Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1881
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ஆரோக்கியமாக வாழ்வதற்கு இங்கு 6 வகையான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள்

    ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது.

    இதனால் திசுக்கள் விரைவாக முதிர்வடையும் தன்மை குறைவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.

    பாதாம்

    வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன.

    நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும்.

    இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    எலுமிச்சை

    தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்னையைச் சரிசெய்வதுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

    பூண்டு

    நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் பூண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

    இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின், உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத் தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

    டார்க் சொக்லேட்

    குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சொக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப்போகும் பிரச்னையைத் தவிர்க்கும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம்.

    மேலும் உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் டார்க் சொக்லேட்டுக்கு உண்டு.

    சோயாபீன்

    சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது.

    இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள லெசிதின் (lecithin ) என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும்.

    மேலும், இது கொழுப்பு அளவைக் குறைத்து, வளர்ச்சிதை மாற்றப் பணிகளை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இது நல்ல கொழுப்பை எதுவும் செய்வதில்லை.



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1882
    spmeyyammaisp06 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    663

    Re: Today's Medical Info

    thank you friends.

    Sriramajayam likes this.

  3. #1883
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோடு நுண்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.

    நாட்பட்ட கீல்வாத நோய்களுக்கு வசம்பை காசிக் கட்டியுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றிட்டு வர குணமாகும்.

    வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.

    வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.

    வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி தீரும்.

    வசம்பைக் கருக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை தீரும்.

    வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைக்க, உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டைக் கம்மல் இருமலை அகற்றும்.

    குழந்தைகளுக்கு உண்டாகும் சுரம், இருமல், வயிற்றுவலி இவை குணமாக வசம்புடன் அதிமதுரம் சேர்த்து கசாயமிட்டு காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கக் குணமாகும்.

    வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு திருந்தும்.

    பசியைத் தூண்டவும், அஜீரணத்தைப் போக்கி வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கவும் வசம்பு ஒரு பங்கும் பத்து பங்கு வெந்நீரும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி பதினைந்து மி.லி. முதல் முப்பது மி.லி. வீதம் அருந்தி வர வேண்டும். குழந்தைகளுக்கு உண்டான கழிச்சலுக்கும், முறைக் காச்சலுக்கும் இதனை கொடுக்கலாம்.

    வயிறில் சேர்ந்த வாயுவை அகற்ற வசம்பை அடுப்பில் வைத்து சுட்டுக் கரியாக்கி, அதனை தேங்காய் எண்ணையுடன் கலந்து அடி வயிற்றில் பூசவேண்டும்.

    சகலவித விஷக்கடிகளுக்கும் இதன் வேரை வாயிலிட்டு மென்று வர விஷம் முறியும்.

    வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்த்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சம அளவு இடித்துப் பொடித்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை கொடுத்துவர வயிற்றுவலி, மூர்ச்சை, காய்சலுக்குப் பின் உண்டாகும் பலக்குறைவு, பயித்தியம், காக்காய்வலிப்பு ஆகியவை தீரும்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1884
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும் கிராம்பு


    ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

    கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

    வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும். கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

    கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

    சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

    கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

    முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.

    கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

    கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

    கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும். சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1885
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மூலிகை நீர்

    சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

    ஆவாரம்பூ நீர்

    “ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்றபழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

    கரிசாலை நீர்

    சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

    செம்பருத்தி நீர்

    செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
    காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

    நன்னாரி நீர்

    “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

    துளசி நீர்

    குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
    தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

    வல்லாரை நீர்

    யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.


    Tamil Thantha Chitharkal


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1886
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகை..!

    Today's  Medical Info-10419400_742921812432936_4630548688869212064_n.jpg


    இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல் , மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.

    இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது .எனவே இதற்கு இலைகள் கிடையாது . இது கொல்லி மலையிலும் , கஞ்ச மலையிலும் , சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது . இதை மேற்குறிப்பிட்ட காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள் நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்.


    Tamil Thantha Chitharkal


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #1887
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்க - உஷ்ட்ராசனம்

    Today's  Medical Info-10419641_742940785764372_3116891562994387675_n.jpg


    உஷ்ட்ராசனம்- ஒட்டகம் போன்று உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.

    செய்முறை:

    1. விரிப்பின் மீது மண்டியிட்டு நிற்கவும். பாத விரல்கள் வெளி நோக்கி இருக்க வேண்டும்.
    2. முட்டி, பாதங்கள் சிறிது இடைவெளி விட்டு அகட்டி வைக்கவும்.
    3. இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

    பலன்கள்:

    முதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. முதுகு வலி, சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.


    Tamil Thantha Chitharkal


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #1888
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பாம்பு கடித்தவர்கள் செய்யக்கூடியவை....

    Today's  Medical Info-image.jpg

    • பயம் கொள்ளக்கூடாது. கடிபட்டவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும்.

    • பாம்பு கடிபட்டவர்கள் பயம் கொண்டால் உடலில் அட்ரினாலின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். அது இதய துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். ரத்தத்தில் கலக்கும் விஷம் அதன் மூலம் வேகமாக உடலின் எல்லா பகுதிகளுக்கும் பரவும். பயம், பதற்றமின்றி மனஅமைதியாக இருந்தால் விஷம் பரவுவது குறையும்.
    • பாம்பு கடிபட்ட நபரை நடக்கவைக்கக்கூடாது.
    • உடலுக்கு ஓய்வளிக்க வேண்டும்.
    • கடிபட்ட இடத்தில் அசைவு இல்லாமல் இருக்க, விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு உபயோகப்படுத்தும் ஸ்பிளின்ட்டை பயன்படுத்த வேண்டும்.
    • கடிபட்ட இடத்தில் இதய பகுதிக்கு கீழ் இருக்கும் படி பராமரிக்க வேண்டும்
    • மேற்கண்டபவை மூலம் விஷம் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.


    FB


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #1889
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பாம்பு கடித்ததும் செய்யக்கூடாதவை....

    Today's  Medical Info-image.jpg

    • பாம்பு கடிபட்ட இடத்தை கத்தி, பிளேடு போன்ற எதை பயன்படுத்தியும் கீறக்கூடாது.
    • கடிபட்ட பகுதியை கயிறாலோ, வேறு உபகரணங்களாலோ இறுக்கி கட்டக்கூடாது.
    • கடிபட்ட இடத்தில் வாயைவைத்து உறிஞ்சி தூப்புவதற்கு முயற்சிக்ககூடாது.
    • காயம்பட்ட இடத்தை கழுவலாம். ஆனால் பலமாக அதில் தண்ணீரை பீய்ச்சி அடித்து கழுவ கூடாது.
    • கடிபட்ட இடத்தில் ஐஸ் வைக்கக்கூடாது.
    • அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை உணவு எதுவும் வழங்கக்கூடாது.
    • காபி, டீ, மது போன்ற எதுவும் அருந்தக்கூடாது.
    • கடிபட்ட பகுதியை உயர்த்தி பிடிக்கக்கூடாது.
    • கடிபட்ட பாம்பை துரத்தி சென்று பிடிக்க நேரத்தை வீணாக்கக்கூடாது. அதன் வடிவம், நிறம் போன்றவைகளை நினைவில் வைத்திருந்தால் நல்லது.


    FB


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #1890
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பழங்களும் அதன் மருத்துவக் குணங்களும் :-
    ++++++++++++++++++++++++++++++++++++++

    1. கருப்பைக்கு வலிமை தரும் “மாதுளை”
    மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

    2. வாய்வுக்கும் “நாரத்தம் பழம்”
    நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

    3. கண்ணொளி தரும் “முந்திரிப் பழம்”
    கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

    4. வெண்மேகம் தீர்க்கும் கண்டங் கத்திரிப்பழம்”
    கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

    5. காச நோய்க்குத் “தூதுளம் பழம்”
    தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

    06. கபால நரம்புகள் பலம் பெறப் “பலாப்பழம்”
    பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

    07. பசியைத் துண்டும் “இலந்தைப் பழம்”
    பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

    08. தாது விருத்தி தரும் “திராட்சை”
    உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

    09. பப்பாளிப் பழம்
    யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

    10. வாழைப்பழம்
    மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

    11. வில்வப் பழம்
    பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீ ரகம்
    நன்கு செயல்படும்.

    12. அரசம் பழம்
    விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

    13. சீமை அத்திப்பழம்
    மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

    14. பேரீச்சம் பழம்
    இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

    15. தர்பூசணிப் பழம்
    கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

    16. முலாம் பழம்
    மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

    17. விளாம்பழம்
    பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

    18. அன்னாசிப் பழம்
    குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

    19. இளமை தரும் தக்காளி
    இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

    20. பேதியை (வயிற்றோட்டத்தை) நிறுத்தும் எலுமிச்சம்பழம்
    எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

    21. இன்பம் தரும் இனிப்புக் கமலா
    இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

    22. விக்கலை நிறுத்தும் கொய்யாப் பழம்
    கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

    23. தலைக் கனம் குறைக்கும் களாப் பழம்
    களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

    24.மலச்சிக்கலைப் போக்கும் நறுவிலிப் பழம்
    நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

    25. தாகம் தணிக்கும் ஆல்பகோடாப் பழம்
    காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

    இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...

    Today's  Medical Info-image.jpg


    Tamil Thantha Chittharkal


    selvinprakash and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter