Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1501
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய்க்கு மருந்து!

    நாவல் பழம் தற்சமயம் நிறையக் கிடைக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் எவை? நாவல் மரத்தின் இலை, பட்டை, கொட்டை அனைத்திலும் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கேள்விப்படுகின்றேன். இது பற்றி ஆயுர்வேதக் குறிப்புகள் உள்ளனவா?
    செந்தில்குமார், சென்னை.


    தன்வந்திரி நிகண்டுவில் நாவல் பழம் கபத்தின் கோளாறுகளையும் பித்தத்தின் கோளாறுகளையும் குணப்படுத்திவிடும். ஆனால் அதிகமாய் வாயு தோஷத்தை வளர்க்கும், மலத்தைக் கட்டும் என்று காணப்படுகிறது. இதே கருத்தை ஆமோதிக்கும் வகையில் சரக ஸம்ஹிதையிலும் காணப்படுகிறது.

    ராஜநிகண்டுவில் பித்தக் கொதிப்பினால் ஏற்படும் உள்காந்தல், எரிச்சல், தாகம், வறட்சி, வெப்பம் போன்றவை நாவல் பழம் சாப்பிட்டால் குறைந்துவிடும் என்றும், குடலிலுள்ள கிருமித் தொற்றை அழித்து வெளியேற்றிவிடும் என்றும் காணப்படுகிறது.

    சாதாரணமான மற்ற பழங்கள் போல நாவல் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பசி மந்தம், வயிற்றுப் பொருமல், குடல், கை, கால், கீல்களில் வலி போன்ற தொந்தரவு ஏற்படும் என்று சுஸ்ருத ஸம்ஹிதை கூறுகிறது. இது போன்ற கெடுதல்களைப் போக்க பச்சை நெல்லிக்காயை மென்று சாப்பிட்டுக் குளிர்ந்த நீரைப் பருகினால் போதுமானது.

    நாவல் பழத்தை நன்றாகப் பிசைந்து கொட்டையை நீக்கி பிழிந்து வடிகட்டிய சாறு 1 லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையையோ, சீனாக் கற்கண்டையோ சேர்த்துக் கரைத்து வடிகட்டி மெல்லிய தீயில் தேன் பதமாகக் காய்ச்சி இதில் 2 கிராம் குங்குமப் பூ, 1 கிராம் பச்சைக் கற்பூரம் அரைத்துக் கலக்கி, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். சுமார் 10- 15 மி.லி. வரை ஒரு நாளில் 3 -4 முறை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல், தாகம், உடற்சூடு, ரத்த மூலம், மூலச் சூடு, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு போன்றவை குணமாகும்.

    சிறுநீரில் வெளியாகும் இனிப்பு (சர்க்கரை) நாளடைவில் குறைய, நாவல் பழக்கொட்டையை வெய்யிலில் உலர்த்தி உடைத்து உள் பருப்பைச் சூரணம் செய்து காலை, மாலை 1- 2 கிராம் இடைவிடாமல் சாப்பிட்டு வந்தால் போதுமானது. மலக்கட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதால், சிறிது நெல்லி முள்ளி சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால், சரியாகிவிடும். நாவற் பருப்புடன் மாங்கொட்டை பருப்பு சூரணத்தைச் சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும். சிறுநீர் நன்றாகப் பிரியும்.

    சீதபேதி, ரத்த பேதி, அஜீரண பேதி, வாந்தி போன்றவை குணமாக, நாவற் கொழுந்தை ஆட்டுப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டால் குணமாகிவிடும். நொதநொதவென்று வலியுடன் போகும் பெருமலப் போக்குக்கு, நாவல் இலைக் கொழுந்து, மாந்தளிர் இரண்டையும் சேர்த்தரைத்துச் சாறு பிழிந்து 15 மி.லி. எடுத்து, கொஞ்சம் பிஞ்சுக் கடுக்காயின் சூரணத்துடன் சாப்பிட்டால் குணமாகிவிடும்.

    நிகண்டு ரத்னாகரம் நாவற் பட்டையின் பெருமைகளை விளக்கிக் கூறுகிறது. பச்சையாக வெட்டி வெய்யிலில் உலர்த்தி சூரணம் செய்து, துணியில் சலித்து வைத்துக் கொண்டு, ஒன்றிரண்டு சிட்டிகை ஒரு நாளில் 3 -4 முறை சாப்பிட்டு வர, தொண்டைப் புண், கபம், இருமல், ஆஸ்த்துமா, மூலம், பேதி, மாதவிடாய் அதிக உதிரப் போக்கு, சர்க்கரை உபாதை, ரத்த பேதி போன்றவை குணமாகும். பட்டையைக் கஷாயமாகக் காய்ச்சி, வாய் கொப்பளிக்க வாய்ப் புண் ஆறிவிடும்.

    புண்ணைக் கழுவினால் புண் ஆறிவிடும். ஆவாரை, மருதம் பட்டை, கொத்தமல்லி விதை, நெல்லி வற்றல், மஞ்சள், நன்னாரி வேர், நாவற்பட்டை, நாவல் கொட்டை ஆகிய எட்டு மருந்துச் சரக்குகளையும் சமமான அளவில் சேர்த்துப் பெருந்தூளாக இடித்துக் கஷாயம் செய்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இன்ஸலின் இன்ஜெக்ஷன் யூனிட்டின் அளவைப் படிப்படியாகக் குறைத்து, நிறுத்திவிடக் கூடிய அளவுக்கு உபயோகமாக இருக்கும். சிலாஜித் எனும் ஆயுர்வேத மருந்தையும் இதனுடன் உபயோகித்தால் மிகவும் சிறந்தது.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வ
    26 August 2012 dinamani



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1502
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மாதவிடாய் கால இடுப்பு வலி, வயிற்று வலி குறைய...!

    எனக்கு வயது 48. வீட்டு விலக்கு (மாதவிடாய்) வரும்போது 2 வது நாள் அதிகமாக ரத்தப்போக்கு இருக்கிறது. ஒருமாத இடைவெளி என்று இல்லாமல் சீக்கிரமே வந்துவிடுகிறது. மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே கால்வலி, உடல் வலி, தலைவலி என்று ஏதாவது ஒரு வலி வந்துவிடுகிறது. வாய்ப்புண் அடிக்கடி வருகிறது. இது எதனால்? இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
    ஏ.கோமதி, கிருஷ்ணாபுரம்.


    உடல் உஷ்ணத்தினால் அதிக உதிரப் போக்கு ஏற்படலாம். வாய்ப்புண் வருவதற்கும் அதுவே காரணமாகலாம். உதிரப் போக்கு உள்ள நாட்களில் தலைக்குத் தண்ணீர் விட்டு குளிப்பதால் கால்வலி, உடல் வலி, தலைவலி போன்ற உபாதைகள் தோன்றக் கூடும். கசகசாவை மாதவிடாய் காலத்துக்கு முன் ஒருவாரம் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர, நீங்கள் குறிப்பிடும் வலி அனைத்தும் நீங்கிவிடும். வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து 4 பங்கு சர்க்கரை சேர்த்து லட்டு தயாரித்துச் சாப்பிட்டால், மாதவிடாய் உரிய காலத்தில் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, இடுப்பு வலி குறையும்.

    தானிய உணவுப் பொருட்களில் மிகச் சிறந்தவகையான கோதுமையை, பெருங்குருணையாக்கி அன்னம் சமைத்துச் சாப்பிடுவது, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, பூரி என்ற வகையிலும், சத்துமாவு, கஞ்சியாகவும் சாப்பிட்டால் மாதவிடாய் உதிரப் பெருக்கைக் கட்டுப்படுத்தலாம். வாயுப்பிடிப்பு, வாயுவலி உள்ளவருக்கு ஏற்ற உணவுப் பண்டம். உளுந்து சேர்ந்த அரிசியை வேக வைத்து உண்பது, எள்ளும் உளுந்தும் உணவில் அதிகம் சேர்ப்பதும் நல்லதே.

    புஷ்யாணுகம் எனும் ஆயுர்வேத சூரண மருந்து உங்களுக்குப் பயன்படலாம். ஒரு ஸ்பூன் (5 கிராம்) சூரணத்தை 1 1/2 ஸ்பூன் தேன் விட்டுக் குழைத்து 1/2 ஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீருடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். சதாவரீகுலம் எனும் லேகிய மருந்தை மதிய உணவுக்கு முன் சாப்பிட, கருப்பையைச் சார்ந்த உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவையை மட்டுப்படுத்தும். தான்வந்திரம் எனும் தைலத்தை வாரம் இருமுறை அதாவது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் உடலெங்கும் தேய்த்து குளித்துவர, உடல் வலியைப் போக்கிக் கொள்ளலாம். குமார்யாஸவம் எனும் மருந்தை சுமார் 6 ஸ்பூன் (30 மி.லி) காலை இரவு சாப்பிட்டு வர, பசி நன்றாக எடுக்கும். உதிரப் போக்கைச் சரியான அளவில், நேரத்தில் வரும்படி உடலை அமைத்துக் கொடுக்கும்.

    உணவில் அதிக காரம், உப்பு, புளி தவிர்க்கவும். அலுவலகத்தில் உடல் களைப்பைத் தரும்படியான செயல்களைக் குறைக்கவும். மனக்கொதிப்பை ஏற்படுத்தும்படியான சூழ்நிலை இருந்தால், அவ்விடத்தைவிட்டு உடனடியாக விலகிவிடவும். மனதில் அமைதியான தன்மையை வளர்த்துக் கொள்ளவும். இரவில் அதிகம் கண் விழித்திருக்காமல் படுத்து உறங்கவும். உடல் - மன அமைதி இந்த வயதில் உங்களுக்கு அதிகம் தேவை. மாதவிடாய் நின்று விடுவதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுவதால் உடல் உழைப்பையும், மனதுக்கான சூழ்நிலையும் சரியான விகிதத்தில் கட்டுப்படியான நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்வது அவசியம்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வ
    02 September 2012 dinamani



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1503
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடது கண்துடிக்கிறது...!

    எனக்கு வயது 40. கடந்த ஆறு, ஏழு மாதங்களாக எனது இடது கண் துடிக்கிறது. கண் துடிக்கும்போது முகமும் உதடு வரை துடிக்கிறது. டென்ஷன் அதிகமானால் துடிப்பு கூடுகிறது. இது எதனால்? ஆயுர்வேதத்தில் சிகிச்சை உள்ளதா?
    ராஜி சண்முகம், கோவை.


    "உதாவர்த்தம்' என்ற பெயரில் ஓர் உபாதை இருக்கிறது. தலையைச் சார்ந்த சில இயற்கை உபாதைகளான கொட்டாவி, கண்ணீர், தும்மல், ஏப்பம், வாந்தி போன்றவற்றை தடுத்து நிறுத்த முயற்சிப்பதால், மூளையிலிருந்து கீழ்நோக்கி இறங்கும் நரம்புகளில் ஏற்படும் தாக்கம், நீங்கள் குறிப்பிடும் துடிப்பு உபாதைக்குக் காரணமாகலாம். மூளைப் பகுதிக்கு வறட்சி ஏற்படாத வகையில் தர்ப்பகம் எனும் ஒரு கபம் செயல்படுகிறது. இந்த கபத்தினுடைய நெய்ப்பினால் நரம்புகளில் குடி கொண்டுள்ள வாயுவின் வறட்சியான குணம் வளர்ந்துவிடாமல் எந்நேரமும் நெய்ப்பை அவற்றின் மீது படரச் செய்து ஒரு கவசம் போன்ற பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேற்கூறிய காரணங்களாலும், உணவில் அதிக காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையைக் சேர்ப்பதாலும், அதிக அளவில் மிளகு, மிளகாய், அத்திப் பிஞ்சு, சுண்டை வற்றல், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் ஏற்படும் உடல் உட்புற வறட்சியானது, இந்த மூளை நரம்புகளின் மேலுள்ள நெய்ப்பு எனும் கவசத்தை வறட்சி எனும் குணாதிக்யத்தால் கழட்டிவிடுகிறது. மிருதுவான மூளை நரம்புகள் வறட்சியின் தன்மையால் தன்னிச்சையாகத் துடிக்கின்றன. மேற்குறிப்பிட்ட காரணங்களால் உங்களுக்கு மூளை நரம்புகளுக்கு வலுவூட்டும் நெய்ப்பு சிகிச்சைதான் மிகவும் தேவை என்பதை உணரலாம்.

    மூக்கு துவாரம்தான் தலைக்குச் செல்லும் வழி. அங்கு செலுத்தப்படும் மருந்து தலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள சிருங்காடகம் என்னும் இடத்தை அடைந்து அங்கு பரவி, தலை, கண்கள், காதுகள், தொண்டை போன்ற இடங்களில் உள்ள நரம்புகளில் நுழைந்து, கழுத்துக்கு மேல் உள்ள உறுப்புகளில் தோன்றிய எல்லா வகை நோய்க் கூட்டங்களையும் அங்கிருந்து விரைவில் வெளிப்படுத்திவிடுகின்றன.

    க்ஷீரபலா 101, தான்வந்திரம் 101, அணு தைலம், கார்ப்பாஸஸ்த்யாதி தைலம், பலா தைலம் என்றெல்லாம் பல ஆயுர்வேத மூலிகை மருந்துகளைக் கொண்டு மூக்கினுள் செலுத்திக் குணப்படுத்தலாம். இவற்றில் எது உகந்த மருந்தோ அதைச் சரியான அளவில் ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு உபயோகிப்பதே சிறந்தது.

    தலையில் எண்ணெய் தேக்கி வைக்கும் முறையான சிரோவஸ்தி எனும் சிகிச்சை முறையும் தங்களுக்கு நல்ல பலனைத் தரும். க்ஷீரபலா தைலம் இந்த உபாதைக்குச் சிறந்தது. இளஞ்சூடாகத் தலையில் ஊற்றி, காது, வாய், மூக்கு இவற்றின் வழியாக வெளிவரும் வரையிலும், வேதனை குறையும் வரையிலும் தலையில் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய இந்த சிகிச்சை முறையும் நல்லதே. ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி இந்த சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும்.

    கர்ணபூரணம் எனும் காதுகளில் வெதுவெதுப்பாக ஊற்றி நிரப்பும் எண்ணெய் சிகிச்சைமுறையும், கண்களில் மூலிகை நெய்யிட்டு நிரப்பும் சிகிச்சையும், வாயினுள் எண்ணெய் விட்டுக் கொப்பளிக்கும் கபள - கண்டூஷ சிகிச்சையும் நல்ல பலனைத் தரக் கூடியவை.

    தசமூல ரஸயனம் எனும் லேகிய மருந்தை சுமார் 10 கிராம் இரவு படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும். உணவில் பொதுவாக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை ஏற்றவை. பால், நெய், தயிர், வெண்ணெய், இனிப்பு மாதுளை, வாழைப் பழம், மாம்பழம், திராட்சை, அரிசி, கோதுமை, உளுந்து இவை உணவுக்கு ஏற்றவை. அதிக உடற்பயிற்சியும், இரவில் கண் விழித்தலையும் தவிர்க்கவும்.

    (தொடரும்)


    By பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சர
    09 September 2012 dinamani



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1504
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிட மாட்டேன்னு அடம் பிடித்தால்...

    என் மூன்று வயதுப் பேரன் திட உணவு,சாதம், இட்லி போன்றவற்றைச் சாப்பிட மறுக்கிறான். வாயில் திணித்தாலும் துப்பி விடுகிறான். பழ வகைகளையும் விரும்பிச் சாப்பிடுவதில்லை. கடையில் விற்கும் சத்துமாவைப் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வருகிறான். கடும் மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறான். இந்த உபாதை மாற வழி என்ன?
    அ.சாமிநாதன், கொரட்டூர், சென்னை.


    வாயிலும் தொண்டையிலும் உள்ள நீர் தேக்கக் கோளங்கள் வறண்டு நீர்த்த உணவை எதிர்பார்த்திருக்கும் நிலையில் திட உணவை வாய் விரும்பி ஏற்பதில்லை. உணவு உள்ளே செலுத்தப்படவிருப்பதை முன் எதிர்பார்த்து அதனைப் பக்குவப்படுத்தத் தேவையான ஜீரணத் திரவங்கள் சுரந்து சூடேற்றி ஜீரண கோசம் ஆயத்தமாக இருப்பதை நாக்கில் தண்ணீர் ஊறுதல், வயிற்றில் காந்தல் உணர்வு, வயிறு குறைவது போன்றவை விட்டுவிட்டுத் தோன்றி பின் கிரமமாகத் தீவிரமடைவது முதலியவற்றால் உணரப்படும். இவை சரி வர ஏற்படாத நிலையில் வாயில் உணவைத் திணிப்பதால், எந்தப் பயனும் ஏற்படாது. அதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும் வகையில் பேரனுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொள்வது மிகவும் முக்கியம்.

    அந்த வகையில், தயிர் தோய்ந்தநிலையில் தனித்துக் கீழே நிற்கும் தெளிவு, புளிப்பும், இனிப்பும், துவர்ப்பும் கலந்த சிறந்த பானம். ஓர் அழகான கண்ணாடி டம்ளரில் அரை கிளாஸ் ஊற்றி, எலுமிச்சம் பழச்சாறு சர்க்கரை கலந்து ஸ்பூன் போட்டு கையில் கொடுத்துச் சாப்பிடச் சொல்லவும். ருசி கோளங்களைத் திறந்துவிட்டு உமிழ்நீரின் வரவையும் அதிகப்படுத்தும். பசியைத் தூண்டும். மலமூத்திரக் கட்டைத் தளர்த்திவிடும்.

    சத்து மாவைப் பசும்பாலில் கலந்து சாப்பிடும்போது அது நீர்த்து நெகிழ்ந்ததுமான உணவாக இருப்பதால், அதிக நேரம் வாயில் தங்காமல் உட்சென்று விடும். மென்று சாப்பிடுபவர்களுக்கு உமிழ்நீர் அதிகம் சுரக்கும். அதில் ஜீரணத் திரவாம்சம் இருப்பதால் உண்ட உணவை வாயிலேயே பக்குவமாக்கத் தொடங்குகிறது. அதனால் அதிக திரவ உணவைச் சாப்பிடுபவர்களும், பரக்கப் பரக்கச் சாப்பிடுபவர்களும் உமிழ்நீரால் பெறும் லாபத்தை இழந்துவிடுகின்றனர். உமிழ்நீரால் ஆக வேண்டிய ஜீரணமும், ஜீரணிக்கப்பட்ட உணவுச் சத்து உட்சேர்வதும் இதனால் குறைகிறதென்பது கவனத்துக்குரிய விஷயமாகும். உமிழ்நீரில் கரையும் சத்தே மனநிறைவைத் தருகிற நிறைவான பொருளாகும்.

    பேரனுக்குச் சம வயதுள்ள சிறுவர் சிறுமியர் உள்ள உறவினர் வீட்டுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ பேரனை அழைத்துச் சென்று, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடும்படி பழக்கவும். அவர்கள் ஆவலுடன் உண்பதைக் கண்டால் உங்கள் பேரனும் உணவில் விருப்பத்துடன் உண்ண பழகிவிடுவான். உங்கள் பேரனைத் திட உணவு சாப்பிடும்படி இது தூண்டும்.

    உமிழ்நீர் கோளங்களைச் சுறுசுறுப்பாக்கி திட உணவு சாப்பிடச் செய்வதில் இஞ்சிச் சாறு சிறந்தது. 200 மி.லி. இஞ்சிச் சாறு பிழிந்து, சிறிது நேரம் வைத்திருக்க சாறு தெளியும். அடியில் படிந்துள்ள சுண்ணாம்பு போன்றவற்றை அகற்றித் தெளிந்த சாறை 200 கிராம் சர்க்கரையுடன் கலந்து இளந்தீயில் காய்ச்சி பானகமாக்கி வடிகட்டி குங்குமப்பூ, ஏலம், ஜாதிக்காய், கிராம்பு வகைக்கு 1 கிராம், பச்சைக் கற்பூரம் 1/2 கிராம் கலந்து வைத்திருந்து உணவுக்கு முன் சாப்பிடக் கொடுக்கவும். உமிழ்நீர் சுரப்பி நன்றாக வேலை செய்யத் தொடங்கும். திட உணவை எளிதில் ஏற்கச் செய்யும். பசி, ஜீரண சக்தி அதிகமாகும். வயிற்றுக் கனம், உண்டவுடன் அசதி, தலை சுற்றுதல் போன்றவை நீங்கும்.

    அரை ஸ்பூன் வில்வாதி லேஹியம் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, உமிழ்நீர் கோளங்களிலுள்ள அடைப்பை அகற்றி, உமிழ்நீரை அதிகப்படுத்தும். கபத்தினால் ஏற்படும் சில வாய் உபாதைகளான ருசியின்மை, நாக்கில் மாவு படிதல், வாய் துர்நாற்றம் போன்றவற்றையும் குணமாக்கி, பசியையும் தூண்டச் செய்யும். ஜீரகாரிஷ்டம் எனும் ஆயுர்வேத மருந்தை 5 மி.லி. அளவு காலை, மதியம், இரவு உணவுக்குப் பிறகு கொடுக்கவும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வ
    16 September 2012 dinamani



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1505
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வயதான காலத்தில் வாயு தடை!

    எனக்கு வயது 82. காலையில் படுக்கையிலிருந்து எழும்போது உடலோடு கால்களை நிமிர்த்தி சோம்பல் முறிக்கும்போது, முழங்கால் பகுதிக்குக் கீழே சதைக்குள் கடுமையான வலி ஏற்படுகிறது. ஓரிரு நிமிடங்கள் வலி நிவாரணத் தைலங்களைத் தேய்த்தே பிறகே வலி குறைந்து சாதாரண நிலைக்கு வருகிறது. தாங்கிக் கொள்ள முடியாத வலிக்குக் காரணம் என்ன? ஆயுர்வேத சிகிச்சை முறை என்ன?
    வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
    வரட்டணப்பள்ளி.


    முதுமையில் உணவைக் கட்டுப்படுத்துவது அவசியம். மந்தமானதும் கனத்த பொருளும் ஜீரணமாகாது. ஜீரணமானாலும் உள்ளே சேராது. மலப் பொருளாக அதிகம் வெளியேறும். உடலைக் கனக்கச் செய்யும். வயிற்றில் காற்று, மலம், இவற்றின் அசைவைத் தடை செய்யும். முன்போல் உடல் உழைக்க மறுப்பதால், உழைப்பு குறையும். உழைப்பின்மையால் உணவின் அளவு அதிகமாகத் தேவை இராது. நாப் பழக்கம், சபலம் காரணமாக, அதிகமாக சாப்பிட்டால் உடல் கனத்து முதுமை நோய்கள் எளிதில் ஏற்படக் காரணமாகும். அதனால் எளிதில் செரிக்கக் கூடிய, வாயுத் தடை செய்யாத, மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவை உண்பது நல்லது.

    வயோதிகத்தால் வாயு தோஷத்தின் ஆதிக்கம் இயற்கையாகவே உடலில் கூடுகிறது. வாயு தோஷத்தின் ஆதிக்கக் குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, நுண்ணியது, நகரும் தன்மை போன்றவை நரம்புகளில் வளர்ச்சியடைவதால்தான், தோல் சுருக்கம், எலும்புகள் துருத்திக் கொண்டு காணுதல், கூன் விழுதல், நடைத் தடுமாற்றம், மந்தமான பசி, புலன்களின் வலு குறைதல், தூக்கமின்மை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றுக்கு நேர் எதிரான நெய்ப்பு, கனம், சூடு போன்றவை மருந்தாகவும், உணவாகவும், செயலாகவும் கொண்டு வந்தால், வலி உங்களுக்குக் குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்து உங்களுக்குப் பயனளிக்கலாம். வெதுவெதுப்பான அரை டம்ளர் பாலில் 2 கேப்ஸ்யூல், காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

    நரம்புகளின் வலுவைக் கூட்டும் தொடர்ந்து சாப்பிடக் கூடிய நல்ல ஒரு மருந்தாகும் இது. இதில் அடங்கியுள்ள நெய்ப்பும், கனமும், கால் நரம்புகளில் குடி கொண்டுள்ள வாயுவின் வறட்சியையும், லேசான தன்மையையும் மாற்றி நரம்புகளுக்கு வலுவூட்டுவதால், அவை சென்றடையும் தசைப் பகுதிகளிலுள்ள வலியைக் குறைத்து நாளடைவில் குணமாக்கிவிடும்.

    உட்புறத்திலிருந்து நரம்புகளின் வலுவைக் கூட்டுவதைப் போல, வெளிப்புற மூலிகை எண்ணெய் தேய்ப்பு முறையாலும், வலுப்படுத்தலாம். மஹா மாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி, வாதமர்தனம் குழம்பு போன்றவற்றில் ஒன்றை வெதுவெதுப்பாக இடுப்பிலும், கால்களிலும் தேய்த்து நீவிவிட்டு, சுமார் 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு, வெந்நீரில் குளித்து அன்றைய தினம் மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், சுட்ட அப்பளம், மோர் என்ற வகையில் சூடான சாதத்துடன் சாப்பிட, கால் நரம்புகள் வலுப்படும்.

    அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்வது, குளிர்ந்த தரையில் கால் பதித்து நிற்பது, குளிர்ந்த நீரில் நீராடுவது, உட்கார்ந்திருக்கும்போது தொடை கால்களை ஆட்டிக் கொண்டே பேசுவது, கால் மேல் கால் போட்டு அமர்வது, போதிய அளவு கால்களுக்கு ஓய்வு கொடுக்காமல் நடப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

    உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையைக் குறைத்து இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை மிதமாகச் சேர்க்கலாம். வெதுவெதுப்பான நிலையில் உணவைச் சாப்பிட்டால் அதன் செரிமானம் குறித்த நேரத்தில் ஏற்பட்டு, உணவுச் சத்து உடலில் நன்றாகச் சேரும். உணவுக்குப் பிறகு சிறிது வெந்நீர் அருந்துவதும் நலமே. மாதமிருமுறை லகுவான பேதிக்கு விளக்கெண்ணெய் சுமார் 10 - 15 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், குடல் பகுதியில் தேவையில்லாத வாயுவின் சேர்க்கையை பேதி மூலமாக நீக்கிவிடலாம். கந்தர்வஹஸ்தாதி ஆமணக்கு எண்ணெய் மருந்தை இதற்குப் பயன்படுத்தலாம். ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன்
    23 September 2012 dinamani



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1506
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
    பசியின்றிச் சாப்பிட்டால்...!

    என் உடம்பிலிலுள்ள எல்லா எலும்பு மூட்டுகளிலும் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்பட்டு, மடக்கவோ நீட்டவோ முடியாமல் அவதிப்படுகிறேன். குத்து வலியும் வீக்கமும் கீல்களில் பாடாய்ப்படுத்துகின்றன. இவை எதனால் ஏற்படுகின்றன? என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
    நாராயணன், வேதாரண்யம்.


    பசியினுடைய சக்திக்கு மீறி அதிக அளவில் எளிதில் செரிக்காத தயிர், நெய், எண்ணெய்கள், மீன், முட்டை, மாமிசங்கள், கிழங்குகள், உளுந்து, மொச்சை முதலிய தானியங்கள், வெல்லம் முதலிய இனிப்புகள், மாவுப் பண்டங்கள், பிஸ்கோத்துகள் போன்றவற்றைச் சாப்பிடுதல், எளிதில் செரிக்கக் கூடியதாக இருந்தாலும், உணவு செரிமானமாகாமல், பசி வராமல் அடிக்கடி சாப்பிடுதல், உடற்பயிற்சியே செய்யாமல், சாப்பாடு, தூக்கம் என்று இரண்டை மட்டும் செய்து கொண்டிருத்தல் முதலிய காரணங்களால், உணவின் செரிமானம் சரிவர ஆகாமல் பதனமிழந்து, "ஆமம்' எனக் கூறப்படும் ஒரு மப்பு நிலையை அடைகிறது. செரிமானத்தின் முதல் நிலையில் உற்பத்தியாகும் கப தோஷத்தின் பசை போன்ற அம்சம் இதனால் கூடுகிறது. வயிற்றில் அசைவை ஏற்படுத்தக் கூடிய வாயுவின் நகரும் தன்மை, இந்தப் பசையினால் தடைபடுகிறது. கெட்டுப் போன உணவின் சாராம்சத்துடன் சேர்ந்த பசை போன்ற கபத்தை, மிகுந்த சிரமத்துடன் வாயு, ரத்தக் குழாய்களில் சேர்த்து, உடலில் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. இதற்கு "ஆமரஸம்' என்று பெயர்.

    எலும்பு மூட்டுகளில், உராய்வுகள் ஏதும் ஏற்படாதிருக்க அவற்றின் உட்புறத்திலும் சுற்றிலும் சுத்தமான ஸ்லேஷகம் எனும் ஒரு கபம் இருக்கிறது. இதிலிருந்து கசியும் நெய்ப்பு, மூட்டுகளின் அசைவுகள் ஒழுங்காக நடக்க உதவுகிறது. கெட்டுப் போன ஆமரஸம் மூட்டுகளிலிருக்கும் ஸ்லேஷக கபத்தின் இயற்கையான அளவை, அதன் வரவால், மிகவும் அதிகரிக்கச் செய்கிறது. வாயுவும் சேர்ந்தே வருவதால், மூட்டுகளில் வீக்கத்தையும் குத்துவலியையும் உண்டாக்குகிறது. அதனால் மடக்கல், நீட்டல் போன்ற அசைவுகளைச் செய்ய முடியாமல் கீல்களை ஸ்தம்பிக்கச் செய்கின்றது. இதற்கு ஆமவாதம் என்று பெயர்.

    மேற்கூறிய காரணங்களிலிருந்து வயிற்றில் ஜீரணக் குடலிலுள்ள பாசக பித்தம் எனும் பசியைத் தூண்டும் பித்தம் முதலில் கெட்டு, அதன் மூலம் உற்பத்தியான ஆமமும், வழி நெடுக பற்றிப் பிடித்திருப்பதால், முதலில் உபவாசம் அதாவது பட்டினியிருத்தல் நல்லது. இந்த உபவாசத்தின் நேர அளவு ஆமத்தின் உக்கிரத் தன்மையையும் உடல் வாகு, வயது, காலம் இவற்றையும் பொறுத்தே நிச்சயிக்கப்பட வேண்டும் என்பதால், நீங்கள் பசி - தாகம் ஏற்படும் வரையில் வயிற்றைப் பட்டினி போட வேண்டும். பலவீனம் அதிகமாகத் தோன்றினால் கஞ்சி போன்ற திரவ வடிவிலுள்ள உணவைக் குடிக்கலாம். சுக்கும், சித்தரத்தையும் சேர்த்துக் காய்ச்சிய வெந்நீரைச் சூடாக அடிக்கடி குடித்தால் விரைவில் பசி எடுப்பதோடு, ஆமத்தையும் செரிக்கச் செய்து குடல் உட்புறக் குழாய்களைச் சுத்தமடையச் செய்யும். புழுங்கலரிசி, வறுத்த பழைய பார்லி, கேழ்வரகு மால்டு மாவு போன்றவை கஞ்சியாகச் சாப்பிடுவதற்கு நல்லது. பசி நன்றாக எடுக்கத் துவங்கிவிட்டாலும் கூட, தாதுக்களில் உள்ள நெருப்பானது ஆமத்தின் பிடியிலிருந்து விடுபடத் தாமதமாகும் என்பதால், எளிதில் செரிக்கக் கூடிய உள்ளிப் பூண்டு, முள்ளங்கி, கேரட், இஞ்சி, முருங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பிரண்டைக் கொடியின் இளங்குருத்து போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. வயிற்றுப் பகுதி சுத்தமாகி, பாதையும் தெளிவாகிவிட்டால், அதன் பிறகு நாம் சாப்பிடும் எந்த ஆயுர்வேத மருந்தும் விரைவில் உடலின் உட்புறங்களில் பரவி, உபாதைகளைக் குணப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் ராஸ்னா சப்தகம் எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை 15 மி.லி. வீதம் எடுத்து, 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடவும். வெளிப்புறம் வீக்கம், வலி உள்ள பகுதிகளில் ஆற்று மணல், கொள்ளு, உப்பு இவற்றை வறுத்துத் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.

    (தொடரும்)

    எஸ். சுவாமிநாதன், டீன்
    ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
    நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
    செல் : 94444 41771



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1507
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
    மழை, குளிர் நாட்களில் உடல் வலி!

    மழை, குளிர்நாட்களில் வயிற்றில் எரிச்சல், வாயுத்தொல்லை ஏற்பட்டு உடல் வலியால் அவதிப்படுகிறேன். இவை எதனால் ஏற்படுகிறது? என்ன வகை உணவால் இதை மட்டுப்படுத்தலாம்? ஆயுர்வேத மருந்துகள் என்ன சாப்பிடலாம்?
    தனசேகரன், கோவை.


    மழை மற்றும் குளிர்நாட்களில், காற்றில் ஏற்படும் குளிர்ச்சியானது, மனித உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் சூட்டைத் தடுத்து நிறுத்திவிடுகிறது. இதனால், வெளியேற வேண்டிய தாபம் அதாவது உடற்சூடு உள்நோக்கித் திரும்புவதால், குடலிலுள்ள ஜாடராக்னி எனப்படும் பசித்தீ, கொழுந்துவிட்டு எரியும் நிலைக்கு வந்துவிடுகிறது. இந்த எரியும் நெருப்புக்கு, விறகு எனும் உணவைச் சரியான விகிதத்தில் நாம் கொடுக்காமல் போனால், வயிற்றிலுள்ள சமான - அபான வாயுக்கள் நெருப்பை மேலும் பெரிதாக்குகிறது. எரிந்து கொண்டிருக்கும் ஒரு குடிசை, காற்றினால் மற்ற குடிசைகளையும் எரிய வைப்பதைப் போல, குடல் காற்றினால் தூண்டப்பட்ட நெருப்பானது, உடல் உட்புறங்களில் தாதுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவின் சாரத்தையே தனக்கு உணவாக்கிக் கொள்கிறது. இதனால் உடல் மெலிந்து போகலாம். கிடங்குகளிலுள்ள சேமிப்புக் குறைவதால், அவ்விடங்களில் வாயுவின் வரவு கூடுகிறது. இதனால், உடலெங்கும் கடுமையான வலி ஏற்படுகிறது.
    பசித் தீயைக் கட்டுப்படுத்துவதில் இனிப்புச் சுவை பெரும் பங்கு வகிக்கிறது. குடல் வாயுவின் சீற்றத்தை மட்டுப்படுத்தும் சக்தி அதற்கு இருப்பதால்தான் , திருமண வைபவங்களில் நாம் முதலில் இனிப்பைச் சாப்பிடுகிறோம். மேலும் புளிப்பு, உப்புச் சுவையையும் சற்றுக் கூட்டிச் சேர்த்தால், வாயு மேலும் மட்டுப்பட்டு, தன் இருப்பிடத்துக்கே சென்று அமைதியாகிவிடும்.
    தலைக்கு க்ஷீரபலா தைலம், பலாகுடூச்யாதி தைலம், கார்ப்பாஸஸ்த்யாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வெதுவெதுப்பாகத் தடவி, உடலுக்கு வாதத்தை மட்டுப்படுத்தும் தான் வந்திரம், மஹாமாஷம், பலா அஸ்வகந்தாதி தைலங்களில் ஒன்றை வெதுவெதுப்பாகத் தடவி, வெந்நீரில் குளிப்பதாலும் நாம் வாதத்தை குடல் வரை மட்டுப்படுத்தலாம்.
    உணவில் கோதுமை, அரிசி மாவு, உளுந்து, கரும்புச்சாறு, பால் ஆகியவற்றைக் கொண்டு பலவகையான பலகாரங்களைச் சாப்பிடுவதால், குடலில் ஏற்பட்டுள்ள பித்த வாயுக்களைச் சமனப்படுத்தலாம். புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரிசியாக எடுத்துச் சாதமாகச் சாப்பிடுவது, உங்களுடைய உடல் நிலைக்கு நல்லது. உணவுத் தயாரிப்புகளில் நல்லெண்ணெயைப் பயன்படுத்துவதும் உங்களுக்கு நல்லதே. வெதுவெதுப்பான தண்ணீரைக் குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்தவும்.
    விதார்யாதிகிருதம் என்ற பெயரில் ஓர் ஆயுர்வேத மருந்து இருக்கிறது. எளிதில் செரிக்காத இந்த நெய் மருந்தைச் சுமார் 15 மி.லி. காலை, மாலை வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிட்டு வந்தால் பசித்தீயையும் குடலில் வாயுவையும் சாந்தமாக்கி உடல் வலியைப் போக்கிவிடும். சுமார் 48 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.

    (தொடரும்)


    By dn
    13 October 2012 dinamani



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1508
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வெந்நீரில் தலைக்குக் குளிக்கலாமா?

    எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771

    எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள், காலையில் பள்ளிக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டால் குளிக்காமலேயே அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுகிறாள். நேரம் கிடைத்தால் வெந்நீரில்தான் குளிப்பேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளை எப்படித் திருத்துவது?
    லக்ஷ்மி, காரைக்கால்.


    குளிப்பதால் ஏற்படும் நன்மைகளை வாக்படர் எனும் முனிவர் தான் இயற்றிய "அஷ்டாங்க ஹ்ருதயம்' எனும் ஆயுர்வேத நூலில் விவரிக்கிறார்:

    தீபனம் - வயிற்றின் உள்ளிருக்கும் ஜீர்ணகாரி அக்கினியும், ரஸம், ரக்தம் முதலிய தாதுக்களில் இருக்கும் தாத்வக்னிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, உண்ட உணவின் சத்தானது சீராக உடலின் உட்புறங்களில் சேர்க்க உதவுகிறது.

    வ்ருஷ்யம் - விந்து போஷிக்கப்பட்டு வீர்ய விருத்தி சக்தி வளரும்

    ஆயுஷ்யம் - நீடித்த ஆயுளைத் தரும்

    ஓஜோபலப்ரதம் - தாதுக்களுடைய சாரமான ஓஜோ குணம் ஓங்கும். மனோபலம், இந்திரிய பலம், தேக பலம் அதிகரிக்கும்.

    கண்டூமலச்ரமஸ்வேத, தந்த்ராத்ருட்தாஹபாப்மஜித் - தோலின் அரிப்பு, அழுக்குகள் அகலும். தேகக் களைப்பு, மனச்சோர்வு, சோம்பல்கள் நீங்கும். தோலின் நுண்ணிய துவாரங்கள் வழியே உள் மலத்தை வெளியாக்கிக் கொண்டிருக்கும் வியர்வை சுத்தமாகும். தண்ணீர் தாகம் அடங்கும். உடல் வெப்பம் தணியும். புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பது, விடியற்காலையில் குளிப்பது, ஈசுவர தியானம், ஜபம் செய்து கொண்டு ஸ்நானம் செய்தல் - அநேகவித பாபங்களையும் அகற்ற வல்லது.

    வெந்நீரினால் கழுத்துக்குக் கீழ்ப் பக்கங்களுக்கு பலமுண்டாகும். ஆனால் தலைக்கு சுடுதண்ணீரை விட்டுக் கொண்டால், கண்களுக்குக் கெடுதி உண்டாகும். அதனால் உங்கள் மகளுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வேறு ஒரு பாத்திரத்தில் வெந்நீரும் வைத்துக் கொண்டு, தலையை முன்புறமாகக் குனிய வைத்து உடலில் நீர்படாமலேயே தலையில் தண்ணீர் நிறைய விட்டு முடியைச் சுத்தம் செய்து, உலர்ந்த துணியினால் தலைமுடியைத் துவட்டி முடியிட்டு, உடனே வெந்நீரினால் குளிப்பது நல்லது. இதனால் தலையில் வெந்நீர் ஊற்றவே கூடாது. உடம்பில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவே கூடாது என்று நிச்சயம் செய்து கொள்ள வேண்டாம். குளிர்ச்சியான கப - வாத தோஷங்களின் மேலீட்டால் தலையில் ஏற்படும் நீர்க்கோர்வை, ஜலதோஷம் போன்றவையிருந்தால், உடம்புக்குப் போல தலைக்கும் வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லதாகும். முடிந்தவரை மகளுக்கு தலைக்கு நன்றாய் ஆறிய வெந்நீரையும் உபயோகிப்பதே நல்லது. மிகவும் சூடு அதிகமுள்ள வெந்நீர் தோலுக்கும் ரத்தத்திற்கும் கெடுதி செய்யும்.

    இதுபோன்ற நல்ல விஷயங்களை உங்களுடைய மகளுக்கு எடுத்துக் கூறி, தினமும் காலையில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகளை அவள் உணர்ந்துவிட்டால், தானே குளிக்க ஆரம்பித்துவிடுவாள். பொதுவாகவே தமிழகத்தில் பெண்கள், தலைக்குத் தினமும் தண்ணீர் விட்டுக் குளிப்பதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம், தலைமுடியை உலர்த்திக் காய வைத்து, தலைவாரிக் கொள்வதற்கு நேரமில்லை, தலை கனத்துக் கொண்டு சளி, தும்மல், தலைவலி ஏற்படும் என்று. இக்கருத்தை ஆயுர்வேதம் "ந அநாப்லுத்ய சிர: ஸ்நாயாத்' என்கிறது. அதாவது நோயற்றவர்கள் தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளாமல் குளிக்காதீர் என்கிறது. அதற்குக் காரணம், உடலில் மட்டும் ஊற்றிய தண்ணீர் கீழ் பகுதியில் மட்டும் சூட்டைத் தணியச் செய்கிறது. மேலே தலைக்கு உஷ்ணத்தைப் பரவச் செய்கிறது. உஷ்ணத்தின் இயல்பே மேல்நோக்கிப் பரவுவதுதான். உடல் சூடு தலையையும் அங்குள்ள மூளை, கண்கள் முதலிய புலன்களையும் தாக்கும். அதனால் எப்போதுமே தலைக்குச் சேர்த்துக் குளிப்பதே நன்மை.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன்
    dinamani : 24 October 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1509
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
    கொதித்து ஆறிய தண்ணீரும், குடல் வாயுவும்...

    37 வயதான எனது இளைய மருமகளுக்கு வாயு சம்பந்தமான தொந்தரவு விடாமல் தொற்றிக்கொண்டு, நாள்தோறும் அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வந்து தொல்லையாக உள்ளது. நெஞ்சில் எரிச்சலும், உடலில் அங்கங்கு வலியும், குத்தலும் உணர்வதாகக் கூறுகிறார். இவை மாற ஆயுர்வேத சிகிச்சை முறைகள் உள்ளதா?
    வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வரட்டணப்பள்ளி


    குடல் பகுதியில் ஸ்மானன் என்றும் அபானன் என்றும் இரு வாயுக்கள் செயல்படுகின்றன. உணவில் வாயுவைக் கூட்டும் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக் கடலை, வேர்க்கடலை, பச்சைப் பயறு, உருளைக் கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய், பரங்கிக்காய் போன்றவற்றை ஆறிய நிலையில் சாப்பிட்டால் ஜீரணத்தின் இறுதியில், அதிலிருந்து கிளம்பும் வாயுவானது, குடலில் அதிகம் சேருகிறது. இந்தக் காற்றை வெளியேற்ற உடல் முயற்சி செய்கிறபோது அது ஏப்பமாகவும், கீழ்க்காற்றாகவும் அதிக சத்தத்துடன் வெளியேறுகிறது. கூச்சம் காரணமாக, இதை அடக்க முற்பட்டால் இந்த இரு பாதைகளையும் தவிர்த்து, உடல் உட்புறக் குழாய்களின் வழியாக நகரும்போது, உடலில் குத்தல் வலியை ஏற்படுத்தும். வயிற்றிலுள்ள பித்தத்தைக் கிளறிவிட்டு, மேல் எழும்போது நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதனால், இவருடைய விஷயத்தில் மேற்குறிப்பிட்ட உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
    வாயுவைக் கீழ் நோக்கி அதன் இருப்பிடமாகிய பெருங்குடல் பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படியும் அங்கு அடங்காமற் போனால் வஸ்தி எனப்படும் தைல மற்றும் கஷாய எனிமா முறைகளைப் பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும். வெளிப்புறத்தில் வயிற்றின் மீது வெதுவெதுப்பாக நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவாகக் கலந்து, தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுத்தல் போன்ற சிகிச்சை முறைகள் நல்லது. பித்த எரிச்சலும் உள்ளதால், காய்ந்த திராட்சையை நெய்யில் வதக்கிச் சாப்பிடுவதால் பித்த-வாயு உபாதைகளைக் குடல் பகுதியிலிருந்து வெளியேற்றலாம்.
    பித்த-வாயு உபாதைகளில் நெய் ஒரு நல்ல மருந்தாகும். நெய்யில் காய்ச்சப்பட்டு தயாரிக்கப்படும் தாடிமாதிகிருதம் எனும் மருந்தை சுமார் 10-15 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை மாலையில் 15 மி.லி. வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். இனிப்புச் சுவையை சற்று உணவில் அதிகம் கூட்டிச் சேர்த்தால், பித்த-வாயுக்களை நம்மால் எளிதில் சமாளிக்க முடியும். கொதித்து ஆறிய தண்ணீரை குடிக்கப் பயன்படுத்தினால், குடல் வாயுவை மட்டுமல்ல, பித்த எரிச்சலையும் நாம் கட்டுப்படுத்திவிடலாம்.
    பித்த எரிச்சல் குறையாமலிருந்தால் அவிபத்தி எனும் சூரண மருந்தை 5-8 கிராம் எடுத்து 10-15 மி.லி. சுத்தமான தேன் குழைத்து, காலை உணவு செரித்து மதிய உணவுக்கு முன், நக்கிச் சாப்பிட, குடலில் தேங்கியுள்ள தேவையில்லாத பித்தம் வெளியேறிவிடும். கசப்பு-துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடுவதால், பித்த சீற்றத்தைக் குறைக்கலாம். வாயுவைக் குடல் பகுதியில் அதிகப்படுத்தும் என்பதால் அவற்றை மிதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
    தான்வந்திரம் எனும் தைலத்தை வெது வெதுப்பாக உடலெங்கும் தேய்த்துக் குளிப்பதால், உடல் குத்து வலியை போக்கிக் கொள்ளலாம். கடுக்காயைத் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதை உடலெங்கும் ஊற்றிக் குளித்தால் வலிநிவாரணியாகச் செயல்படும்.
    (தொடரும்)
    எஸ். சுவாமிநாதன், டீன்
    ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
    நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
    செல் : 94444 41771


    By dn
    dinamani: 28 October 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1510
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
    தசைநார்களை வலுப்படுத்த...

    என் வயது 44. உடலின் மூட்டுகளில் சிறு அடிபட்டாலோ அல்லது வேகமான அசைவுகளாலோ அடிக்கடி LIGAMENT TEAR OR STRAIN அதாவது தசைநார் கிழிதல் எனும் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. அதனால் மடக்கவோ நீட்டவோ முடிவதில்லை. மற்றபடி எலும்புகளில் எந்த வலியுமில்லை. முன்பிருந்த ஆஸ்த்துமா தற்போது தணிந்துள்ளது. பொட்டாசியம் குறைவாக இருப்பதால் ஆங்கில மருந்து சாப்பிடுகிறேன். ரத்தக் கொதிப்பு அடங்கவும் மாத்திரை சாப்பிடுகிறேன். இந்தப் பிரச்னை தீர வழி உள்ளதா?
    ஜி.பி.பாலகுரு, கோரிமேடு, புதுச்சேரி.


    தசை நார்களை வலுப்படுத்தும் நெய்ப்பு, கனம், வழுவழுப்பு, இறுக்கம் போன்ற குணங்களைக் கொண்ட உணவு வகைகள் சரிவர செரிமானமாகாமல் வெளியேறினால், நீங்கள் குறிப்பிடும் தசை நார் கிழிதல் எனும் உபாதை ஏற்படலாம். இவற்றை நன்றாக வயிற்றில் செரிக்க வைத்து உடல் உட்புறப் பகுதிகளில் சேர்க்கும் திறன் கொண்ட அமிலச் சுரப்பும், பசியும் ஏற்படும் வகையில் நீங்கள் உணவை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலைத் துவையலை சூடான சாதத்துடன் கலந்து, சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து, நெல்லிக்காய்த் தயிர்ப் பச்சடியில் தோய்த்து காலை உணவாகச் சாப்பிட்டால், வயிற்றிலுள்ள கதகதப்பை நாம் நிரந்தரமாகச் சம்பாதித்துக் கொள்ளலாம். அமிலச் சுரப்பையும், பசியையும் நன்றாகத் தூண்டிவிடும் சித்ரான்னம் எனப்படும் ஜாதி நார்த்தை, கிச்சிலி நார்த்தை, துறிஞ்சி, கிடாரங்காய், கொளிஞ்சிக்காய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் சாற்றுடன் சாதத்தைப் பிசைந்து காலை உணவாகச் சாப்பிட்டால், அதிலுள்ள தனிப் புளிப்பும், கசப்பும் கலந்த புளிப்பும் மேல் வயிற்றில் உள்ள ஜீரண கோசத்தையும், நாவிலுள்ள ருசி கோளங்களையும் சுறுசுறுப்படையச் செய்து சீக்கிரம் உணவைச் செரிக்க உதவுகிறது. கல்லீரலும் சுறுசுறுப்படைந்து ஜீரணத்தைத் தொடர்ந்து சத்து உடலில் சேருமளவு பணியாற்றுகிறது.
    இப்படியாக உணவுப் பாதை நெடுக, வழி சுத்தமாகி, முன் குறிப்பிட்ட குணங்களை வரவேற்று, தன்னை வளர்த்துக் கொள்ளும் வகையில் தசை நார்கள் வலுப்பெற்றுவிடும். அடிபட்டாலோ, வேகமான அசைவுகளாலோ ஏற்படும் சத்துச் செலவை, இந்த குணங்களின் வாயிலாகச் செலவிடும்போது, தசை நார்களின் தேய்மானத்தைத் தடுத்துவிடலாம். எதையும் தன்னகத்தே சேர்த்துக் கொள்ளும் வகையில் தசை நார்களின் செயல்திறன் வளர்ந்துவிட்டால், உடல் வெளிப்புற சிகிச்சைகளின் மூலம் அவற்றை மேலும் வலுப்படுத்தலாம்.
    மஹாமாஷ தைலம், பலாஅஸ்வகந்தாதி குழம்பு, வாதமர்த்தனம் குழம்பு போன்றவற்றில் ஒன்றிரண்டைக் கலந்து வெதுவெதுப்பாக தசைநார்ப் பகுதிகளில் துணியால் முக்கி கட்டி வைத்திருந்து அரை, முக்கால் மணி நேரம் கழித்து கட்டவிழ்த்து, துணியால் துடைத்துவிடும் சிகிச்சையும் நல்லதே. குடிப்பதற்கும், குளிப்பதற்கும் வெதுவெதுப்பான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
    செரிமானம் நன்றாக ஏற்படும் வகையில் அமைந்துவிட்டால், உணவில் காரம், துவர்ப்பு, கசப்புச் சுவை ஆகியவற்றைக் குறைத்து இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவற்றைச் சற்றுக் கூட்டிக் கொள்ளவும். ரத்தக் கொதிப்பு உபாதை இருப்பதால், சாதாரண உப்புக்குப் பதிலாக , இந்துப்பு உணவில் சேர்க்கவும்., பால், நெய், தயிர், வெண்ணெய், இனிப்பு மாதுளை, வாழைப்பழம், திராட்சை, அரிசி, கோதுமை, உளுந்து இவை உணவுக்கு ஏற்றவை. அதிக உடற்பயிற்சி செய்வதையும், இரவில் கண் விழிப்பதையும் தவிர்க்கவும்.
    மேற்குறிப்பிட்ட உணவும், சிகிச்சை முறையும் தங்களுக்கு நிச்சயம் உதவிடும். ஆனால் அதுவே பூரண சிகிச்சையாக தீர்மானிக்க முடியாது. தைலதாரா எனும் உடல் முழுவதும் ஊற்றப்படும் வெதுவெதுப்பான மூலிகைத் தைல முறையும், தசை நார்களை வலுப்படுத்தும் நவரக் கிழி எனும் தேய்ப்பு முறையும் மிகவும் உபயோககரமான சிகிச்சைகளாகும். ஆயுர்வேத மருத்துவமனைகளில் இவை சிறப்பாக செய்யப்படுகின்றன. ப்ருகத்சாகலாதி கிருதம் எனும் ஆயுர்வேத மூலிகை மருந்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார்
    10 - 15 மில்லி லிட்டர், தொடர்ந்து 48 நாட்களுக்குச் சாப்பிட்டு வரவும்.

    (தொடரும்)

    எஸ். சுவாமிநாதன், டீன்
    ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
    நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
    செல் : 94444 41771


    By Sasikumar Balakrishnan
    dinamani : 03 November 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter