Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1841
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாகும்….

    Today's  Medical Info-image.jpg

    “மஞ்சள் ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அது தெரியாதவர்களுக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் “

    நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ‘ஆஸ்டியோபோரசிஸை’ (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

    அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக ‘ஆஸ்டியோபோரசிஸ்’ உள்ளது.

    இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

    உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘எண்டோக்ரைன் சுரப்பி’ நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். ‘மெனோபாஸ்’ ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.

    மஞ்சள் (மூலிகை) மகிமை

    மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது.மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

    மஞ்சளின் வகைகள்:
    1. முட்டா மஞ்சள்
    2. கஸ்தூரி மஞ்சள்
    3. விரலி மஞ்சள்
    4. கரிமஞ்சள்
    5. காஞ்சிரத்தின மஞ்சள்
    6. குரங்கு மஞ்சள்
    7. காட்டு மஞ்சள்
    8. பலா மஞ்சள்
    9. மர மஞ்சள்
    10. ஆலப்புழை மஞ்சள்

    மஞ்சளின் இயல்புகள்:

    முட்டா மஞ்சள்

    இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.

    கஸ்தூரி மஞ்சள்:

    இது வெள்ளையாக , தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

    விரலி மஞ்சள்:

    இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

    மஞ்சளின் பயன்பாடுகள்:

    சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.

    *பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

    *சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.

    *உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

    *பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.

    *வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.

    *இறைச்சி கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.

    *நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

    மருத்துவ குணங்கள்:

    1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

    2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

    3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

    4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

    5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

    6. “மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்”.

    “மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்”.

    7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்”. தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.

    8. “மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்”

    9. ” மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்”

    10. “மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்”

    11. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.

    12. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.

    13. பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.

    14. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.

    15. மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.

    மேலும் சில தகவல்கள்:

    1. மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    2. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

    3. மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.

    4. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.


    4Tamil



    Sponsored Links
    kvsuresh, jv_66, datchu and 2 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1842
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து வாருங்கள்….

    Today's  Medical Info-image.jpg

    கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெய் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம்.

    அதிலும் ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தவறாமல் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து ஊற வைத்து குளித்தால், மயிர்கால்கள் வலுவடைந்து, கூந்தல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைப் போக்கலாம்.

    கூந்தலானது அடிக்கடி சிக்கடைந்து கொண்டிருந்தால், அவற்றை எளிதில் சரிசெய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். மேலும் கூந்தல் வறட்சியுடன் அசிங்கமாக காணப்படும் போது, அவற்றை போக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

    தேங்காய் எண்ணெயால் கூந்தலை பராமரித்தால், மயிர்கால்களானது வலுவடைவதுடன், கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கும். தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க, தலைக்கு குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி நன்கு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

    பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வாரம் இருமுறை தேங்காய் எண்ணெயால் நன்கு மசாஜ் செய்து குளித்து வருவதுடன், தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து வாருங்கள். இப்படி தவறாமல் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


    4Tamil


    kvsuresh, jv_66, datchu and 2 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #1843
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Today's Medical Info

    Today's  Medical Info-onion.jpg.....................

    kvsuresh, jv_66, datchu and 3 others like this.

  4. #1844
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Today's Medical Info

    Today's  Medical Info-daily-walk.jpg,........

    kvsuresh, jv_66, datchu and 3 others like this.

  5. #1845
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info



    எள்ளின் மருத்துவக் குணங்கள் !!

    • படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள்சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.

    • காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்றுதண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள்பருக்கவும் வைக்கும்.

    • 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக்குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.

    • ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும்கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.

    • நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிறதோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும்.

    பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவுஉருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும்.தினமும் பாகற்காய் உணவில் சேர்க்கலாம்.


    KOTHAISURESH

  6. #1846
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info



    பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை



    • இயற்கை மருத்துவமுறைகளில் பழமையானவை சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளாகும். இவை அனைத்தும் ஒன்று சேர அமைந்திருக்கும் ஒரேயொரு மருத்துவமனை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை. 1970ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து அரும்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே இயற்கை மருத்துவ முறையில் சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி ஆகியவை ஒன்றாக அமைந்திருக்கும் ஒரே மருத்துவமனை.


    • இங்கு தினமும் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் சுமார் 200க்கும் மேற்பட்ட டாக்டர் மற்றும் உதவியாளர்கள் 24மணி நேரமும் இலவச சிகிச்சையளிக்கின்றனர். மேலும் இந்த மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரம், பரிசோதிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. மேலும் இங்கு உள்நோயாளிகள் பிரிவில் சித்தா150, யுனானி100 மற்றும் ஆயுர்வேதா60 என தனித்தனி பிரிவிற்கும் சேர்த்து 310 படுக்கைகள் உள்ளன. இங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவச பத்திய உணவும் வழங்கப்படுகிறது. சித்த மருத்துவம் சித்த மருத்துவ பிரிவில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமுறையில் எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாதது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.


    • திங்கட்கிழமையன்று தோல் நோய்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை, செவ்வாயன்று நீரிழிவு நோய், புதன்கிழமையன்று ஆஸ்துமா நோய், வியாழனன்று ரத்த அழுத்த நோய், வெள்ளியன்று முதுகு தண்டுவட நோய், சனிக்கிழமையன்று குழந்தையின்மை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயுர்வேதா: ஆயுர்வேதா பிரிவில் மூட்டு, நரம்பு சம்பந்தமான நோய்கள், நாள்பட்ட போலியோ போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சையுடன் மருந்துகளும் வழங்கப்படுகிறது. சிறப்பு சிகிச்சைகளான பஞ்சகர்மா, தொக்கணம், நவரக்கிலி, உரிச்சல், பிளிச்சல் மற்றும் தாரா ஆகியன சிறந்த மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது. கேரளாவின் சிகிச்சைகளும் இலவசம்.


    • இந்த சிகிச்சை முறைகள் நோய்களுக்கு மட்டுமின்றி நோய்கள் வருவதையும் தடுக்கிறது. பஞ்சகர்மா சிகிச்சை மூலம் உடலை சுத்தப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹோமியோபதி: இதில் அனைத்து நோய்களுக்கு மருத்துவமும், குறிப்பாக தோல், மகளிர் நோய்கள், குழந்தைகளுக்கான சிகிச்சை, சுவாச கோளாறு, ஆஸ்துமா, எலும்பு நோய், தைராய்டு, வாத நோய் போன்றவற்றிற்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. பக்க விளைவுகள் கிடையாது. மேலும் நாள்பட்ட நோய்களுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும். வர்மம் உடலில் உள்ள ஆற்றல் அதிகரிப்பதாலோ அல்லது குறைவதாலோ நோய் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் மிகை ஆற்றல் உள்ள இடத்திலிருந்து ஆற்றல் குறைவாக உள்ள இடத்திற்கு ஆற்றலை கொண்டு சேர்ப்பதன் மூலம் நோய்களை தீர்க்க முடியும் என்பது வர்ம சிகிச்சையின் அடிப்படை.


    • இந்த பிரிவில் எலும்பு மூட்டு, கை கால் வாதம், வலிப்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இங்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் மூலம் பலநோய்களுக்கும், தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் நாள்பட்ட வியாதிகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். யோகா மற்றும் இயற்கை மருத்துவம்: 1997ம் ஆண்டு இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதில் அனைத்து நோய்கள் மற்றும் நோய்கள் வராமல் தடுக்க யோகா முறை மற்றும் இயற்கை மருத்துவமுறைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக யோகா முறையில் கழுத்துவலி, இடுப்புவலி, உடல் பருமன், டையாபடீஸ், ஆஸ்துமா, தைராய்டு மற்றும் இதய நோய்கள் தீரும். ஆரம்ப கட்ட இதய நோய்களை எளிதில் குணப்படுத்தலாம். இயற்கை மருத்துவ முறையில் மண், நீர், நீராவி, எண்ணெய், சூரிய குளியல், அக்குபஞ்சர் மற்றும் காந்த சிகிச்சை முறை போன்றவற்றை கொண்டு அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் யோகா மருத்துவக்கல்லூரி மூலம் தினமும் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.


    • இந்த முறையில் சிறந்த டாக்டர்கள் மூலம் நோய்களுக்கு ஏற்றவாறு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த முறையில் நோயின் தன்மை, உடலின் தன்மை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு தனித்தன்மையான சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி என 3 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5 1/2 வருட பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1847
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Today's Medical Info

    Thank you friends for all your in formations.........................

    kvsuresh, datchu and Sriramajayam like this.

  8. #1848
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    தேன்...



    * பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
    * பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி ண்டாகும்.
    * மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
    * எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
    * நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
    * ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
    * ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
    * தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
    * இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
    * கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
    * தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும் .





    KOTHAISURESH

  9. #1849
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    சுகமான வாழ்க்கை தரும் சுவையான பலா



    முக்கனிகளில் ஒன்றான பலா மிகுந்த சுவை கொண்டதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

    * பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

    * பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

    * பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

    * பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

    * பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

    * பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

    * பலா மரத்தின் வேரை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

    * பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு தேய்த்தால் அவை குணமாகும்.

    * பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.

    ஒரு எச்சரிக்கை:

    பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

    * பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும்.

    * பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

    * குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

    * மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும்.

    இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.


    jv_66, Sriramajayam and fatima15 like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1850
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    எப்போதும் இளைமையாக தோன்ற, புதியவகை சிசிச்சைமுறை

    Today's  Medical Info-image.jpg

    எப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சைமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

    முதியவர்களுக்கு இளைஞர்கள் அல்லது இளம் பெண்களின் ரத்தத்தை செலுத்துவதன் மூலம் கடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். தற்போது எலிகளிடம் மட்டும் இந்த சோதனையை செய்து பார்த்துள்ளனர்.

    இளம் ரத்தத்தை செலுத்துவதன் மூலம், இயற்கையாகவே அந்த ரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்கள், நமது உடலைப் புதுப்பித்து சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்

    ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க அமெரிக்க டாக்டர் டோனி விஸ் கோரே தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை 18 மாத எலியிடம் செய்து பார்த்துள்ளனர். அந்த எலிக்கு, 3 மாத எலியின் ரத்தத்தை திரும்பத் திரும்பச் செலுத்தி சோதனையிட்டுள்ளனர். இதற்கு வேம்பயர் தெரப்பி என்று பெயரும் சூட்டியுள்ளனர்.

    இந்த ஆய்வின் முடிவில் இளம் ரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலிக்கு நினைவாற்றல் அதிகரித்ததாம். இளம் எலி போல சுறுசுறுப்பாகவும் அது செயல்பட்டதாம்.

    மேலும் அந்த வயதான எலியின் மூளையில் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்பட்டதாம் இதுகுறித்து மருத்துவர் டோனி கூறுகையில் எங்களது புள்ளிவிவரத்தின்படி இளம் ரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலி சுறுசுறுப்பாக இளம் எலி போல செயல்பட்டது. அதனிடம் இளமைத் துடிப்பும் காணப்பட்டது. இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்கின்றன.

    மனிதர்களிடம் அடுத்து இந்த சோதனையைச் செய்யவுள்ளோம். இந்த ஆய்வு வயோதிகம் காரணமாக ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளைச் சொல்லும் என்று திடமாக நம்புகிறோம் என்று கூறினார். மேலும், குறிப்பாக வயதானவர்களுக்கு வரும் அல்ஸீமர் நோய்க்கான தீர்வுகள் இதில் கிடைக்கும் என் கூறினார்.


    4Tamil


    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter