Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1951
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    மாறுபடும் நாக்குகள்


    ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாசனை, தனிப்பட்ட விரல் ரேகை உள்ளது. இதனைப் போல நம் நாக்கில் உள்ள முத்திரையும் மனிதர் களுக்கு, மனிதர் மாறுபடுகிறது.உப்பையும், இனிப்பையும் கண்டறியும் சுவை அரும்புகள், நுனி நாக்கில் தான் உள்ளன. குழம்புக்கு உப்பு பார்க்க நாம் நுனி நாக்கை பயன் படுத்துகிறோம். வயதாக வயதாக பெரும்பாலான மக்களின் சுவை மொட்டுகள் பலவீனமடை கின்றன. இதனால் தான் பெரியவர்கள் அந்தக் காலம் போல உணவு சுவையாக இல்லை என கூறுகின்றனர். பாக்கு, புகையிலைப் பழக்கம், சுவை மொட்டுகளை மழுங்கடிக்கின்றன.



    Sponsored Links
    jv_66 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1952
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    கல்லீரலில் கவனம் தேவை!


    மலேரியா, சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சத்தமில்லாமல் கொல்லக்கூடிய, எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட வைரஸ் கிருமிகளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆண்டுதோறும் 14 லட்சம் பேருக்கு, ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படுகிறது. 2.4 கோடி பேர், ஹெபடைட்டிஸ் பி (எச்.பி.வி) கிருமித் தொற்றுடன் வாழ்கின்றனர். 7.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ வைரஸ் கிருமியால் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




    'கல்லீரலில் ஏற்படக்கூடிய அழற்சியை 'ஹெபடைட்டிஸ் என்போம். இந்த அழற்சி ஒரு கட்டத்துக்குள் நின்றுவிடலாம். இல்லை என்றால் கல்லீரலில் சுருக்கம், தழும்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் லிவர் ஸ்காரிங், கல்லீரல் செயல் இழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய்கூட ஏற்படலாம். பொதுவாக நோய்க் கிருமிகள் மூலம் இந்த அழற்சி ஏற்படலாம். தவிர, மது அருந்துதல், சில வகையான மருந்து களை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்லே நம் உறுப்பைத் தாக்கும் 'ஆட்டோஇம்யூன் பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவும் ஹெபடைட்டிஸ் ஏற்படலாம்.

    கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் நிறைய உள்ளன. இந்த வைரஸ் கிருமிகளின் வகைகள், 'ஏ-வில் தொடங்கி 'ஜி வரை சென்றுவிட்டது. இதில், 'ஹெபடைட்டிஸ் பி மற்றும் 'சி மிக மோசமானவை. உலகில் லட்சக் கணக்கானோருக்கு கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட, வைரஸ் 'பி மற்றும் 'சி காரணமாக இருக்கின்றன. ஹெபடைட்டிஸ் 'ஏ மற்றும் 'இ உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. பி, சி, டி ஆகியவை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய ரத்த வழித் தொடர்புகொள்வதன் மூலமே ஏற்படுகிறது.

    பொதுவாக, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தைப் பெறுதல், சரியாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்துவதாலும் பரவுகிறது. 'ஹெபடைட்டிஸ் பிவைரஸ் மட்டும் இதனுடன் கூடுதலாகக் கர்ப்பக் காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் மற்றும் உடல் உறவு மூலமாகவும் பரவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால், சிசுவுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணியும் தனியாக ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுக்க, குழந்தைப் பிறந்ததும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். எந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    பாதுகாப்பற்ற ரத்தப் பரிமாற்றத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசியைப் பயன்படுத்த வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் மூலம் ஹெப டைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் பரவாமல் இருக்க, தனிநபர் சுகாதாரம் அவசியம். நோய்த் தொற்று உள்ளவர் உணவை சமைக்கும்போதோ, பரிமாறும்போதோ, அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, சுத்தமாக இருப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்'

    தொற்றைத் தடுக்க... தேவை விழிப்பு உணர்வு!

    ''பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் இந்த வைரஸ் கிருமித் தொற்று பற்றிக் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும். ஒருவேளை பாதிப்பு கண்டறியப்பட்டால், அதை எப்படிக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். தவிர, அனைவருக்கும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியைக் கட்டாயமாக்க வேண்டும். இதைச் செய்தாலே, வைரஸ் தொற்றுப் பாதிப்பை பெருமளவு குறைத்துவிட முடியும்

    jv_66 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1953
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா?. அப்போ இத ட்ரை பண்ணுங்க.


    அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது.
    அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருப்பதற்கு என்ன இயற்கை முறைகள் என்று பார்க்கலாமா?

    முகத்தை கழுவுதல் :





    முகம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், தினமும் முகத்தைக் கழுவுவது என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால், முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.


    ஃபேஸ் பேக் :



    முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும்.



    எலுமிச்சை :

    எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.



    பழங்கள் :




    பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு, சருமத்திற்கு தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.


    தொப்பி அணியவும் :



    வெளியே சுற்றும் போது, தலைக்கு தொப்பி போட்டு செல்ல வேண்டும். இதனால் முகத்தில் சூரியக்கதிர்கள் நேரடியாக படுவதை தவிர்க்கலாம்.


    தயிர் மசாஜ் :



    தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.

    கிளின்சிங் :




    கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.



    தண்ணீர் குடிக்கவும் :




    தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

    உடற்பயிற்சி :



    முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டுமெனில், மேற்கூறியவற்றுடன் தினமும் காலையில் எழுந்து லேசான உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.


    jv_66 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1954
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    தொண்டைச் சதை குணமாக (Tonsil) பாட்டி வைத்தியம்:-

    மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தொண்டை சதை (Tonsil) குணமாகும். இனிய குரல் வளம் உண்டாகும்.

    தூதுவளைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் டான்சில் எனப்படும் தொண்டைச்சதை குணமாகும்.
    — with Mari Muthu and 4 others.





    jv_66 and thenuraj like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1955
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    சுக்கு மருத்துவக் குணங்கள்:-

    1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

    2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

    3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

    4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

    5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

    6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

    7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

    8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

    9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

    10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

    11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

    12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

    13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

    14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

    15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

    16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

    17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

    18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

    19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

    20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.





    jv_66 and thenuraj like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1956
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

    இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

    இளநரை போக்க மூலிகை எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
    சீரகம் – 1 ஸ்பூன்
    சோம்பு – 1/2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் – 3
    கறிவேப்பிலை – 2 இணுக்கு
    கொத்தமல்லலி – சிறிதளவு
    நெல்லி வற்றல் – 10 கிராம்
    வெட்டிவேர் – 5 கிராம்

    இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

    பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1957
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்


    நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண் டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண் டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல்படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது.

    உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட் டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போ ஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

    வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற் றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோ யால் அவதிபடுபவர் களுக்கு சிறந்த தீர் வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மருந்தாவும் பயன்படு கிறது. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

    துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட் டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது.

    கருப்பை பலவீனமாக இருந்தால் கருத் தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும். இத்தகைய பிரச்சினை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும்.


    jv_66 and thenuraj like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1958
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்.

    நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.

    கண்பார்வை குறைபாட்டை குனபடுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது , மாலைகண் நோயால் பாதிக்க பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்குதேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள் நீங்கும்.

    எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

    பேரீச்சம் பழத்தை கொட்டைநீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர்,
    இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்.

    தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீட்ச்சம்_பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும். தோல்பகுதிகள் வழுவழுப்பாகவும் , மிருதுவாகவும் இருக்கும்


    jv_66 and thenuraj like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1959
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும் ...!

    அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இருதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இருதயத்திற்கு ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள் ளனர். ஆஸ்திரேலி யாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் இந்த ஆய்வினை மேற்கொண்டது.

    ரத்த நாளங்கள் பாதிப்பு:

    டிக்கின்சன் குழு வினர் மேற்கொண்ட ஆய்வில் 16 ஆரோக்கிய மான நபர்கள் ஆய் விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 8 நபர் களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப் படுத் தப்பட்ட தககாளி சூப் 10 முறை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன் படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய் யப்பட்டது. இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இரு தய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத் தமும் அதிகரித்திருந்தது.

    அதிக உப்பு ஆபத்து:

    இதே ஆய்வு மீத முள்ள 8 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஒட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன் படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது. எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

    மேலும் உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ஸடை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளிவரும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. நம் ஊரில் நிறைய பேர் ஊறுகாயும், அப்பளமும்தான் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


    jv_66 and thenuraj like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1960
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

    நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆனால் அந்த தாமதம் சிலருக்கு 2 மாதங்கள் தள்ளிக் கூட போகும்.

    இத்தகைய பிரச்சனையால், பிற்காலத்தில், அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துக்கள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.

    அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கவும், தாமதமான மாதவிடாய் சுழற்சியை தடுக்கவும், ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

    சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

    சாலமன் மீனில் சாலமனில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலில் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டும் ஹார்மோன்களை நன்கு செயல்பட வைத்து, மாதவிடாய் சுழற்சியை முறையாக நடைபெறச் செய்யும்.

    காய்கறிகள் தினமும் உணவை சாப்பிடும் போது, அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரைகள், கத்திரிக்காய் போன்றவை மிகவும் சிறந்தவை. இவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச் செய்யும்.

    மீன் அல்லது மீன் எண்ணெய் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.

    பாதாம் பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

    எள் எள் சாப்பிட்டாலும், சீரான மாதவிடாய் சுழற்சியை பெறலாம். எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

    தயிர் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் தயிரை சாப்பிட்டு வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதோடு, மாதவிடாயும் சரியாக நடக்கும்.

    சோயா பால் சோயா பால் சாப்பிட்டாலும், மாதவிடாய் சுழற்சி தவறாமல் நடைபெறும்.

    முட்டை முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter