Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree4813Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1901
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    Always u r welcome my dear friend



    Quote Originally Posted by spmeyyammaisp06 View Post
    thank you S V Nathan
    thank you mythili.



    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  2. #1902
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    “நொறுக்குத்தீனிப் பழக்கம்
    நோயை வரவழைக்குமா?”

    Today's  Medical Info-image.jpg

    “சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன.
    அதிலும் எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து எடுக்கப்--படும் வகைகள்தான் அதிகம். “டெம்ப் பக்கிங்” என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகளும் அதிகமாக விற்கப்-படுகின்றன. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக, இதுபோன்ற உணவுகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால், கொழுப்புச்சத்து, இதயநோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு அனைத்து நோய்களையும் உடலுக்குள் வேகமாக கொண்டுவந்து விடும். மேலும் ஒரே எண்ணெயை திரும்பத்திரும்பப் பயன்படுத்திச் செய்யும் உணவுகளால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நாள் ஒன்றுக்கு நம் உடலுக்கு ஐந்து கிராம் உப்புதான் தேவை. சிப்ஸ் போன்ற கொரிக்கும் பண்டங்களால் உப்பின் அளவும் உடலில் அதிகரித்துவிடும்.”
    “இதற்கு மாற்று என்ன?”
    “வீட்டிலேயே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம். சுண்டல், பொரிகடலை, அவல், சோளக்கருது, பொரிஉருண்டை, வேர்க்கடலை, எள் உருண்டை, பயத்தம் உருண்டை, ரவா லட்டு போன்ற உணவுகளைத்தான் நொறுக்குத்தீனியாகச் சாப்பிட்டு வந்தனர் நம் முன்னோர்கள். ஆனால், இன்று பண்டிகை நாட்களில் மட்டுமே கடமைக்குச் செய்து சாப்பிடுகிறோம். மேலும் கப்பை, மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. ஃப்ரூட்சாலட், வெஜ்சாலட், ஃப்ரெஷ் பழங்களில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. இவை எல்லாம், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியவை. இதனால், ரத்தஅழுத்தம் மற்றும் உடல்எடை கட்டுப்படுகிறது.”
    “ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை எந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்?”
    “மேலே குறிப்பிட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனி அனைத்து வயதினருக்கும் தேவை. ஆனால், நோய் பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் தகுந்த ஆலோசனைபடி எடுத்துக்-கொள்ள வேண்டும். என்னதான் ஆரோக்கிய-மானது என்றாலும், எப்போதுமே சாப்பிட்டுக்கொண்டி-ருப்பது ஆபத்துதான். தேவையான நேரத்தில் மட்டுமே குறைந்த அளவு சாப்பிடலாம்.


    Dr Vikatan


    jv_66, thenuraj and vaishnnavi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  3. #1903
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    சீரகம்=சீர்+அகம்..!

    "எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
    கட்டுத்தேனில் கலந்துண்ண
    விக்கலும் விட்டுப்போகுமே
    விடாவிடில் நான் தேரனும் அல்லவே"
    - ஆசான் தேரையர்

    தமிழ்ச்சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

    இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.

    தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது. திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .

    எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
    கட்டுத்தேனில் கலந்துண்ண
    விக்கலும் விட்டுப்போகுமே
    விடாவிடில் நான் தேரனும் அல்லவே
    என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல் ஒன்று உண்டு .

    சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

    BOTONICAL NAME Cuminum Cyminum
    FAMILY Apiaceae

    சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,
    கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

    சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

    திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
    அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

    மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
    சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

    சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

    உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

    சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

    சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

    சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

    உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
    திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

    சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
    அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
    சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
    ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
    பொதுவாக சீரகம்:

    வெப்பமுண்டாக்கி stimulant
    பசிதூண்டி stomachic
    துவர்ப்பி astringent
    வாய்வு அகற்றி carminative

    மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை !
    உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை..!


    Tamil Thantha Chittharkal


    jv_66, thenuraj and vaishnnavi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  4. #1904
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  5. #1905
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    பல் சம்பந்தமான நோய்களை நீக்கும் பல்பொடி.

    அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

    1 - சுக்கு
    2 - காசுக்கட்டி
    3 - கடுக்காய்
    4 - இந்துப்பு

    இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும். இதனைக்கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.


    Tamil Thantha Chittharkal


    jv_66 and vaishnnavi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  6. #1906
    vaishnnavi's Avatar
    vaishnnavi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    chennai
    Posts
    502

    Re: Today's Medical Info

    Quote Originally Posted by durgasakthi View Post
    இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..

    கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

    ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

    ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

    அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

    அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

    1. நுரையீரல் சுத்தமாகும்.

    2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

    3. வாயுத் தொல்லை என்பதே வராது.

    4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

    5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

    6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

    7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

    8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

    9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

    10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

    அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

    3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

    ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

    மீதிப்பேர் சாப்பிடலாம்.

    என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?








    Thankyou durga'' idhai enga veetla sukku kaapinnu solluvom-aennu theriyale.idula ivvalavu medicinal use irukunnu theriyadhu,but coldukku kudipom.

    jv_66 and Sriramajayam like this.

  7. #1907
    vaishnnavi's Avatar
    vaishnnavi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    chennai
    Posts
    502

    Re: Today's Medical Info

    Quote Originally Posted by Sriramajayam View Post
    எடையைக் குறைக்க...

    ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருந்தால் நமது உடலின் எடை நம்மால் தூக்கி நடக்க முடியாத அளவுக்குக் கூடிவிடும். எப்படியாவது உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டும் என்று நாள்தோறும் எண்ணுவோம். ஆனால் அதற்கான முயற்சிகள் எதனையுமே முன்னெடுக்கமாட்டோம்.
    எதற்கெடுத்தாலும் வாகனத்தில் செல்லும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டொழிக்க வேண்டும். இயன்றவரை அக்கம்பக்கம் செல்லும் வேலைகள் ஏதேனும் இருந்தால் நடந்தே சென்று பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் நடந்துசெல்வதை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அத்துடன், நாம் உண்ணும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்கிறோம்; எந்த மாதிரியான பானங்களை அருந்துகிறோம் என்பதில் கவனம் செலுத்தும் அதேவேளையில், இனிப்புள்ள பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இயன்றவரை சுத்தமான தண்ணீரை அதிகம் பருகும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். அதேபோல் உங்கள் சாப்பாட்டு நேரத்தைக் கவனியுங்கள். எந்தெந்த நேரங்களில் என்னென்ன சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு கட்டுப்பாடு விதியுங்கள். நொறுக்குத் தீனிக்கு அறவே விடைகொடுங்கள்.

    Attachment 82347Attachment 82347Attachment 82347Attachment 82347Attachment 82347
    ivaralavuku ennaala vegama nadakka mudiyadhuppa sami''

    Sriramajayam likes this.

  8. #1908
    Ragini is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Usa
    Posts
    213

    Re: Today's Medical Info

    Very useful, thanks a lot

    Sriramajayam likes this.

  9. #1909
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    Ok, Thx u friend.





    Quote Originally Posted by vaishnnavi View Post
    ivaralavuku ennaala vegama nadakka mudiyadhuppa sami''


    vaishnnavi likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  10. #1910
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    பலன் தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள்..
    **************************************

    • சுக்கு, பால், மிளகு, திப்பிலி சமஅளவு எடுத்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்புகுணமாகும்.

    • உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும் படி வாய் கொப்பலித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

    • கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடற்சோர்வு நீங்கி பலப்பெறும்

    • தேங்காய் பால் அடிக்கடி குடித்து வந்தால் ஆண்மை பெருகும். தாது விருத்தியாகும்.

    • குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு

    • எலுமிச்சைபழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலி தீரும்.

    • தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும்.

    • தினமும் 5 அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

    • முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

    • முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

    • வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

    • வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.


    தெரிந்துகொள்வோம் - Let Us Know's status Via FB


    thenuraj likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter