Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1921
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..





    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1922
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    நான்ஸ்டிக் பாத்திரங்கள் நல்லதா? கெட்டதா?


    இன்றும் பல வீடுகளில் 'என் அம்மா சமைச்சா... அத்தனை ருசியா இருக்கும்... வாசனை ஊரையே தூக்கும்’ என்று, மனைவி செய்த சமையலை ஒரு கவளம் வாயில் வைத்ததும், வார்த்தைகளை உதிர்க்கும் கணவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச் சமைத்ததும் உற்சாகமான மனநிலையில் அன்பையும் கரண்டி வழியே கலந்து பரிமாறியது இன்று, குறைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.


    மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

    ஸ்வீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கைதான், உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அது 'நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்பதுதான். நான்ஸ்டிக் பாத்திரங்களில், 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) எனப்படும் ஒரு வகை ரசாயனக் கலவை இருக்கிறது. சமைக்கும்போது உணவில் கலக்கும் இந்த ரசாயனம், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இது கணையத்தின் செயல்பாட்டைப் பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது என்கிறது, இந்த ஆராய்ச்சி முடிவு.

    இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த 'மோனிக்கா லின்ட்’ இது குறித்துக் கூறுகையில், 'நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகுளோரினேட்டட் பைபீனைல்ஸ், டயாக்சின்ஸ், பிஸ்பினால் ஏ போன்றவை, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதேபோல, சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’கள் நம் உடலில் உள்ளதா என்பதை ஆராய்ந்தோம். ஏனெனில், நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்களில் இந்த ரசாயனம் உள்ளது. இது உணவில் கலந்து நம்முடைய உடலில் சென்று சேர்கிறதா என்பதை கண்டறிவதன்மூலம் இந்த பொருட்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.

    ஆய்வில் பெரும்பாலானவர்களுக்கு, பர்ஃப்ளூரினேட்டட் அமிலம் அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தோம். இது கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இன்சுலின் சுரப்பைப் பாதிக்கிறது. இந்த ரசாயனம் கணையத்தை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த ஆய்வைப் பற்றி சர்க்கரை நோய் நிபுணர், 'இதைப் படித்துவிட்டு சர்க்கரை நோய் வருவதற்கு, நான்ஸ்டிக் பாத்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. சர்க்கரை நோய்க்கு மூலகாரணங்கள் மூன்று. அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி மற்றும் மரபணு. இதைத் தவிர இதர காரணங்கள் பல உண்டு. அதில் இந்த பர்ஃப்ளூரினேடட் ரசாயனக் கலவை முதன்மையான காரணமாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். நச்சுத் தன்மையுடைய இந்த ரசாயனக் கலவை, கணையத்தை நேரடியாகப் பாதித்து, கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் வெளியேறுகிறது.

    இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தத்தில் சேர்வதனால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே மக்கள் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் சர்க்கரை நோயைத் தவிர்த்துவிடலாம் என்று கருதிவிடக்கூடாது. 'ஜங்க் ஃபுட்’ உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு அதிக நார்ச் சத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், தினசரி உடற்பயிற்சி போன்றவற்றால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்' என்றார்.

    'உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உணவில் சுவையும், சத்தும் அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மை.’
    'மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. பாத்திரம் என்ற வரிசையில்கூட அது வராதது வருத்தத்தை அளிக்கிறது.

    மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

    செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை. எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும். ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே'


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1923
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    வேலையில் டென்ஷனா ... கொஞ்சம் விசிலடிங்க . மனநல நிபுணர்கள் அட்வைஸ் .

    டென்ஷனான வேலை , கடினமான உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் , ரிலாக்சாக வேலையை பார்க்க எளிய வழி உள்ளது . பிடித்தமான பாடல்களை பாடலாம் அல்லது சில நிமிடங்களுக்கு ஒருமுறை விசில் அடியுங்கள் .

    இதை சொன்னால் சர்ச்சைக்குரிய விஷயம் என்று நினைக்கக்கூடும் . ஆனால் , உள்ளிருந்து காற்றை இழுத்து விசில் அடிப்பதால், சோர்வடைந்திருந்த மூளை நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவது அறிவியல்ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

    பாடுவதாலும் இதே பலனை அடையமுடியும் . கால்பந்து போட்டியில் சிக்கலான பெனால்டி கிடைத்தபோதும் , முக்கியமான தேர்வு எழுதும்போதும் இதை செய்யச் சொல்லி பரிசோதிக்கப்பட்டது .

    பாடியதாலோ அல்லது விசில் அடித்ததாலோ ரிலாக்ஸ் ஆனது தெரியவந்தது . இப்படி ஏதாவது ஒன்றை செய்யும்போது வழக்கமான வேலைச்சுமை பற்றிய பதற்றத்தில் இருந்து மூளை பிரேக் எடுத்துக் கொள்கிறது . அதனால் , பணியில் கூடுதல் கவனமும் , எளிமையும் ஏற்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது .

    அமெரிக்காவைச் சேர்ந்த மனநல நிபுணர் சியான் பெய்லாக் , சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் . இவரது தலைமையில் ரிலாக்ஸ் செய்யும் வழிகள் பற்றி நடந்த ஆய்வு முடிவில் கூறினர் .



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1924
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    பால் புட்டியில் கேன்சர் .


    பால் புட்டியில் கேன்சர் அபாயம் .. இலினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பால் புட்டிகளில் புராஸ்ட்ரேட் புற்றுநோயை தோற்றுவிக்கும் ஆபத்தான சங்கதி இருக்கிறது என்கின்றனர் . பொதுவாக நாம் இப்போது உபயோகப்படுத்தி வரும் பிளாஸ்டிக்கை உருவாக்க ' பிஸ்பினால் ஏ ' என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது . இந்த பிஸ்பினால்தான் புராஸ்ட்ரேட் கேன்சரை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கிறது . பிஸ்பினாலை எலிகளுக்கு கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் இது உறுதியாகி இருக்கிறது . இந்த வேதியியல் பொருள் உடலுக்குள் புற்று நோய்க்கான திசுக்களை மெல்ல உருவாக்கி விடுகிறது . நாளடைவில் இது புராஸ்ட்ரேட் கேன்சராக உருமாற்றம் பெறுகிறது . குழந்தைகளுக்கு பிஸ்பினால் கலந்து உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் புகட்டும்போது இந்த வேதியல் பொருள் அவர்களுக்குள்ளும் சென்று இந்த பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது . புட்டிகளில் மட்டுமல்லாது, குழந்தைகளுக்கு என்று நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் கிண்ணங்கள், கத்திகள் போன்றவற்றிலும் பிஸ்பினால் ஆபத்து ஒளிந்திருக்கிறதாம் . இந்த பிஸ்பினால் மார்பக புற்று நோய், மாரடைப்பு, மலட்டுத்தன்மை போன்றவைகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கிறது . கடைசியாக ஒரு எச்சரிக்கை... ஆண்களை குறி வைத்து தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இருப்பது இந்த புராஸ்ட்ரேட் கேன்சர்தான்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1925
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info


    பிளாஸ்டிக் கவர் உணவுகளால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு!


    பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சூடான உணவை பிளாஸ்டிக் கவர்களில் வைக்கும்போது, நச்சுத்தன்மை கொண்ட ஆன்டி மணி, பிளாஸ்டிக் சைசர் என்ற வேதிப்பொருள் உடலில் கலக்கிறது. இதனால் கேன்சர் நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நகரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கக்கூடாது என நகராட்சி, நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுப்புற சூழல் மாசு, மண்வளம் பாதிக்கப்படுகிறது. இவற்றை கால்நடைகள் உணவாக உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.


    அதிகாரிகள் கண்காணிப்பில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பொருட்களை கட்டி கொடுக்கின்றனர். ஆன்டி மணி, பிளாஸ்டிக் சைசர் என்ற இந்த நச்சு வேதிப்பொருள் வயிற்றுக்குள் செல்லும் போது பல்வேறு வியாதிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற, அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே, அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    உணவு பாதுகாப்பு அலுவலர் கூறுகையில்,

    வாழை இலையில் சாப்பிட்டால் வயிற்று உபாதை ஏற்படாது. இலையில் உள்ள பச்சையம் குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். தற்போது பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் உணவுப் பொருட்கள் கொடுக்கின்றனர். இதில் உள்ள நச்சுச்தன்மை உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் கேன்சர் வர அதிக வாய்ப்புள்ளது என்றார்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1926
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info


    இடதுகைப் பழக்கம்! ஏன் வருகிறது?


    சில நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ம் தேதி, இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் இடக்கை பழக்கமுள்ளவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.


    நம்மில் அதிகமானோர் வலதுகைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறோம். இடது கைப்பழக்கமுடையோர் செயல்களைக் கண்டு வியக்கிறோம். உலக மக்களில் நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    * வலதுகைப் பழக்கம், இடதுகைப் பழக்கம் இவையெல்லாம் எதைப் பொருத்து அமைகின்றன? மூளையைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பொருத்தே அமைகின்றன.

    * இடதுகைப் பழக்கம் பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர், ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்க்ளின், புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, நடிகை மர்லின் மன்றோ, அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் - இப்படி ஒவ்வொரு துறையிலும் இடக்கை பழக்கமுடையோர் இருக்கின்றனர்.

    * இந்தப் பட்டியலில் லியனார்டோ டாவின்சி மேலும் ஒரு சிறப்புப் பெறுகிறார். அது என்ன சிறப்பு?

    * பொதுவாக வலக்கையாலே கண்ணாடி பிம்பம் போல எழுதுவது கடினம். ஆனால் டாவின்சியோ கண்ணாடி பிம்பம் போல இடது கையால் எழுதும் ஆற்றல் பெற்றவராம்.

    * பொதுவாக நமது மூளையின் வலது பக்கம் உடலின் இடது பக்கத்திற்கும் மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பிக் கட்டுப்படுத்துகின்றன. மூளைக்கும் உடலின் பக்கத்திற்கும் என்ன தொடர்பு?





    * மூளையின் ஒரு பகுதியில் உள்ள சில நரம்புகள் கழுத்துப் பகுதி வழியே கடந்து உடலின் எதிர் பாகத்தில் முடிவடையும். மூளையில் உள்ள இந்த நரம்புகள்தான் நம் கைப்பழக்கத்தை உண்டாக்குகின்றன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

    * 1648ம் ஆண்டு சர் தாமஸ் பிரவுன் என்பவர் எழுதிய வல்கர் எர்ரர்ஸ் (Vulgar Errors) என்ற நூலில் முதன்முதலாக இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைப் பொது மக்களுக்குத் தெரிவித்தார்.

    * இடக்கைப் பழக்கம் பற்றிப் பலர் ஆய்வு செய்துள்ளனர். அன்னீட் (Anneet) என்பவர் செய்த ஆய்வின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர்களை இரு வகையாகப் பிரித்தார். இடக்கைப் பழக்கம் பரம்பரையாகத் தோன்றுகிறது என்றும் பரம்பரைக் காரணமில்லாமல் தனித்தும் தோன்றுகிறது என்றும் வகைப்படுத்தினார்.

    * மெக்கால் (Mchal) என்பவர் நடத்திய ஆய்வின்படி வலக்கைப் பழக்கமுடையோரின் மூளையின் சிறு கிளைகள் (Occipital Horns), பக்கவாட்டு இரத்தக் குழாய்கள் ஆகியவை மூளையின் இடப்பக்கத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் ஐந்து மடங்கு நீளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடக்கைப் பழக்கமுடையோர்களுக்கு இந்த அமைப்பு நேர்மாறாக இருக்கிறதாம்!

    * நரம்புக் கோளாறுடைய குழந்தைகள் பெரும்பாலோர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகள் பெரும்பாலோர் பிறப்பு காலத்தில் டிரோமா (Birth Trauma) என்ற தாக்குதலுக்கு உட்படுவதாக பாகான் (Bakan) என்ற மருத்துவர் கூறுகிறார்.

    * இடக்கைப் பழக்கமுடையோரை வலக்கைப் பழக்கத்திற்கு மாற்றினால் சிலருக்குத் திடீர் என திக்குவாயாக மாறிட வாய்ப்பு உள்ளதாம். உதாரணம்: இங்கிலாந்தை ஆண்ட ஆறாம் ஜார்ஜ் மன்னர்.

    * பெரும்பாலான பொருட்கள் வலக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்தக் கூடியன வாகவே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சில வெளிநாடுகளில் கத்திரிக்கோல், கோல்ஃப் விளையாட்டு விளையாடப் பயன்படும் மட்டை போன்ற பொருட்கள் இடக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்த ஏதுவாகவும் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படுகின்றன. இது இடக்கைப் பழக்கமுடையோருக்கு ஒரு ஆதரவான இன்பச் செய்தி!



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1927
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    ஆப்பிள் ஜூஸ் குடித்தால் ஆபத்து - அதிரவைக்கும் தகவல்!


    வெயில் காலத்துல வெளியே அலையும் போது வழியில் ஏதாவது ஜூஸ் கடையைப்பார்த்துவிட்டால் போதும்,அப்படியே ஒரு ஜூஸ் போட்டு விட்டுப்போகலாம் என்று மனதுக்கு தோணும். ஜூஸ்
    கடைக்குப் போனதும் விலை அதிகம் இருந்தாலும் ஆப்பிள் ஜூஸைதான் நிறைய பேர் குடிக்கவும் செய்வார்கள். ஆனால்
    ஆப்பிள் ஜூஸ்குடிப்பது உடம்புக்கு நல்லதில்லை என்று தகவலை வெளியிட்டுள்ளது ஒரு ஆய்வு.

    எப்போதுமே பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட,
    அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும். அதிலும் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அப்போது அதில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால், ஆப்பிள் ஜூஸை அதிகம் பருகி வந்தால், நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்.


    அதுவும் ஆப்பிளை அரைத்து, அதனை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகினால் அதுதான் ஆபத்தில் உச்சம் என்கிறது அந்த ஆய்வு.


    ஆப்பிள் ஜூஸில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக்
    என்னும் பொருள் அதிக அளவில் உள்ளது. ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், அது உடல்
    பருமனுக்கு வழிவகுக்கும். ஆப்பிள் ஜூஸில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதனை அதிகம் உட்கொண்டால்,
    இதயத்திற்கு எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
    ஆப்பிள் ஜூஸ் போடும் போது, அதில் செயற்கை இனிப்பான
    சர்க்கரையை பயன்படுத்தினால், அது இரத்தத்தில் சர்க்கரையின்
    அளவை அதிகரித்து, நீரிழிவுக்கு வழிவகுக்கும். ஆப்பிளில்
    புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், முக்கியமாக
    நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் சுத்தமாக நார்ச்சத்து இருக்காது. ஆப்பிள்
    ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனைகள்
    வந்து சேரும்.







    பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான இரசாயங்கள் சேர்ப்பதால்,
    அது உடலின்ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும்.
    ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், அதனை அப்படியே சாப்பிடுங்கள்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1928
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

    கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

    கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

    பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

    ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
    அதிகரிக்கும்.

    மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

    தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

    பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

    இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

    மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

    இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.


    Tamil Thantha Chittharkal


    jv_66 and balamurugan n like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #1929
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி

    அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

    ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.

    விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

    அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

    உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!

    அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

    எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.

    ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

    இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

    அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

    இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை

    ...

    பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

    இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம்.
    ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் !

    Today's  Medical Info-image.jpg


    Tamil Thantha Chittharkal


    jv_66 and balamurugan n like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #1930
    bhuv is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    villupuram
    Posts
    331

    Re: Today's Medical Info

    very useful info

    Sriramajayam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter