Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1641
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    இதய துடிப்பை சீராக்கும் கிவி பழம்

    கிவி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இந்த பழத்திற்கு சீனத்து நெல்லிக்கனி என்றொரு பெயரும் உண்டு. கிவி பழத்தின் தோல் பச்சை நிறத்துடனும், பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இதை கேக் மீது அழகுக்காக வைத்திருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

    கிவி பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம். இது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சியை பயன்படுகிறது. கிவி பழத்தில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.

    கிவி பழமானது குறைந்த அளவு கொழுப்பு சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம். விட்டமின் ‘சி’ யை அதிக அளவில் கொண்டுள்ள கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைகிறது. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு உள்ளது.

    முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய கண் புரை, விழித்திரை சிதைவு, கண் நோய்களைத் தடுக்க தேவையான அளவு வைட்டமின் சி சத்துகளை கொண்டுள்ளதால் முதுமையில் இந்நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    மாரடைப்பிற்கு முன்னர் ஏற்படக்கூடிய நோய்களில் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்த சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் சீராக செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ பழத்திற்கு உண்டு. வளரும் இளம் குழந்தைகளுக்கு கிவி பழத்தை சாப்பிடக்கொடுத்தால் மூளை நன்கு வளர்ச்சியடையும்.

    ‘ஃபோலேட்(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களை விட மிகவும் அதிகமான அளவில் கிவி பழத்தில் உள்ளது. இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த பழமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.



    Sponsored Links
    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1642
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    கோடைக்கு குளிர்ச்சி தரும் இளநீர்

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தகைய வெப்பத்தை தணிப்பதற்கு பல்வேறு பானங்களை வாங்கிப் பருகுவோம். ஆனால் இருப்பதிலேயே இளநீர் தான் மிகவும் சிறந்தது. இதில் எந்த ஒரு கலப்படமும் இல்லாததால், இதன் கிடைக்கும் நன்மைகள் பல.அதிலும் இளநீர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்யும் குணம் வாய்ந்தவை. ஆகவே உடலில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு இளநீரை பருகி வாருங்கள்.
    மேலும் சருமம் மற்றும் கூந்தலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் நேராமல் இருக்க வேண்டுமானால், இளநீரை நேரடியாக பாதிப்படைந்த இடத்தில் பயன்படுத்தலாம். இளநீரை தினமும் குடித்து வந்தால், அது இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.கோடை காலத்தில் இளநீரை தினமும் குடித்து வந்தால், உடலின் எனர்ஜியானது குறையாமல் இருக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தினமும் இளநீரை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். சிறுநீரகக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இளநீர் ஒரு சிறந்த பானமாகும்.செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இளநீரைக் குடித்து வந்தால் செரிமானம் சீராக நடைபெறும். வயிற்றுப்போக்கு ஆகிய காலங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறையும். ஆகவே அப்போது இளநீரைக் குடித்தால், உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம்.இளநீரைக் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இளநீரில் கால்சியம் அதிகம் இருப்பதால், இதனை தவறாமல் தினமும் குடித்து வர, எலும்புகளில் பிரச்சனை ஏற்படாமல், எலும்புகள் நன்கு வலுவோடு இருக்கும்.

    Today's  Medical Info-graphics-trees-032051.gif
    Tamil Samuthaayam


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #1643
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சரும வறட்சியை போக்கும் கசகசா

    நாற்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு, `மெனோபாஸ்’ சமயத்தில் (மாதவிடாய் நிற்கும் போது) ஈஸ்ட்ரோஜன் சுரப்புக் குறைவதால், உடலில் பல மாற்றங்கள் நிகழும், உடலின் கொழுப்புச்சத்து குறைவதால், சருமத்தில் எண்ணெய் பசையே இல்லாமல் வறண்ட பாலைவனமாகிவிடும்.
    மேலும் `கொலஸ்ட்ரால் வருமோ’ என்ற பயத்தில் உணவிலும் எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே ஒதுக்கிவிடுவதும் வறட்சிக்கு வழிவகுக்கும். இதனால், தோலில் சுருக்கம் அதிகமாகி, கூடுதலான வயோதிக தோற்றம் வந்துவிடும். இந்த வறட்சியினால் கண்கள், கன்னம், கை, கால், முழங்கைப் பகுதிகள் சுருங்கி, தோல் தொய்ந்து விடும். உணவு மற்றும் சருமப் பராமரிப்பு மூலமும் சருமத்தைப் பளபளப்பாக மாற்ற முடியும்.

    * கும்மென்று இருந்த கன்னம், வயோதிகம் காரணமாக ரொம்பவே தளர்ந்து விடும். இதற்கு, தினமும் 4 பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து, ஒரு கப் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம். இரவில் ஒரு கப் பாலில் அரை டீஸ்பூன் கசகசா தூளைக் கலந்து குடித்து வரலாம். மனநிம்மதியான உறக்கத்துடன் சருமமும் மிருதுவாக மாறும்.

    * கை, கால்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு, இளமை அழகு கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும் போது… தலா 25 கிராம் கசகசா வெள்ளரி விதையுடன் 10 கிராம் பாதாம் பருப்பை சேர்த்து அரையுங்கள், அந்த விழுதை, கால் கிலோ நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இந்த எண்ணெயை உடம்பில் தினமும் தடவினால், இழந்த பொலிவு மீண்டும் வந்துவிடும். தோலில் அரிப்பு இருந்தால், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

    * வைட்டமின் ஈ, குறைபாட்டினால், கண்களுக்கு கீழ் கருமை படரலாம். எண்ணெய்ப் பசை இல்லாமல் பொரிப் பொரியாக தோன்றி, கண் இமைகளுக்கு நடுவில் நிறைய சுருக்கங்கள் ஏற்படலாம். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பியூட்டி பார்லரில் த்ரெட்டிங் செய்து கொள்வதை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். இல்லையென்றால்… கண் அழகு மட்டுமல்ல. பார்வையும் கூட பாதிக்கப்படலாம்.

    * பனிக்காலத்தில் வறண்ட சருமம் மேலும் வறட்சிப் பாதையில் போய், உள்ளங்கையில் சொர சொரப்பு, பாதங்களில் வெடிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன. தினமும், இரவு தூங்கப்போகும் போது கை, கால்களை நன்றாகக் கழுவி விட்டு, ஸ்டாக்கிங் டைப் சாக்ஸ் அணிந்து கொள்வது தோலை மென்மையாக வைத்திருக்க உதவும்.

    பொரியல், கூட்டு, சாம்பார் உணவு வகைகளில் கசகசாவை சேர்த்துக் கொள்வதும் சருமத்தின் எண்ணெய்ப் பசையைக் கூட்டும். 50 கிராம் கசகசாவை வறுத்து, சம அளவு சர்க்கரையுடன் 25 கிராம் பாதாம் பருப்பையும் சேர்த்து பொடியுங்கள். ஒரு கப் பாலில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கலந்து குடித்து வர ஒட்டுமொத்த சரும வறட்சியும் சட்டென மறையும்.

    Today's  Medical Info-graphics-make-up-112075.gif

    Tamil Samuthaayam


    Last edited by Sriramajayam; 20th Apr 2014 at 10:35 AM.
    spmeyyammaisp06 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1644
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    கவலையளிக்கும் கரு வளையங்களா?

    அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும். தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:

    ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது. ஆடை அணிவது முதலில் வசதிக்காகக்தான். உடலை கவ்விப் பிடிக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.

    கம்பீர அழகு

    வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடியாது. சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளே சௌகர்யமானது. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். பணியிடத்தில் இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.

    பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால் கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.

    கவலை ரேகை வேண்டாம்

    மனதில் தாழ்வு மனப்பான்மை, அலட்சியம், தற்பெருமை ஆகியவை கூடாது. இதனால், முகத்தில் கவலை ரேகைகள் படரும், நம் எண்ணத்திலும், செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அமைதியான மனமும், அதை வெளிக்காட்டும் முகமும் வேண்டும்.!

    மன அமைதியுடன் இருந்தால் முகம் பொலிவடையும் இதற்கு தியானம் மிகச் சிறந்தது. சரியான தூக்கம் தேவை. தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் நித்திரைகொள்ளுதல் நல்லது. இல்லாவிட்டால் கண்களின் அடியில் கருவளையம் விழும். இதனால் முகத்தில் ஒருவித முதிர்ச்சி தெரியும். அதேபோல் கண்கள் சோர்ந்து காணப்பட்டாலே பாதி அழகு குறைந்த மாதிரிதான்.!

    சத்தான உணவு தேவை

    காலையில் சீக்கிரம் எழுந்து லேசான உடற்பயிற்சி. பிறகு அரை டம்ளர் லெமன் ஜூஸ். இதனால் உங்களுக்கு பசி ஏற்படும். பின்னர், நன்றாக குளித்துவிட்டு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சேர்ந்த உணவு, அவசரமாக சாப்பிட வேண்டாம். விருப்பமானதை மெதுவாக சாப்பிடவும்.!

    ஒரு நாளைக்கு கிட்டதட்ட 2 லிட்டர் தண்ணியாவது குடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற கழிவுகள் உடலிருந்து வெளியேறும்.! முக்கியமாக உடலில் எடை அதிகமாவதை தவிர்த்தல் நல்லது. நீச்சல். ஸ்கிப்பிங், சைக்கிள் சவாரி, நடை பயிற்சி போன்றவை இயற்கையாக பெண்களின் பின்னழகை கூட்டும்.!

    கட்டமைப்பான உடல்

    பெண்களின் மார்பளவும், இடுப்பளவும் ஒன்றாக இருக்க வேண்டும். இடையளவு அதைவிட 25 செ.மீ. குறைவாக இருக்க வேண்டும். வயிற்றில் மடிப்பே விழக்கூடாது. இடையை விட தொடைகள் 12செ.மீ குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு அழகான தோற்றம் தரும் கட்டமைப்பு இது. உடலமைப்பு இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் என்று வரையறை எதுவும் இல்லை.

    உயரமோ, குட்டையோ எப்படி இருந்தாலும், அதற்கேற்ப நமது உறுப்புகள் சரியாக இருந்தால் அழகுதான்!.

    கூந்தலில் சிக்கல் விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. முகத்திற்கும் பொலிவு கூடும். எனவே வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.

    ஆண்களுக்கும் அழகு

    பெண்களைப் போலவே ஆண்களும் அழகியல் கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களை விட ஆண்களே அதிகம் வெளியில் செல்கின்றனர். ஆடைகளில் காட்டும் அக்கறையை முகத்தை அழகுபடுத்த காட்டுவதில்லை.

    வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.

    வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.

    சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.

    Today's  Medical Info-mini-graphics-make-up-746798.gif

    Tamil Samuthaayam



    spmeyyammaisp06 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #1645
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயூர்வேதம்: தொண்டை வறட்சியும் மலச்சிக்கலும்!

    எனக்கு வயது 75. கடந்த சில வருடங்களாகவே மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. தற்போது தீவிரம் அடைந்துள்ளது. தொண்டை அடிக்கடி வறண்டு போகிறது. ஒரு நாளைக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தினாலும் பலனில்லை. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
    பெயர் வெளியிட விரும்பாத வாசகர், தில்லை நகர், திருச்சி.


    குடலின் வாயுவின் வறட்சியான குணம் இயற்கையாகவே வயோதிகத்தில் கூடுகிறது. இதனால் குடல் அசைவுகள் தடைபட்டு மலச்சிக்கலுக்குக் காரணமாகிறது. வறட்சிக்கு நேர் எதிரான நெய்ப்பு எனும் குணத்தை நீங்கள் உள்ளும் புறமுமாகப் பெற வேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது. வாயுவால் இறுக்கம் அதிகமாகி குழாய்கள் வழியே செல்பவை தடைபடும் நிலையில், தோலில் வெதுவெதுப்பாக எண்ணெய்யைத் தடவி வந்தால், குடலில் ஏற்படும் தடையானது நீங்கிவிடும். மயிர்க்கால்களில் இணைந்துள்ள சிறு மயிரிழை போன்ற ரத்தக் குழாய்கள் உள்ளிருக்கும் அழுக்கை வெளிப்படுத்திவிட்டு எண்ணெய் தேய்த்தலின் மூலம் பெற்ற ஊட்டச்சத்தை உள்ளிழுத்து ரத்தத்துடன் கலக்கச் செய்கின்றன. வாய் வழியே செல்வதைவிடத் தோல் வழியே சென்று சேரும் நெய்ப்பானது எளிதானது, விரைவானதும் கூட. இதனால் குடலுக்குத் தேவையான மென்மையும், நெகிழ்ச்சியும், தடையின்மையும், சீரான வேகமும் கூடும். உட்புறமாக அதாவது வாய் வழியாக நெய்ப்பைக் குடலில் பெறுவதற்கு எள், பால், தேங்காய் போன்றவை உதவும்.

    குடலின் அடிபாகத்தில் வாயுவினால் ஏற்பட்ட அதே வறட்சி போன்றதொரு நிலையை, தொண்டையிலும் வாயு ஏற்படுத்துகிறது. நெய் எண்ணெய்ப் பசையின்றி வறட்சியான பண்டங்களைச் சாப்பிடுதல், பச்சைக் கறிகாய்கள் போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனி வறட்டுச் சாதமாகவே சாப்பிடுதல், பால், பழம், தண்ணீர் சேர்த்துக் கொள்ளாதது, பக்குவம் சரியாக ஆகாத உணவு, உலர்ந்து போன காய்கள், மிளகாய், மிளகு, பெருங்காயம் போல குடலில் இருக்கும் நீரின் அம்சத்தை சுண்ட வைக்கும் உணவுகள் போன்றவை தொண்டை வறட்சிக்குக் காரணமாகலாம்.

    மலச்சிக்கல் மற்றும் தொண்டை வறட்சியைப் போக்க - காலையில் 5 மணிக்கு ஒரு பெரிய டம்ளர் (சுமார் 500 மி.லி.) வெந்நீர் சாப்பிடவும். காலையில் 7 மணிக்கு 2 வாழைப் பழங்களை உருக்கிய நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு 1 டம்ளர் (சுமார் 300 மி.லி.) காய்ச்சிய பால் குடிக்கவும். காலை 10 மணிக்குள் சூடான சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து பச்சைக் காய்கறிகள் வேக வைத்து பருப்பு ரசம், விளாவிய மோர் சேர்த்துச் சாப்பிடவும். பகல் 1 மணிக்கு ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, தக்காளி, சீமையத்திப் பழம், ஆப்பிள் பழம் இவற்றில் கிடைத்த பழங்களைச் சாப்பிடவும். மேலே கொஞ்சம் வெந்நீர் அருந்தவும்.

    மாலையில் இளநீர் சாப்பிடவும். இரவில் சூடான பாலை சாதத்துடன் கலந்து சாப்பிட நல்லது அல்லது வேக வைத்த கறிகாய் கூட்டுச் சேர்த்து கூட்டு அன்னம் சாப்பிடலாம். ராத்திரி படுக்கும் முன் 1 டம்ளர் வெந்நீர் அருந்தவும்.

    ஆயுர்வேத மருந்துகளில் ஸýகுமாரகிருதம், ஸýகுமார லேகியம் இவை இரண்டு மருந்துகளும், நெய்யும், ஆமணக்கெண்ணெய்யும் வாயுவின் வறட்சியைப் போக்கக் கூடிய மருந்துகளையும் சேர்த்துத் தயாரிக்கப்படுபவை. மலச்சிக்கலுக்கு நித்திய உபயோகத்துக்கு உத்தமம். தொடர்ந்து சாப்பிடலாம். திரிபலா சூரணம் 3 -5 கிராம் அளவு ராத்திரியில் படுக்கும் முன் கொஞ்சம் நெய், தேன் கலந்து சாப்பிடவும். அதன் பிறகு சூடான அரை கிளாஸ் பால் சாப்பிட, மலப் பிரவிருத்தியை ஒழுங்காகச் செய்யும், கண்களுக்கும் நல்லது.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani 21 September 2013


    Last edited by datchu; 20th Apr 2014 at 09:06 PM.
    spmeyyammaisp06 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1646
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால்களை ஆட்டலாமா?

    என் வயது 50. மாதவிடாய் நின்று ஒரு வருடமாகிறது. அதிலிருந்து இரண்டு கால்களிலும் பின் தொடையில் உள்ள சதைப் பகுதி பயங்கரமாக வலிக்கிறது. குளிர்காலத்தில் தொடையின் பின் பகுதியில் நரம்பு பிடித்து இழுத்து கொள்கிறது. காலணியைக் கழற்றிவிட்டுத் தரையில் நின்றால் பழைய நிலைக்கு வர சுமார் அரை மணி நேரம் ஆகிறது. பஸ்ஸில் 2 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்திருந்தால் இரண்டு கால்களோடு இடுப்பும் கடுக்கிறது. இந்த உபாதையைக் குணப்படுத்துவது எப்படி?
    பி.பிரியா, காரைக்குடி.


    பெண்களுக்கு மாதவிடாயைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சீரான இடைவெளியில் ஏற்படுத்தும் அபானன் என்ற வாயு, உங்களுக்குச் சீற்றமடைந்திருப்பதாகத் தெரிகிறது. சிறுகுடல், பெருங்குடல் பகுதிகள் இயற்கையாகவே தளர்ந்த தொந்தியினுள்ளே அமைக்கப்பட்டிருப்பதன் காரணமே, அவற்றினுள் சஞ்சரிக்கும் வாயுவின் அழுத்தம் வெளியில் எதிரொலித்து உணரப்படாமலிருக்கத்தான். குடலில் அதிக நேரம் உணவின் குழைவம்சம் தங்குவதால், அதனூடே செல்லும் வாயு தடைபடாமலிருக்க, இஷ்டப்படி விரிந்து சுருங்க இடவசதி தேவை. விரிந்து சுருங்க கருப்பைக்கு அவசியம் இல்லாமற் போனதால், வாயுவின் சஞ்சாரத்தில் தடை ஏற்பட்டு, அது செல்ல வேண்டிய பாதையில் செல்ல முடியாமல், இடுப்பின் வழியே பின் தொடை நரம்புகளின் வழியாக இடம் பெயர்ந்து செல்வதால், தொடையின் பின்புறச் சதைப் பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

    நரம்புகளில் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் இந்த வாயுவின் சீற்றத்தை, இடுப்பின் கீழ் பகுதி வழியாக தொடைகளிலும், கெண்டைச் சதை மற்றும் குதிகால்,பாதம் வரை மூலிகைத் தைலங்களாகிய தான் வந்திரம், சஹசராதி, நாராயணம், முரிவெண்ணா போன்றவற்றில் ஒன்றிரண்டை வெதுவெதுப்பாக இரும்புக் கரண்டியில் சூடாக்கி, தடவிவிட்டு, ஆமணக்கு, நொச்சி, கல்யாண முருங்கை, புங்கை, யூகலிப்டஸ் ஆகியவற்றின் இலைகளை நறுக்கி துணியால் மூட்டைகட்டி, சூடாக்கி, எண்ணெய் தடவிய பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால், வாயு அடங்கி ஒடுங்கும். ஆசன வாய் வழியாகச் செலுத்தப்படும் எண்ணெய் வஸ்தி (எனிமா), கஷாய வஸ்தி போன்ற சிறந்த சிகிச்சை முறைகளால், குடலில் ஏற்பட்டுள்ள வாயுவின் அதிகமான கோபத்தை வெளியேற்றி, உங்களுக்கு ஏற்பட்டுள்ள நரம்பு வலிப் பிரச்னையைச் சமாளிக்க முடியும். இந்த சிகிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி மருத்துவரின் நேரடிப் பார்வையில் செய்து கொள்வதே நல்லது.

    உள்ளுக்குச் சாப்பிட, தான்வந்திரம், தசமூலம், விதார்யாதி, சுகுமாரம், இந்துகாந்தம் போன்ற கஷாய மருந்துகளும், க்ஷீரபலா 101, தான் வந்திரம் 101, பலா தைலம் போன்ற மூலிகை நெய் - தைல மருந்துகளும் தரமானவை. மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடவும்.

    வாயுவைத் தூண்டிவிடும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளைத் தவிர்க்கவும். இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை மிதமாகச் சேர்க்கலாம். கறிகாய்களில் உருளைக் கிழங்கு, வாழைக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை, வேர்க்கடலை, சூடு ஆறிய பருப்பு சாம்பார், கொண்டைக் கடலை சுண்டல், கொத்தவரங்காய் தவிர்க்கவும். சமையலுக்கு நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தவும்.

    ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்க்கவும். ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டு அமர்வதைத் தவிர்க்கவும். வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பதே நல்லது. பேசும்போதோ, வெறுமனே அமர்ந்திருக்கும்போதோ கால்களை ஆட்டிக் கொண்டேயிருக்க வேண்டாம்.

    இப்படி மருந்தையும் உணவையும் செய்கையையும் சரியானவிதத்தில் அமைத்தால், தொடையில் ஏற்பட்டுள்ள நரம்பு வலியைக் குணப்படுத்தலாம்.



    spmeyyammaisp06 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1647
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் சிறுநீர்

    நான் ஒரு பேருந்து ஓட்டுநர். எனக்கு வயது 52. அடைமழை காலங்களில் பகலில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறுகிறது. மார்கழி, தை மாதம் போன்ற குளிர்காலங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், காலையில் 6 மணி முதல் 9 மணி வரை உள்ள நேரங்களில் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சுமார் 3 வருடகாலமாக இந்தத் தொந்தரவு உள்ளது. இதைக் குணமாக்க ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
    சி.வேலுசாமி, கோவை.


    மழையும் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நாட்களில் வயிற்றிலும் மப்பும் மந்தாரமும் சூழ்ந்து நிற்கும். வயிற்றிலுள்ள கதகதப்பினால் சிறுநீரகங்களின் உற்பத்திக் கேந்திரங்கள் கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன. இந்தக் கதகதப்பு மந்தப்படுவதால், சிறுநீரின் உற்பத்தியானது சிறுநீரகங்களில் அதிகரித்து அடிக்கடி வெளியேறுகிறது. அதனால் வயிற்றிலுள்ள மப்பும் மந்தாரமும் மாறி அதன் சுறுசுறுப்புக்கும் சூடான நிலையைப் பெறுவதற்கும் தக்க உதவி தேவை. தீபாவளி லேகியத்தை இந்தக் காலகட்டங்களில் நம் முன்னோர் தயாரித்து தினம் காலையில் சாப்பிட்டு வயிற்றின் மந்த நிலையைப் போக்கி சிறுநீரின் அதிக அளவிலான போக்கைக் கட்டுப்படுத்தினர். நீங்களும் தீபாவளி லேகியத்தை எளிதாக வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். இதற்குத் தேவையானவை:

    திப்பிலி 50 கிராம், ஓமம் 50 கிராம், கண்டந்திப்பிலி 50 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், சுக்கு 25 கிராம், மிளகு 25 கிராம்,சீரகம் 25 கிராம், கொத்துமல்லி 25 கிராம்.

    ஜாதிக்காய், ஏலக்காய் நீங்கலாக மற்றவற்றை வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு இடித்துச் சூரணமாக்கிக் கொள்ளவும். வெல்லம் 300 கிராம் அளவு தண்ணீரில் கரைத்துப் பாகாக்கி அதில் 50 கிராம் நெய் விட்டு இந்தச் சூரணத்தைப் போட்டுக் கிளறி வைத்துக் கொள்ளவும். சுமார் 1 -2 டீ ஸ்பூன் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும்.

    மார்கழியும் தையும் ஹேமந்த ருதுவெனப்படும். இவ்விரு மாதங்களில் பனி அதிகமாக உணரப்படும். பொதுவாகவே இக்காலத்தில் இரவு நேரம் அதிகம். பகல் நேரம் குறைவு. பகலிலும் பனி வாடை காலை 8-9 மணி வரையிலும் இருக்கும். மாலை 5 மணியிலிருந்தே பனி வாடை ஏற்பட்டுவிடும். ஆகவே அதிலிருந்து உடலைக் காப்பாற்றும் கம்பளி முதலிய உடைகளின் கதகதப்பு, தோலின் வறட்சி ஆகியவற்றின் காரணமாக ஜீரண கோசங்களுக்குத் தேவையான சூடு சற்று அதிகமாகவே இருக்கும். உணவைச் செரிக்க வைக்க வேண்டிய செயல் சிறுநீரகங்களுக்கு இல்லாததாலும், சூடு வயிற்றுப் பகுதியில் குவிந்திருப்பதாலும், சிறுநீரகங்கள் வெளியிலுள்ள பனி வாடையால் குளிர்ந்திருக்கும். இந்தக் குளிர்ச்சியின் தாக்கத்தினால், நீர்ச்சுரப்பு அப்பகுதியில் கூடுகிறது. இதுவே சிறுநீர்ப் பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாகிறது. இந்தக் காலத்தையொட்டி ஜீரண உறுப்புகளின் நிலைக்கேற்ப அமைந்த உத்தம உணவு பொங்கல். அதன் செரிமானத்தில் , உடல் உட்புற சூட்டைத் தளர்த்தி, எல்லாப் பகுதிகளுக்கும் சீராகப் பரப்புவதால், சிறுநீரகங்களுக்குத் தேவையான சூடு கிடைப்பதால், அதன் செயல்பாடு சீராகி, நீர்ச்சுரப்பைக் கட்டுப்படுத்தும், விடியற்காலையிலேயே எழுந்து வெந்நீரில் குளித்து காய்ந்த உடை உடுத்தி வெளிக் குளிரைப் போக்கிக் கொள்வதன் மூலமாகவும், சிறுநீர் அதிக அளவில் போவதைத் தடுத்துக் கொள்ளலாம். ஐந்து உரைப்புள்ள பொருட்களாகிய திப்பிலி, கண்டந் திப்பிலி, செவ்வியம், கொடி வேலி வேர்ப்பட்டை, சுக்கு எனும் பஞ்சகோலம் சேரும் இந்த காந்தம் கஷாயத்தைக் காலை, மாலை குடித்து வருவது மிகவும் நல்லது. 15 மி.லி. கஷாயத்தை 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.

    (தொடரும்)


    spmeyyammaisp06 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1648
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயர்வேதம்: வாந்தியை நிறுத்த வழி!

    எனக்கு அடிக்கடி உமட்டலுடன் வாந்தியாகிறது. உணவுக்குழாய், வயிற்றுப் பகுதியில் பிரச்னை ஏதுமில்லை என்று மருத்துவர் கூறுகிறார். வாந்தியை நிறுத்த வழி என்ன?
    கிருஷ்ணன், ஆவடி.


    மனதிற்குப் பிடிக்காதது, உடலுக்கு ஒவ்வாத விஷப் பொருள், பித்த நீர் சுரப்பிகள் தூண்டப்படும் நிலை, மிதமிஞ்சிய பசியில் உண்ணும் உணவு, குடலிலுள்ள புண், இரைப்பையையும் குடலையும் இயக்கும் நரம்பு மண்டலங்களின் குமுறல், கபம் மார்பில் நிறைந்திருத்தல் போன்ற பல வகைப்பட்ட காரணங்களால் வாந்தி ஏற்படும். இவற்றுக்கு ஒரே விதமான சிகிச்சை அளிக்க முடியாது. வயிற்றில் புளிப்பு மிகுந்து உணவு செரியாமல் புளித்துத் தங்கியுள்ளபோது வாந்தி வரும் நிலையில் அதை உடன் நிறுத்துவது கெடுதலை ஏற்படுத்தும். வயிற்றுக்குக் கேடு விளைவிக்கும் அம்சம் வெளியாக வேண்டியது அவசியமே. அதை அடக்குவதற்கு மருந்து சாப்பிட்டால், விஷ சத்து உடலினுள் பரவி தலைவலி, காய்ச்சல், பேதி, மயக்கம் போன்ற பல உபாதைகளை ஏற்படுத்தும். சிலருக்கு உணவு செரிக்காமல் வாந்தியாகும். அப்போது சீரணமாகாத உணவுப் பொருள் வெளியாகும் வரை பட்டினி இருப்பது அவசியம்.

    வெறும் வயிற்றில் உமட்டலுடன் கொஞ்சம் சளியோ, புளித்த தண்ணீரோ, கோழையோ, நுரையுடன் உள்ள சளியோ வாந்தியானால், சாப்பிடவும் முடியாது, பட்டினியும் இருக்க முடியாது. உமட்டல் இருந்து கொண்டேயிருக்கும். வெறும் வயிறாக இருப்பதால் பசியும் இருக்கும். இந்த நிலையில் எந்த உணவையும் ஸ்பூன் ஸ்பூனாக சிறிது சிறிதாக இடைவெளி விட்டு அடிக்கடி சாப்பிட வேண்டி வரும்.

    வாந்தியை நிறுத்த நல்ல உணவு நெல் பொரி. இதைத் தனியே பொடித்துத் தூளாக்கி மோர் அல்லது தண்ணீர் விட்டுக் கரைத்துச் சாப்பிடலாம். கஞ்சியாகவும் வைத்துச் சாப்பிடலாம். வயிற்றில் அதிகமாக இடத்தை அடைத்துக் கொள்ளாமல் எளிதில் செரித்துவிடும். வாய்க்கும் ருசி நன்றாக இருக்கும். வாயிலுள்ள ருசியின்மையை மாற்றிவிடும்.

    நெல் பொரியைக் கஞ்சி காய்ச்சும்போது ஒரு கொதி வந்ததுமே இறக்கிவிடலாம். கொதிக்கும்போது, அதில் ஒரு ஏலக்காயையும், நான்கைந்து கிராம்பையும் போட்டு கஞ்சியாக்கினால் இந்தக் கஞ்சியே வாந்தியை நிறுத்திவிடும் மருந்தாகும். கஞ்சியை வடிகட்டி 1/2 - 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு போட்டுச் சாப்பிடலாம். அடிக்கடி வாந்தி எடுத்தால் ஸ்பூன் ஸ்பூனாக இந்த பொரிக் கஞ்சியைச் சாப்பிடலாம். பித்த வாந்தியில் வாய்க் கசப்பும், வாந்தியாகும் தண்ணீரில் மஞ்சள், பச்சை நிறம் காணப்பட்டால், இந்த நெல் பொரிக் கஞ்சியில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மாதுளம் பழச்சாறு போன்றவை சேர்த்துச் சாப்பிடலாம். உமட்டல், விக்கல், நாவறட்சி இவற்றைப் போக்கும். வாந்தியினால் ஏற்படும் உடல் நீரின் குறைவை, சிறிது உப்புச் சேர்த்து இந்தக் கஞ்சியைக் குடிப்பதன் மூலம், அதன் உபாதைகளைத் தடுக்கலாம்.

    உமட்டலைக் குறைக்க எலுமிச்சம் பழத்தின் தோலைக் கசக்கி முகர்ந்தால் உமட்டல் குறையும். தேனில் ஊறப்போட்ட ஆப்பிள், நாட்பட்ட வாந்தியை நிறுத்தச் சிறந்தது. ஐஸ், வாந்தியை இரைப்பையின் பரபரப்பையும் குழப்பத்தையும் குளிர்ச்சியால் மறக்கச் செய்வதன் மூலம் குறைத்துவிடும். வாந்தியை நிறுத்தும்.

    மயிலிறகின் சந்திர வட்டக் கண்கள் உள்ள பகுதியை நெய்த்திரி அல்லது சிற்றாமணக்கு எண்ணெய் திரியிட்ட விளக்கில் சாம்பலாக்கி, திப்பிலியின் சூர்ணமும் 1 -2 அரிசி எடை அளவில் வகைக்குச் சேர்த்து தேனில் குழைத்துக் கொடுத்தால், இரைப்பையின் குமுறலை அடக்கி, வாந்தியை நிறுத்திவிடும். விக்கல், பெருமூச்சு, மூச்சுத் திணறல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

    அரசம் பட்டையை நெருப்பில் சிவக்க வைத்துத் தண்ணீரில் துவைத்தெடுத்த நீரைத் தெளிய வைத்துச் சாப்பிட்டால், வாந்தி, விக்கல், நாவறட்சி குணமாகும். இந்துப்பு, சீரகம் சம அளவு, சிறு துண்டுகளாக்கிய எலுமிச்சம் பழத்துடன் பொடித்துச் சேர்த்து அனலில் வாட்டி சுவைத்துச் சாப்பிட, வாந்தி நிற்கும். வசம்பு சுட்ட கரி, ஏலக்காய் சுட்ட கரி, பலாச் சக்கை சுட்ட கரி 4 -6 அரிசி அளவு எடுத்து சிறிது தேனுடன் சாப்பிடலாம். பருத்தி விதைத்தூள், ஏல அரிசி, திப்பிலி, நெல்பொரி சம அளவு பொடித்து, அதே அளவு சர்க்கரை சேர்த்து 1/4 - 1/2 டீ ஸ்பூன் சாப்பிட இனம் தெரியாத வாந்தி கூட நிற்கும்.

    வயிற்றுக் குழப்பத்துடன் வாந்தியிருந்தால் கடுகை அரைத்து மேல் வயிற்றில் பூசி 10 -15 நிமிடங்கள் கழித்து அலம்பிவிட உடன் வாந்தி நிற்கும்.

    (தொடரும்)


    spmeyyammaisp06 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1649
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடலுக்குச் சக்தி தரும் நெய்ப் பொருள்!

    என்னுடைய வயது 68. மூன்று வருடங்களாக நான் புற்றுநோயால் அவதிப்படுகிறேன். உடல் மிகவும் மெலிந்து பலவீனமாக உள்ளது. தோலில் சுருக்கம் அதிகமாக உள்ளது. என்ன மருந்து சாப்பிடலாம்?
    அலர்மேல் மங்கை, திருவெறும்பூர்.


    மனித உடலில் பதின்மூன்று வகையான நெருப்புகள் எந்நேரமும் வேலை செய்து கொண்டிருப்பதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. வயிற்றில் ஜாடராக்னி எனும் ஒரு நெருப்பு, நாம் உண்ணும் உணவைச் செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியை உடல் உட்புறங்களிலுள்ள ரஸ - ரக்த - மாம்ஸ - மேத -அஸ்தி (எலும்பு) - மஜ்ஜை - சுக்லம்(விந்து) ஆகிய பகுதிகளில் இருக்கக் கூடிய ஏழு வகையான தாதுக்களில் பொதிந்துள்ள நெருப்புகளுக்கு உணவாக்கித் தருகிறது. படுசுறுசுறுப்பான இந்த ஏழு நெருப்புகளில் மிகவும் சூட்சுமமாக மறைந்துள்ள ஐந்து பூதாக்னிகளாகிய நிலம் - நீர் - நெருப்பு - காற்று

    மற்றும் ஆகாயம் ஆகியவை, வந்துள்ள சத்தான உணவுப் பகுதிகளிலிருந்து தமக்கு உகந்த பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து அந்தந்த தாதுக்களைப் போஷிப்பிக்கின்றன. உதாரணமாக இனிப்புப் பொருளாகிய பாயஸத்தை நிலம் என்னும் நெருப்பு பரபரப்புடன் ஸ்வீகரித்துக் கபம் எனும் தோஷத்தை போஷிப்பித்து உடலை ஊட்டமாக்குகிறது. அதுபோலவே ரஸம் - மாம்ஸம் - மேதஸ் - மஜ்ஜை மற்றும் விந்து ஆகிய தாதுக்களையும் ஊட்டப்படுத்தி போஷிப்பிக்கின்றது. உணவினூடே செல்லும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், ஜீரகம், தனியா, உப்பு, பட்டை, சோம்பு போன்ற சூடான வீர்யம் கொண்ட பொருட்களை, ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாகிய நெருப்பு, ஆர்வமுடன் வரவேற்று, தன் நண்பனாகிய பித்தத்தையும், ரத்தத்தையும் போதுமான அளவில் சூடேற்றி, அவற்றைத் திறம்படச் செயல்புரிய வைக்கிறது. பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, காராமணி, மொச்சை போன்றவை ஜாடராக்னியில் வெந்து, உட்பகுதிகளில் சத்தாக வரும்போது காற்று மற்றும் ஆகாயம் எனும் பகுதிகளில் மறைந்துள்ள நெருப்பு மிகுந்த உற்சாகத்துடன் அவற்றைக் கபளீகரம் செய்து வாயு எனும் தோஷத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக்குகிறது.

    இப்படி போட்டா போட்டி போட்டுக் கொண்டு செயல்படும் இந்த நெருப்புகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு மந்தகதியான நிலையில் உள்ளன. தகிக்க வேண்டிய நெருப்பு மந்தமானால், குண்டானில் உள்ள தண்ணீர் கொதிப்பதற்கு நேரமாவதைப் போல, நெருப்பின் தகிப்பினால் வேக வேண்டிய உணவுச் சத்து சரி வர வேகாமல் பதனழிந்து போய்க் கொண்டிருப்பதால், உங்களுக்கு உடல் மெலிவும், பலஹீனமும், தோல் சுருக்கமும் ஏற்பட்டுள்ளன.

    தங்களுடைய கடிதத்தின் ஒரு பகுதியில் நெய், வெண்ணெய், எண்ணெய்ப் பலகாரம், அசைவ உணவு, முட்டை போன்றவற்றை விட்டுவிட்டேன் என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அதற்கான காரணத்தை எழுதவில்லை. உடல் இயங்கத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு மாப்பொருளும், நெய்ப் பொருள்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. புரதம் நிறைந்த உணவுப் பொருள், உடலின் தேய்வை ஈடு செய்து புஷ்டியை அளிக்கிறது. புதிய ஜீவ கோசங்களை உற்பத்தி செய்கிறது. நீங்கள் குறிப்பிடும் நெய்ப் பொருள்களை விட்டுவிட்டதால், புரத வகை உணவுகளே மா - நெய்ப் பொருள்களின் செயலையும் புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், புதிய ஜீவகோசங்கள் மூலம் புஷ்டி தரவும் தேய்வை ஈடு செய்யவும் முடியாமல் உடல் இளைக்கிறது. நெய்ப் பொருளின் தனியம்சமான சக்தி தானமும் குறைவதால் இளைப்புடன் தோலும் சுருங்குகிறது.

    அதனால் நீங்கள் உணவுப் பொருள்களில் கொழுப்பு சத்து கொண்ட நெய்ப் பொருளை ஒரே சீரான அளவில் சேர்க்க வேண்டிய அவசியமிருக்கிறது. மாவுப் பொருள் - நெய்ப் பொருள் - புரதம் முதலியவை பாகம் அடைய எரிபொருளாகவும் பணியாற்றுகின்றன. நெய்ப்பின் ஆதாரப் பொருட்களாகிய எள், பால், மாமிசம் முதலியவற்றை மிகவும் குறைந்த அளவில் ஆனால் தேவையான அளவை உடலில் சிறுகச் சிறகுச் சேர்த்து உடல் நெருப்புகளுக்குத் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் உடல் ஊட்டமடையும், பலஹீனம் குறையும். தோல் சுருக்கமும் மறைந்துவிடும்.

    அமிருதபிராசம், கூஷ்மாண்ட ரஸாயனம், ப்ராம்ஹ ரஸாயனம், நாரசிம்ஹ ரஸாயனம், சியவனப் பிராசம், அஸ்வகந்தாதி லேஹியம், விதார்யாதி லேஹியம் போன்ற சிறந்த ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு உதவி புரியலாம். ஆயுர் வேத மருத்துவரை அணுகி விவரம் அறியலாம்.

    (தொடரும்)


    spmeyyammaisp06 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1650
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குழந்தையும் தாய்ப்பாலும்!

    எனது மகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகின்றன. குழந்தை அருந்துவதற்குப் போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தபோதிலும் சில நேரங்களில் குழந்தையால் தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாத சிரமம் உள்ளதாகத் தெரிகிறது. ஆயினும் குழந்தை தாய்ப்பால் குடிக்க ஆர்வமுள்ளதாக இருக்கிறது. இந்த வகைப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
    எம்.எஸ்.நளினி, சென்னை.


    குழந்தையினுடைய வாய் தாயாரின் மார்புக் காம்பில் சரியானபடி பதியும்படி அதன் பின் தலையைப் பிடித்து வைத்துக் கொள்வதன் மூலம், குழந்தைக்குத் தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிப்பது எளிதாக இருக்கும். மடியில் வைத்துக் கொள்ளும்விதம் சரியாக இல்லையென்றால் குழந்தையால் தாய்ப்பாலை குடிக்க முடியாது. இதை ஆங்கிலத்தில் incorrect feeding position என்று கூறுவார்கள்.

    வாய் அண்ணப் பகுதியில் பிளவு அல்லது உதட்டில் பிளவு போன்று குழந்தைக்கு இருந்தால், அதனால் பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாது. இதற்கு cleft palate or lip என்று பெயர். சிறு அறுவை சிகிச்சையின் மூலம் இப்பிரச்னையைச் சரி செய்துவிடுகிறார்கள்.

    தாடைப் பகுதியோ நாக்கோ சற்று உள் இருந்திருந்தால் குழந்தையால் பாலைப் பருக முடியாது. இது retracted jaw or tongue என்று அழைக்கப்படுகிறது.

    நாக்கினுடைய அடிப்பகுதி தொண்டையினுள்ளே சற்று அழுத்தி அமைந்திருந்தால் வாயினுள்ளே நாக்கினுடைய ஆக்கிரமிப்பு முழுவதும் இல்லாமற் போனால், குழந்தையினுடைய உறிஞ்சும் சக்தி குறைந்துவிடும். மேலும் வாயினுடைய மேற்கூரைப் பகுதியின் பிளவும் சேர்ந்திருந்தால், பாலை உறிஞ்சுவது கடினமாகும். இது pierre robin syndrome என்று கூறப்படுகிறது.

    சில குழந்தைகளுக்கு நாக்கில் படியும் படிவங்களால் பாலை சரி வர உறிஞ்ச முடியாது.

    தாய்ப்பால் போதுமான அளவில் இல்லாத போது, நிப்பிள் வைத்த பாட்டிலின் வழியாகப் பாலைப் புகட்டினால், குழந்தைக்கு மார்புக் காம்பு எது? நிப்பிள் எது? என்ற ஒருவிதமான குழப்பம் ஏற்படும். இதற்கு nipple confusion என்று பெயர்.

    தாய்ப்பாலை பருகும்போதே சில குழந்தைகள் தூங்கும். அப்போது அடிக்கடி அதன் வாய் மார்புக் காம்புகளிலிருந்து வெளியே வந்துவிடுவதால், அதனால் சரி வர உறிஞ்சி குடிக்க முடியாது. இதனை drowiness in in fant என்று அழைப்பார்கள்.

    மேற்குறிப்பிட்ட பிரச்னைகளால் குழந்தை சரியான அளவில் பால் குடிக்காமற் போனால் ஆதஉஅநப டமஙட மூலம் பாலை எடுத்து குழந்தைக்குப் புகட்ட வேண்டி வரலாம்.

    குழந்தைக்கு வாயில் புண் இருந்தால் தாய்ப் பாலையோ, பாட்டில் பாலையோ உறிஞ்சிக் குடிக்க முடியாது. தாயின் மார்பு, பாட்டிலின் நிப்பிள் இவற்றின் மேல் உள்ள அழுக்கினால் குழந்தைக்கு வாய்ப்புண் ஏற்படலாம். பால் தரும் தாயின் உணவில் புளிப்பு, உப்பு, காரம் அதிகமிருந்தாலும் நெய், பால் குறைவாக இருந்தாலும், தாய்ப்பாலின் வழியே சூடான வீர்யம் வருவதால் குழந்தைக்கு வாய்ப்புண் வந்துவிடும். இதிலும் கவனம் தேவை.

    குழந்தை பால் குடிக்கவில்லையே என்ற வருத்தத்தினால் அதைக் குடிக்கச் செய்ய வற்புறுத்தும் விதமாக அடிக்கடி மார்புக் காம்புகளில் குழந்தையின் வாயை வைக்கக் கூடாது. அப்படி வற்புறுத்துவதால், சிணுங்குவதும், சுணங்குவதும் அதிகமாகும்.

    அப்போதே, "வாழ்க்கையே பெரும் போராட்டம்தான் போலிருக்கிறது' என்று உணர ஆரம்பித்தால், தாய்ப்பாலை சரியாகப் பருகாது. தாயின் மார்பகத்திலிருந்து குழந்தை சரியாகக் குடிக்கத் தொடங்கிவிட்டால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, தாயைத் தனக்கு மிகவும் நெருங்கியவளாக உணர்வது போன்ற இன்பமயமான சுகத்தை அது தூங்கும்போது சப்புக் கொட்டுவதிலிருந்தும், இன்பக் கனவு காண்பதிலிருந்தும் சிரிப்பதிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும்.

    (தொடரும்)


    spmeyyammaisp06 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter