Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4812Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1861
    XXXXXX's Avatar
    XXXXXX is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    dddddd
    Posts
    154

    Re: Today's Medical Info

    nice threads about water time
    ......


    Sponsored Links
    durgasakthi and fatima15 like this.

  2. #1862
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    தேமல்:

    வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

    மூலம்:

    கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

    பப்பாளிக்காய்:-

    விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.

    மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க
    விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும். இரு நல்லது

    கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

    பலன்கள் : சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

    பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

    பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து

    பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

    பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

    நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

    பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

    பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

    பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

    பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

    பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

    பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

    பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

    பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

    சரும நோய்:

    கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

    தீப்புண்:

    வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

    மலச்சிக்கல்:
    செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

    சீதபேதி:
    மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

    பித்த வெடிப்பு:
    கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில்(Olive Oil) காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

    புண் கட்டிகள் , வியர்வைக்குரு:
    கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

    வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.

    முகத்தை அழகாக்கும்:

    ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

    நீரிழிவு நோய்:

    இன்று நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

    அருமருந்தான அருகம் புல்....

    இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1863
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆரோக்கியம் தரும் வீட்டு பொருட்கள்


    200 மி.லி பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து காலை, மாலை 1 டம்ளர் சாப்பிட்டு வந்தால் இருமல் தீரும். நெல்லிக்காயை நீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பிறகு அதில் மஞ்சள் பொடி கலந்து காலை, மாலை சாப்பிட்டால் குடிப்பழக்கம் விரைவில் மறையும். தினமும் அகத்தி கீரையை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லி கணியை அதிகம் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

    வல்லாரை, உத்தாமணி, மிளகு இவற்றை சமஅளவு எடுத்துக்கொண்டு அரைத்து குண்டுமணி அளவு மாத்திரையாய் செய்து காலை, மாலை 1 உருண்டையை வெந்நீரோடு சாப்பிடவேண்டும். இப்படி செய்தால் எவ்விதமான காய்ச்சலும் குணமாகும். அடிக்கடி மாம்பழத்தை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும். எலுமிச்சம் பழச்சாற்றினை தேன் கலந்து குடித்தால், வறட்டு இருமல் குணமாகும்

    நெல்லிக்காயை பற்களினால் நன்றாக மென்று சாப்பிட்டால் பற்களும், ஈறுகளும் உறுதியாகும். இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் தேனை கலந்து தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட்டால் ரத்த கொதிப்பு நோய் குணமாகும். சிறுநீரில் கல் அடைப்பு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டால் கல் கரைந்து குணம் அடைவார்கள்.

    துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகு பெறும். வல்லாரை 150 கிராம் 1 வசம்பு 15 கிராம் தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபகசக்தி பெருகும். புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாக்ஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்..



    Chill Queen likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1864
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    செக்கச் செவேல் சிவப்பு நிறத்துடன் நியை சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத்திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பெயன்களை இங்கே பார்க்கலாம்..

    •பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

    பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

    •பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.

    •தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்.

    •பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்.

    •பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.

    •பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

    •பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும்.


    Chill Queen likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1865
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    செரிமானப் பிரச்சினையா?



    பசியால் வாடுவோரைவிட செரிமானப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். அதிகமான உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவை செரிமானப்

    பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் ஆகின்றன.

    நல்ல விருந்து சாப்பிட்டுவிட்டு உடனடியாகத் தூக்கத்தைப் போட்டால் செரிமானப் பிரச்சினையால் தான் திணற வேண்டியிருக்கும். பொதுவாகவே, வயிறு முட்ட உண்பதைத் தவிர்க்க வேண்டும். உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். செரிமானப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மேலும் சில யோசனைகள்...

    * பிடித்த, ருசியான உணவு என்பதால் அதிகமாக உண்பது, மன அழுத்தம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * செரிமான சக்தியை அதிகரிக்க எலுமிச்சம்பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம்பழத்தை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

    * இஞ்சியும் செரிமானத்துக்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடலாம்.

    * இஞ்சிச் சாறையும், எலுமிச்சைச் சாறையும் நன்றாகக் கலந்து, ஒரு ஸ்பூன் குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

    * ஒரு தேக்கரண்டி சீரகம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிச் சாறில் உப்பு போட்டுக் குடிக்கலாம்.

    * ஓமம் வயிற்றுக்கு நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் அருந்தலாம்.

    * ஜீரண அவஸ்தை ஏற்படாமல் தவிர்க்க ஆயுர்வேதம் அளிக்கும்


    Chill Queen likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1866
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    உலர் அன்னாசி பழமும் இரத்த உற்பத்தி


    உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.

    முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.



    Chill Queen likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1867
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் இத்தனையும் வெள்ளரியில் உண்டு. இவற்றை விட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதியாக உள்ளது. ஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தடுக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விஷேச ஜீரண நீர் சுரக்கிறது. இது பித்தத்தை குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களை விரட்ட வெள்ளரி மிகவும் உதவும். வெள்ளரிப்பிஞ்சை உட்கொண்டால் புகைப்பிடிப்போரின் குடலை நிக்கோடின் தாக்குவதை குறைத்து நஞ்சை நீக்குகிறது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேளை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது. நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல. கண்கள் குளிர்ச்சியடைய வெள்ளரிக்காயை குறுக்கு வசம் சிறியதாக அறுத்து இரண்டு துண்டுகள் எடுத்து கண்ணின் மேற்பகுதியில் சிறிது நேரம் வைத்திடுந்தால் கண் குளிர்ச்சியடையும். அழகிய முகமும் வனப்பும் பெற வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது.


    Chill Queen likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1868
    kavithasankar is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    kanchipuram
    Posts
    508

    Re: Today's Medical Info

    How much natural medicine we have in our day life. Thanks for the information.

    datchu likes this.

  9. #1869
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,991

    Re: Useful tips - வீட்டுக் குறிப்புகள்

    அவசரகாலமுதலுதவிமுறைகள்

    வேலைசெய்யும்பொழுதோமற்றநேரங்களிலோமயக்கம்வருவதுபோல்தெரிந்தால், உடனேதாமதிக்காமல்மேலுதட்டில்இருக்கும்சிறியபள்ளத்தில்மூக்கிற்குக்கீழ்ஆட்காட்டிவிரலைவைத்து 1 நிமிடம்லேசாகஅழுத்தம்கொடுத்துகசக்கிவிடுவதன்மூலம்மயக்கத்திலிருந்துஉடனடிநிவாரணம்பெறலாம்.


    KOTHAISURESH

  10. #1870
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,991

    Re: Useful tips - வீட்டுக் குறிப்புகள்

    தலைவலி :

    கைகட்டைவிரல்நகத்திற்குநேர்கீழ்உள்பக்கம் (கைரேகைக்காகஇங்க்படும்பகுதி) சதைப்பகுதியில்மறுவிரல்நகத்தால் 1 நிமிடம்விட்டுவிட்டுஅழுத்தம்கொடுங்கள். அதேபோல்அடுத்தவிரலிலும்செய்யுங்கள். தலைவலிபறந்துபோவதைநீங்கள்உணரலாம்.



    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter