Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1591
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வெயிலின் உஷ்ணத்தை போக்கும் வெங்காயம்!

    வெங்காயத்தை சுவைக்காகவும், மணத்துக்காகவும் உபயோகிக்கிறோம். வெங்காயத்தில் சுண்ணாம்புச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்த விருத்திக்கும், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. ஜலதோஷம், மூல நோய், அஜீரணக் கோளாறு, சர்க்கரை நோய் முதலிய நோய்களுக்கும் அருமருந்து.
    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி, உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து தயிருடன் கலந்து சாப்பிடலாம்.
    * பழைய சாதத்தை மிக்ஸியில் அரையுங்கள். அதில், உப்பு, மோர் விட்டு கரைத்து, கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு தினமும் காலையில் 2 டம்ளர் குடித்தால் கோடையிலும் உடம்பு குளு குளுவென இருக்கும்.


    Dr Vikatan



    Sponsored Links
    jv_66, datchu and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1592
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாயுத் தொல்லையும் வயிற்று உபாதையும்!

    என் வயது 72. மதிய உணவு சாப்பிட்டு 3 மணி நேரம் வரை பிரச்னை ஏதுமில்லை. மாலை 4 மணிக்கு மேல் அடி வயிறு கனத்து மேல் வயிறும் முட்டி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மலம் கழித்தல் தினமும் குறித்த நேரத்தில் நிகழ்வதில்லை. நினைத்த நேரத்தில் 1 முதல் 4 முறை கழிக்கின்றேன். இந்த வயிற்று உபாதை என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. உடல் வலுவற்றுப் போகிறது. பல வருடங்களாக அவதிப்படும் எனக்கு இந்த உபாதை தீருமா?
    வீ.ஆர்.சுப்பிரமணியன், திருப்பூர்.


    "வாதக் கிரணி' என்று ஓர் உபாதை இருக்கிறது. உண்ட உணவு வயிற்றில் செரிமானத்திலிருக்கும் போதும், சீரணித்த நிலையிலும் வயிற்றில் வாயுவின் தேக்கம் அதிகமாகி பொருமல் ஏற்படும். உணவு உண்டதும் சுகமாகத் தோன்றும். வெகு நேரத்துக்குப் பின் மிகவும் சிரமத்துடன் திரவம் அல்லது வறட்சியாகச் சிறிதளவு மலம் வெளியாகும். சத்தத்துடன் நுரையாகவும், அடிக்கடியும் மலம் போகலாம். ஜாடராக்னி எனப்படும் பசித்தீயின் பலக் குறைவினை உண்டாக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால், இந்த உபாதை ஏற்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

    இது போன்ற நிலையில் உங்களுக்குக் காலை உணவாக கடுக்காய், கண்டந்திப்பிலி, பில்வப் பிஞ்சு, சிறிது பச்சரிசி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி குடித்தால், அது வாயுவைக் கீழ் நோக்கச் செய்யும். ஜாடராக்னி எனும் பசித் தீயில் உங்களுக்கு குறை ஏதும் தென்படவில்லை. ஆனால் வயிற்றில் வாத தோஷத்தின் சீற்றமும், பித்த தோஷத்தின் நெய்ப்பும், திரவமும் அதோடு கூடியிருப்பதாகவே தெரிகிறது. குறித்த நேரத்தில் மலம் நெகிழாமல் இருப்பதற்கு வாயு காரணமாகவும், 3 -4 முறை மலம் கழிவதற்குப் பித்த தோஷத்தின் கலப்பே காரணமாகக் குறிப்பிடலாம். திப்பிலி, வாய்விடங்கம், திரிபலை இவற்றின் கஷாயத்தால் பேதி செய்வித்து, நன்றாகப் பேதியானவுடன் வாயுவைக் கட்டுப்படுத்துவதாகவும், பசியைத் தூண்டுவதாகவுமான பொருட்களைச் சேர்த்துத் தயாரித்த கஞ்சியைப் பருகுவதால், உங்கள் உபாதையின் தீவிரத்தைக் குறைக்க முடியும். ஹிங்குவசாதி எனும் ஆயுர்வேத சூரண மருந்தை சுமார் 1/2 - 1 ஸ்பூன் அதாவது 5 கிராம் வரை சூடான பச்சரிசிக் கஞ்சியுடன் கலந்து காலையில் பருகினால், வாயு மட்டுப்படுவதுடன், பசியும் சீரான இடைவேளையில் நன்றாக எடுக்கும்.

    மப்பு நிலையில்லாத நல்ல பசியும் இருந்து நுரை, வழுவழுப்பு, வலி, தடை ஆகியவற்றுடன் அடிக்கடி மிகக் குறைந்த அளவு மலத்துடனோ அல்லது மலமின்றியோ முக்கலுடன் பேதியானால் வெல்லம் கலந்த சுக்கை தயிர், நல்லெண்ணெய், நெய், பால் ஆகியவற்றுடன் கலந்து பருக வேண்டும். அல்லது இலந்தைப் பழத்தை வேக வைத்து வெல்லமும் எண்ணெய்யும் கலந்து உண்ண வேண்டும். மாதுளம் பழத்தோலைக் காய வைத்து இடித்துத் துணியை வைத்து சலித்து 1/2 - 1 ஸ்பூன் அளவில் எடுத்து, 1/2 ஸ்பூன் சுக்குப் பொடியுடன் மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால், நீங்கள் குறிப்பிடும் உபாதை நன்கு குறைந்துவிடும்.

    சமையலறையிலுள்ள மிளகு, மல்லி, ஜீரகம், புளி, மாதுளம்பழத் தோல், ஓமம் ஆகியவற்றை அரைத்து இவற்றுடன் 6 மடங்கு பில்வப் பழச்சத்து கலந்து பிசைந்து தயிர், பயத்தங்கஞ்சி,வெல்லம், நெய், நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு, நம் முன்னோர் பசியை நன்றாகத் தூண்டிவிட்டு, வயிற்றிலுள்ள மப்பு நிலையைப் போக்கி, நொதநொதவென்று போகும் மலத்தை இறுக்கி, ருசியைத் தூண்டி, வயிற்றுக் கடுப்பைப் போக்கிக் கொண்டனர். இது போன்றதொரு உணவுத் திட்டம் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். ஆனால் அதைச் சாத்யப்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.

    வயிற்றில் வாயுவின் தடையிருப்பதாகத் தெரிவதால், பில்வப் பிஞ்சு, திப்பிலி, சுக்கு, வெல்லம், நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து அரைத்து, லேஹ்யமாக நக்கிச் சாப்பிட்டால், குலையுடன் வயிற்றுக் கடுப்பு உள்ள உங்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும்.

    மலத்தடை, அபான வாயுத்தடை, அதிக வலி, கடுப்பு, ரத்தம் கலந்தும், வழுவழுப்புடனும் மலம் போதல், தாகம் போன்ற உபாதைகள் தென்பட்டால், பசு நெய் 10 மி.லி., நல்லெண்ணெய் 5 மி.லி. கலந்து சாப்பிட்டு, அதன் மேல் பில்வப் பிஞ்சு 5 கிராம், 1 கிளாஸ் (300 மி.லி.) பாலுடன் கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடிப்பது மிகவும் நல்லது. சந்த்ரசூராதி என்ற ஆயுர்வேத கஷாய மருந்து சாப்பிட, வயிற்று உபாதைகளான வாயுத் தொல்லை மற்றும் நொதநொதவென்று போகும் மலப்பிரச்னைக்கு நல்ல மருந்தாகும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani 03 August 2013


    jv_66, sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1593
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கடுக்காய் ஒன்றே போதுமே!

    பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
    ஸ்ரீதர், கொச்சி.


    மருந்துப் பொருட்களில் மிகவும் உயர்ந்த ஒரு பொருள் கடுக்காய். கடுக்காயில் மருத்துவ குணங்களுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய குணங்களும் நிரம்பியுள்ளன.

    சாதாரணமான இரண்டு கடுக்காய்களை அதனுள்ளே இருக்கக் கூடிய கொட்டையை நீக்கி, தோல் சதையுடன் கூடிய பகுதிக்குச் சம அளவு கரும்பு வெல்லம் கலந்து இரண்டையும் பற்களால் கடித்து தினமும் காலையில் உணவுக்கு முன் ஒரு வேளை மட்டும் சுவைத்துச் சாப்பிடலாம். வெல்லத்துக்குப் பதிலாக தேனும் கலந்து சாப்பிடலாம். கடுக்காயின் பாதி அளவு சுக்கு, கடுக்காயின் கால் பங்கு திப்பிலி, கடுக்காயின் கால் பங்கு இந்துப்பு என்ற அளவிலும் சாப்பிடலாம். இதில் சுக்கு - திப்பிலி - இந்துப்பு மூன்றையும் சூரணம் செய்து, சூரணம் செய்யாத கடுக்காய்த் தோலுடன் ஒன்றாகக் கலந்து கடித்துச் சாப்பிட்டால் பிணியின்றி இன்பத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். பருவ காலங்களுக்குத் தகுந்தபடியும் மேற்குறிப்பிட்ட மருந்து சரக்குகளைக் கடுக்காயுடன் கலந்து சாப்பிட்டாலும் மேலும் பல நன்மைகளைப் பெறலாம்.

    வாதம் எனும் உடல் தோஷம் மழைக்காலத்தில் இயற்கையாகவே கூடுவதால், காலையில் எழும்போது தசைப் பிடிப்பு, மூட்டு வலி, பூட்டுகளில் வீக்கம் வலி போன்றவை அதிகம் தென்படும். இரண்டு கடுக்காய் தோலுடன் இந்துப்பு சேர்த்துச் சாப்பிட்டால், இந்த உபாதைகள் நன்கு குறையும்.

    பித்தம் எனும் தோஷம் மழைக்காலத்துக்கு அடுத்த பருவகாலமாகிய இலையுதிர்க் காலத்தில் உடலில் கூடுகிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, வாய்ப்புண், கண்ணெரிச்சல், சிறுநீர் எரிச்சல், வியர்வை கூடுதல் போன்ற உபாதைகள் கூடும். பழுப்புச் சர்க்கரையுடன் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால், இந்த பித்த தோஷம் அமைதியாகிவிடும்.

    முன் பனிக் காலத்தில் கபதோஷம் வளர்ந்து, தலை பாரம், தலைவலி, உடல் கனம், பசி மந்தம் போன்றவை தோன்றும். சுக்குப் பொடியுடன் கடுக்காய்த் தோல் சாப்பிட்டால் எல்லா உபாதைகளையும் தவிர்க்கலாம். கபம் உறையும். கடும்பனிக் காலத்தில் திப்பிலி பொடியுடனும், நெஞ்சிலிருந்து கபம் உருகி வயிற்றில் பசியைக் குறைக்கும், வசந்தகாலத்தில் தேனுடனும், கபம் வறண்டு போகும் கடும் கோடையில் வெல்லத்துடனும் கடுக்காய்த் தோலைச் சாப்பிடுவது உடலைப் பிணியின்றிக் காக்கும். சிறந்த பயனைத் தரும் என்று பிருந்த மாதவர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இதில் உணவுக் கட்டுப்பாடு என்றும் எதுவும் கிடையாது. தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள், ஜீரண உறுப்புகளைச் சார்ந்த நோய்கள் ஒன்றும் அணுகாது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

    துன்பத்தைத் தரும் சில பிணிகளாகிய பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்ற அஜீரண நோய் நிலைகளில் கடுக்காய் தோல் 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு வகைக்கு 3 கிராம் சேர்த்துச் சாப்பிட உகந்தது. இதில் திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாய் இடித்துத் துணியால் சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தண்ணீருடனோ, வெறும் தேனுடன் குழைத்தோ சாப்பிடலாம். வெறும் வெந்நீருடனும் சாப்பிடலாம்.

    உடலில் பலம் வெகு நீண்ட காலம் குன்றாமல் நிலைத்திருக்க, சுமார் 2 கிராம் கடுக்காய்த் தோல் சிறு சிறு துண்டங்களாக்கி சுமார் 15 மி.லி. அளவு பசு நெய்யுடன் நன்றாகப் பொரித்து ஆறிய பிறகு அந்தக் கடுக்காய்த் தோலை கடித்துச் சாப்பிட்டு, அந்த நெய்யையும் உடனே குடித்தால் போதுமானது.

    கடுக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அகஸ்திய ரஸாயன லேஹ்யம், தசமூலஹரீதகீ லேஹ்யம், அபயாமிருத ரஸாயனம், திரிபலா சூரணம் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தாலும், நீங்கள் கேட்ட கேள்விக்கான சிறந்த விடையாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை- 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani 10 August 2013


    jv_66, sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1594
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கோபத்தால் வரும் பிரச்சனைகள்!

    எனக்கு வயது 32. உடம்பில் எப்போதும் மந்த நிலை, மூட்டு வலி, மலச்சிக்கல், நரம்புத் தளர்ச்சி, உடல் சூடு, தலைமுடி, தாடி முடி முழுவதும் வெண்மை, படபடப்பு, கிழத்தோற்றம், காதுகளில் இரைச்சல், இரவில் தூக்கமின்மை, எதிலும் முழு மனதோடு ஈடுபட முடியாத நிலைமை போன்ற உபாதைகளால் துன்புறுகிறேன். இவற்றிலிருந்து விடுபட ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?
    ஆர்.இளங்கோவன், எடப்பாடி.


    பித்தம் மற்றும் வாயு தோஷங்களின் ஆதிக்கம் உங்கள் உடலில் தென்படுவதாகத் தோன்றுகிறது. மனதில் எழும் கோப தாபங்களால் சீற்றமுறும் பித்தம் உடல் சூட்டை அதிகப்படுத்தும். தலைமுடி, தாடி முடிகள் இளம் வயதிலேயே நரைத்துக் கிழத் தோற்றத்துக்குக் காரணமாகிவிடும். அதிகமான அளவில் உடல் அசைவுகளுடன் செய்யப்படும் வேலை, உணவில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் வகையறாக்களாகிய சுண்டல், வேர்க்கடலை, கடலைப் பருப்பு, கொண்டக் கடலை போன்றவற்றை சூடு ஆறிப் போன நிலையில் சாப்பிடுதல், குளிர்ந்த நீரைக் குடித்தல், குளித்தல் போன்றவற்றால் நாடி நரம்புகள் கலகலத்து நரம்புத்தளர்ச்சி, மூட்டுவலி, மலச்சிக்கல், படபடப்பு ஆகிய உபாதைகளை ஏற்படுத்திவிடும். இதனால் ஒருவித மந்தநிலையும், எதிலும் மனம் ஈடுபட முடியாத நிலையும், இரவில் தூக்கமின்மையும் ஏற்படும். நரம்புகளில் இந்த வாயுவின் தாக்கம் அதிகம் உணரப்படுவதால், காதுகளில் இரைச்சலை ஏற்படுத்தும். இந்த இரு தோஷங்களாகிய பித்த - வாயுவின் சீற்றம் மற்றொரு தோஷமாகிய கபத்தினுடைய சாதாரண அளவிலிருந்து கீழிறங்கச் செய்துவிடும் தறுவாயில், உடல் மெலிந்து, சுறுசுறுப்பின்மை, எந்தச் செயலிலும் நிதானமற்றதன்மையை ஏற்படுத்தும். உங்களைப் போன்றுள்ளவர்களின் நாடித் துடிப்பைப் பிடித்துப் பார்த்தால், துரித கதியாகவும், சமமில்லாத கதியாகவும் தென்படும்.

    நெருப்பைப் போன்ற பித்தத்தை,வாயுவின் சேர்க்கையால் உடல் தாபம் கூடி, எரித்துவிடும் நிலைக்குக் கொண்டு வந்துவிடுமென்பதால், நீங்கள் விரைவாகப் பித்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். பசி நன்றாக எடுக்கக் கூடியவராக இருந்தால், த்ரிவிருத் லேஹ்யம் எனும் ஆயுர்வேத மருந்தை, மதிய வேளையில் உணவுக்குச் சுமார் 2 மணிநேரம் முன்பாக, 15 -20 கிராம் வரை சாப்பிட்டு நீர் பேதியாக வெளியேற்றி, மாலை வேளையில் சிறிது புழுங்கலரிசியால் தயாரிக்கப்பட்ட கஞ்சித் தண்ணீரை, சிட்டிகை இந்துப்பு கலந்து 2 -3 டம்ளர் (சுமார் 900 மி.லி.) வரை பருகுவது நல்லது. வாரத்தில் ஒருமுறை மட்டும் பேதி செய்து கொள்ளலாம். மூன்று நான்கு வாரங்களில்,தேவையற்ற பித்தம் வெளியேறிவிடும். அதன் பிறகு, பித்த, வாயுக்களை அடக்கக் கூடிய இனிப்பை முக்கிய உணவாகக் கொள்ளுதல் அவசியமாகும். சர்க்கரைப் பொங்கல், பாயசம், பால், நெய், வெண்ணெய், அதிரசம், லட்டு போன்றவை சற்று அதிகம் சேர்த்துக் கொண்டால், பித்த வாயுக்களைக் கட்டுப்படுத்தி, கபத்தின் வளர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடலுக்கு வனப்பைத் தரும்.

    சந்தனாதி எனும் ஆயுர்வேத தைலத்தைத் தலைக்குத் தேய்த்து 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு, காலையில் குளித்து வந்தால், உடலிலுள்ள பித்த வாயுக்கள் மட்டுப்படும். விதார்யாதிகிருதம், அப்ரக பஸ்மம், திராக்ஷôதி கஷாயம் போன்ற தரமான மருந்துகளை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் நல்ல மாற்றங்கள் தென்படத் தொடங்கும்.

    காரமான சுவை கொண்ட உணவு வகைகள் அனைத்தும் உங்களுக்கு பித்த வாயுவைத் தூண்டிவிடும் என்பதால், உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்வது நலம். மனதில் எழும் கோப -தாபங்களுக்குத்தக்க போக்கிடம் காட்டி, மனதை அமைதியாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    17 August 2013 dinamani


    jv_66, sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1595
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புண்களை ஆற்றும் தேன்!

    ஆப்பிரிக்கா நாட்டில் அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்ட பின் காயம் ஆறுவதற்காக சுத்தமான தேனைத் தடவுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தேனைச் சுவைக்க எறும்பு வருமாகையால் கசப்பான வேறொரு திரவத்தைத் தேனுடன் கலந்து காயம் உள்ள இடத்தில் தடவப்படுகிறது. நாமும் கூட தேனுடன் விளக்கெண்ணெய் கலந்து பூசினால் காயங்கள் விரைவில் ஆறுமல்லவா?
    எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.


    அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு போடப்பட்ட தையல் மீது சுத்தமான தேனைத் தடவினால், அப்பகுதியை விரைவில் சுத்தம் செய்து, தாது அணுக்களை ஒன்று சேர்த்து வளர்த்து புண்ணை ஆற்றிவிடும். செயலில் குளுமையானது. வறட்சியான குணம் கொண்டது. அதி நுட்பமான குழாய்களுக்குள்ளும், தாதுகளுக்குள்ளும் ஊடுருவிப் பாயும் தன்மையுடையது. மேல் பூச்சு செய்வதால், புண் ஆறிய பிறகு மேனியின் தோல் நிர்மலமான அழகான நிறம் பெற்றுவிடும்.

    சூடான வீர்யமும், தாதுக்களில் சீக்கிரமே ஊடுருவிச் செல்லும் தன்மையுடையதுமான விளக்கெண்ணெய்யைத் தேனுடன் கலந்தால் எதிரும் புதிருமான வீர்யம் மற்றும் பிசுபிசுப்பு, வறட்சி ஆகிய குணங்களின் சேர்க்கை சரியாகாது. விளக்கெண்ணெய்யை மட்டுமே தனியாக தோலில் பூசினால் தோல் வறட்சியை, உள்ளங்கால் வெடிப்புகளைப் போக்கும். தேனும் சேரும்போது தன்மை மாறக்கூடும்.

    இதற்கு மாற்றாக, வெண்காரப் பொறியை நன்றாகப் பொடித்து, சதும்ப தேன் சேர்த்து, அரைத்துச் சீசாவில் பத்திரப்படுத்தி, அதிக பித்தம், உஷ்ணம், கார உணவு, சரியானபடி தயாரிக்கப்படாத அல்லது ஒத்துக் கொள்ளாத மருந்து சாப்பிட்டது முதலியவற்றினால் ஏற்படும் வாய், நாக்கு, தொண்டைப் புண் மேலே தடவி வந்தால் விரைவில் குணமாகும். ஆசனவாயில் குடல் புழுக்களால், மூல உபத்திரவத்தினால், வேக்காடுகளினால் ஏற்படும் புண்ணையும் மேல் பூச்சினால் குணப்படுத்தும்.

    வெளி அங்கங்களில் உண்டாகும் வெட்டுக் காயங்கள், தானாக உண்டாகும் பெரிய சிரங்குக் கட்டிகள், அழுகல்கள், முறிவுகள் முதலியவற்றிலும் தேன் மற்றும், வெண்காரப் பொறியின் கூட்டான வெளிப் பிரயோகத்தினால் புண்களை முதலில் சுத்தம் செய்து தாதுக்களைக் கூட வைத்து, ஆற்றிவிடும்.

    அதுபோலவே தேனும் நெய்யும் கலந்து பூசினால் காயம் விரைவில் ஆறிவிடும் என்று ஸýஸ்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் தான் இயற்றிய ஸýஸ்ருத சம்ஹிதையில் குறிப்பிடுகிறார். இதில் தேன் சற்று தூக்கலாக இருத்தல் நலம். இவ்விரண்டுக்குமே எறும்பு ஈர்க்கப்படுவதால், மூலிகை நெய் மருந்தாகிய திக்தகம் அல்லது மஹா திக்தகம் பயன்படுத்தலாம். நல்ல கசப்பாக இருப்பதால் எறும்பு விரைவில் அருகே வந்து கடிக்காது. இம்மருந்தில் நெய்க்குப் பதிலாக கசப்பு நெய்யாக மாற்றுவதால், புண் விரைவில் குணமாகி, காயம் குணமாகிவிடும்.

    திரிபலை எனும் கடுக்காய் நெல்லிக்காய், தான்றிக்காய் பொடித்து, தேன் குழைத்து வெட்டுக் காயம், அறுவைச் சிகிச்சைக் காயம் மீது போட விரைவில் குணமாகிவிடும்.

    அறுவை சிகிச்சையின் போது தையல் போட்ட இடத்தின் மீது, திக்தகம் கஷாயத்தை தாரையாக ஊற்றி, பஞ்சினால் துடைத்து எடுத்து, அவ்விடம் ஈரப்பசையாக இல்லாததாக்கிய பின் தேன் தடவிட விரைவில் குணமாகும்.

    (தொடரும்)


    By Venkatesan Sr
    dinamani 25 aug 2013


    jv_66, sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1596
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

    கரும்புள்ளிகளா? கவலை வேண்டாம்!

    எனக்கு அதிக வருடங்களாக குளிர் காலங்கள் தவிர மற்ற காலங்களில் கை, கால் மற்றும் உடம்பு பகுதியில் சிறு சிறு கொப்புளங்களாகத் தோன்றி உள்ளில் நீரே இல்லாமல் பழுத்துக் காய்ந்துவிடுகிறது. பிறகு அந்த இடத்தில் கரும்புள்ளிகளாகத் தோன்றி அசிங்கப்படுத்துகிறது. ஆனால் அரிப்போ, வலியோ கிடையாது. அம்மை தழும்புபோல் கரும்புள்ளியாகத் தோன்றி வருடக்கணக்கில் மறையாமல் அசிங்கப்படுத்தும் இந்த உபாதைக்கு ஆயுர்வேதத்தின் மூலம் தீர்வு உண்டா?
    எஸ்.ஆர்.சேதுராமன், பிச்சத்தான்பட்டி.


    வெளிநோய்களுக்கு ஆதாரங்களாக இருக்கக் கூடியவை தோலும் மற்றும் ஆறு உட்புற தாதுக்களாகிய ரத்தம், மாம்ஸம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, விந்துவும்தான். உடலில் நோய் தோன்றுவதற்கு மூன்று பாதைகள் இருக்கின்றன. அவை வெளிரோக மார்க்கம், உள்ரோக மார்க்கம், மத்திமரோக மார்க்கம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வெளி ரோக மார்க்கத்தின் உபாதையில் தோலுக்கும், உட்புறத் தாதுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், உபாதை தாதுக்களிலிருந்து தொடங்கி தோலில் வந்து முடிவதாகத் தெரிகிறது. தாதுக்கள் ஒருபோதும் தாமாகவே கெடுவதில்லை. அவற்றைக் கெடுப்பது மூன்று தோஷங்களாகிய வாத - பித்த - கபங்கள்தான். தன்னுடைய சொந்த அளவிலிருந்து அவை ஏற்றமடைந்தாலோ, குறைந்தாலோ, தாதுக்களைத் தாக்கி நோய்களை ஏற்படுத்துகின்றன. கொப்பளங்களில் நீரில்லாததன்மையின் மூலம் கபதோஷம் குறைந்து, பழுத்துக் காய்ந்து போவது பித்தத்தின் சீற்றத்தையும், கரும்புள்ளிகளாக மாறுவது வாயுவின் தன்மையாலும் ஏற்படுவதாகத் தோன்றுகிறது. ஆக உங்களுக்கு ரத்த தாதுவில் பித்த தோஷத்தின் சேர்க்கை கூடி, கபதோஷத்தைக் குறைப்பதாலும், ரத்தம் சீற்றம் பெற்ற பித்த தோஷத்தை தோலில் கொண்டு சேர்ப்பதாலும் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தோன்றக் கூடும்.
    அதிக அளவில் உணவில் உப்பு ஊறுகாய், காரம் நிறைந்த மிளகாய்த்தூள், புளிப்பு ஆகியவற்றைச் சேர்த்தால் ரத்தத்தில் பித்தத்தினுடைய வரவு கூடி விடும். வாயு இயற்கையாகவே தோலில் குடி கொண்டிருப்பதால், பித்தத்தில் ஏற்படும் ரத்தக் காந்தலை வரவேற்று ஏற்றுக் கொண்டு வேனல் கொப்புளங்களை ஏற்படுத்துகிறது. அதனால் நீங்கள் உணவில் உப்பு, புளி, காரம் போன்ற சுவைகளைக் குறைத்து கசப்பும், துவர்ப்பும் நிறைந்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் தந்து சாப்பிட்டு வரவும். புலால் உணவு வகைகளை அறவே தவிர்க்கவும். பகலில் படுத்து உறங்கக் கூடாது.
    ரத்த தாதுவில் ஏற்பட்டுள்ள பித்த சீற்றத்தை அவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியாது. காரணம் ரத்தமும், பித்தமும் நண்பர்களாக இருப்பதால்தான். இந்த விஷயத்தில் நண்பர்களைப் பிரித்த பாவம் நம்மை வந்து சேர்ந்தாலும் பரவாயில்லை. அவற்றைப் பிரித்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால், நீங்கள் காலை, மாலை இருவேளைகளிலும் திக்தகம், மஹாதிக்தகம், சோணிதாமிர்தம், ஜீவந்த்யாதி கஷாயம், நிம்பாதி போன்ற கஷாய மருந்துகளில் ஒன்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் சுமார் 48 நாட்கள் சாப்பிடுவது நல்லது. இவை ரத்தத்தைச் சுத்தம் செய்து, பித்தத்தைப் பிரித்து, குடல் வழியாக வெளியேற்றச் செய்யும் தன்மையுடையவை. ரத்தம் சுத்தமாகத் தொடங்கிவிட்டால் தோலில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகள் வாடி மறையத் தொடங்கும். உட்புற சிகிச்சை மட்டும் இதில் போதாது என்பதால், வெளிப்புறம் தேய்த்துக் குளிக்கக் கூடிய, நால் பாமராதி, திருசைவல்யாதி, பிண்ட தைலம், நிம்பாதி போன்ற தைலங்களில் ஒன்றை மருத்துவரின் கூற்றையறிந்து காலைக் குளியலுக்கு முன் உடலெங்கும் தேய்த்து 1/2 -3/4 மணி நேரம் ஊறிய பிறகு குளித்து வரவும். அரிசி மாவை, அரிசி வடித்த கஞ்சியுடன் குழைத்து எண்ணைய்ப் பிசுக்கை அகற்றப் பயன்படுத்தவும்.
    இப்படி உணவில் கட்டுப்பாட்டுடன், மருந்துகளைச் சாப்பிட்டு வந்தால்தான் உங்களால் இந்த உபாதைக்கான தீர்வை அடைய முடியும்.
    -தொடரும்


    எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    by dn dinamani 03 sep 2013


    Last edited by datchu; 7th Apr 2014 at 04:57 PM.
    jv_66, sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1597
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நுரையீரல் கிருமி நீங்க!

    எனக்கு வயது 65. நுரையீரலில் கிருமிகள் அதிகமாக உள்ளன என்று மருத்துவர்கள் கூறி ஒரு நாளைக்கு 13 மாத்திரைகள் சாப்பிடக் கூறினார்கள். என்னால் சாப்பிட இயலவில்லை. அடிக்கடி தொண்டையில் கபம் சேர்கிறது. சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், காசநோய் தொடர்பாக உண்ண வேண்டிய உணவுகள் எவை? வேகமாக நடந்தால் மூச்சுத் திணறல், உடல் பலவீனம், எடைக்குறைவு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. இவை குணமாக மருந்துகள் உள்ளனவா?
    எஸ்.கண்ணன், கும்பகோணம்.


    "சதாபத்யம்' அதாவது தொடர்ந்து உண்பதற்கேற்றவை என்று சில உணவுப் பொருட்களை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. சிவந்த காரரசி, கோதுமை, யவை எனும் வாற்கோதுமை, அறுபதாங்குறுவை அரிசி, ஆரைக்கீரை, கீரிப்பாலை, இளம் முள்ளங்கி, வாஸ்துக் கீரை, கடுக்காய், நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், பச்சைப் பயறு, சர்க்கரை, நெய், மழைத்தண்ணீர், பால், தேன், மாதுளை, இந்துப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து உண்ணலாம். உங்களுக்கு சர்க்கரை உபாதை இருப்பதால், இவற்றில் திராட்சை, சர்க்கரை, நெய், தேன் ஆகியவற்றை முடிந்தவரை குறைக்கவும். மற்றவற்றைச் சாப்பிடலாம்.

    அடிக்கடி தொண்டையில் கபம் சேர்வதாகவும், காசநோய் மற்றும் நுரையீரல் கிருமிகள் உள்ளதாகவும் கூறியுள்ளீர்கள். காரம், கசப்பு, துவர்ப்பு ஆகியவை கொண்ட உணவு, கொள்ளு, துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப் பயறு ஆகியவை வகைக்கு ஒரு பிடி, சுக்கு மிளகு, திப்பிலி வகைக்கு 2 கிராம் வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சி வடிகட்டி சிட்டிகை, இந்துப்புடன் காலை உணவாகச் சாப்பிடுவது நலம். கோரைக் கிழங்கும், சுக்கும் வகைக்கு 8 கிராம் வீதம் 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டரானதும் வடி கட்டி, காலையில் குடித்த கஞ்சிக்குப் பிறகு சிறிதும், மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் பிறகு சிறிதாகவும், பிரித்துக் குடித்தால், நீங்கள் குறிப்பிடும் உபாதை குறைவதுடன், சர்க்கரையின் அளவும் கூடாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் குறையும்.

    3-4 சொட்டுகள் குங்குமாதி தைலம் அல்லது அணு தைலத்தையோ காலை, இரவு உணவுக்குப் பிறகு மூக்கினுள் விட்டு உறிஞ்சித் துப்பிவிடுவதால், தொண்டையில் சேரும் கபம் குறைய உதவும். கபத்தினுடைய அதிக அளவின் சேர்க்கையை இந்த சிகிச்சை முறை வெளிப்படுத்துவதால், மூச்சுக் குழாய் நுரையீரல் பகுதி சுத்தமடைந்து பிராண வாயு எளிதாக உள்ளே செல்லும். மூச்சுத் திணறல் உபாதையைக் குறைக்கவும் உதவும்.

    தலைக்குச் சந்தனாதி, க்ஷீரபலா, திரிபலாதி போன்ற தைலங்களில் ஒன்றைத் தேய்த்துக் குளித்து வந்தால், இரத்த அழுத்த உபாதையைக் குறைக்க ஏதுவாக இருக்கும். மஹாமாஷம், பலா அஸ்வகந்தாதி தைலங்கள் உடலுக்குத் தேய்த்துக் குளிக்க ஏற்றவை. உடல் இளைத்துப் போவதைத் தடுக்கும். வைஷ்வாரைம், ஹிங்குவசாதி, அஷ்டசூரணம் போன்ற மருந்துகளில் ஒன்றை வெந்நீருடன் சாப்பிட, மலச்சிக்கல் உபாதை தீர்வதுடன், குடலும் சுத்தமாக இருக்கும். பசியும் மந்தமாகாமல் நல்ல நிலையில் இருக்கும்.

    தயிர், மிகவும் மெலிந்து உலர்ந்துபோன பன்றி, செம்மறியாடு, மீன், பசு, எறுமை ஆகியவற்றின் மாமிசம், உளுந்து, மொச்சை, சிறுகடலை, மாவுப் பண்டம், முளைகட்டிய தானியம் போன்றவற்றைத் தவிர்க்கவும். இவை உங்களுக்குள்ள உபாதைகளனைத்தையும் அதிகரிக்கக் கூடியவை.

    வியாக்ரயாதி கஷாயமும் இந்து காந்தம் எனும் கஷாயமும் வில்வாதி குளிகை எனும் மாத்திரையுடன் அரைத்துச் சாப்பிட்டால் நுரையீரல் கிருமி, தொண்டையில் ஏற்படும் சளி, காச நோய் உபாதைகளுக்கு மிகவும் நல்ல மருந்தாகும். மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன் பிறகு சாப்பிடுவது உத்தமம். பல மருந்துகளின் தேவை உங்களுக்கு இருப்பதால் அவை சாப்பிட வேண்டிய நேரம், முறை, அளவு போன்றவை கவனித்துத் தரப்பட வேண்டியவையாகும். இருந்தாலும் 13 மாத்திரை அளவுக்குச் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தமிருக்காது.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani 07 09 2013


    jv_66, sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1598
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீர் கழித்த பின் எரிச்சல்... என்ன தீர்வு?

    என் மனைவிக்கு வயது 65. கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சிறுநீர் போய் வந்தவுடன் தொடங்கும் எரிச்சல் தொடர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கிறது. வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்ததில் MILD BLADDER WALL THICKENING WITH MILD CALYCEAL DILATATION IN BOTH KIDNEYS என்றும் SIGINIFICANT BLADDER NECK DESCENT DURING VALSALVA -? CYSTOCELE என்றும் வந்துள்ளது. இந்த உபாதை ஏற்படக் காரணம் என்ன?
    எஸ்.அருணாசலம், திருமங்கலம், மதுரை மாவட்டம்.


    இதயத்துக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் குடி கொண்டுள்ள பித்த தோஷத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசு, துர்நாற்றம், இளகும் தன்மை, நீர்த்தது போன்றவை தம் அளவிலிருந்து கூடும் தறுவாயில், அவை கல்லீரல் வழியே சிறுநீர்ப் பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரில் கலந்து வெளியேறுகின்றன. அப்போது சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல் ஏற்பட்டு, சிறுநீர்க் குழாயில் அவை விட்டுச் செல்லும் உஷ்ணமானது, நெடுநேரம் நீடிக்கிறது. இந்த குணங்களை இனிப்புச் சுவை, குளிர்ச்சியான தன்மை, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்ணும் வெடிப்பும் ஆற்றக் கூடிய திறன் வாய்ந்த பழங்களையும், உணவு வகைகளையும், மருந்து வகைகளையும் அவர் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அந்த வகையில் பழங்களில் அத்திப் பழம் அவர் சாப்பிட உகந்தது. அதிலுள்ள இனிப்புச்சுவை, குளிர்ச்சித் தன்மை, நெய்ப்புத் தன்மையால், பித்தத்தின் சகஜநிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், அங்கங்களில் எரிச்சல், தண்ணீர் வேட்கை, உடல் ஆயாசம், உதடு, நாக்கு, வாய், சிறுநீரகங்களில் ஏற்படும் எரிச்சல், புண், வெடிப்பு போன்றவை குணமடைகின்றன. இக் கனிகள் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்து, பித்தத்தின் குணங்களின் வரவை நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும். சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்து குணம் பெறலாம்.

    இதற்கு அடுத்ததாக உலர் திராட்சைப் பழம் சாப்பிட நல்லது. சுமார் 10 - 15 திராட்சையை சிறிது தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை, அது ஊறிய தண்ணீரிலேயே கசக்கிப் பிழிந்து வடிகட்டி, பசும் பாலுடன் கலந்து காலை, மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் கழித்த பின் நீடிக்கும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும். பேரீச்சம்பழம் சாப்பிடவும் உகந்ததே.

    மண்பானையில் தண்ணீர் ஊற்றி, அதில் வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தசிராத்தூள், கரும்பு வேர், நெருஞ்சி விதை, பூசணி, பரங்கி, வெள்ளரி, சுரைக்காய், பீர்க்கங்காய் விதை போன்றவற்றைச் சிறிய அளவில் போட்டு, பானையின் வாயைக் மெல்லிய துணியால் மூடிக் கட்டி, இரவு முழுவதும் மொட்டை மாடியில் சந்திர ஒளி படும்படி வைத்து, மறுநாள் காலை, தண்ணீரை மட்டும் சுமார் 300 -500 மி.லி. உணவுக்கு முன் குடித்து வந்தால், உடல் உஷ்ணம் தணிவதுடன், சிறுநீர் கழித்த பின் ஏற்படும் எரிச்சலையும் கட்டுப்படுத்தும். திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணத்தை 10 கிராம் எடுத்து 500 மி.லி.தண்ணீரில் கொதிக்கவிட்டு, 250 மி.லி. ஆனதும், குளிர்ந்த பிறகு வடிகட்டி, சிறுநீர் கழித்த பிறகு வெறும் தண்ணீரால் முதலில் சிறுநீர் வரும் துவாரத்தைக் கழுவிய பிறகு, திரிபலைத் தண்ணீரால் கழுவி வந்தால், விரைவில் அவருடைய உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது.

    உணவில் பித்தத்தின் குணங்களை சீற்றமடையச் செய்யும் புளி, உப்பு, காரம் பட்டை, சோம்பு, கரம் மசாலா, எண்ணெய்ப் பொருட்கள், புலால் உணவு வகைகளாகிய மீன், சிக்கன், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து கசப்பு, துவர்ப்பு, இனிப்புச் சுவை கொண்ட உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. வாழைத் தண்டு, வாழைப்பூ, சிறு கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு, போன்றவை சாப்பிட மிகவும் உகந்தது.

    சதவெரீகுலம் எனும் லேகியம், வஸ்த்யாமயாந்தகம் எனும் நெய் மருந்து, பிருகத்யாதி, புனர்நவாதி எனும் கஷாயம், சந்தானஸவம், உசீராஸவம் எனும் ஆஸவ மருந்துகள், பிரவாள பஸ்மம், அப்ரக பஸ்மம் போன்ற பஸ்ம மருந்துகள், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப் படி சாப்பிடச் சிறந்தவை.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani 15 09 2013


    jv_66, sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1599
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    நூறுவயது வரை ஆரோக்கியமாக வாழகடைபிடிக்க வேண்டியவை!

    நாம் நம்மை கவனித்துக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், நம்முடைய ஆரோக்கியத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில், பிரம்மாண்டமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது.

    நாம் ஏன் சில எளிய வழிமுறைகளைப்பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ளக்கூடாது? இதன்மூலம் நமது நெடுநாளைய குறிக்கோள்களும் நிறைவேறும்அல்லவா?

    இந்தகட்டுரையில், நமது தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கஉ தவும் சில வழிமுறைகளை கொடுத்துள்ளோம்.





    Attached Files Attached Files
    jv_66 and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1600
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    மூன்றல்ல... ஒன்பது!மூன்று வேளை சாப்பிடும் உணவை 9 வேளையாகப் பிரித்து உண்டால், உடலில் ரத்தக் கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படுவதுடன் உடல் எடை சீராகும்.

    Today's  Medical Info-10168134_631392030284760_3625920715812619001_n.jpg

    Today's  Medical Info-eating-grapes.gif
    Dr Vikatan


    Last edited by Sriramajayam; 8th Apr 2014 at 02:01 PM.
    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter