Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1761
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஏப்ரல் 25: மலேரியா நோய் விழிப்புணர்வு தினம். - சிறப்பு பகிர்வு
    பெருகும் கொசுக்களால் பரவும் நோய்கள்!
    உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் 6 முதல் 7 லட்சம் மக்களை மலேரியா நோய் பலிவாங்கியபடி இருக்கிறது. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? ராஜபாளையத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசனிடம் பேசினோம்...
    ''கொசுக்களில் ஆண் கொசுக்கள் சைவம். அவை தாவரச் சாறை மட்டுமே அருந்தி வாழும். பெண் கொசுக்கள்தான் ரத்தம் குடிப்பவை. மலேரியாவைப் பரப்பும் கொசுக்களுக்குப் பெயர் அனோபிலெஸ். இந்த அனோபிலெஸ் பெண் கொசுக்கள் 'பிளாஸ்மோடியம்’ என்ற ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன. இந்தக் கொசுக்கள் பகலில் நிழல் உள்ள இடங்களில் மறைந்து இருக்கும். இரவில்தான் மனிதர்களைக் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ் நீர் வழியாக மலேரியாக் கிருமிகள் மனிதனின் உடலில் புகுந்துவிடும். பின்பு, அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குள் செல்லும். இந்தக் கிருமிகள் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையிலும் கல்லீரலில் தங்கிப் பல்கிப் பெருகும். பின்னர் அங்கே இருந்து ரத்தத்துக்குத் திரும்பிவந்து ரத்தச் சிவப்பு அணுக்களை அழிக்கத் துவங்கும். அப்போதுதான் காய்ச்சல் ஏற்படுகிறது.
    மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலை வலி, உடல் வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்க் காய்ச்சல் ஏற்படும். உடல் நடுக்கம் எடுக்கும். இது சுமார் அரை மணி நேரம் நீடிக்கும். இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும். மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும். இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு, இதே காய்ச்சல் மறுநாளோ ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறையோ மீண்டும் வரும். இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
    மித வெப்ப நாடுகளில் கொசுக்கள் அதிகமாக வாழும். குறிப்பாக, பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள நாடுகளில் கொசுக்களின் பாதிப்பு அதிகம். காரணம், மிகக் குறைந்த வெப்ப நிலையிலும் மிக அதிகமான வெப்ப நிலையிலும் கொசுக்களால் உயிர் வாழ முடியாது. இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளிலும் பொதுச் சுகாதாரம் குறைந்த வளரும் நாடுகளிலும் கொசுக்களின் ஆதிக்கம் அதிகம். ஒரு கொசுவின் சராசரி ஆயுள் காலம் 12 நாட்கள். அதிகபட்சம் 34 நாட்கள். பெண் கொசுக்களைவிட ஆண் கொசுக்களுக்கு வாழ்நாள் குறைவு. சுமார் 11 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கொசுக்களால் பறக்க முடியும். பெண் கொசு முட்டை இடும் நேரத்தில்தான், ரத்தம் குடிக்க மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் கடிக்கும். ஒரு கொசுவின் எடை 0.025 மில்லிகிராம் இருக்கும். அது தன் வாழ்நாளில் 3,000 முட்டைகளை இடும்.
    பொதுவாக எல்லா வகைக் கொசுக்களும் மாலை நேரத்திலும் இரவிலும்தான் கடிக்கும். டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் மற்றும் சிக்குன் குன்யா கொசுக்கள் மட்டும் பகலில் கடிக்கும். வீடுகளில் இருட்டான மூலைகளில் தங்கி ஓய்வெடுக்கும். வீட்டுக்கு வெளியில் கிணறு, தண்ணீர் தேங்கியுள்ள இடங்கள், சாக்கடை, தாவரங்கள், மாட்டுத்தொழுவம் போன்றவற்றில் தங்கும். அனோபிலெஸ் கொசுக்கள் சுத்தமானத் தண்ணீரில் அடைகாக்கும். க்யூலெக்ஸ் கொசுக்கள் அசுத்தமான தண்ணீரில் அடைகாக்கும். ஏடிஸ் கொசுக்கள் தாவர இலை தழைகளில் அடைகாக்கும்.
    கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க என்ன வழி?
    மலேரியாவுக்கு எதிரான போரில் கொசுக்களை ஒழிப்பது என்பது மிக முக்கியம். இதற்கு வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை’ப் புகைய விட்டால், கொசுக்கள் இறக்கும். கொசுக்கள் வாழும் இடங்களைத் தாக்குவது இந்தப் போரின் அடுத்தக் கட்டம். சுத்தமான தண்ணீரில் மலேரியா கொசுக்கள் உற்பத்தி ஆவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும். குப்பைத் தொட்டி, தேங்காய் மூடி, உபயோகம் அற்ற டப்பாக்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் பாழடைந்த கிணறு இருந்தால், மூடிவிட வேண்டும். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைப்பதன் மூலமும் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம். வீடுகளில் வாளிகளில் நிரப்பிவைக்கப்படும் தண்ணீரையும் வாரம் ஒரு முறை முற்றிலும் வெளியேற்றி, வாளியை இரண்டு மணி நேரம் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். பூந்தொட்டிகள், ஏர்கூலர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, சாக்கடை நீர் தேங்குவதைத் தவிர்ப்பது, தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலமும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும்!'' என்கிறார் டாக்டர் கு.கணேசன்.

    Today's  Medical Info-image.jpg


    - டாக்டர் விகடன்




    Sponsored Links
    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1762
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    அதிசயங்கள் நிறைந்த மனித உடல்...!

    மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.
    இதற்கு காரணம் மனிதன் உட்காரும்போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

    ரத்த நாளங்கள், செல்கள்

    1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.
    2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.
    3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.
    4. மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
    5. மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.
    6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

    தசை

    1. கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
    2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    கால்கள்

    1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும்,ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும்.
    2. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.
    3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

    கண்கள்

    நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

    மூளை

    1. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
    2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்கு செல்கிறது.
    3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

    இறப்பு

    மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்
    கண்கள்- 31 நிமிடங்கள்
    மூளை- 10 நிமிடங்கள்
    கால்கள்- 4 மணிநேரம்
    தசைகள்- 5 நாட்கள்
    இதயம்- சில நிமிடங்கள்

    Today's  Medical Info-image.jpg




    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #1763
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    SHRED A CABBAGE TO SHED BELLY FAT & 17 HEALTH FACTS:

    1. Weight Loss Food: Cabbage is referred to as “smart carb” as it is low in calories and fat and rich in fiber, which inhibits the conversion of sugar and other carbohydrates into fat. A must have on any weight loss diet.

    2. Anti-Cancer: Fresh cabbage juice has been effective in the treatment of ulceration in the digestive tracts, and breast, colon, liver, lung and ovarian cancers. Contains cancer preventative compounds lupeol, sinigrin and sulforaphane that help protect cells from invasion of carcinogens.

    3. Immunity Builder: A compound called histidine in cabbage is found to be useful in treating allergies and regulating the T-cells in our immune systems. Cabbage contains very high levels of antioxidant Vitamin C that fights free radicals thus strengthening the immune system.

    4. Digestive Cleanser: The amino acid- glutamine and high sulphur, chlorine and iodine content, in cabbage juice gently cleanses, detoxifyies, and heals the mucus membranes in the digestive tracts of stomach and peptic ulcers.

    5. Skin Healer: Wrapping cabbage leaves around affected areas of blisters, sores, skin eruptions (as in psoriasis), burns and ulcers, speeds up the healing process. Antioxidant sources, including vitamin-C, anthocyanins, and sulphur, fight free radicals causing wrinkles, skin discoloration, spots, and many other conditions.

    6. Relieves Constipation: Cabbage is very rich in fiber and its laxative effect makes it effective in stimulating bowel movement, in water retention and maintaining the bulkiness of the food as it moves through the bowels, preventing constipation and other digestion-related problems.

    7. Brain Food: Red cabbage contains Vitamin K, iodine and anthocyanins that improve mental function and concentration, prevent neural degeneration, improving your defense against Alzheimer’s disease and dementia, and keep the endocrinal glands in healthy condition.

    8. Detoxifier: Vitamin C and sulphur in cabbage purifies the blood and removes toxins like free radicals and uric acid, root causes of rheumatism, gout, arthritis, renal calculi, skin diseases, and eczema.

    9. Lowers Blood Pressure: Potassium is a vasodilator that helps by opening up and easing the pressure on the blood vessels, improves blood flow, and prevents cardio vascular diseases like heart attack and stroke.

    10. Fights Anemia: Super healing effect of the superior chlorophyll in cabbage is critical for production of blood and maintaining healthy levels of red blood cells preventing anemia.

    11. Cures Headaches: A warm compress made with cabbage leaves can help relieve the pain of a headache. Raw cabbage juice can also heal chronic headaches.

    12. Regulates Blood Sugar: Cabbage has very simple sugars and the natural red pigments of red cabbage (betalains) lowers blood sugar levels and boosts insulin production.

    13. Anti-Inflammatory: Cabbage leaves accumulate cadmium-binding complexes-glutamine, which is a strong anti-inflammatory agent preventing irritation, allergies, joint pain, fever, and various skin disorders.

    14. Eye Health: Cabbage is a rich source of beta-carotene that promotes good eye health, prevents age related macular degeneration and delays the onset of cataracts.

    15. Strengthens Bones: Cabbage is a great source of calcium, magnesium, and potassium, essential minerals for the protection of bones from degradation and the onset of conditions like osteoporosis and arthritis.

    16. Muscle Aches: During cooking, sugars in cabbage get fermented, releasing lactic acid that reduces muscle soreness and aches.

    17. Other Benefits: Cabbage also contains vitamin-E that keeps the skin, eyes and hair healthy. Calcium, magnesium, and potassium found in cabbage are very useful in the treatment of varicose veins, leg ulcers, peptic and duodenal ulcers.




    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1764
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடலுக்கு உகந்த பாகற்காய்...!
    பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.
    அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
    பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
    பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.


    Athiravaikkim FB


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #1765
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சென்னை: தொலைபேசி மூலம் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெற தமிழகம் முழுவதும் 104 சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.அவசர காலங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 2008ல் அரசு 108 ஆம்புலன்ஸ் சேவையை அறிமுப்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்க 104 என்ற நம்பரில் இலவச மருத்துவ உதவி சேவையை அறிமுகப்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த 104 இலவச மருத்துவ உதவி சேவை மூலம் ஒருவர் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறலாம். அருகில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துதுவமனைகள்...




    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1766
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info




    *பருப்புக் கீரை சுவையான கீரை. பெயருக்கு ஏற்ப, பருப்புடன் சேர்த்து உண்டால் சுவை கூடும். இந்தக் கீரையை வீட்டுத் தோட்டங்களில் எளிதாக
    வளர்க்கலாம்.

    *பருப்புக் கீரையின் தண்டை துண்டாக்கி, நட்டு வளர்க்கலாம். பருப்புக் கீரை 15 செ.மீ. உயரம் வளரும்.

    பச்சை நிற இலைகள் தடிமனாக இருக்கும். வேர்பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    பயன்படும் பாகங்கள்

    *உணவாக, இலை, தண்டு அனைத்தையும் உட்கொள்ளலாம். மருத்துவப் பயன்களுக்கு, இலை, தண்டு, வேர் அனைத்தும் பயன்படும்.

    குணங்கள்

    *குளிர்ச்சி உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும், வறட்சியைப் போக்கும்.

    *100 கிராம் கீரையில் நீர்ச்சத்து – 90.5 கி,
    *புரதம் – 2.4 கி,கொழுப்பு – 0.6 கி,
    *தாது உப்புகள் – 2.3 கி,நார்ச்சத்து – 1.3 கி,
    *சர்க்கரைச்சத்து – 2.9 கி
    *சுண்ணாம்புச்சத்து – 111 மி.கி.
    *பாஸ்பரஸ் – 45 மி.கி.
    *இரும்பு – 14.8 மி.கி.
    *மாவுப்பொருள் – 2292 மி.கி.
    *தையாமின் – 0.10 மி.கி.
    *ரிபோஃபிளேவின் – 0.22 மி.கி.
    *நியாசின் – 0.7 மி.கி.
    *வைட்டமின் சி – 29 மி.கி.
    *கலோரித்திறன் – 27 கலோரி

    மருத்துவ குணங்கள்

    *கல்லீரல் நோய், ரத்த பேதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. பித்தக் கோளாறுகளுக்கு நல்லது. கல்லீரல் வீக்கத்தை போக்கும். இதற்கு பருப்புக் கீரையுடன் கீழாநெல்லியை சமபாகம் எடுத்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உட்கொண்டால் கல்லீரல் வீக்கம் குறையும்.

    *பருப்புக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பித்த தலைசுற்றல் முதலிய பித்தக் கோளாறுகள் நீங்கும்.குடல் வறட்சியை நீக்கி, மலத்தை இளக்கும். இதன் இலையையும், விதைகளையும் அரைத்து பூசினால், தீப்புண்கள் விரைவில் ஆறும்.

    *சீத பேதியை கட்டுப்படுத்த அரைத்த கீரையுடன் வெங்காய சாற்றையும் சேர்த்து உட்கொள்ளலாம்.தண்டை அரைத்து கை, கால் எரிச்சலுக்கு

    தடவலாம்.இலைகளை பிழிந்து சாறு எடுத்து, அதில் மஞ்சள் பொடியை கலந்து உடலில் ஏற்பட்ட கட்டி, வீக்கம் இவற்றில் தடவி வர, கட்டி வீக்கம் குறையும்.

    *பருப்புக் கீரை வயிற்று கிருமிகளை அழிக்கும்.பருப்புக் கீரை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

    பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1767
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    முளைக்கீரைச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், இரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.

    சிறு கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் அனைத்து விதமான பித்த நோய்களும் குணமாகும்.

    பசலைக் கீரைச் சாறில் நெல்லிக்காய் வற்றல், சோம்பு இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். பித்தம் தணியும்.

    அகத்திக்கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும்.

    கொத்தமல்லியுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.

    பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் போன்றவை விலகும்.

    கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

    துத்திக் கீரையை சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், பித்த மயக்கம், வாந்தி போன்றவை குணமாகும்.

    முசுமுசுக்கைக் கீரையுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் தணியும்.

    ஆரைக் கீரைச் சாறில் இஞ்சியை (ஒரு துண்டு) சேர்த்து அரைத்துக் குடித்தால் பித்த நோய்கள் விலகும்.

    புளியாரைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.

    பாலக் கீரை சாறு எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தை (பாதி அளவு) பிழிந்து சாப்பிட்டால் பித்தம் தொடர்பான நோய்கள் விலகும்.

    முக்குளிக் கீரைச் சாறில் நெல்லிக்காய் வற்றலை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவு சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1768
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    *இசங்கு இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் ஆகும்.

    *உளுந்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். அந்தத் தண்ணீரை மறுநாள் காலையில் குடித்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்து விடுபடலாம்.

    *எலுமிச்சன் துளசி, பெருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் சிறுநீரக கல் கரையும்.

    *கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.

    *கருவேப்பிலையை பொடி செய்து தினமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுநீரகம் பழுதடைவதும் தடுக்கப்படும்.

    *காசினி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கல் கரையும்.

    *கீழாநெல்லி இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு சரியாகும்.

    *சாணாக்கி கீரையை கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.

    *சோம்பு, பார்லி, மஞ்சள் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நல்லது.

    *டர்னிப் கீரையுடன் சீரகம், சோம்பு, சதகுப்பைக் கீரை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1769
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    நரம்புகளை உறுதியாக்கும் பலாப்பழம்

    பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.

    இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி , தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

    • இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

    • பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

    • ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

    • குழந்தைகள் இந்த பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

    • வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

    • பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

    • வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும்.

    • நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.



    Last edited by datchu; 27th Apr 2014 at 03:42 PM.
    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1770
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவா அடை

    தேவையான பொருட்கள்:


    கோதுமை ரவா - 1 கப்
    துவரம்பருப்பு - 1/2 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணை - தேவையான அளவு

    செய்முறை:

    • பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

    • கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

    • பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    • அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.

    • கறிவேப்பிலை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

    • தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுக்கவும்.

    • சத்தான, சுவையான அடை ரெடி


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter