Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1791
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    வெள்ளரியின் 25 மருத்துவ பயன்கள்


    1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.

    2. விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

    3. வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

    4. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

    5. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

    6. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம்,ஆந்திரசமையலில் காரம் அதிகம். 100கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பிஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின்சியும் சிறிதளவுஉண்டு.

    7. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக்கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக்காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.

    8. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.

    9. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. எனவே,வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    10. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.

    11. காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.

    12. வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

    13. தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.

    14. இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

    15. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

    16. முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில்பூசவேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

    17. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

    18. முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு, இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு,பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

    19. காரட்கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

    20. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ்ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

    21. ஜமைகாநாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம்பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக்காய் களை பயன்படுத்தலாம்.

    22. வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

    23.செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு.

    24.வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.

    25. கபம், இருமல், நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல.




    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1792
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    Re: Today's Medical Info

    கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி
    எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.
    உட*ல் உறு*ப்*பி*ல் *மிக மு*க்*கியமானது க*ண். சாதாரணமாக நா*ம் பா*ர்**ப்பதா*ல் *க*ண்களு**க்கு எ*ந்த பா*தி*ப்பு*ம் ஏ*ற்படுவ*தி*ல்லை. ஆனா*ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை*த் தொட*ர்*ந்து பல ம*ணிநேர*ங்க*ள் பா*ர்*த்து*க் கொ*ண்டிரு*ப்பதா*ல் கண் பாதிக்கப்படுகிறது.
    க*ண்களு*க்கு ஓ*ய்*வு எ*ன்றா*ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
    கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.
    மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.
    சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.
    பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.
    முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ*ய்வாக அமையு*ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.
    அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அ*ப்படி செ*ய்யு*ம்போது உ*ள்ள*ங்கைகளை எடு*த்து*வி*ட்டு *சி*றிது நேர*ம் க*ழி*த்து மெதுவாக க*ண்களை*த் *திற*க்க வே*ண்டு*ம்.
    மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.
    புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
    பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.
    அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.







    janu23, datchu and Sriramajayam like this.
    Thanks and Regards,
    N.Balamurugan

  3. #1793
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    Re: Today's Medical Info




    ஏலக்காயின் மருத்துவப் பயன்கள்

    ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்
    ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும் ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.

    4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.
    ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விளகும்.

    Last edited by balamurugan n; 1st May 2014 at 09:55 PM.
    datchu and Sriramajayam like this.
    Thanks and Regards,
    N.Balamurugan

  4. #1794
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    Re: Today's Medical Info

    சதை வளர்ச்சிக்கு ஜா*தி*க்கா*ய்
    தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா*தி*க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
    அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.
    இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.
    இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது.
    கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.





    Last edited by balamurugan n; 1st May 2014 at 09:56 PM.
    datchu and Sriramajayam like this.
    Thanks and Regards,
    N.Balamurugan

  5. #1795
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    அகத்திக்கீரையும் ஆரோக்கியமும்


    இயற்கை உணவு வகைகளில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.


    தோற்றம் :

    அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.

    அடங்கியுள்ள பொருட்கள் :

    ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன. மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

    குணங்கள் :

    இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
    எப்படிப் பயன்படுத்தலாம்? இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

    மருத்துவப் பயன்கள்

    பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும். அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.
    இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும். அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

    இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும். அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.
    அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும். இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும். பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும். அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

    அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.
    அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும். அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.
    வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும். அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். இக்கீரை பித்த நோயை நீக்கும். இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1796
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    Re: Today's Medical Info

    தயிர் வேண்டாமே மோர் குடிங்க!
    சித்திரை மாதம் பிறந்து விட்டது; கோடை ஆரம்பித்துவிட்டது. ஆனால், கத்திரி பருவம் வருவதற்கு முன்னரே, வெயில் கொளுத்துகிறதே, இந்த கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என, புலம்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்கள்:
    * கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; நுங்கு, கிர்ணிப் பழம், தர்பூசணி போன்ற பழங்கள், இளநீர், பிரஷ்ஷான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்; முடிந்த வரை குளிர்பானங்களாக குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல், காத்துக் கொள்ளலாம். தயிராக சாப்பிடாமல், அதில் நிறைய தண்ணீர் கலந்து மோராக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து, அதன் சாறு மோரில் இறங்கும் படி செய்ய வேண்டும். பின், அதில், பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது.
    * தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். அப்போது தான், கோடை காலத்தில் அதிகளவு வியர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
    * இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகள் அணியலாம். இதனால், கசகசவென இருக்கும் உணர்வு தவிர்க்கப்படும்; குறிப்பாக, உள்ளாடைகளும், பருத்தியாலானவற்றை அணிவது, மிகவும் நல்லது.
    * உடல் சூட்டின் அளவை குறைக்க <உதவும் வைட்டமின் சி எலுமிச்சம்பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
    * வெயில் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதால், ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    * வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், குடை எடுத்துச் செல்லுங்கள். இதனால், அதிகளவு சூரிய வெப்பம், உடலை தாக்குவதை தவிர்க்கலாம்.
    * பகல் வேளைகளில், வீட்டில் அறைகளின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து, இயற்கையான வெளிக் காற்று வரும் வகையில் வைக்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றிற்கும், பருத்தியாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
    * கோடை காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை போக்க, பாலாடை தேய்க்கலாம்.
    கோடை காலத்தில், உடலின் நீர்ச்சத்து வற்றாமல் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.





    Sriramajayam likes this.
    Thanks and Regards,
    N.Balamurugan

  7. #1797
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    செருப்புக்கடி புண்ணுக்கு

    தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.

    மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக

    கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1798
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    Re: Today's Medical Info

    அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள்
    சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் கட்டாயமாக பழங்கள் சாப்பிட வேண்டும் .பல விட்டமின் சத்துக்கள் இந்த பழங்களில் இருந்து கிடைக்கிறது . பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி பழங்களுக்கு உண்டு.
    எல்லோரும் திராச்சை பழம் உண்ணலாம் . ஆனால் வாழைபழம் எல்லோரும் சாப்பிட மாட்டார்கள். தோடம்பழம் எல்லோரும் சாப்பிடலாம்.பப்பா பழம் எல்லோரும் சாப்பாட்டுக்கு பின் உண்டால் மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம். நமது ஊர்களில் என்றால் மரத்தில் இருந்து சும்மா விழுந்து கிடக்கும். சாப்பிட ஆக்கள் இல்லை. ஆனால் இங்கு பப்பா பழம் எண்பது ரூபாய் ஒன்று . ம்ம்ம்ம்ம் அது இருக்கட்டும் . இடத்துக்கு இடம் எல்லாம் வித்தியாசம் தானே.
    ஆப்பிள் , அன்னாசி , பலா, வாழை என பழங்கள் உண்டு . உங்கள் உடல் நலத்துக்கு சிறந்தது எதுவோ அவற்றை வாங்கி உண்ணுங்கள் . எதுவும் அளவோடு இருக்கட்டும் . அதற்காக வாழை பழம் கூட இருக்கிறது தானே என்று நான்கு , ஐந்து என்று சாப்பிட்டு விட்டு பின்பு எனக்கு சர்க்கரை வியாதி கூடி விட்டுது டாக்டர் என்று வைத்தியசாலையில் நிக்கும் அளவுக்கு இருக்க கூடாது.
    என்ன பழம் என்றாலும் ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் .கடையில் விற்கும் பானங்களை குடிப்பதை விட வீட்டில் நாமே நல்ல சுத்தமாக ஜூஸ் போல் பழங்களை அடித்து குடிக்கலாம் . தாகமும் தீரும் . உடம்புக்கும் நல்லது . மாம்பழ ஜூஸ் , விளாம் பழ ஜூஸ் , அன்னாசி ஜூஸ் என நாமே பழங்களை கடையில் வாங்கி வீட்டில் செய்து சாப்பிடலாம்.
    ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு ருசி இருக்கும் . ஒன்று புளிப்பு தன்மை கொண்டதாகவும் , இனிப்பாகவும் இருக்கும் .காய்ச்சல் இருக்கும் போது பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச்சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும். இதனால் ஆப்பிள் , ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம்.
    .
    சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது .அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி, போன்றவற்றில் விட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா விற்றமினும் உண்டு . மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.
    உணவிற்கு முன்பு ஒரு ஆப்பிள், வெள்ளரிக்காய், தக்காளி சாப்பிடுங்கள். வயிறு பாதி நிரம்பிவிடும். பின்னர் மற்றஉணவைக் குறைவாக உட்கொண்டால் கூட வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். ஆப்பிள், வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியில் கலோரிகள் மிக மிகக் குறைவு என்பதை கருத்தில் கொள்ளவும் .இதெல்லாம் நாம் படித்து வைத்து இருந்தும் நாம் எப்பதான் இப்படி எல்லாம் செய்கிறோம் எனவும் யோசிக்க தோன்றுகிறது . எப்ப கையில் என்ன அகப்படுகிறதோ அதை சாப்பிட வேண்டியது தான் . நேரம் , காலம் பார்ப்பதில்லை . பழகின பழக்கம் அப்படியே .அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தினமும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.








    Sriramajayam likes this.
    Thanks and Regards,
    N.Balamurugan

  9. #1799
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    Re: Today's Medical Info

    அதிக நேரம் டி.வி பார்ப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கும்
    குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளதாக ஜர்னல் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.
    இது குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலை.,யின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 10 11 வயதுடைய ஆயிரம் குழந்தைகளை பரிசோதனை நடத்தினர். அவர்களை தினமும் இரண்டு மணிநேரம் டி.வி., மற்றும் கம்ப்யூட்டர்களை பார்க்கச் செய்தனர்.
    அவர்களின் சிந்தனை மற்றும் யோசிக்கும் திறன்,பள்ளிகளில் சம மாணவர்களுடன் பழகும் தன்மை ஆகியவை குறைந்து காணப்பட்டது. அதே சமயம் டி.வி., பார்க்காத குழந்தைகளின் செயல்திறன் அனைத்து விஷயங்களிலும் அதிகரித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.








    Sriramajayam likes this.
    Thanks and Regards,
    N.Balamurugan

  10. #1800
    balamurugan n's Avatar
    balamurugan n is offline Friends's of Penmai
    Real Name
    Balamurugan N
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    Hyderbad
    Posts
    133

    Re: Today's Medical Info

    தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?

    தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

    தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

    தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.









    Last edited by balamurugan n; 1st May 2014 at 10:42 PM.
    Sriramajayam likes this.
    Thanks and Regards,
    N.Balamurugan

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter