்வேதம்' என்று ஒரு சிகிச்சைமுறை இருக்கிறது. ஆமணக்கு, சித்தாமுட்டி, கல்யாண முருங்கை, யூகலிப்டஸ், புங்கன், நொச்சி, எருக்கு போன்றவற்றின் இலைகளை தண்ணீரில் போட்டு பிரஷர் குக்கரில் வேக வைத்து, குக்கரின் மூடியின் மேலுள்ள குழாயில் ஒரு ரப்பர் டியூபை மாட்டி அதன் மூலம் வெளிப்படும் நீராவியை உங்களுடைய முதுகுத் தண்டுவடப் பகுதியை கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இளஞ்சூடாகப் பூசிய பிறகு, காட்டுவதின் மூலம் வாயு தடை நீங்கப் பெற்று, சுதந்திரம் அடைந்து விடுவதால், வலி குறைந்து குணமாக வாய்ப்பிருக்கிறது. இதற்கு மாற்று சிகிச்சையாக ஆற்று மணலை மூட்டை கட்டி சூடாக்கி, ஒத்தடம் கொடுப்பதையும் செய்யலாம். வாயுவுக்கு ஏற்படும் இந்த விடுதலையுடன் பிரச்னை ஓய்ந்துவிட்டதாக நாம் கருத முடியாது. அதன் பாதைக்குத் தடை ஏற்படுத்திய தோஷ -தாது - மலங்கள், மறுபடியும் காரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பதால், அதற்கு வழி ஏற்படாத வகையில் நீங்கள் உணவை வெதுவெதுப்பாகச் சாப்பிடுவதும், சூடான வீர்யம் கொண்ட பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், ஓமம் போன்றவற்றின் துணை கொண்டு தயாரிக்கப்பட்ட ரஸம் - கூட்டு போன்றவை உணவாக ஏற்கப்பட வேண்டும். உடலுக்கு எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கவும். இருமாதங்களுக்கு ஒருமுறை 15 மி.லி. சுத்தமான விளக்கெண்ணெயைச் சூடான பாலுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுக் குடல் வாயுவை நீக்கிக் கொள்ளவும், பேதி மூலமாக. சீரகம், ஓமம் போட்டுக் காய்ச்சிய வெந்நீரையே பருகவும். அஷ்ட வர்க்கம் எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை 15 மி.லி. எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடவும். ஒரு யோகராஜ குக்குலு எனும் மாத்திரையைக் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரவும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன்
    12 August 2012 dinamani



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1500
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கண் பார்வை வலுப் பெற..!

    எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பெண் - 5 பவர் மூக்குக் கண்ணாடியும், பையன் -6 பவர் மூக்குக் கண்ணாடியும் அணிந்துள்ளனர். ஒரு பையன் தற்போது -2.5 பவர் கண்ணாடி போட்டுள்ளான். அவனுக்குக் கண்ணில் நீர் வரும். பிள்ளைகளுக்குக் கண்ணாடி பவர் குறையவும், கண் பார்வை வலுப்படவும் வழிகள் உள்ளதா?
    ஒரு வாசகர், நெய்வேலி.


    கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலா சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சுமார் 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 கிராம்) த்ரைபல க்ருதம் எனும் உருக்கிய நெய் மருந்து, அரை ஸ்பூன் சுத்தமான தேன் என்ற விகிதத்தில் சதும்ப குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வந்தால், கண் கோளாறுகள் நீங்குவதோடு பார்வையும் நன்றாகத் தெரியும்.

    அதிக நேரம் தரையில் குனிந்து அமர்ந்து ஹோம் ஒர்க் செய்வது, படுத்துக் கொண்டு பாடப் புத்தகங்ளைப் படிப்பது, அதிக வெளிச்சமில்லாத அறையில், தனக்குப் பின்புறம் தலைக்கு மேல் விளக்கு எரியாமல், முன்புறம் எரியும் விளக்கில் படிப்பது, பிள்ளைகளுக்குச் சளி பிடித்துவிடக் கூடாதே என்ற பயத்தில் தலைக்குச் சுடு தண்ணீர் விட்டுக் குளிப்பாட்டுவது, நூடூல்ஸ், பாஸ்தா, பர்க்கர், பேல்பூரி, பானிப்பூரி, மசாலா சுண்டல், சிப்ஸ் போன்றவற்றைப் பிள்ளைகள் ஆசைப்படும்போதெல்லாம் வாங்கித் தருவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை.

    உணவாக முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மிதிபாகல் பிஞ்சு, வெண்டை, மணத்தக்காளி, வற்றல், கேரட், முட்டை, பசும்பால் அதிகம் சேர்ப்பது நலம். மேலும் பயறு, கடலை, துவரை, உளுந்து, காராமணி, எள்ளு, மொச்சை முதலிய பருப்பு வகையும் மிளகு, சுக்கு, பெருங்காயம் (சிட்டிகை) முதலிய ஜீரண உதவிகளையும் காலை உணவாக ஏற்பது பிள்ளைகளுக்கு மிகவும் நல்லது. தாமதித்துச் செரிக்கும் உணவுப் பொருட்களாகிய கிழங்குகள், பழ வகைகள், எருமைத் தயிர், கீரை போன்றவை மதிய உணவிலும், பகல் பொழுதிலும் சேர்த்தால் ஏற்படும் வயிற்று மந்தம் வெயிலின் சூட்டாலும், விளையாட்டாலும் பாதிக்காது. அவரைப் பிஞ்சு, அத்திக்காய், பசுவின் பால், கடைந்த மோர், முருங்கைப் பிஞ்சு, துவரம் பருப்பு, மணத்தக்காளி வற்றல் போன்றவை இரவில் சாப்பிட உகந்தவை.

    "ஆலோசகம்' என்றொரு பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பார்வை தெளிவாக இருப்பதற்கு இந்த பித்தம் உதவுகிறது. காரம், புளி, உப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்தால் இந்தப் பித்தம் கெட்டுவிடும். கண்பார்வை மங்கும். அதனால் இந்தச் சுவைகளை உணவில் குறைத்து வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற துவர்ப்புச் சுவையும், கசப்பான பாகற்காய், அகத்திக் கீரையும், இனிப்பான பொருட்களையும் பிள்ளைகளுக்குச் சாப்பிடும்படி பழக்கினால் இந்த ஆலோசக பித்தம் நன்றாகச் செயலாற்றும்.

    கண்களில் வெளிப்புறம் உளுந்து மாவை வரம்பு கட்டி, கண்களில் உள்ளே மூலிகை நெய் மருந்தை ஊற்றி நிரப்பி, கண்களைத் திறந்து மூடச் செய்யும் நேத்ர தர்ப்பணம் எனும் சிகிச்சை முறை, புடபாகம், பிடாலகம், ஆஸ்சோதனம், அஞ்சனம் போன்ற கண் சிகிச்சை முறைகளால் கண்பார்வைக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைமுறைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

    உள்ளங்கால் நடுப்பகுதியில் "தலஹ்ருதயம்' என்று ஒரு மர்ம ஸ்தானமிருக்கிறது. அந்த இடத்தில் பசு நெய்யை உருக்கித் தொடர்ந்து பூசி வந்தால், கண்பார்வை நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நயனாமிருதம் என்ற கண்சொட்டு மருந்தும் உபயோகிப்பது கண்களுக்கு வலுவைக் கூட்டும். முதலில் விட்டவுடன் எரிச்சலைத் தரும். ஆனால் அதன் பிறகு குளிர்ச்சியைத் தரும். வீட்டில் சாதா உப்புக்குப் பதிலாக இந்துப்பு சமையலுக்கு உபயோகித்து வந்தால் கண்களுக்கு நல்லது. பொதுவாகவே உப்பு கண்களுக்குக் கெடுதல். ஆனால் இந்துப்பு இதற்கு விதிவிலக்காகும். (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வ
    19 August 2012 dinamani



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter