Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1711
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்!

    என் வயது 43. தர்ப்பைப் புல்லை எப்படிப் பயன்படுத்தினால் சர்க்கரை உபாதையின் தாக்கத்தை மட்டுப்படுத்தலாம்? இதற்கு வேறு ஏதேனும் மருத்துவகுணங்கள் இருக்கின்றனவா?
    எஸ்.கிருஷ்ணன், விராலிமலை.


    தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பையை ஓர் அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையைக் குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

    சுமார் 15 கிராம் தர்ப்பைப் புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை சுண்டக் காய்ச்சி குளிர்ந்த பிறகு வடிகட்டி அந்தத் தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகி வர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு ஹிமகஷாயம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப் புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

    தர்ப்பைப் புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப் புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஓர் அற்புதமான பானமாகும்.

    தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது.

    சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது.

    சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப் புல்லுக்கு இருக்கிறது.

    தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப் பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.

    மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்த ஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன் மூலமாக ஏற்படும் இரத்த மூலம், இரத்தக் கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.

    நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். ஏங்ழ்ல்ங்ள் க்ஷ்ர்ள்ற்ங்ழ் எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சிக்கு தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.

    இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் வரப்போகும் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்போம்.

    (தொடரும்)



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1712
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாந்திக்கு... பானகம்!

    எனது 41/2 வயதுடைய பேரன் பால், பழம், இட்லி, தோசை, சாதம் என எந்த உணவுவகைகளைச் சாப்பிட்டாலும் சிறிது நேரம் கழித்து வாந்தி எடுக்கிறான். வாரத்தில் மூன்று நாட்களாவது இவ்வாறு வாந்தி எடுக்கிறான். மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்து சரியாகி விடுமென்கிறார்கள். ஆயுர்வேதமுறைப்படி இந்நிலையை மாற்ற ஏதேனும் வழி உள்ளதா?
    அ.அய்யப்பன், மார்த்தாண்டம்.


    வாந்தி ஏற்படுவதற்கான காரணத்தை முதலில் கவனிக்க வேண்டும். நெஞ்சுக்கட்டு, ஜலதோஷம், மார்புச் சளி, வயிற்றில் அதிகமான அமிலச் சுரப்பு, பித்தப் பையில் சுரப்பு அதிகம், மலச்சிக்கல் முதலியவற்றினால் வாந்தி உண்டாகும். வாந்தியில் கபம் அதிகமா? பித்தம் அதிகமா? என்பதை அறிந்து கொள்வது அவசியம். கபதோஷத்தின் அளவு வயிற்றில் அதிகமிருந்தால் வாந்தி வெள்ளை நுரையுடன் உணவுடன் சேர்ந்து கெட்டியாக வெளியேறும். அதை வெளியேற்ற அரிசித் திப்பிலி, இந்துப்பு, வசம்பு, மலங்காரைப் பூ இவற்றைச் சூரணம் செய்து, தேனில் குழைத்து நாக்கில் தடவி, கொஞ்சம் வெந்நீர் புகட்டினால் உடனே வாந்தியாகி விடும். இந்த மருந்துகள் அனைத்தும் சேர்த்து சுமார் ஐந்து கிராம் முதல் எட்டு கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். மருந்தின் அளவிற்கு இருமடங்கு தேன் குழைத்துக் கொள்ளுதல் நல்லது. இதனால் இந்த வாந்தியின் மூலமாக வயிற்றிலுள்ள கபதோஷம் விலகி விடும். துளசி, வெற்றிலை, கற்பூர ஓமவல்லி இவற்றின் தனிச்சாற்றை தேனுடன் கலந்தும் கொடுக்கலாம். கபத்தினால் ஏற்படும் வாந்தி இதன் மூலம் நிவிருத்தியாகும்.

    வாந்தியில் புளிப்பு வாடை, மஞ்சள், பச்சை நிறத்தோற்றம் இருப்பின் பித்தக் கோளாறு உள்ளது என்பதை ஊகித்து அறியலாம். வாந்தியானது, நுரையின்றி கொஞ்சம் நீர்க்க இருக்கும், வாடையும் கடுமையாக இருக்கும். அதில் சிறு பேதிக்கு மருந்து கொடுத்தல் நல்லது. இதற்கு கோரோசனை மாத்திரை அல்லது அவிபத்தி சூரணம் விசேஷம். பாலில் கோரோசனையைக் குழைத்துத் தரலாம். ஒருதரம் வாந்தி உண்டு பண்ணி மேல் குடலையும் சுத்தம் செய்து மலப்ரவிருத்தி மூலம் கீழ்குடலையும் சுத்தம் செய்யும் அவிபத்தி சூரணம் சுமார் 2 1/2 கிராம் அளவில் எடுத்து ஐந்து மில்லி தேன் குழைத்து நக்கிச் சாப்பிட்டால் நன்றாக பேதி ஏற்பட்டு அதனுடன் பித்தமும் வெளியேறிவிடும். இதில் ஏதேனும் ஒன்றைச் செய்தால் போதுமானது.

    மயிலிறகின் முடி பாகத்தை கரியாக்கி அதன் தூளைக் குழைத்துக் கொடுத்தல் மிகப் புராதனமான குடும்ப வைத்யமுறையாகும். சுமார் ஆறு அரிசி எடை மயில் தோகைக் கருக்குடன் அரிசித்திப்பிலி சூரணம் இரண்டு அரிசி எடை சேர்த்துக் கொடுத்தல் கப வாந்திக்கும், தான்றிக்காயின் தோல் சூரணம் நான்கு அரிசி எடை சேர்த்துக் கொடுத்தல் பித்த வாந்திக்கும் மிகவும் நல்லது. இந்த மருந்து வாந்தியுடன் விக்கலையும் போக்கக் கூடியது.

    வாந்தியை நிறுத்தவும், பசியின்மையைப் போக்கவும், நா வறட்சி, நாக்கில் ருசியின்மை, வாயில் தித்திப்பு, கசப்பு, புளிப்பு உணரப்படுதல், நாக்கில் நீர் ஊறுதல், உமட்டுதல் போன்றவற்றுக்கு, தோல் நீக்கிய இஞ்சிச் சாறு 125 மி.லி.யை நன்கு தெளிய வைத்து, எலுமிச்சம்பழச்சாறு 250 மி.லி.யுடன் சேர்த்து, 750 கிராம் சர்க்கரையும் கலந்து மெல்லிய துணியால் வடிகட்டி அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். இளம்பாகாக வரும்போது கீழே இறக்கி ஆற வைத்து ஏலக்காய்த்தூள் ஒரு கிராம், பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை, குங்குமப்பூ ஒரு சிட்டிகை இவற்றை நன்கு அரைத்து பானகத்தில் சேர்த்து கலக்கிவிடவும். இதற்கு ஜம்பீராதிபானகம் என்று பெயர்.

    ஒரு நாளில் இரண்டு, மூன்று வேளை சாப்பிடலாம். வேளைக்கு ஒன்றிரண்டு டீ ஸ்பூன் வீதம், தண்ணீர் கலந்தோ கலக்காமலோ, உணவிற்கு முன்போ, பின்போ நன்கு சுவைத்துச் சாப்பிடக் கொடுக்கவும். இப்பானகம் பல்வேறு வகையில் உபயோகிக்கக் கூடியது. தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கியிருப்பதால் பலருக்கும் ஏற்படும் வாயில் கசப்பு, புளிப்பு, புளித்த ஏப்பம், வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்ச்சி, உணவில் வெறுப்பு, கண், கை, கால்களில் லேசாக எரிச்சல், இவற்றுடன் ஏற்படும் அஜீரணத்துக்கும், தலைச்சுற்றுதல், மயக்கம் போன்ற கோடைக்கால உபாதைகளுக்கு உணவிற்குப் பிறகு 2 -3 வேளை இதைச் சாப்பிட மிகவும் நல்லது. உணவைச் செரிக்க உதவும் புளிப்பு திரவங்கள் சரியாகச் சுரக்காமலும், ஈரல் சரியே வேலை செய்யாமலும் ஏற்படும் அஜீரணத்துக்கு உணவிற்கு ஐந்து பத்து நிமிடங்களுக்கு முன்னர் இந்த பானகத்தைச் சாப்பிட்டு, உணவை ஏற்க அந்த அஜீரணம் மாறிவிடுகிறது.

    கர்ப்பிணிக்கு கருத் தரித்தது முதல் சில மாதங்களுக்கு மசக்கையால் ஏற்படும் இனந்தெரியாத கலக்கம், உமிழ்நீர் சுரத்தல், குமட்டல், வாந்தி, பசிக் குறைவு முதலிய உபத்திரவங்களைப் போக்குவதற்கும் ஏற்ற சிறந்த மருந்து.

    சிறுபிள்ளைகளின் வாந்தியை நிறுத்தக் கூடிய வில்வாதி

    லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம், ஜீரகாரிஷ்டம், பிப்பல்யாஸவம், மாதீபல ரஸயனம் போன்ற ஆயுர்வேத

    மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வர நிறைவான பலனை விரைவாகப் பெறலாம்.

    (தொடரும்)



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1713
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் வாயுவின் சீற்றமும் நரம்புகளில் பாதிப்பும்!

    என் வயது 60. வலது கை நரம்பு தொந்தரவால் அவதிப்படுகிறேன். வலது கை பின் பக்கம் போய் சாய்ந்து இருக்கவே முடிகிறது. இடது கை போல வைத்துக் கொள்வது சிரமமாக உள்ளது. சாப்பிடும்போது உணவை வாய்க்குக் கொண்டு செல்வது கஷ்டமாக இருக்கிறது. பயணம் செய்யும்போது வலது கையை மேல் பக்கம் பிடித்துக் கொண்டு நிற்பது சுலபமாக உள்ளது. இந்த உபாதை மாற ஏதேனும் ஆயுர்வேத சிகிச்சை உள்ளதா?
    எஸ்.சத்தியமூர்த்தி, தும்கூர் (கர்நாடகா).


    கழுத்துப் பகுதியிலுள்ள குருத்தெலும்புகளிலிருந்து சில நரம்புகள் புறப்பட்டு கையினுள்ளே செல்கின்றன. இந்த நரம்புகளில் அதிக வேலைப் பளுவினால் ஏற்படும் சோர்வானது சரியானபடி கவனிக்கப்படாமல், ஓய்வு தராது தொடர்ந்து வேலை கொடுக்கப்படுமேயானால் அதுவே நீங்கள் குறிப்பிடும் உபாதைக்குக் காரணமாகலாம். வ்யானன் என்ற ஒரு வாயு இதயத்திலிருந்து செயல்படுகிறது. உடல் அங்கங்களை உயர்த்துவது, தாழ்த்துவது, நீட்டுவது மற்றும் மடக்குவது போன்ற செயல்களுக்கு உறுதுணையாக விளங்குகிறது.
    உணவில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் அதிகமான சேர்க்கை, பருப்புவகைகள், கொண்டைக் கடலை, கிழங்குகள், வாழைக்காய், காராமணி, மொச்சை போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு மேலே குளிர்ந்த நீர் குடிப்பவர்களுக்கு குடலில் வாயுவின் சீற்றம் ஏற்பட்டு அதுவே வ்யான வாயுவிற்கு குந்தகம் விளைவிப்பதால் கைகளில் உள்ள நரம்புகளில் அந்த பாதிப்பு உணர்த்தப்படுகிறது. கைகளைச் சரிவர உபயோகிக்க முடியாமல் போகக் கூடும். அதனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது இந்த வ்யான வாயுவின் உபாதையாகவும் இருக்கக் கூடும். தலையில் அடிக்கடி குளிர்ந்த நீரை விட்டுக் குளித்தல், குளிரூட்டப்பட்ட அறையில் தலையில் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொண்டு பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்தல், இரு சக்கர வாகனத்தில் தலைக்கு கவசம் அணியாமல் நீண்ட தூரம் குளிர்ந்த காற்றில் பயணித்தல், தலைமாட்டுப் பகுதியில் மின் விசிறியின் காற்று படும்படி இரவில் படுத்து உறங்குதல், தலையணையை வெயிலில் போடாமல் அதனுடைய சில்லிப்பு கழுத்து மற்றும் பின் தலைப் பகுதியில் படுமாறு படுத்து உறங்குதல், கோடையில் உடல் சூடாக இருக்கையில் திடீரென்று குளிர்ந்த நீரை குடிப்பதும், குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற சில செயல்களால் கையில் உள்ள நரம்புகளின் வலுவானது குறைந்து போய் கையை சாதாரண நிலையில் வைத்துக் கொள்ள முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைச் சிறு வயது முதலே அறியாது தவறு செய்திருக்கும் பட்சத்தில் இந்த நரம்புகளில் ஏற்படும் தாக்கம் வயோதிகத்தில் நிச்சயம் உணரப்படும். இதை இளைய சமுதாயத்தினரும் தவிர்த்துவிடுதல் நலமாகும்.
    கார்ப்பாஸஸ்த்யாதி எனப்படும் மூலிகை தைலத்தை மூக்கினுள் நான்கு சொட்டுகள் விட்டுக் கொண்டு, மெதுவாக உறிஞ்சிக் கொண்டு, அதன் பிறகு இந்த தைலத்தை வெதுவெதுப்பாக உச்சந் தலையில் தேய்த்து சுமார் அரை, முக்கால் மணி நேரம் காலையில் ஊறவிடவும். இந்த எண்ணெய்யையே வெதுவெதுப்பாக வலது கை முழுவதும் தடவி மிதமான வெந்நீரில் குளிப்பதால் கை நரம்புகள் வலுப்பெறக் கூடும். இது சாதாரணமாக வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய எளிய சிகிச்சை முறையாகும். இதே தைலத்தை மூக்கினுள் விட்டு தலையில் அதிக அளவில் ஊற வைக்கும் சிரோவஸ்தி எனப்படும் சிகிச்சை முறையை ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் தங்கி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் கை நரம்புகள் விரைவாக வலுப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உள்ளே சாப்பிட வேண்டிய ஒரு சில ஆயுர்வேத மருந்துகளாகிய பிரசாரிண்யாதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், கந்த தைலம், மஹாராஜப்ரஸரிணீ தைலம், அஸ்வகந்தாரிஷ்டம், தசமூலாரிஷ்டம், வாயு மற்றும் தான்வந்திரம் குளிகை போன்றவற்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வரவும்.
    கைகளுக்குச் சோர்வு ஏற்படாத வண்ணம் உங்களுடைய வேலைகளை அமைத்துக் கொள்ளவும் அல்லது சோர்வு தோன்றிய உடன் தக்க ஓய்வு தந்து நரம்புகளில் ஏற்படும் வாயுவின் வறட்சியை அண்டவிடாமல் பார்த்துக் கொள்வதும் நலமே.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1714
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கட்டியால் ஏற்படும் தொடர் வயிற்று வலி!

    எனது வயது 43. தொடர் வயிற்று வலி காரணமாக முதலில் என்டோஸ்கோபி பிறகு கொலனோஸ்கோபி டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் Tiny polyp in ascending colon என்று வந்துள்ளது. பயாப்ஸி டெஸ்டில் பிரச்சனை ஒன்றுமில்லை என்று வந்துள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்துகள், உணவு முறைகள் உள்ளனவா?
    எஸ். முருகன், தாராபுரம்.


    ஊதிப் பெரிதாக்குதல் எனும் ஒரு தன்மையை வாயுவால் மட்டுமே செய்ய முடியும். பெருங்குடல் பகுதியில் எந்நேரமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அபானன் எனும் வாயுவிற்கு குடல் வழி வரக் கூடிய தவறான உணவு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றால் சீற்றம் பெற்ற வாயு முதலில் பசித்தீயின் வலிமையைக் குறைக்கும். பெருங்குடல் பகுதியில் பக்குவம் பெறாத உணவுச்சாறு, மலதோஷம் ஆகியவற்றால் வயிற்றில் நீங்கள் குறிப்பிடும் Polyp எனும் உபாதை வயிற்றின் உட்புற சவ்வுகளிலிருந்து வளர்ந்து விடக்கூடும். நீர் பசையற்ற ஒரு பகுதியாக பெருங்குடல் அமைவதால் அங்குள்ள வறட்சியான தன்மையானது உந்தி பெரிதாக்கப்பட்ட Polyp உபாதையைக் கடினமாக்கி விடுகிறது. இதனால் சதா சர்வகாலமும் அசைவுடன் கூடிய வாயுவின் குடல் ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும் இந்தச் சிறிய கட்டி அல்லது உருண்டையானது வலியை உங்களுக்கு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இந்தக் கட்டியைச் சிறியதாக்கி மறையச் செய்ய வேண்டிய கட்டாயமும், வாயுவின் தங்கு தடையற்ற அசைவுகளுக்கான வழிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.

    கட்டியினுடைய வளர்ச்சியானது மேலும் பெருகக் கூடிய வாய்ப்பை அந்தப் பகுதியே ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் மலப்பாதை வழியாக செலுத்தக் கூடிய எனிமா எனும் வஸ்தி சிகிச்சை ஓர் அவசரகால சிகிச்சையாக உங்களுக்கு பயனளிக்கலாம்.

    அதற்கென்று பிரத்யேகமான ஆயுர்வேத மருந்துகள் கூறப்பட்டுள்ளன. சூடான வீரியம் கொண்ட பசுவின் சிறுநீரில் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகளால் வஸ்தி சிகிச்சை செய்து, ஏற்பட்டுள்ள கட்டியைச் சிறிதாக்க முடியும். வாயுவின் சீற்றத்தையும் மலம் வழி வெளியேற்ற முடியும்.

    உணவில் சூடாறிப்போன பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, வேர்க்கடலை, வறண்டு போன கீரைகள், குளிர்ந்த நீர், வறட்சி தரும் தானியங்கள் போன்றவற்றின் சேர்க்கையினால் இந்த உபாதை மேலும் வளரக்கூடிய அபாயம் இருக்கிறது. அதனால் இவற்றை நீங்கள் தவிர்த்து உணவை வெதுவெதுப்பாக, முன் உண்ட உணவு நன்றாக செரித்து பசி ஏற்பட்டுள்ள நிலையில் சாப்பிடுவது நல்லது. மலச்சிக்கல், வாயுவினால் குடல் பகுதி உந்திப் பெரிதாகுதல் மற்றும் குடலில் வாயுவின் உருண்டோடும் தன்மை ஆகியவை எவ்வகையிலும் ஏற்படாதிருக்கும்படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் (10}15 மி.லி) வேப்பெண்ணைய்யை சுமார் 5 மி.லி. கடுகெண்ணெய்யுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மேற்குறிப்பிட்ட குடல் உபாதைகளைத் தவிர்க்கலாம். Polyp சிறிதாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

    மாதுளம்பழச்சாறு அல்லது மோருடன் பெருங்காயம், இந்துப்பு, சுக்கு பொடித்து கலந்து புழுங்கலரிசிக் கஞ்சியுடன் காலையில் பருகி வர வயிற்றுவலி குறைந்து விடும். உணவிற்குப் பிறகு, சிட்டிகை சுக்கு, ஓமம், சோம்பு, கல்லுப்பு, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு வெற்றிலைக் கொழுந்துடன் சுருட்டி வாயினுள் அடக்கி மென்று சாப்பிட உண்ட உணவு விரைவில் செரிப்பதுடன் குடலில் வாயு மற்றும் ஆகாயம் எனும் பஞ்சபொதிகங்களின் ஆதிக்கம் செலுத்தாதிருக்க நன்கு உதவும்.

    உலர்ந்த புலால், முள்ளங்கி, மீன், உலர்ந்த காய்கறிகள், பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு, உணவு உட்கொண்ட பிறகு பழங்கள் சாப்பிடுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய உணவுப் பதார்த்தங்கள். இந்த Polyp உபாதையினால் குடல் காற்று மற்றும் மலம் தடைபடும்போது இஞ்சித் துண்டு, கடல் உப்பு, மிளகுத் தூள் மற்றும் கடுகு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து நீர் விட்டு அரைத்து இலந்தைக்கொட்டை அளவு உருண்டையாக்கி காய வைத்த மாத்திரையை ஆசனவாயில் செருகிக் கொள்வதன் மூலம் அவற்றை தடையின்றி வெளியேற்றலாம். சுகுமாரம் கஷாயம், இந்து காந்தம் கஷாயம், ஹிங்குவசாதி சூரணம், வைஸ்வாநரம் சூரணம், மூலகாத்யாரிஷ்டம், நிம்பாம்ருதாஸவம் போன்ற ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் இந்த உபாதைக்கு உபயோகப்படுத்தக்கூடிய சிறந்த மருந்துகளாகும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani : 20 April 2014



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1715
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்!!! Pdf


    By எஸ். சுவாமிநாதன்,

    டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

    நசரத்பேட்டை -
    600 123 (பூந்தமல்லி அருகே)

    செல் : 94444 41771


    dinamani 13 July 2013


    Attached Files Attached Files

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1716
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    இலுப்பைப் பூ:

    இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

    ஆவாரம்பூ:

    ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

    அகத்திப்பூ:

    அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

    நெல்லிப்பூ:

    நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

    மகிழம்பூ:

    மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

    தாழம்பூ:

    இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

    செம்பருத்திப்பூ:

    இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

    ரோஜாப்பூ:

    இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

    வேப்பம்பூ:

    சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

    முருங்கைப்பூ:

    ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.

    மல்லிகைப்பூ:

    கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

    கருஞ்செம்பைபூ:

    இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

    குங்குமப்பூ:

    கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1717
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    வரிவரியாய் ஒரு வைரம் பீர்க்கங்காய்

    இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

    இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

    இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

    பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

    பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.


    dinakaran



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1718
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    முதுகுவலிக்கு நிவாரணம் பெற

    முதுகுவலி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் வருகிறது. வாகனம் ஓட்டுபவர்களுக்கு, கணினியில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு, அதிக எடைகளைத் தூக்கி பணியாற்றுபவர்களுக்கு, குதிகால் செருப்பு அணிபவர்களுக்கு என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளவர்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது.

    பொதுவாக முதுகுவலி ஏற்பட்டதும் அதற்கு சிகிச்சை செய்வதை விட, அது ஏன் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அதனை மாற்றுவதுதான் சிறந்த வழியாகும். எந்த மாற்றத்திற்குப் பிறகும் முதுகுவலி தொடர்ந்து கொண்டே இருந்தால் சிகிச்சை பெறுவது நல்லது.

    முதுகுவலி உள்ளவர்கள் எடை அதிகமான பொருட்கள் எதையும் தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

    உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரிப்பதாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படுகிறது.

    திடீரென முதுகுவலி அதிகரிக்கும் போது நாம் வீட்டில் மேற்கொள்ளக் கூடிய சில சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.

    ஒரு பாட்டிலில் சுடுநீரை ஊற்றி மூடி அதனை வலி உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம்.

    தீராத முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வலி குறையும்.

    முதுகுவலிக்கு பூண்டு நல்ல நிவாரணமாக அமையும். காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டை சாப்பிட்டால் முதுகுவலி போன இடம் தெரியாது.

    மேலும், பூண்டை ஏதேனும் ஒரு எண்ணெயில் வதக்கி அந்த எண்ணெயை முதுகில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1719
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    கழுத்து வலியும் டிஸ்க் விலகலும்

    கழுத்து வலி: கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.

    டிஸ்க் விலகல் :டிஸ்க் விலகல் என்பது கழுத்துப்பகுதியில் மற்றும் இடுப்பில் முதுகு தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு Intervertebral Disc என்றழைக்கப்படுகிறது. இது சில சமயம் பிதுங்கி வெளிவருவதுண்டு. இதனை Disc Prolapse என்கிறோம். டிஸ்க் விலகலை MRI Scan எடுத்து பார்ப்பதால் உறுதி செய்யலாம். கழுத்தில் சி2சி3, சி3சி4, சி4சி5, சி5சி6 போன்ற இடங்களில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது.

    அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் திரும்ப சிரமம், வலி கழுத்திலிருந்து கைகளுக்கு பரவும். சில சமயம் கைவிரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும். சில சமயம் முதுகின் பக்கவாட்டில் நெஞ்சுப்பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும்.

    ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் : இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள்,மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கையை விட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி உணவு அருந்தும்போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழுங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

    இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை கண்டறிய சில ரத்த பரிசோதனைகள் உள்ளன. ரத்தத்தில் Ra Factor,Uric Acid, Asotire, ESR, Creactine Protein போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை படிப்படியாக குறைவது, பசியின்மை, மலகட்டு, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வெப்பத்தன்மை, காய்ச்சல் வருவது போல உடல் முழுவதும் வலி, அசதி, தூக்கமின்மை என உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, பின் மனரீதியாகவும் மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1720
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    தினம் தினம் கீரை!

    பிள்ளைகளின் உணவு அகராதியில் அவர்களுக்குப் பிடிக்காத ஒன்று கீரை. பார்வைக் கோளாறா, எதிர்ப்பு சக்தியின்மையா, வாய், வயிற்றுப் புண்களா... தினம் சாப்பாட்டுல கீரை சேர்த்துக் கொடுங்க... என்பதே மருத்துவர்களின் முதல் அட்வைஸ். பிள்ளைகளை கீரை சாப்பிட வைக்கிற தந்திரம் தெரிந்த தாய்மார்கள் உண்மையில் சாதனையாளர்கள்தான்!

    கொடுக்கிற விதத்துல கொடுத்தா எப்பேர்ப்பட்ட உணவும், யாருக்கும் பிடிக்கும். கீரையை வெறும் மசியலாவும், கடைசலாகவுமே கொடுத்தா, எந்தக் குழந்தைங்களுக்குத்தான் பிடிக்கும்? ஒரு மாறுதலுக்கு கீரையிலேயே ஆம்லெட், பணியாரம், கிரிஸ்பீஸ்னு செஞ்சு கொடுத்துப் பாருங்க... அப்புறம் கீரை இல்லாம ஒருநாள்கூட சாப்பாடு இறங்காது உங்கப் பிள்ளைங்களுக்கு என்கிறார் சமையல் கலைஞர் லட்சுமி ஸ்ரீனிவாசன்.

    விதம் விதமான கீரைகளில் வகை வகையான விருந்து படைத்திருக்கிறார் அவர். தினம் ஒரு கீரை சமைத்து, உங்கள் வீட்டில் ஆரோக்கியத்தை நிரந்தரமாகச் செய்யுங்களேன்!

    சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால், கீரை மசியல் நன்கு குழைவாக இருக்கும். கீரையை வேக வைக்கும் போது மூடக்கூடாது. திறந்தபடி இருந்தால்தான் அதில் இருக்கும் அமிலச் சத்துகள் வெளியேறும். கீரையை வேக வைக்கும் போது சிறிது உப்பைச் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

    வெந்தயக்கீரையில் சிறிது சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத் தன்மை நீங்கிவிடும். எந்தக் கீரையாக இருந்தாலும் அதோடு மூன்று துணுக்கு கறிவேப்பிலையை உருவிப் போட்டு சேர்த்து வேக வைக்கவும். பிறகு, வழக்கம் போல கடையவும். கீரை மசியல் மணமாக, சுவையாக இருக்கும். அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து, பொடி செய்து காலை, மாலை அரை டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து குடிக்கவும். வயிறு, மார்பு வலிகள் குணமாகும்.

    வெந்தயக்கீரை அதிக அளவில் கிடைக்கிறதா? அதை வாங்கி, கழுவி, நிழலில் உலர வைக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கசூரிமேத்தி என்றும் சொல்வார்கள். கொத்தமல்லியை நறுக்கி, பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து, பிறகு அலசி சுத்தம் செய்ய வேண்டும். புதினாவை அலசி சுத்தம் செய்த பிறகுதான் நறுக்க வேண்டும்.

    பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்பு பெருக்கும். இதையே துவரம் பருப்பு, மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் இளைக்கும். பசலைக்கீரையில் பருப்புச் சேர்த்து வேக வைத்து, மிளகாய், சீரகம் தாளித்து சாதத்தில் பிசைந்து உண்டு வந்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். நல்ல பசி எடுக்கும். முருங்கைக்கீரையை விழுதாக அரைத்து, தயிரில் கரைத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் காணாமல் போய்விடும்.

    முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் நீர்ச்சுருக்குப் பிரச்னை தீரும். முருங்கைக்கீரையுடன் துவரம் பருப்புச் சேர்த்து சமைத்து, பகல் உணவுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். தூதுவளைக் கீரையை குழம்பாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சளி, தும்மல் தொல்லைகள் நீங்கும். வாதநாராயணக் கீரையை சமைத்து சாப்பிட்டால் வாத நோய்கள் நெருங்காது.

    அகத்திக்கீரை சூப் கல்லீரல், நீரிழிவு பிரச்னைகளுக்கு அரு மருந்து. அகத்திக்கீரையை அரைத்துத் தடவினால் உடலில் ஏற்பட்ட காயங்களும் ஆறும். கீரை வகைகள், தயிர், இஞ்சி, முள்ளங்கி, நுங்கு, இளநீர், எள், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை இரவில் சாப்பிடக் கூடாது.


    dinakaran



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter