Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1601
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    இது வெயில் காலம். செயற்கை மென்பானங்களுக்குப் பொற்காலம். நம்மில் மென்பானங்களைக் குடிக்க விரும்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

    மென்பானங்களின் தித்திப்பான ருசியும், கண்ணைக் கவரும் வண்ணங்களும் நம்மை மயக்கிவிடுகின்றன. போதாக் குறைக்கு 'மென்பானங்களைக் குடித்தால் புத்துணர்வு கிடைக்கிறது' என்று பொய் சொல்லும் ஊடக விளம்பரங்களும் நமக்குப் போதை ஏற்றிவிடுகின்றன.

    இந்த மென்பானங்கள் நம் தாகத்தைத் தணிக்க உதவுகின்றன என்பது உண்மை என்றாலும், இவற்றால் நமக்கு எத்தனை கெடுதல்கள் என்பதை நினைத்துப் பார்க்க மறந்துவிடுகிறோம்.

    மென்பானம் என்பது எது?

    மென்பானம் (Soft drinks) என்பது அதிக அளவில் ‘ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லை. இதைக் குடிப்பதால் சக்தியும் கிடைப்பதில்லை. இது ஆரோக்கியமும் அளிப்பதில்லை.

    மென்பானங்களின் சுவையை மேம் படுத்துவதற்காக, காஃபீன் எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள்; இனிப்பை நிலைப்படுத்துவதற்காகச் சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள்; வண்ணமூட்டுவதற்காக கேராமல் மற்றும் பீட்டா கரோட்டீனை பயன்படுத்துகிறார்கள். தவிர மென்பானங்களில் செயற்கைச் சுவை யூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தப் பயன்படும் பொருள்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருகிறது.

    இளம் வயதிலேயே சர்க்கரை நோய்!

    மென்பானங்களில் உள்ள ‘ஃபிரக்டோஸ் கார்ன் சிரப்' எனும் சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. அப்போது ரத்தச் சர்க்கரை அதிகரிக்கிறது. உடலின் வளர்சிதைமாற்றப் பணிகளைப் பாதிக்கிறது. இதைக் கட்டுப்படுத்தக் கணையத்திலிருந்து இன்சுலின் அதிக அளவில் சுரக்கிறது. அடிக்கடி மென்பானங்களை அளவில்லாமல் குடிப்போருக்கு இன்சுலினும் அடிக்கடி அதிகமாகச் சுரப்பதால், இளம் வயதிலேயே கணையம் களைத்துவிடுகிறது. இதன் விளைவால், இன்சுலின் சுரப்பு குறைந்து, இளமையிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. நம் நாட்டில் 'டைப் டூ நீரிழிவு நோய்' இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் அதிகமாகி வருவதற்கு மென்பானம் குடிப்பது முக்கியக் காரணம் என்கிறது ஒரு ஆய்வு.

    குழந்தைகளுக்கு உடற்பருமன்!

    தினமும் மென்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். மென்பானம் குடிக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அல்லவா? இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு, உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்பு, உடற்பருமனை உண்டாக்குகிறது. இந்த உடற்பருமன் இளம் பருவத்திலேயே இதய நோய், உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. இந்தியாவில் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும், குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் மென்பானங்களே முக்கியக் காரணம் என்பதை மத்திய சுகாதாரத் துறையே ஒப்புக்கொண்டுள்ளது.

    பற்களின் ஆயுள் குறையும்!

    மென்பானங்களில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் பல்லின் மேற்பூச்சாக இருக்கின்ற எனாமலை மிக விரைவாக அரித்துவிடுவதால், பற்சிதைவு உண்டாகிறது. பல்லின் ஆயுள் குறைகிறது. சீக்கிரமே பற்கள் விழுந்துவிடுகின்றன.
    பாஸ்பாரிக் அமிலத்தால் மற்றொரு கெடுதலும் உண்டு. இது கால்சியம் சத்து, குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எலும்பில் உள்ள கால்சியத்தைச் சிதைத்துவிடுகிறது. இதனால் உடலில் கால்சியம் குறைந்துவிடுகிறது. எலும்பு, பல் வளர்ச்சிக்கு கால்சியம் மிக அவசியம். கால்சியத்தை பாஸ்பாரிக் அமிலம் குறைத்துவிடுவதால், எலும்பின் அடர்த்தி குறைகிறது. எலும்புச் சிதைவு நோய் வருகிறது. வயதானவர்கள் லேசாகத் தடுக்கி விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடுவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். மேலும், மென்பானங்கள் மூட்டுவலிப் பிரச்சினையை மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன.

    சிறுநீரகக் கற்கள்

    அடிக்கடி மென்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்சினையை இரு மடங்கு அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் சிறுநீரகம் செயலிழக்கவும் மென்பானம் ஒரு காரணமாகிறது. சில பானங்களுக்குக் கருப்பு வண்ணம் தருகின்ற ‘கேராமல்' எனும் வேதிப்பொருள், புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளது. மென்பானங்களில் உள்ள காஃபீன் ரத்தஅழுத்தத்தை அதிகரித்து நரம்புத்தளர்ச்சிக்கும் இதய நோய்க்கும் வழிவகுக்கிறது.

    அணிவகுக்கும் ஆபத்துகள்

    மென்பானங்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகப் பொட்டாசியம் பென்சோவேட், சோடியம் சைக்ளோமேட் போன்றவற்றையும், திண்மையூட்டுவதற்காக பெக்டின், அல்ஜினேட், கராஜென், ஃபிரக்டோஓலிகோ சாக்கரைடு, இனுலின் போன்ற பல வேதிப்பொருள்களையும் சேர்க்கிறார்கள். இவை அனைத்துமே நம் உடல்நலனைக் கெடுக்கக் கூடியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று டெல்லியில் உள்ள அறிவியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
    இன்னும் சொல்லப்போனால், மென்பானங்களைத் தொடர்ந்து அருந்தும்போது, இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்து, இரைப்பைப் புண், குடற்புண் ஏற்படும். பசியின்மை, புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்று வலி போன்ற தொல்லைகள் நீடித்து, நாளடைவில் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவிடும்.

    வெப்பத்தை அதிகப்படுத்தும்

    பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில்தான் மென்பானங்களைக் குடிக்கிறோம். இவை உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் என்று நினைக்கிறோம். இந்த எண்ணம் தவறு. மென்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த நாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. இதன் விளைவால் தாகம் அதிகரிக்கிறது. இது மீண்டும் மீண்டும் குளிர்ந்த மென்பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது. இதை உங்கள் அனுபவத்திலேயே உணர முடியும்.

    செயற்கைப் பழச்சாறுகள்

    உணவியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி, பழம் சாப்பிடுவதே நல்லது. காரணம், பழத்தை அப்படியே நேரடியாகச் சாப்பிடும்போது, பழத்தின் சத்துகளோடு, அதன் தோலில் உள்ள நார்ச்சத்தும் கிடைக்கிறது. இது மலச்சிக்கலைத் தடுப்பதுடன், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களைத் தடுக்கும் அரணாக விளங்குகிறது. இயற்கைப் பழச்சாறுகளைத் தயாரிக்கும்போது தோலை நீக்கிவிடுவதால் அவற்றில் நார்ச்சத்து இல்லாமல் போகிறது.
    அடுத்து வருவது, செயற்கைப் பழச்சாறுகள். இவற்றில் பழத்தின் சத்துகள் எதுவும் இருப்பதில்லை. பழத்தின் நிறம், மணம், சுவை மட்டுமே இருக்கும். கார்போஹைட்ரேட் மிகுந்த சர்க்கரையாலும் சில வேதிப்பொருள்களாலும் இவை தயாரிக்கப்படுகின்றன. இது பொதுவான உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பது மட்டுமில்லாமல், சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகவே ஆகாது.

    போலிகள், கவனம்!

    ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பதுபோலக் கோடை காலத்தில் விற்கப்படும் பல மென் பானங்கள், குளிர்பானங்கள் போலி நிறுவனங்களின் தயாரிப்புகளாகத் தான் இருக்கின்றன. குறிப்பாக, கிராமங் களில் விற்கப்படும் பல குளிர்பானங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. இவற் றைக் குடிக்கும்போது, செரிமானக் கோளாறுகள், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் தொல்லை கொடுக்கும்.

    தாகம் தணிக்க என்ன செய்வது?

    இயற்கையில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத்தான் உள்ளது. ஆகவே, கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பாட்டில் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. இதைக் குளிரக் குளிரக் குடிக்க விரும்புபவர்கள் ஃபிரிட்ஜுக்கு பதிலாக மண்பானையில் ஊற்றிவைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியம்.

    தண்ணீருக்கு அடுத்துத் தாகம் தணிக்க உதவுவது இளநீர், நீர்மோர், சர்பத், பானகம், பதநீர். இயற்கைப் பழங்கள், பழச்சாறுகளும் இதற்கு உதவும். தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடலாம். எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.

    இளநீர் நல்லது

    கோடையில் குடிக்க இளநீர்தான் மிகச் சிறந்த பானம்; சத்தான, சுத்தமான பானம். இளநீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இளநீரைத் தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடித்தால், குளிர்ந்து இருக்கும். மாறாக, இளநீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சில மணி நேரம் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவக் குணங்கள் மாறிவிடும். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.


    கு.கணேசன், மருத்துவர்



    Sponsored Links
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1602
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    எளிய பாட்டி வைத்தியம்:-

    1. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தைநறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
    2. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு(Horsegram) கொடுக்க வேண்டும்.
    3. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள்தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
    4. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
    5. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால்குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்குஉதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
    6. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
    7. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவரதலைவலி நீங்கும்.
    8. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
    9. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
    10. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய்,கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும்ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும்கட்டுப்படுத்தும்.
    11. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிடகபம் நீங்கும்.
    12. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம்,அஜீரணம் மாறும்

    jv_66, pet, Sriramajayam and 1 others like this.

    KOTHAISURESH

  3. #1603
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: Today's Medical Info

    Informative and good article

    jv_66 and Sriramajayam like this.

  4. #1604
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்கும் லெமன்
    -x-

    முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணெயில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

    முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

    வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
    இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

    அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.


    Tamil Samuthaayam


    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #1605
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சிறுநீரை பெருக்கும் வாழைத்தண்டு
    -x-

    சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.
    சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.
    சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்
    சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.
    வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.
    வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
    உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


    Tamil Samuthaayam


    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1606
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஆரஞ்சு பழம் தரும் இளமை
    -x-

    உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.
    எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம். சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
    இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.
    ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது.
    இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.
    பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்து ஆரஞ்சில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.
    கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.


    Tamil Samuthaayam


    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #1607
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடலுக்கு ஆற்றலை தரும் ‘சப்போட்டா’ பழம்
    -x-

    கண்களுக்கு நல்லது:

    சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

    இதய பாதுகாப்பு:

    இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.
    தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

    ஆற்றலை வழங்கக்கூடியது:

    நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம் . ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

    புற்றுநோய் தடுப்பு:

    வைட்டமின் ஏ மற்றும் பி யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது வாய் குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

    எலும்பை உறுதிப்படுத்தும்:

    எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.

    மலச்சிக்கலுக்கு நிவாரணம்:

    சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

    பித்தம் நீக்க:

    சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம்.இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.


    Tamil Samuthaayam


    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #1608
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Today's Medical Info

    அருகம்புல்லின் அருமை!

    * அருகம்புல் வேரை, நிழலில் உலர்த்தி, இடித்து, கஷாயம் செய்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து, காபி போல சாப்பிட, மார்பு வலி நீங்கும், உடல் இளைக்க உதவும், உறக்கம் தரும், பல் மற்றும் ஈறு நோய்கள் நீங்கும், வயிற்று புண், கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிலக்கு தொல்லைகள் நீங்கும். மசாஜ் செய்து விட்டதைப் போல, உடம்பு உற்சாகமாக இருக்கும்.

    * அருகம்புல்லையும், ஆல இலையையும் சமமாக எடுத்து, அரைத்து, உச்சந்தலையில் பற்றுப் போட்டால், தலைவலி குணமாகும்.

    * தூதுவளை வேரையும், அருகம்புல்லையும் கசக்கி, துணியில் வைத்து, பல்வலி இடது புறமிருந்தால், வலது காதிலும்; வலது புறமிருந்தால், இடது காதிலும் மூன்று சொட்டுகள் மட்டுமே பிழிந்து விட்டால், வலி உடனே நீங்கும்.


    jv_66 and Sriramajayam like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #1609
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வலி என்பது எச்சரிக்கை மணி!
    உட்கார்ந்தே பணிசெய்வோருக்கு ஓர் எச்சரிக்கை!

    மூட்டு வலி, முதுகு வலி இல்லாத ஆளே இல்லை என்கிற அளவுக்கு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான அலுவலகப் பணிகளில் மணிக்கணக்கில் ஒரே மாதிரி உட்கார நேர்கிறது. வீட்டிலும் பெண்கள் நீண்ட நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடல் வளைந்துகொடுக்கும் தன்மை, வலிமை மற்றும் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் வலி ஏற்படுகிறது.

    ''வலி வந்துவிட்டால் போதும், மருந்து மாத்திரை, தைலம் என எதையாவது செய்து, வலியை விரட்டப் பார்க்கிறோமே தவிர, அதன் உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து சரிப்படுத்த முயற்சிப்பது இல்லை. வலிக்கு மாத்திரை மருந்து, அறுவைசிகிச்சை எதுவும் தேவை இல்லை. வலியின் மூலகாரணத்தைக் கண்டறிந்து, எளிய பயிற்சிகள் மூலம் பாதிப்பை சரி செய்து வலியை விரட்டலாம்' என்கிற பாஸ்சர் அலைன்மென்ட் (Posture alignment) தெரப்பி வல்லுனர் பரத் சங்கர், வலி ஏன் ஏற்படுகிறது, பிரச்னையை எப்படி கண்டறிந்து சரிப்படுத்துவது என்பது பற்றி விளக்கினார்.

    'உட்கார்ந்தே வேலை செய்யும்போது உடல்பருமன், இதய நோய்கள், முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, கொழுப்பு அளவு அதிகரிப்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பு என்று 14 வகையான பக்கவிளைவுகள் ஏற்படும். இதில் வலி என்பது பிரச்னை அல்ல. அது ஓர் எச்சரிக்கை மணி. உடலில் எலும்பு, தசை, ஜவ்வு, மூட்டு என எங்கு எல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ, அதை உடனடியாகச் சரிப்படுத்த வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் அறிகுறி. ஆனால், இந்த ஆரம்பகட்ட அறிகுறியை நாம் ஏதாவது ஒரு மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் புறக்கணிக்கிறோம்.

    நம் உடலின் அடித்தளமாக இருப்பது இடுப்பு எலும்பு. ஒரு கட்டடத்தின் அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதுபோலத்தான் நம் உடம்புக்கு இடுப்பு எலும்பு நிலையாக இருப்பதும் அவசியம். நம் இடுப்பு வரிசை ஒழுங்கின்மையால் பல்வேறு தசைநார் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. பரவலாக, தோள், கழுத்து, முழங்கை, மணிக்கட்டு, முதுகு எலும்பு, முழங்கால், இடுப்பு, கணுக்கால், பாத வலியுடன் பலரும் வருகின்றனர். இவர்களுக்கு இடுப்பு எலும்பின் நடுநிலையை சீர்செய்யும்போது மேலே குறிப்பிட்ட வலிகளில் இருந்து விடுபடலாம்.
    கழுத்தில் வலி என்று வருபவர்களுக்கு, கழுத்தில்தான் பிரச்னை என்று முடிவுகட்டிவிடமுடியாது. இடுப்பு, கால் மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னையின் வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம். முதலில் அதைச் சரிப்படுத்தினால், கழுத்து வலி தானாக மறையும்.

    நம் உடல் எடையைத் தாங்கும் வகையில், கால் எலும்பு மூட்டுகள் உள்ளன. இரண்டு மூட்டுகளிலும் சமமான அளவு எடை விழ வேண்டும். ஆனால், நம்முடைய தவறான பழக்கவழக்கத்தால் ஒரு காலில் அதிக எடையும், மற்றொரு காலில் குறைந்த அளவு எடையும் இறங்குகிறது. இந்த பாதிப்பு இடுப்பு, முதுகெலும்பு, கழுத்து வரை எதிரொலிக்கிறது. நம் உடல், நேர்க்கோட்டில் இருக்கும்போது 5.44 கிலோ எடை முதுகெலும்பில் இறங்குகிறது. இதுவே தலை முன்னோக்கி நகர நகர எடையானது 15, 20 கிலோவாக அதிகரிக்கிறது. இதனால் கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் கழுத்தில் வலி ஏற்படுகிறது. கழுத்தில் வலி ஏற்பட்டதற்கு, தலை முன்னோக்கி நகர்ந்ததுதான் காரணம். இதை சரிசெய்வதன் மூலம் கழுத்து வலியை சரிசெய்ய முடியும்'' என்ற டாக்டர் பரத், தெரப்பி பற்றி தெரிவித்தார்.

    ''வலி பாதிப்பு உள்ளவர்களை முதலில் நேராக நிற்கவைத்து, போட்டோ எடுக்கப்படும். ஒரு பிரத்யேக சாஃப்ட்வேர் மூலம், மூட்டுக்கள் மேல் இருந்து கீழ், இடமிருந்து வலம் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா, எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதைக் கண்டறிவோம். பிறகு, இவற்றைச் சரி செய்ய, பிரத்யேக உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். அவரவர் உடல் அமைப்பு, நேர்க்கோட்டில் இருந்து விலகல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பயிற்சி வேறுபடும்.

    இந்தப் பயிற்சியைச் செய்து கொள்வதன் மூலம் உடல் நேர்க்கோட்டுக்கு கொண்டுவரப்படும். இதனால் வலி ஒரு சில நிமிடங்களில் குறைந்துவிடும். ஆனால், பாதிப்புகள் சரியாக சில நாள்கள் ஆகும். தொடர் பயிற்சிகள் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபடலாம். நம் உடல் நேர்க்கோட்டில் இல்லாதபோது உள் உறுப்புக்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதைச் சரிசெய்வதன் முலம், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் அதனதன் இடத்தில் இருப்பதன் மூலம் அதன் செயல்பாடும் சீரடையும்' என்றார்.

    Today's  Medical Info-p38a.jpg



    Bharath Sankar - Pa. Praveen Kumar Via Dr Vikatan


    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #1610
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நிம்மதியான நித்திரைக்கு...

    * நடைப்பயிற்சி நல்லதுதான். ஆனால், இரவில்... வீட்டுக்கு வெளியே சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்தால் தூக்கத்துக்கு பதிலாக விழிப்பு நிலைதொடர்வதுதான் மிச்சம்.
    * குளித்து விட்டு உடனே தூங்கப் போனால், தூக்கம் வராது. தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாகவே குளிப்பதுதான் நல்லது.
    * தூக்கம் வருவதாக உணர்ந்தால் மட்டுமே படுக்கையில் சாய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இது படுக்கையின் மீதான பதற்றத்தைக் குறைக்கும்.
    * குடும்பப் பிரச்னை காரணமாக மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைபாய்ந்தால், நெருக்கமான நண்பர்களுடன் மனவிட்டு பேசி, ரிலாக்ஸ் செய்து கொண்டபிறகு தூங்கச் செல்லலாம்.
    * தூக்கம் வருவதற்காக புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால், படுக்கையில் அமர்ந்தபடியோ (அ) படுத்தபடியோ படிக்காதீர்கள். நாற்காலியில் உட்கார்ந்தபடி புத்தகம் வாசித்து, தூக்கம் வந்ததும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.

    Today's  Medical Info-graphics-sleeping-772919.gif
    - டாக்டர் என். ராமகிருஷ்ணன்
    - 'தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே' - விகடன் பிரசுரம்


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter