Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree4812Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1661
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் தொண்டை வலிக்கு அதி மதுரத் தூள்!

    என் வயது 53. தொண்டையில் எரிச்சல், உணவை விழுங்கும்போது தொண்டையில் வலி ஏற்படுகிறது. எண்டோஸ்கோபி செய்து பார்த்ததில் ஒன்றுமில்லை, சாதாரணமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் நான் கேன்சர் என நினைத்து பயப்படுகிறேன். வாய், குரல்வளை, காதில் கூட எரிச்சல் வருகிறது. குரல்வளையில் அழுந்திக் கொண்டேயிருக்கிறது. உடல் மெலிந்து முடிகொட்டி, சிவப்பு நிறத்தில் சின்ன மரு மாதிரி நிறைய வருகிறது. மரணபயம் ஏற்படுகிறது.
    கனகாம்பரம், அரவக்குறிச்சி.


    பித்தத்தின் இயற்கை குணமாகிய சூடு மற்றும் நீர்த்ததன்மை மேலெழுந்து வருவதால் உங்களுக்குத் தொண்டை எரிச்சல் ஏற்படுவதாகத் தெரிகிறது. படுத்திருக்கும் நிலையில் பித்தத்தின் மேலெழுந்து வரும் தன்மை எளிதாக இருப்பதால், உட்கார்ந்த நிலையை விட, படுத்திருக்கும் நிலையில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் அதிகமாகக் காணும். வாய், குரல்வளை, தொண்டை, உணவுக்குழாய்ப் பகுதிகள் கபதோஷத்தின் இயற்கையான நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம் போன்ற குணங்களின் ஆதிக்கப் பகுதிகளாகும். அதன் அடிப்பகுதியாகிய வயிறு மற்றும் சிறுகுடல் பகுதிகளில் நெருப்புக் குழம்பாக பித்தம் கனன்று கொண்டிருக்கிறது. அப்பகுதிகளில் நெருப்பின் அம்சம் கொண்ட மிளகாய், பெருங்காயம், பட்டை, சோம்பு, கரம் மசாலா, புளி, உப்பு, எண்ணெய் ஆகியவை உணவாக வரும் நிலையில், பித்தம் கிளறிவிடப் பட்டு, எரிமலையின் உட்பகுதியில் தீப்பிழம்புகள் வெடித்துக் குழம்பாக, அமைதியான மேற்பரப்பின் வழியாக வெளியே ஓடி நிலத்தில் பரவுவதுபோல, உங்களுக்குப் பித்தம் தன்னுடைய இடத்தை விட்டு, அமைதியான கபத்தினுடைய பகுதிகளில் வழிந்தோடுகிறது. அதனால் எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்துகிறது.
    இதுபோன்ற நிலையில், சோதனம் என்றும், சமனம் என்றும் இருவகையான சிகிச்சைகளை ஆயுர்வேதம் உபதேசிக்கிறது. மேலெழும் பித்தத்தை சோதனம் அதாவது அதை உடலிலிருந்து வெளியேற்றி, உடலைச் சுத்தப்படுத்துதல் எனும் சிகிச்சை முறை உத்தமமானது. பித்தத்தைச் சுத்தமாக வெளியேற்றும் சிகிச்சை முறைகளில் பேதி மூலம் வெளியேற்றுவதுதான் சிறந்தது. அதற்கு த்ரிவ்ருத் லேஹ்யம், அவிபத்தி சூரணம், த்ரிபலை கஷாயம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுவது நல்லது. குடலின் தன்மைக்கு ஏற்ப இவற்றைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகும். பேதி மருந்து சாப்பிடும் அளவிற்கு உங்களுக்கு உடலில் வலுவிருந்தால், இந்தச் சிகிச்சை முறைதான் சிறந்தது.
    பேதி மருந்தைச் சாப்பிடும் அளவிற்கு வலுவில்லாதிருந்தால், சமனம் அதாவது பித்த சீற்றத்தைத் கபத்தினுடைய இடத்திலிருந்து அடக்கி, அதன் இருப்பிடத்திற்கே திருப்பி அனுப்புவது என்ற சிகிச்சை முறை நல்லது. ம்ருத்வீகாதி லேஹ்யம், பரூஷகாதி லேஹ்யம், சங்கபஸ்மம், அப்ரகபஸ்மம், குடூச்யாதி கஷாயம் போன்றவற்றில் ஒன்றிரண்டை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது சிறந்தது.
    தொண்டை எரிச்சல், வலி, குரல்வளை உபாதைகளில் பொதுவாகவே அதிமதுரத்தூள் சிறந்தது. அதிமதுரத்தின் வேர் குளிர்ச்சியானது, இனிப்பானது, சிறுநீர் போக்கை எளிதாக்கும், மலச்சிக்கலைப் போக்கும். தொண்டை மற்றும் வயிற்றுப் புண் ஆற்றும். பாடகர்கள் அதிமதுரத்தூளைச் சாப்பிட்டால், ஸ்வரம் நன்றாக வரும் என்று பாவப்பிரகாசர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். யஷ்டி மது அல்லது மது யஷ்டி என்ற பெயரில் இது விற்கப்படுகிறது. உடல்நிறத்தைக் கூட்டி முடிவளர்ச்சியையும் துரிதப்படுத்தும் அதிமதுரத்தூளை நீங்கள் சுமார் ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து 1 ஸ்பூன் (5 மி.லி.) சுத்தமான தேனுடன் குழைத்து காலை, இரவு உணவிற்குப் பிறகு நக்கிச் சாப்பிடவும். இதன் மூலம் உங்கள் உபாதைகள் நீங்கி, உடல் வனப்பையும், உடல் வலுவையும் கூட்டலாம். தோல் உபாதையும் விரைவில் குணமாக நல்ல வாய்ப்பிருக்கிறது.
    உணவில் காரம், புளி, உப்பைக் குறைக்கவும். கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இனிப்பு வகைகளை மிதமாகச் சாப்பிடலாம். வீணாக மனதில் பயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

    (தொடரும்)



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1662
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: டைபாய்டு காய்ச்சல் தீர...!

    எனது மூத்த சகோதரிக்கு வயது 50. புற்றுநோய் உட்பட பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு வீட்டுக்கும், மருத்துவமனைக்குமாக அலைந்து வருகிறார். இப்போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்திருக்கிறது. ஆங்கில மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகிறது. ஆனால் குடல், இரைப்பையில் அல்சர் புண் ஏற்படுகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறை என்ன?
    பாகீரதி, தபோவனம்,
    தாம்பரம் சானடோரியம், சென்னை.


    டைபாய்டு காய்ச்சலுக்கு ஆந்த்ரிக ஸன்னிபாத ஜ்வரம் என்று பெயர். ஜ்வர சந்தாபம் அதாவது உஷ்ணம் துவக்கத்தில் குறைவாயும், பிறகு நாளுக்கு நாள் அதிகரிக்கவும் செய்யும். பிறகு ஜ்வரம் விடும்பொழுது நாளுக்கு நாள் குறைய ஆரம்பிக்கும். இதில் வாயு, பித்தம், கபம் மூன்று தோஷங்களில் எதில் கெடுதி ஏற்படுகின்றதோ அதற்கு தகுந்தாற்போல் உடலில் அறிகுறிகள் தென்படும். காய்ச்சல் வரப்போவதை முன்னதாகவே உடலில் காட்டும் அறிகுறிகள் பொதுவாக கடுமையாக இருக்கும். தூக்கமின்மை, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல், சோம்பல், நாவில் ருசியின்மை, தண்ணீர் தாகம், எரிச்சல், மயக்கம், கை,கால் நீட்ட மடக்க முடியாமல் வலி, மார்பில் கட்டைபோட்டது போல ஒரு வலி, உள்குளிர், பற்களில் கூச்சம், பல் ஈறுகளில் கொஞ்சம் கறுப்பு நிறம், நாக்கில் மாவு படிதல், கண்களில் நீர் வடிதல், காதுகளில் ஒரு விதச் சத்தம், குடல் இரைச்சல், பேச்சில் தடுமாற்றம், முக்கல் முனகல், மனதில் தெளிவின்மை, நினைவு குறைதல், எலும்பு பூட்டுகளிலும் தலையிலும் கடுமையான வலி, பசியின்மை, வியர்வை, மலம், சிறுநீர் வெளியாவதில் மிகத் தாமதம், மலக்குறைவு போன்றவை காணும். இக்குறிகள் எல்லாம் அதிகமாக ஆரம்பத்தில் ஏற்படாதிருந்தாலும் பட்டினியிருத்தல் அல்லது கஞ்சி திரவ ஆகாரம் மட்டும் அருந்திக் கொண்டு பூரண ஓய்வில் இருந்தாலும் கூட வேகம் குறையாமல் நாளுக்கு நாள் காய்ச்சல் கூடும்.

    உடல், உள்ளம், வாக்கு மூன்றுக்கும் ஆயாசம் சிறிதுமின்றி பூரண ஓய்வில் இருக்கவேண்டும். மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய பத்தியங்கள் எல்லாவற்றையும் வெறுப்பின்றி, சினமின்றி கடைப்பிடிக்க வேண்டும். இதனால் சீக்கிரம் இந்த உபாதையிலிருந்து விடுதலை பெறலாம். கட்டிலில் பஞ்சுமெத்தை படுக்கையை போட்டு படுப்பது நல்லது. மத்தியில் தொய்வு கொடுக்கும் கயிற்றுக் கட்டில் நல்லதல்ல. அதில் படுத்தால் குடலில் வாயு தங்கும், இடுப்பு வலி ஏற்படும். இரத்த ஓட்டமும் கொஞ்சம் பாதிக்கப்படும். அவர் படுத்திருக்கும் அறையில் சூடான வெயில் அடிக்கும்படி இருக்கக்கூடாது. உள்ளே வீசும் காற்று நேரில்படும்படியாக ஜன்னல், வாசற்படிக்கு எதிரில் படுக்கையிடக் கூடாது. மின்சார விசிறிக் காற்று உடலில் நேரடியாகப்படக் கூடாது. பனி, வெயிலுக்கு ஏற்றவாறு கம்பளி, பருத்தி விரிப்புகள் உபயோகிக்கலாம். பருத்தித் துணியால் உடலைப் போர்த்தி அதன்மேல் கம்பளியைப் போர்த்தினால் வியர்வையை நன்றாகப் பருத்தித் துணி உறிஞ்சிவிடும். கொசு வராதிருக்க அகில், சந்தனம், குக்கில், கடுகு, சாம்பராணி, வசம்பு, மஞ்சள், வேப்பம்பருப்பு, ஜடாமாஞ்சி, வெட்டிவேர், விளாமிச்சம் வேர் முதலிய சுகந்த, கிருமிநாசினி மருந்து சரக்குகளைப் பொடித்து படுக்கையறையின் உள்ளும், புறமும் காலை, மாலை, சந்தி நேரங்களில் தூபமிடுதல் நோயாளிக்கு நோய் தணிவதற்கும் மற்றவர்களுக்கு ஒட்டாமலிருப்பதற்கும் உதவும். கொசுவர்த்திச் சுருளை அவருடைய அறையில் உபயோகிக்கக் கூடாது.

    சிறுநீர் கழிக்க படுக்கையறையிலிருந்து அதிக தூரம் நடந்து போகக் கூடாது. கஞ்சி, திரவம் மருந்துகள் சாப்பிடுவதற்கு உட்கார வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உட்கார சக்தி நன்றாக ஏற்படும் வரையில் படுத்துக் கொண்டுதான் சாப்பிடவேண்டும். மலம் மிகக் குறைவாக இருக்கும் நாட்களில் பல் துலக்கல், வாய் கொப்பளித்தல் எல்லாம் படுக்கையில் ஒருக்களித்து படுக்க வைத்து செய்விப்பது செகரியம். காய்ச்சலின் கடுமை குறைய ஆரம்பித்த பிறகு உடல் பூராவும் வெந்நீரால் துடைத்துவிடுவது மிகவும் நல்லது.

    புழுங்கலரிசிக் கஞ்சியை வடிகட்டி கஞ்சித் தண்ணீரை மட்டும் சிறிது உப்பு சேர்த்து காலையில் மற்றும் மதிய வேளையில் சாப்பிடுவது நல்லது. எளிதில் செரிக்காத உணவுகளைச் சாப்பிடக் கூடாது. நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிமதுரம், விளாமிச்சம்வேர் கஷாயம் நல்ல குணம் தரும். இது பித்த ஆதிக்கத்தினால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சலுக்கு நல்லது. கண்டங்கத்திரி வேர், சீந்தில்கொடி, சுக்கு, வெண்கோஷ்டம் இவற்றின் கஷாயம் வாத கப ஆதிக்கத்தினால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சலுக்கு நல்லது. தினம் மூன்று நான்கு முறை சாப்பிடலாம். தேவதாரு, பர்பாடகம், சிறுதேக்கு, கோரைக்கிழங்கு, வசம்பு, கொத்தமல்லி விதை, கடுக்காய், சுக்கு, ஓமம், திப்பிலி ஆகியவற்றின் கஷாயமும் சாப்பிட மிகவும் நல்லது. ஸூதர்ஸனம் சூரணம் அரை, ஒரு ஸ்பூன் சிறிது தேன் குழைத்து காலை, இரவு உணவிற்கு பின் சாப்பிட வயிற்றில் புண் ஏற்படாதவாறு பாதுகாப்பதோடு டைபாய்டு காய்ச்சலையும் விரைவில் தணிக்கும் ஆற்றல் உடையது. பார்ங்யாதி கஷாயம் எனும் பெயரில் தயாரித்து விற்கப்படும் கஷாயம் ஆந்த்ரிக ஜ்வரம் எனப்படும் டைபாய்டு காய்ச்சலுக்குச் சாப்பிடவேண்டிய நல்ல கஷாயமாகும்.

    (தொடரும்)



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1663
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தோல் சுருக்கம், மங்கு குணமாக!

    எனக்கு வயது 29. இன்னும் 4 மாதங்களில் திருமணம் நடக்க இருக்கிறது. உடலில் கடுமையான வறட்சி, முகத்தில் மங்கு, பித்த சூடு, இரத்தசோகை, மூலவியாதி போன்ற உபாதைகள் உள்ளன. இவைகளால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்த உபாதைகள் தீர ஆயுர்வேதமருந்துகள் உள்ளனவா?
    (பெயர் குறிப்பிடவில்லை), சிதம்பரம்.


    தங்களுடைய நீண்டதொரு கடிதத்தில் தேங்காய் எண்ணெய்யை எவ்வளவு தடவினாலும் வறட்சி நீங்கவே இல்லை என்றும், வாயில் உமிழ்நீர் அதிகமாகச் சுரப்பதாகவும், தினமும் 6 லிட்டர் தண்ணீர் குடித்தும் உடல் சூடு நீங்கவே இல்லை என்றும், முகம், கை, கால் முழுவதும் சுருக்கங்கள் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். உடலில் வாதம் மற்றும் பித்ததோஷத்தின் இயற்கை குணங்களாகிய வறட்சி மற்றும் சூடு போன்றவை அதிகமாக இருக்கும் தறுவாயில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் காணப்படும். இதனால் நீங்கள் வாதம் மற்றும் பித்ததோஷத்தின் ஆதிக்கத்தினால் உடல் வறட்சி, பித்தச்சூடு, இரத்தசோகை போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுவது இயற்கையே. தங்கத்தை உருக்குவதற்காகப் பொற்கொல்லர் ஒரு பையினுள் நிரம்பியுள்ள வாயுவை வேகமாக கைகளால் அடிப்பதையும், அதன் மூலமாக நெருப்பு கொழுந்து விட்டு எரிவதையும், அந்த நெருப்பில் தங்கத்தை உருக்கி அதனுடைய வடிவத்தை மாற்றுவதையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதுபோல மனிதர்களுடைய பெருங்குடல் பகுதியிலுள்ள வாயுவின் மேலெழும் சீற்றத்தினால் அதன் மேற்பரப்பிலுள்ள பித்தம் கிளறிவிடப்பட்டு தன் இடத்தைவிட்டு நெகிழ்ந்து வெளியேறும் தறுவாயில் கடுமையான உடற்சூடு, இரத்தசோகை, முகத்தில் மங்கு போன்றவை ஏற்படக்கூடும். வாயுவின் வறட்சியும் பித்தத்தினூடே கலந்துவிடும் தறுவாயில் அவை இரண்டும் சேர்ந்து உடலெங்கும் பரவும்போது கடும் வறட்சியையும், தோலில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

    பித்த வாயுக்களை அடக்குவதில் நெய் சிறந்த மருந்தாகப் பயன்படும். சுமார் 15 மி.லி. பசுநெய்யைச் சூடான அரை கிளாஸ் பசும்பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல் பகுதிக்கு தேவையான அளவு நெய்ப்பு எனும் குணம் விரைவில் கிடைப்பதால் உங்களுடைய பல உபாதைகளும் நீங்குவதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. ஒரு சில மூலிகை நெய் மருந்துகளும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். தாடிமாதி க்ருதம் எனும் நெய் மருந்தை சுமார் 15 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை, மூல வியாதி உபாதை, பித்தவாயுக்களால் ஏற்படும் கணச்சூடு, உடல் வறட்சி போன்றவை நீங்குவதோடு கல்லீரல் செயல்பாடு மேம்படவும் பெரிதும் உதவும். இதன் மூலமாக தோல் சுருக்கம், மங்கு போன்ற உபாதைகளும் குணமாகும். சுமார் 48 நாட்கள் வரை இதை சாப்பிடலாம். விதார்யாதி க்ருதம் எனும் மூலிகை நெய் மருந்தை சுமார் 15 மி.லி. மாலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீங்கள் குறிப்பிடும் பல உபாதைகளும் குணமாகக் கூடும்.

    உணவில் கடும் வறட்சி தரும் எண்ணெய் சேர்க்காத உணவுப் பொருட்களையும், உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் காரம், புளி மற்றும் உப்பு போன்ற சுவைகளை அதிகம் சேர்க்காதிருப்பதே நலம். வாரம் இருமுறை தலைக்கு தேங்காய் பாலையும் மற்றும் உடலெங்கும் நல்லெண்ணெயையும் தேய்த்துக் குளிக்கவும்.

    முகத்தில் மங்கு வருவதற்கு இரத்தத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் கோளாறே முக்கிய காரணம் என்று ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளது. அதனால் இரத்தத்தை வெளிப்புறமாகச் சுத்தம் செய்து கொள்ளும் சிகிச்சை முறைகளாலும் நீங்கள் பயன்பெறலாம். அந்த வகையில் வெண்சந்தனம், மஞ்சட்டி, நன்னாரி வேர் ஆகியவற்றை நன்றாகப் பொடி செய்து துணியால் சலித்து அந்தச் சூரணத்தை பன்னீரில் குழைத்து முகத்தில் மங்கு ஏற்பட்டுள்ள பகுதியில் காலை நேரத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து முகத்தை நன்றாகக் கழுவி வரவும். முகத்தை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு அடிக்கடி முகத்தைக் குளிர்ந்த நீரினால் கழுவி வரவும்.

    பித்தம் மற்றும் வாத சீற்றத்தை ஏற்படுத்தும் காரமான சுவையுள்ள உணவுப் பொருட்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். மனதில் ஏற்படும் கோப தாபங்களாலும், பித்தவாயு ரஜஸ் எனும் மனோதோஷத்துடன் சீற்றமடையும் என்பதால் நீங்கள் அவற்றிற்கு இடம் தராமல் முடிந்த வரை மன அமைதியுடனும், தங்களுக்கு அமையப்

    போகிற இன்பமான மணவாழ்க்கையையும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani : 02 February 2014



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1664
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    எலும்பு தேய்மானத்தை தடுக்க...

    வயதானவர்களுக்குஎலும்புத்தேய்மானம்வருவதுஇயற்கை. ஆனால்உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்தநிலையிலேயேவேலைபார்த்தல், கால்சியம்சத்துக்குறைபாடானஉணவுபழக்கம், பாஸ்ட்புட்உணவுகள்சாப்பிடும்பழக்கம்எனஎலும்புத்தேய்வுக்குமேலும்பலகாரணங்கள்உள்ளன.


    எலும்புத்தேய்மானத்தால்ஏற்படும்தொந்தரவுகளில்இருந்துகாத்துக்கொள்வதுபற்றிவிளக்கம்அளிக்கிறார்பிசியோதெரபிஸ்ட்ரம்யா. மனிதஉடலில் 206 எலும்புகள்உள்ளன. இந்தஎலும்புகளில்மாற்றங்கள்தொடர்ச்சியாகஇருக்கும். எலும்புகளுக்கானஅடிக்கட்டமைப்பைபுரதங்கள்வலுவாக்குகின்றன.


    கால்சியம், பாஸ்பேட்போன்றமினரல்கள்எலும்புகளுக்குஇடையில்பரவிமேலும்வலுசேர்க்கிறது. இந்தஇயக்கம்உடலில்தொடர்ந்துஇருப்பதால்உணவில்அதிககால்சியம்தேவைப்படுகிறது.


    இதற்குசிறுவயதுமுதல்பால்மற்றும்பச்சைக்காய்கறிகள்போதுமானஅளவுஎடுத்துக்கொள்ளவேண்டும். நாம்உண்ணும்உணவில்உள்ளசத்துக்களைஉடல்உட்கிரகித்துக்கொள்வதற்கானஉணவுமற்றும்உடற்பயிற்சிகளைவழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.



    KOTHAISURESH

  5. #1665
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    எலும்பைப்பொறுத்தவரைஅளவுக்குமீறிஅழுத்தம்கொடுப்பதுமற்றும்விபத்துக்களினால்எலும்புமுறிவுஏற்படும். காயங்களினால்ரத்தக்கட்டுஉண்டாகும். மினரல்கள்இழப்புகாரணமாகஎலும்புத்தேய்வுஏற்படும். எலும்புத்தேய்வின்அறிகுறியாகஉடலில்வலிஏற்படுகிறது.


    எலும்புவலுவிழக்கும்போதுஉடல்எடைமுழுவதையும்தசைப்பகுதிதாங்குகிறது. இதனால்தசையும்பலவீனம்அடையும். உடல்சோர்வு, வலி, வீக்கம்ஏற்படலாம்.மூட்டுப்பகுதியில்வீக்கம்உண்டாகும். உடலைஅசைப்பதேகடினமாகஇருக்கும். உடலில்நோய்எதிர்ப்புசக்திகுறையதுவங்கும்.


    எலும்புத்தேய்மானம்ஏற்படுவதைதடுக்ககால்சியம்உள்ளஉணவுகள்எடுத்துகொள்ளவேண்டும்.


    மேலும்உடற்பயிற்சிசெய்யும்போதுஎலும்புக்குதேவையானதாதுக்கள்தசைப்பகுதியில்இருந்துஉட்கிரகிக்கப்படும். இதனால்சத்தானஉணவுசாப்பிட்டாலும்உடற்பயிற்சிகட்டாயம்அவசியம்.




    KOTHAISURESH

  6. #1666
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    இதில்எலும்பின்வலிமைக்குதேவையானஊட்டச்சத்துகள்கிடைத்துவிடுகிறது. இதனால்எளிமையானநடைப்பயிற்சி, வீட்டுவேலைகள்மற்றும்தோட்டவேலைகளும்இதற்குகைகொடுக்கும்.


    எலும்புமற்றும்மூட்டுக்களில்வலிகாணப்பட்டால்உடனடியாகமருத்துவரைஅணுகிஎலும்புஉறுதித்தன்மைகுறித்தபரிசோதனைசெய்துகொள்ளவேண்டும். இதன்மூலம்எலும்பில்தாதுக்களின்குறைபாடுஅளவுஅறிந்துஅதற்குதகுந்தசிகிச்சைசெய்துகொள்ளலாம்.


    பாதுகாப்புமுறை: சிறுவயதுமுதல்ஏதாவதுஒருஉடற்பயிற்சியைவழக்கப்படுத்திக்கொள்ளலாம். உட்கார்ந்தநிலையில்வேலைசெய்பவர்கள்நடைப்பயிற்சிமற்றும்சைக்கிள்பயிற்சிமூலம்தங்கள்எலும்பைஉறுதிசெய்துகொள்ளலாம்.


    உடல்எடைஅதிகரிப்பின்காரணமாகஎலும்பின்உறுதித்தன்மைகுறையும். எலும்பின்உறுதிகுறைந்துநோய்எதிர்ப்புசக்திஇழக்கும்நிலைக்குதள்ளப்பட்டுமற்றநோய்கள்உடலைஎளிதில்தாக்கவாய்ப்புள்ளது.



    KOTHAISURESH

  7. #1667
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    பெண்களுக்குமெனோபாஸ்ஏற்பட்டபின்னர்ஈஸ்ட்ரோஜென்மற்றும்புரோஜெஸ்ட்ரான்ஆகியஹார்மோன்சுரப்புகுறையும். இதனால்எலும்புத்தேய்வுஏற்படும்.கால்சியம்குறைபாடுஏற்படும்.


    எனவேஇந்தசமயத்தில்பெண்கள்முழுகவனத்துடன்இருந்துகால்சியம்சத்துள்ளஉணவுகள்எடுத்துக்கொள்ளவேண்டும்.


    வயதானவர்களுக்குஆஸ்டியோபீனாஎனப்படும்எலும்புகொழகொழப்புத்தன்மைஅடைகிறது. இதனால்உடல்எடையைதாங்கமுடியாமல்கால்கள்வளைந்துவிடும்.


    ஆஸ்டியோபோரசிஸ்என்றபாதிப்பால்கீழேவிழுந்தால்கூடஎலும்புஉடைந்துவிடும். எனவேஎலும்பின்உறுதியைப்பாதுகாப்பதுமிகவும்அவசியம்.





    KOTHAISURESH

  8. #1668
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    ரெசிபி


    பொன்னாங்கன்னிக்கீரைகட்லட்: பொன்னாங்கன்னிக்கீரைஇரண்டுகட்டுசுத்தம்செய்துபொடியாகநறுக்கிஎண்ணெய்யில்வதக்கிகொள்ளவும். பெரியவெங்காயம் 1,பச்சைமிளகாய் 2, கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன், இஞ்சிபூண்டுவிழுதுஒருடீஸ்பூன், கரம்மசாலாஒருடீஸ்பூன், உப்புதேவையானஅளவுஎடுத்துஅவற்றைவாணலியில்எண்ணெய்விட்டுவதக்கவும்.


    பின்னர்கீரையுடன்சேர்த்துசிறிதளவுதண்ணீர்சேர்த்துவடைபதத்துக்குபிசைந்துவிரும்பியவடிவத்தில்தட்டிபிரட்தூளில்உருட்டிதோசைக்கல்லில்வேகவைத்துஎடுக்கவும். பொன்னாங்கன்னிகீரையில்கால்சியம்சத்துஉள்ளது.




    KOTHAISURESH

  9. #1669
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    ஓட்ஸ்குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய்மற்றும்சோம்புஉள்ளிட்டமசாலாபொருட்கள் 1 டீஸ்பூன்எடுத்துதேங்காய்சேர்த்துஅரைத்துக்கொள்ளவும். 2 வெங்காயம்,தக்காளி, 2 கப்ஓட்ஸ்ஆகியவற்றைசேர்த்துவதக்கவும்.


    இத்துடன்அரைத்தவிழுது, கொத்தமல்லிதூள்சேர்த்துதண்ணீர்விட்டுகொதித்தபின்இறக்கவும். சப்பாத்தி, தோசைக்குதொட்டுக்கொள்ளலாம். கால்சியம்சத்துஅதிகம்உள்ளது.


    பிரட்தோசை: தோசைமாவுஇரண்டுகப்எடுத்துக்கொள்ளவும். அதில்பச்சைமிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லிஆகியவற்றைபொடியாகநறுக்கிமாவில்கலந்துகொள்ளவும். பிரட்துண்டுகளைமாவில்போட்டுதோசைக்கல்லில்சுட்டுஎடுக்கவும். இதில்தேவையானஅளவுகார்போஹைட்ரேட்கிடைக்கிறது.

    டயட்


    KOTHAISURESH

  10. #1670
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    பழங்கள், மற்றும்பச்சைக்காய்கறிகள்அதிகமாகஉணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகுஆகியவற்றைதினமும்உணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆரஞ்சுமற்றும்மஞ்சள்வண்ணக்காய்கறிகள்மற்றும்பழங்களும், மக்காச்சோளம்ஆகியவற்றையும்உணவில்சேர்க்கவும். அசைவஉணவுகள்வாரம்ஒருமுறைமட்டும்எடுத்துக்கொள்ளலாம். தினமும்ஒருமுட்டைவேகவைத்துசாப்பிடவேண்டும்.


    சுண்டகாய்ச்சியபால்ஒருநாளைக்குநான்குடம்ளர்கள்அருந்தவேண்டும். காய்கறிகளைஅரைவேக்காட்டில்சாப்பிடுவதன்மூலம்கால்சியம்சத்துமுழுமையாககிடைக்கும். உலர்ந்ததிராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளைமற்றும்இரும்புச்சத்துஅதிகம்உள்ளஉணவுவகைகளையும்தினமும்உணவில்சேர்க்கவும். சின்னவெங்காயம்குழம்பில்சேர்க்கலாம். என்கிறார்உணவுஆலோசகர்சங்கீதா.





    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter