Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1701
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    வயிற்றுப்போக்குஉள்ளவர்கள்பசும்பால்சாப்பிட்டால், பேதிஅதிகமாகப்போகும். ஆனால்,ஆட்டுப்பால்அதைஉடனேகட்டுப்படுத்தும்!
    கழுதைப்பால்ரொம்பசூடு. லேசாகப்புளிப்பும்உவர்ப்பும்கலந்தசுவைகொண்டது. வாதத்தொந்தரவுகளுக்குஇதுமருந்தாகப்பயன்படுகிறது. கக்குவான்இருமலுக்குமிகச்சிறந்தசிகிச்சை,கழுதைப்பால்அருந்துவதுதான்!


    Sponsored Links
    jv_66, sumitra and Sriramajayam like this.

    KOTHAISURESH

  2. #1702
    krithi's Avatar
    krithi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    81

    Re: Today's Medical Info

    Kothai,

    ungaloda ella tipsum nalla iruku... Have to remember when it's needy...

    thanks,
    Krithi.

    jv_66, datchu, sumitra and 1 others like this.

  3. #1703
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    'நட'ப்பது நன்மைக்கே!

    * வயிற்றை உள்ளிழுத்தபடி பயிற்சியில் ஈடுபடுங்கள்.
    * கை அசைக்காமல் நடந்தால் அது முதுகெலும்பின் அழுத்தத்தை ஏற்படுத்தும். கைகளை நன்றாக வீசியபடி நடங்கள்.
    * கரடு முரடான பாதையை விடுத்து, சம தளத்தில் நடங்கள்.
    * ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்யாமல், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
    * மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதேபோல முடிக்கும்போது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பயிற்சியை முடியுங்கள்.
    * சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடந்தால் கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். முதுகை வளைக்காமல், நேராக நடை போடுங்கள்.

    Today's  Medical Info-image.jpg


    Dr Vikatan


    jv_66, datchu and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1704
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொடர்ச்சியான தலைவலி நீங்க...!

    நான் பொறியியல் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். கஹல்ற்ர்ல் உபயோகிப்பது எனக்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எனக்கு தலைவலிப் பிரச்னை மிக அதிகமாக உள்ளது. குறைந்தது 4 - 5 நாட்கள் தொடர்ச்சியாகத் தலைவலி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை அறிய இயலவில்லை. கண்ணாடி மாற்றியும் பயனில்லை. இத் தலைவலியைக் குறைக்க ஆயுர்வேதம் மூலம் முடியுமா?
    சிவ. வெங்கடேஷ், திருக்கோவிலூர்.


    மனிதர்களுடைய தலைப்பகுதியில் தர்பகம் என்ற ஒரு கபம் இருந்து செயல் படுகிறது. இந்த கபம் தலைப்பகுதியில் உள்ள ஐம்புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் பகுதிகளுக்குத் தேவையான அளவு ஊட்டத்தைத் தந்து அதன் மூலம் புலன்களின் செயல்பாடுகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த தர்பகம் என்ற கபத்தின் ஊட்டம் கெடாமல் இருக்க உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளின் சீரான சேர்க்கை அவசியம். அதனால் இந்த தர்பகம் எனும் கபம் உங்களுடைய விஷயத்தில் தன் ஊட்டத்தை இழந்து வருவதாகத் தெரிகிறது. அதற்கு முக்கிய காரணமாக அதிகமாகக் கணினியைப் பயன்படுத்துவதால் தர்பகக் கபத்தினுடைய செலவு அதிகரித்து அதனுடைய தேய்மானம் ஏற்படும் பகுதியில் நரம்புகளில் வாயுவினுடைய ஆதிக்கம் அதிகமாகிறது. அந்தத் தேய்மானத்தை ஈடு செய்யும் வகையில் உணவின் வரவும் தகுந்த ஓய்வும் கிடைக்காமல் போகும் நிலையில் நரம்பு மண்டலத்தில் வாயுவினுடைய வறட்சியினால் தலைவலி ஏற்படுகிறது.

    அதனால் நீங்கள் முன் குறிப்பிட்ட மாதிரி உணவில் இனிப்பான பதார்த்தங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். புளிப்பும், உப்பும் மிதமாகச் சேர்க்கலாம். கணினியை அதிகநேரம் பார்த்து வேலை செய்ய வேண்டியிருப்பதால் கண்கள் சோர்வடைந்தவுடன் மேலும் அதற்கு வேலைப் பளுவைத் திணிக்காமல் சிறிது நேரம் ஓய்வு தரும்படி பார்த்துக் கொள்ளவும். தகுந்த ஓய்வு கண்களுக்கு கிடைத்துவிட்டால் கண்களைக் குளிர்ந்த நீரில் ஒரு முறை நனைத்து இதமாகத் துடைத்துவிட்டு அதன் பிறகு மறுபடியும் உங்களுடைய வேலைகளைத் தொடரலாம். வெயிலில் செல்ல நேரும்போது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் கண்ணாடியை அணிந்து கொள்ளவும்.

    குளிர்ச்சி மற்றும் ஊட்டத்தைத் தரும் பழரசங்கள், பாசந்தி, பால்கோவா, கரும்புச்சாறு, நெய், பால், இனிப்பு லஸ்ஸி போன்றவற்றை உங்களைப் போன்ற மாணவர்கள் அதிகம் சாப்பிடவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. காரணம், இவற்றின் மூலம் மூளைப்பகுதிக்கு தேவையான அளவு ஊட்டச்சத்தைப் பெறலாம். தேங்காய் எண்ணெய்யை வாரம் இருமுறையோ மூன்று முறையோ தலையில் அரை, முக்கால் மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் காலை வேளைகளில் குளித்துவந்தால் தலையைச் சார்ந்த தர்பகக் கபத்திற்கு அனுகூலமாக இருக்கும்.

    தலையில் கனம், நீர்க்கோர்வை, ஜலதோஷம், மூக்கடைப்பு, தும்மல் போன்ற உபாதைகள் ஏதும் தங்களுக்கு இல்லாதிருந்தால் க்ஷீரபலா101 எனும் நெய்மருந்தை லேசாக உருக்கி மூக்கினுள் ஒவ்வொரு துவாரத்திலும் விட்டு மெதுவாக உறிஞ்சி வருவதன் மூலம் நரம்பு மண்டலத்தில் பரவியுள்ள வாயுவின் வறட்சி நீங்கி தலைவலி உபாதை குணமாகி விடும். ஆனால் மேற்குறிப்பிட்ட உபாதைகள் இருக்கும் பட்சத்தில் ராஸ்னாதி சூரணம் எனும் ஆயுர்வேத மருந்தை இஞ்சிச் சாறில் குழைத்து, சிறிது சூடாக்கி நெற்றியில் பற்று போட்டு சுமார் அரை மணி, ஒரு மணி நேரம் வைத்திருந்து அதன் பிறகு அலம்பி விடுவதன் மூலமாக நீர்க்கோர்வை உபாதையுடன் கூடிய தலைவலியும் நீங்கிவிடும். கண்களில் உள்ள நீர் வற்றாதிருக்க கண்களின் உள்ளே விடும் தர்ப்பணம், ஆஸ்சோதனம், அஞ்ஜனம், புடபாகம் எனப்படும் ஆயுர்வேத சிகிச்சைமுறைகள் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் தங்கி செய்துகொள்ள வேண்டிய சிறப்பான சிகிச்சைமுறைகளாகும். தசமூலரஸôயனம் எனும் ஆயுர்வேத லேஹ்யமருந்தை 1 - 2 டீஸ்பூன் (5 கிராம் முதல் 10 கிராம் வரை) இரவில் படுக்கும்முன் நக்கிச் சாப்பிட்டு வர தலைவலி நீங்குவதற்கு உபயோகமான ஒரு மருந்தாக அமையும்.

    (தொடரும்)



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1705
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: நரம்பு மண்டலம் வலுப் பெற!

    எனது மனைவிக்கு வயது 72. எப்பொழுதும் தலையில் பேன் ஊர்வது போலவும் தலையில் நரம்பு இழுப்பது போலவும் உணர்வு உள்ளதாக சொல்கிறாள். ஆனால் அவளது தலையில் ஈரோ பேனோ இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் இடது பக்கக் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது. இரு கண்களிலும் கண் புரை ஆபரேஷன் ஆகி சில வருடங்களாகி விட்டன. இரண்டு தோள்பட்டை, இடுப்பு, காலில் மூட்டு போன்ற பகுதிகளில் வலியும் உள்ளதால் அவஸ்தைப் படுகிறாள். இவை குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
    ட.ஏ.உதயமூர்த்தி, கோவை.


    தலையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வாயுவின் சீற்றம் நரம்பு இழுப்பிற்குக் காரணமாகலாம். அதனால் தலையில் பேன் ஊறுவது போலத் தோன்றும். கண்ணிலுள்ள நீரின் அழுத்தம் அதிகரிக்கும்பொழுது அது கண்ணீராக வெளியேறும். மூட்டுகளில் உள்ள ஸ்லேஷகம் எனும் கபத்தின் தேய்மானம் வலியை ஏற்படுத்தும். தலையில் நான்கு வகையான சிகிச்சை முறைகளால் அங்குள்ள நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

    அப்யங்கம் எனப்படும் தலையில் மூலிகைத் தைலத்தை நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது எனும் வைத்திய முறை நல்லது. அதற்கடுத்ததாக úஸகம் எனப்படும் மூலிகைத் தைலத்தை தலையில் தாரையாக விடுவது எனும் சிகிச்சை முறை அதை விடச் சற்றே சிறந்தது. இந்த இரண்டு வைத்தியமுறையை விட பிசு எனப்படும் மூலிகைத் தைலத்தை தலையில் வெதுவெதுப்பாக ஊறவிடும் முறை மேலும் சிறந்தது. இவை அனைத்தையும் விட சிரோவஸ்தி எனப்படும் ஒரு ரெக்ஸின் துணியைப் பரிவட்டமாகக் கட்டி நடுவில் குழியுடன் வைத்து அதன் உட்புறத்தில் தலைப்பகுதி நன்றாக மூழ்குமளவிற்கு மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக ஊற்றி சுமார் முக்கால் மணி நேரம் வைத்திருக்கும் முறை மிக மிகச் சிறந்தது. ஆனால் இந்த சிகிச்சை முறையின் பொழுது தலைமுடியை முழுவதுமாக அகற்றவேண்டி வரும். சற்றே கவனத்துடன் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஓர் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் செய்து கொள்வது நல்லது.

    இதன் மூலம் தலையில் ஏற்பட்டுள்ள வாயுவின் சீற்றத்தை நன்றாகக் கட்டுப்படுத்தலாம். கண்ணீர் வருவதை குறைக்க முடியும். எண்ணெயினுடைய வீர்யம் முதுகுத் தண்டுவடம் வழியாக கீழ் இறங்குவதால் மூட்டுகளுக்குத் தேவையான வழுவழுப்பும் கிடைக்கும். எலும்புகளின் தேய்மானத்தை இந்த சிகிச்சையின் மூலம் குறைக்க இயலும். உடலிலுள்ள சீதோஷ்ண நிலை, வன்மை ஆகியவற்றைப் பொறுத்து மூலிகைத் தைலம் நபருக்கு நபர் மாறுபடலாம்.

    மூக்கில் எண்ணெய் விடும் சிகிச்சை முறையாலும் இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம். க்ஷீரபலா101, கார்பாசாஸ்த்யாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை நான்கு சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறிஞ்சும் சிகிச்சையால் நரம்புமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியைப் போக்கமுடியும்.

    தசமூலரஸôயனம் எனும் லேகியமருந்தை ஒன்றிரண்டு டீ ஸ்பூன் அதாவது சுமார் 10 கிராம் வரை காலை இரவு உணவிற்குப் பிறகு சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடுவதால் தலையிலுள்ள நரம்பு மண்டலம் வலுப்படும். அங்கு ஏற்பட்டுள்ள நரம்பு இழுப்பு ஊறுவது போன்ற தன்மை போன்றவையும் குணமாகக் கூடும். சுமார் 48 நாட்கள் வரை இந்த மருந்தைச் சாப்பிடலாம். சர்க்கரை உபாதை இருக்கும் பட்சத்தில் இந்த மருந்தைத் தவிர்த்து வேறு சில ஆயுர்வேத மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

    தலைக்கு குளிர்ந்த நீரை விட்டுக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் இரவில் படுத்து உறங்குவதைத் தவிர்ப்பது நலம். வாயுவை அதிகரிக்கச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, பருப்பு வகைகள் கடலை வகைகள் சூடாறிப்போன உணவுப் பண்டங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும் நல்லதே.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1706
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாடங்களை நன்றாகப் படிக்க...!

    எனது 16 வயதுடைய மகள் பத்தாம் வகுப்பில் படிக்கிறாள். நல்ல புத்திசாலிப் பெண். ஆனால் படிப்பில் நாட்டமில்லாமலும், எதற்கெடுத்தாலும் அவசரப்படுவதும், கோபப்படுவதும், வாக்குவாதம் செய்வதுமாக இருக்கிறாள். ஓர் இடத்தில் ஐந்து நிமிடங்கள் கூட நிலையாக இருக்கமாட்டாள். மேலும் தலைவலியாலும், காதுவலியாலும் அவதிப்படுகிறாள். அவை குணமாகி என் மகள் நன்கு படித்து, நற்குணத்துடன் வாழ்வில் முன்னேற ஆயுர்வேதம் காட்டும் வழிமுறைகள் எவை?
    சாந்தி, கோயமுத்தூர்.


    ஸாதகம் என்றொரு பித்தம் இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அறிவு, நுண்ணறிவு, தன்னிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவற்றை அளித்து தனக்கு விருப்பமான புலப்பொருளடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அவற்றை நிறைவேற்றிக் கொள்ளுதல் இவற்றால் ஸாதக பித்தம் என்று வழங்கப்படுகிறது. இந்த ஸாதக பித்தத்தை ஊக்குவிப்பதற்கு வயிற்றிலுள்ள பாசகம் என்ற உணவை செரிக்கச் செய்யும் பித்தத்தின் நேரடியான உதவி தேவையிருக்கிறது. உண்ணும் உணவிலிருந்து அது சத்தான பகுதியையும், மலத்தையும் பிரிக்கிறது. தன் இருக்கையில் இருந்துகொண்டே ஸாதக பித்தத்திற்கு ஊட்டம் அளிப்பதால் இந்த பாசக ஸாதக பித்தங்களுக்கிடையே உள்ள தொடர்பானது சிறப்பாக அமையும் பட்சத்தில் உங்கள் மகள் படிப்பில் நாட்டம் உள்ளவளாகவும், செயல்களில் ஒரு நிதானத்தையும் அடைவாள்.

    காலையில் வெதுவெதுப்பாக புழுங்கலரிசிச் சாதத்துடன் சிறிது பயற்றம் பருப்பு தூக்கலாகவும், துவரம் பருப்பு குறைவாகவும் மஞ்சள்தூளுடன் வேகவைத்த பருப்பை கலந்து ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடச் செய்யவும். அப்படிச் சாப்பிடும்போது ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய சாரஸ்வதக்ருதம் எனும் நெய்மருந்தை ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து அரை ஸ்பூன் சாரஸ்வத சூரணத்துடன் குழைத்து, கால் ஸ்பூன் சுத்தமான தேனும் விட்டு நன்றாகக் கலந்து உணவிற்கு நடு நடுவே நக்கிச் சாப்பிடும்படி மகளுக்கு உபதேசிக்கவும். இதன் மூலம் இம்மருந்தின் வீரியமானது சாதத்துடன் கலப்பதால் பாசக பித்தம் அதை நன்றாக உள்வாங்கி அதன் சாராம்சமான பகுதியை விரைவாக இதயத்திலுள்ள சாதக பித்தத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். நல்ல நினைவாற்றலும், பேச்சுவன்மையும் இம்மருந்தின் மூலம் தங்கள் மகளுக்குக் கிடைக்கும். காதுவலி, தலைவலி போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி நன்கு கண்டறிந்து அதன் பிறகு மருந்துகளைச் சாப்பிடுவது நல்லது. சில பிள்ளைகள் பள்ளியைத் தவிர்ப்பதற்காக இதுபோன்று கூறுவது இயல்பாக இருப்பதால், உண்மையறிந்து அதன் பிறகு மருத்துவரை ஆலோசிக்கலாம்.

    பொதுவாக தலைக்கு ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய ப்ரம்மீ தைலத்தை அவள் பெண்ணாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமையாகிய நாட்களில் காலையில் சிறிது தேய்த்து ஊறவைத்து அதன் பிறகு தலைக்குக் குளிப்பதால் படிப்பில் நல்ல நாட்டம், நினைவுத் திறன் போன்றவை மேம்படும். அன்று முழுவதும் பள்ளியில் நடந்த சம்பவங்களை இரவில் மகளை வரிசைப்படுத்திக் கூறச் செய்வதால் அவளுடைய புத்தி மற்றும் நினைவாற்றல் நன்றாக மேம்படும்.

    சாரஸ்வதாரிஷ்டம் எனும் மருந்தை காலை, இரவு உணவிற்கு பிறகு சாப்பிடக் கொடுக்கவும். இம்மருந்துகளை சுமார் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து படிக்க வேண்டிய நிர்பந்தமிருப்பதால் உடல் மற்றும் மனம் வாட்டம் அடையாமலிருக்க இரவு உணவாக பச்சைப் பயறு வேகவைத்த கூட்டுடன் எண்ணெய் சேர்க்காத கோதுமையில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டியைச் சாப்பிடக் கொடுக்கலாம். இந்த சுக்கா ரொட்டிக்கான மாவைப் பிசையும்பொழுது ஒன்றிரண்டு டீ ஸ்பூன் கல்யாணக க்ருதம் எனும் ஆயுர்வேதமருந்தைச் சேர்த்துக் கொண்டால் மனவலிமையும் உடல் வலிமையும் நன்றாகக் கூடுவதுடன் பாடத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்ளும் தன்மையும் வளரும்.

    (தொடரும்)



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1707
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணெய்!

    ஐயா, நான் தங்களின் ஆயுர்வேதக் குறிப்புகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளன. எனது வீட்டருகில் இரு இலுப்பை மரங்கள் உள்ளன. அதனைக் காணும்போதெல்லாம் அதன் பயனறிய விழைகிறேன். இலுப்பை எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது எனக் கேள்விப்பட்டுள்ளேன். இலுப்பை எண்ணெயை உடலில் தேய்த்துக் குளிக்கலாமா? இலுப்பை மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது என சிலர் கூறுகின்றனர். ஆயுர்வேதத்தில் இலுப்பையின் மருத்துவ பங்கு உள்ளதா? என்பதை தெளிவுபடுத்துங்களேன்.
    ல.கிருஷ்ணகுமார், திருச்செங்கோடு.


    இலுப்பை மிகச் சிறந்த மருத்துவ குணமுடையது. ஆயுர்வேதத்திலும் பல வியாதிகளைக் குணமாக்கும் தன்மையுடையதாகக் கூறப்பட்டுள்ளது. இலுப்பை இனிப்புச் சுவை மிக்கதொரு தாவரம். முற்காலத்தில் சர்க்கரைக்குப் பதிலாக இலுப்பையைப் பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். ஆகவேதான் இதற்கு மதுகம் என்றும் பெயருள்ளது. வாழை மரம் எப்படி அடி முதல் நுனி வரை நமக்கு பயனுள்ளதாக உள்ளதோ, அதுபோல இலுப்பையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நோயைத் தீர்க்க வல்லது. இலுப்பையின் பட்டை இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவை உடையது. இதை நீரிலிட்டு காய்ச்சி குடித்து வர குடல் மிருதுவாகும், வீக்கம், சுளுக்கு, தோல் அரிப்பு நீங்கும். இலுப்பைப் பட்டையைக் காய்ச்சி கஷாயமிட்டுப் புண்களை அலம்ப சொறி சிரங்கு குணமாகும். இதன் வைரக்கட்டை (மரத்தின் உட்பகுதி) காக்காய் வலிப்பு (கைகால் வலிப்பு) நோய் குணமாகப் பயன்படுகிறது. வாதம் மற்றும் பித்தப் பிரச்னைகளைத் தீர்க்கவும் வல்லது.

    இலுப்பை இலை அல்லது பூவை பிரசவித்த பெண்கள் மார்பில் கட்டிக் கொள்ள தாய்ப்பால் நன்கு சுரக்கும். இலுப்பைப் பூ இனிப்புச் சுவையுடையது. உடற்சூட்டை உண்டாக்கும். இதனை வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால் வீக்கம் குறையும். விரைவீக்கத்தை குணப்படுத்த ஏற்றது. இலுப்பை எண்ணெய்யைச் சூடாக்கித் தேய்த்துக் குளிக்க பித்தம் தெளியும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். இடுப்புப் பிடிப்பு நீங்கும். இடுப்பிற்கு வலுவூட்டும்.

    இடுப்பு வலியைப் போக்குவதில் இலுப்பையின் பங்கு மிக அதிகம். இடுப்பில் வலியுள்ள பகுதியில் உளுந்த மாவினால் வரம்பு கட்டி வெதுவெதுப்பாக இலுப்பை எண்ணெய்யை ஊற்றி அரை, முக்கால் மணிநேரம் ஊற வைத்து வர, இடுப்பிலுள்ள வலி குறைந்து அப்பகுதியிலுள்ள இடுப்பு எலும்பு மற்றும் வெளிப்புறம் பிதுங்கியுள்ள வில்லைப் பகுதி மறுபடியும் தன்னிடத்திற்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது. இதனால் அதற்கான அறுவைச் சிகிச்சையைக் கூட நம்மால் தவிர்க்க இயலும். இலுப்பை எண்ணெய்யை மூலிகை இலைகளுடன் காய்ச்சி தண்டுவடத்தில் வெதுவெதுப்பாக ஒத்தடமிட்டுத் தேய்த்து வந்தோமேயானால் உடல் பாரத்தினால் ஏற்படும் எலும்புத் தேய்வு குறைந்து முதுகுவலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் தீருமென்கிறது ஓர் ஆயுர்வேதக் குறிப்பு.

    இலுப்பை எண்ணெய்யைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்து வர நாடி நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெருகும், மேனி மிருதுவாகும். மனத்தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும். ஆனால் கரப்பான், சொறி, தலை முடி கொட்டுதல் இருப்பவர்களுக்கு ஏற்றதல்ல. சேற்றுப் புண்ணுக்குத் தடவினால் குணமடையும். இதன் எண்ணெய்யை உட்கொள்ளும்போது குடல் வறட்சி நீங்கி மிருதுவாகும். இதனால் ஜீரணக்கோளாறு, புளித்த ஏப்பம், வயிற்றெரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், இது மலத்தை இளக்கி வெளியேற்றும். இலுப்பை தாதுக்களை விருத்திபடுத்தும். காசநோய்க்கு நல்ல மருந்தாகவும் பயன்படும்.

    இதைத் தவிர இதன் சக்கையை (புண்ணாக்கை) நெருப்பிலிட்டுப் புகைக்க புழு, பூச்சி, எலி உபத்திரவம் நீங்கும். ஊமத்தங்காய் போன்றவற்றைத் தின்று விஷத்தீண்டல் ஏற்பட்டால் இதன் புண்ணாக்கைத் தண்ணீரில் கரைத்துக் குடிக்க வாந்தி ஏற்பட்டு விஷம் முறிந்து வெளியேறும்.

    மேலும், ஆயுர்வேதத்தின் மருத்துவ அகராதிகளில் ஒன்றாக விளங்கும் பாவபிரகாசமென்னும் நூலில், இலுப்பைப்பூ இனிப்புச் சுவையுடையது, குளிர்ச்சியானது, வாதம் மற்றும் பித்த சம்பந்த பிரச்னைகளைத் தீர்க்க வல்லது, பலத்தைக் கொடுக்கக் கூடியது. அதன் பழம் குளிர்ச்சியை அளிக்கக் கூடியது, இனிப்புச் சுவையுடையது, தாகத்தைத் தணிக்கக் கூடியது, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், சுவாசக் கோளாறுகளை நீக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையதேவர் எனும் முனிவர் கூறுகையில் இரத்தம், பித்தம், சம்பந்த பிரச்னைகளைப் போக்குவதில் இலுப்பைப்பூ பெரும் பங்காற்றுகிறது. இதன் பழம் மற்றும் எண்ணெய் உடலுக்கு பலத்தைக் கொடுக்கக் கூடியது. காசநோயைத் தீர்க்க வல்லது. வாதம் மற்றும் பித்த சம்பந்த பிரச்னைகளையும் நீக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது மட்டுமின்றி, அதிகாலையில் குளித்து நெய்யுடன் கலந்த இலுப்பை எண்ணெய்யில் தீபமேற்றி வர சகல நன்மைகளும் கிட்டும், நோய்கள் தீண்டா. ஆகவே தான் உள்ளும், புறமும் நமக்கு மருத்துவப் பயனளிக்கும் இலுப்பை மரத்தை நம் முன்னோர்கள் சில கோவில்களில் தலவிருட்சமாகவும் வைத்துள்ளனர்.

    (தொடரும்)



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1708
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தம் அழுத்தம் சீராக..!

    எனது வயது 53. தற்போது ஆ.ட. 160/90 உள்ளதாகவும், கொழுப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிய வந்தது. நான் இதுவரை எந்த வித மருந்துகளும் உபயோகித்ததில்லை. இதற்கு ஆயுர்வேதமருந்துகள் உள்ளனவா?
    கு.ர.ரமேஷ்பாபு, மதுரை.


    பொதுவாகவே அதிக இரத்த அழுத்தத்திற்குக் காரணமாக அலுவல் அல்லது தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் மனஉளைச்சல், காரசாரமான விவாதம், அதிக அளவில் தேநீர் பருகுதல், சிறுசிறு விஷயங்களுக்குக் கூட பொறுமையுடன் செயல்படாத தன்மை, முன்கோபகுணம், அதிக பதற்றம் ஆகியவற்றை உடையவராக நீங்கள் இருந்தால் அவற்றை மாற்றிக்கொள்வது, உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழ்நிலைகளை விட்டு அகலுவது அவற்றிற்குத் தக்கப் போக்கு காட்டி விடுபட முனைவது போன்றவற்றை முயற்சிக்கவும்.

    இதயத்திலிருந்து செயல்படும் வியான வாயுவின் அழுத்தமானது மனதின் சஞ்சலத்திற்கு ஏற்றவாறு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும். அதிகமான கவலை, கோபம், வெறுப்பு போன்ற மனநிலைகளில் வியான வாயுவின் சீற்றம் இதயப் பகுதியில் துரிதப்படுத்தப்பட்டு அதனுடைய சஞ்சார விசேஷமானது இரத்தக் குழாய்களின் வழியாக இயங்கும்போது இரத்தக்குழாய்ச் சுவர்களில் அதனுடைய அழுத்தத்தை அதிகரித்துவிடும். அதுவே இரத்தக்கொதிப்பிற்கு ஒரு முக்கியக் காரணமாக அமையலாம். வியான வாயுவைக் கட்டுப்படுத்தும் தான்வந்தரம், மஹாதான்வந்தரம், வாயு குளிகை போன்றவற்றின் உள் உபயோகம் வாதத்தினால் ஏற்படக்கூடிய இரத்தக்கொதிப்பைக் குணப்படுத்தும்.

    பித்ததோஷத்தின் குணங்களாகிய வேகமாக ஊடுருவும் தன்மை மற்றும் சூடு ஆகியவற்றின் சீற்றத்தை அதிக காரம், புளி, உப்பு, பட்டை, சோம்பு, மசாலாப் பொருட்கள், மதுபானச் சேர்க்கை, வெற்றிலைப் பாக்கு போன்றவற்றின் மூலமாக இரத்தக்குழாய்களில் பரவச் செய்துவிட்டால் அதுவும் இரத்தக்கொதிப்புக்குக் காரணமாகலாம். அவிபத்தி சூரணம் எனும் ஆயுர்வேத மருந்தை மருத்துவர் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் இரத்தக்கொதிப்பை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

    நீங்கள் அதிக இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகியவற்றின் சேர்க்கையைக் கொண்ட உணவுவகைகளை அதிகம் சாப்பிடுபவராக இருந்தால் அதனால் ஏற்படும் கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, நிலைப்பு ஆகியவற்றின் சேர்க்கையானது இரத்தக்குழாய்களின் உட்பகுதிகளில் படிவங்களாகத் தங்கும்பொழுது இரத்தத்தினுடைய வேகமானது தடைபட்டு, அதனால் உட்புறக் குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கலாம். அதிக வேலைப் பளு இல்லாத ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்தல், பகல் உறக்கம், சோம்பேறித் தனமானதொரு வாழ்க்கைமுறை உள்ளவர்களுக்கும் இதுபோன்ற படிவங்கள் அதிகமாக இரத்தக்குழாய்களில் சேர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் உணவில் கசப்பும், துவர்ப்புமாகிய சுவைகளைக் கொண்ட கீரைகள், கறிகாய்கள், பட்டை, சோம்பு, சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றின் சேர்க்கை சற்றுத் தூக்கலாக இருந்தால், அவற்றின் சூடான வீரியத்தினால் குழாய்களில் படிந்துள்ள படிமங்கள் கரைந்து இரத்த அழுத்தமானது சாதாரண நிலைக்கு வந்து விடும். லோத்ராஸவம், அயஸ்க்ருதி, நிம்பாம்ருதாஸவம் போன்ற மருந்துகள் இதுபோன்ற நிலைகளில் சாப்பிட உகந்தவை.

    மேற்குறிப்பிட்ட காரணங்களால் உடலில் உள்ள கொழுப்பானது சீரான நிலையில் இல்லாமல் இரத்தத்தில் அதிக அளவில் காணப்படும் வாய்ப்பிருப்பதால் அவற்றிற்கான சிகிச்சை முறையை வரையறுத்துக் கூறுவதென்பது மருத்துவரின் நேரடியான தொடர்பின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். பொதுவாகவே, ஆயுர்வேத மருந்துகளாகிய சிலாசத்துபர்ப்பம், சிருங்கீபர்ப்பம், லோஹபஸ்மம், த்ரிபலாசூரணம் போன்றவை அதிக கொழுப்பை உடலிலிருந்து நீக்கக் கூடியவை. பாகல் இலை, கோவைக்காய், பாகற்காய், பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, எலுமிச்சம்பழம், நெல்லிக்காய் போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    (தொடரும்)



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1709
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் அயுர்வேதம் எளிதில் செரிக்க ..!

    என் வயது 57. காலையில் சிற்றுண்டி சிறிதளவு சாப்பிட்டாலும் மதியம் 3 மணிவரை பசியே எடுப்பதில்லை. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. உயர் ரத்த அழுத்தமும் உள்ளது. ஒரு முறை நெஞ்சுவலியும் வந்தது. ஆங்கிலமருந்துகளை உட்கொண்டு வருகிறேன். பொது இடங்களுக்குப் போகும்போது மலம் கழிக்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. ஆனால் கழிவறைக்குச் சென்றால் சிறுநீர் மட்டுமே பிரிகிறது. பெருத்த ஓசையுடன் வாயு வெளியேறுகிறது. இந்த சங்கடமான நிலை மாற என்ன ஆயுர்வேத மருந்தை உபயோகிக்கலாம்.
    - பெயர் இல்லை, உத்தமபாளையம்.


    எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகளாகிய புழுங்கலரிசிக் கஞ்சி, தெளிவான மோர் சேர்த்த அன்னவகை, நார்த்தங்காய் வற்றல், நார்த்தங்காய் சாறு பிழிந்த சித்ரான்னம், கருவேப்பிலைத் துவையல், கொத்துமல்லித் துவையல், எள்ளுப்பொடி சாதம், எலுமிச்சை சாதம் என்ற வகையில் நீங்கள் காலை உணவாக ஏற்க, செரிமானத்தில் எந்தவிதமான கஷ்டநிலையையும் அனுபவிக்க வேண்டி இராது. மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை, புரோட்டா, பட்டர் நாண், ப்ரட் வகையறாக்களை காலை உணவாக உண்பதைத் தவிர்த்தல் நலம். உணவிற்குப் பிறகு சீரகம் போட்டுக் காய்ச்சிய வெந்நீரைப் பருகுவதால் செரிமானம் விரைவாக ஏற்பட்டு, உண்ட உணவின் சாராம்சத்தை உடலுட்புற தாதுக்கள் நிறைவாகப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
    சிறுகுடலில் செரிமானத்திற்கு உதவிடும் சமானன் என்ற வாயு உங்களுக்கு சரிவர செயல்படவில்லை என்று தோன்றுகிறது. அதனுடைய செயல்திறனில் ஏற்படும் தொய்வானது பெருங்குடல் பகுதியிலுள்ள அபான வாயுவின் செயலுக்கும் குந்தகம் விளைவிப்பதால் நீங்கள் மலம் கழிக்க முயற்சிக்கும்போது பெருத்த சத்தத்துடன் காற்று வெளியேறுகிறதே தவிர மலத்திலுள்ள ஈரப்பசை வற்றிவிடுவதால் வெளியேறுவதில்லை. ஆகையால் இந்த சமான மற்றும் அபான வாயுக்களின் செயல்பாடுகள் சீராவதற்கும், செரிமானம் விரைவில் ஏற்படுவதற்கும் நம் கட்டுப்பாட்டில் இல்லாத குடல் அசைவுகள் நன்றாக நடைபெறுவதற்கும் கந்தர்வஹஸ்தாதி ஆமணக்கு எண்ணெய் எனப்படும் ஆயுர்வேத விளக்கெண்ணெய் மருந்தை சுமார் பத்து பதினைந்து மில்லிலிட்டர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மேலே சிறிது வெந்நீர் பருகுவது மிகவும் நல்லது.
    வயிற்றிலுள்ள சூட்டைப் பாதுகாப்பதற்கு சூடான வீரியம் கொண்ட ஒரு சில உணவுப்பொருட்களாகிய பெருங்காயம், சீரகம், தனியா, மிளகு, பட்டை, மசாலா, குண்டு மிளகாய், வெல்லம், உப்பு, கறிவேப்பிலை போன்றவற்றைச் சமச்சீரான அளவில் உணவில் சேர்த்து பசி கெடாதவாறு நீங்கள் அமைத்துக் கொள்வது நல்லது. தயிரின் மேல் பகுதியில் நிற்கக் கூடிய தண்ணீரை மட்டும் எடுத்து சிறிது வெல்லம் உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக, குடல் பகுதியில் சேர்ந்துள்ள அழுக்குகளைச் சுரண்டி அங்கு பரவியுள்ள தேவையற்ற வாயுவின் அழுத்தத்தையும் மலத்தின் வழியாக வெளியேற்றக் கூடிய சக்தி அதற்கு இருப்பதால் சுமார் மூன்று, நான்கு மாத காலங்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியமானது.
    ஒரு சில யோகப்பயிற்சிகள் தங்களுக்கு நிறைவான பலனைத் தரலாம். பஸ்த்ரிகப்ராணாயாமம் என்ற மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும் யோகப்பயிற்சி செய்தால், உடற்சூடு நன்றாக பாதுகாக்கப்படுவதால் எளிதில் செரிக்கும் சக்தி மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், கீரை, பழம் இவற்றை சாப்பிட பழக்கப்படுத்திக் கொள்வதும் ஆரோக்கியமானதே. அப்படி சாப்பிட இயலாதவர்கள் காய்கறிகளிலும், பழங்களிலும் இருக்கும் நார்ச்சத்தை மட்டும் கடைந்தெடுத்து மாவாக்கி பவுடர் வடிவில் கடைகளில் விற்கப்படுகிறது } அதை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது. இதைச் சாப்பிடும்போது பெருங்குடல் சுவர் இதை உறிஞ்ச முடியாது. அதனால் இந்தப் பொடி குடல் நீரை நன்றாகத் தன்னுள் இழுத்து கெட்டியான இறுகிப்போன மலத்தை வெளியில் கொண்டு வந்து விடும். இத்துடன் சர்க்கரையையும் சேர்த்து வெளியேற்றுவதால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறையும்.
    மேற்குறிப்பிட்ட காரணங்களால் குடல் பகுதியைச் சார்ந்த சமான, அபானவாயுக்கள் கெடாதவாறு கவனித்துக்கொண்டு உணவு, பழக்கவழக்கம் மற்றும் மருந்து ஆகியவற்றைச் சீரானமுறையில் கடைபிடிப்பதன் மூலமாக ஏற்பட்டுள்ள உபாதைகளைத் தவிர்த்து ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1710
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மயக்கத்தை ஏற்படுத்தும்

    என் வயது 79. முதிர்வின் காரணமாகத் தூக்கம் வருவதில்லை. இரவு 1- 2 மணிக்கு மேல்தான் உறக்கம் வருகிறது. இரவு உணவுக்குப் பின் ஒரு தேக்கரண்டி அளவில் கசகசாவை வாயில் போட்டு மென்று வரும்படியும் படுக்கைக்குச் செல்லும் முன் இளஞ்சூடான வெந்நீர் குடிக்குமாறும் சித்தமருத்துவர் தெரிவித்தார். அதன்படி செய்து வந்ததால் இப்போது படுத்ததும் உறக்கம் வந்துவிடுகிறது. ஆனால் கசகசாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்க விளைவுகள் எவையும் ஏற்படுமா? என்று தெரியவில்லை. கசகசாவிற்கு வேறு என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன?
    அ.பாண்டுரங்கன், அவ்வைநகர் புதுச்சேரி.


    Latin Name-Papaver somniferum

    Family-Papaveraceae

    English Name-Opium poppy, White poppy

    Tamil Name - கசகசா, போஸ்தக்காய்

    போஸ்தக்காயின் உள்ளேயுள்ள விதை இது. குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும். இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை, வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் ஆகியவற்றுக்குக் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். கசகசா, வால் மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு இவற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டால், உடல் மழமழப்புடன் வலிவு பெறும். சுக்கில விருத்தி ஏற்படும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு மாதவிடாய் காலத்திற்கு முன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிடலாம்.

    வாதுமைப் பருப்பையும் 3 முதல் 5 கசகசாவையும் (அரை ஸ்பூன்) பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிட, பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும். பொதுவாக உடல் வலிமை அடையவும் பருமனாகவும் காங்கை தணியவும் ஏற்ற பானம். தனித்துக் கசகசாவை ஊற வைத்து அம்மியில் அரைத்து ஜலம் விட்டுக் குழப்பிப் பால் பிழிந்து அடுப்பிலேற்றிக் காய்ச்சிக் கொதி வந்ததும் இறக்கி, பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது.

    கசகசாவை முதல் நாளிரவு ஊற வைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர், வடித்த கஞ்சி, காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப் பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.

    பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிக் கூறும்போது, போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை பச்சையாய் இருக்கும்போது கீறினால் வரும் பாலை காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்து சாப்பிட்டால் பேதியை நிறுத்துமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் கூறியிருக்கிறார். குளிர்ச்சி தரும் கசகசாவை மசாலாப் பொருட்களுடன் உணவில் ருசி சேர்ப்பதற்காக அரைத்துச் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதனுடைய அளவு கூடுமேயானால் மயக்கத்தை ஏற்படுத்தும். கசகசாவிற்கு மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விடாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை நன்றாக அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால், அழுகை குறைந்து குழந்தை நன்றாகத் தூங்கும். பத்து கிராம் கசகசாவுடன், ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள், ஒரு பிடி வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகள் ஏற்பட்ட முகப்பகுதிகளில் பூசினால் தழும்புகள் மறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலையில் சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில்

    போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

    (தொடரும்)



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter