Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1961
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Info

    ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்


    ஏடிஎம்களில் பணம் எடுத்த பிறகு வரும் ரசீது தாள்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் போது தரப்படும் பில்லினால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஏடிஎம் ரசீது போன்ற கணினிகளால் ஜெனரேட் செய்யப்படும் தாள்களை தயாரிக்க பிஸ்பினால் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிஸ்பினால் ரசாயனம், மனித தோலினை ஊடுருவிச் சென்று உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.


    இது குறித்து ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அம்மாநில அமைச்சர் பதில் அளிக்கையில், ‘ஏ.டி.எம். தாள்களால் புற்று நோய் ஏற்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதுபற்றி ஆய்வு நடத்த உயர் நிலைக் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.


    வங்கி அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், வங்கி ஏடிஎம் மட்டுமில்லாமல் சிறிய கடைகளில் கொடுக்கும் ரசீதில் கூட பிஸ்பினால் கலக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏடிஎம் ரசீதினால் புற்றுநோய் ஏற்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை என்பதே பதிலாக உள்ளது.


    அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏடிஎம்களில் இதுபோன்ற தெர்மல் காகிதங்கள் பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.


    இதுவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லையெனினும், மனிதர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்திருப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையேக் காட்டுகிறது..


    பலரும் ஏடிஎம் பேப்பர்களை கிழித்தெறியாமல் பத்திரப்படுத்தி கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் சுவாமி பிரசாதத்தை அதில் மடித்து வைத்து அவ்வபோது பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த செய்தி நிச்சயம் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது உண்மை.



    Sponsored Links

  2. #1962
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    பிளாஸ்டிக் கோப்பைகள் புற்றுநோய் உருவாக்கும் வேதிபொருள்களை கொண்டுள்ளன: ஆய்வில் தகவல்

    தேநீர், காபி ஆகியவற்றை குடிப்பதற்கு பயன்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டைரீன் என்ற வேதி பொருள் மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.


    அமெரிக்காவின் தேசிய ஆய்வு அமைப்பு ஒன்று வேதியியல், நச்சு வேதி பொருள் கண்டறியும் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த 10 நிபுணர்களை கொண்டு ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், வேதி பொருளான ஸ்டைரீன் மனிதர்களிடையே புற்றுநோயை உண்டாக்க கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    ஆய்வின் தலைவர் டாக்டர் ஜேன் ஹென்னே கூறும்போது, இது துன்பம் விளைவிக்கும் ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார். அவரது கூற்றின்படி, அறிவியல்பூர்வமான தகவலின் அடிப்படையில், ஸ்டைரீன் புற்றுநோயை உண்டாக்குவதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், சில மாற்று விளக்கங்களும் இருக்கின்றன.

    அவை வாய்ப்பு, ஒரு பக்க சார்பு நிலை மற்றும் சில காரணிகள் ஆகும் என்று ஹென்னே தெரிவித்துள்ளார். எங்களது அறிக்கை இந்த வேதிபொருள் பிரச்சனைக்குரிய ஒன்று என தெரிவிக்கின்றது. ஆனால், அவற்றின் அளவு, பயன்பாடு, ஆபத்திற்கான பண்புகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    உணவுகளை பாதுகாப்பாக விற்பதற்காக அடைத்து வைக்கப்படும் நிலையில் பயன்படும் வேதிபொருள்களில் ஸ்டைரீன் உட்பட 170 அபாயகரமான வேதிபொருள்கள் சட்டபூர்வமான பயன்பாட்டில் உள்ளன என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவுகளை டின்கள் அல்லது பெட்டிகளில் வைப்பதற்காக பயன்படும் வேதிபொருள்களில் நச்சு உருவாக்க கூடிய பொருட்களும் காணப்படுகின்றன.

    அவை புற்றுநோயை உருவாக்க கூடும் என்றும், மரபணுக்களில் மாற்றத்தை தோற்றுவிக்க கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹென்னே தலைமையிலான ஆய்வின்படி, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய 175 வேதிபொருள்களை கண்டறிந்துள்ளனர். இந்த பொருட்கள் ஆணின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்துதல், உறுப்புகள் பாதிப்புடன் உருவாதல் மற்றும் உடலில் ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன என கண்டறிந்துள்ளனர்.

    எனினும், உணவு தர கழகம் ஆனது, ஐரோப்பிய தரத்தின் கீழ் உணவு பேக்கிங் செய்யப்படுவதால் அதில் இருக்கும் வேதிபொருட்கள் ஒழுங்குகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பயன்படுத்தப்படும்பொழுது அவற்றை குறித்து கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று விளக்கம் தருவதுடன் அவற்றை நுகர்வோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க வேதியியல் அமைப்பு ஸ்டைரீன் வேதிபொருள் குறித்து சாதகமாக கூறுகையில், உணவு பொருட்கள் உற்பத்தியில் குறிப்பாக, காபி கோப்பைகள், சாலட் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் டின்கள் ஆகியவற்றில் 50 வருடங்களுக்கும் மேலாக பாலிஸ்டைரீன் பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ளது. இந்த வேதிபொருள், ஒழுங்குமுறை அமைப்பால் மறு ஆய்வு செய்யப்பட்டு, உணவு தொடர்பான பயன்பாட்டில் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது என அந்த அமைப்பானது தெரிவித்துள்ளது.


    Read more: This is your space - இது உங்கள் இடம்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1963
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Info

    கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக்: சி.எஸ்.இ. எச்சரிக்கை

    Today's  Medical Info-image.jpg

    விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

    சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.

    இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

    விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிக்கன் கறி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

    பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்று அவர் எச்சரித்துள்ளார்.

    பரிசோதனை முடிவுகள்:

    டெல்லியிலிருந்து 70 சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோழிகளின் லிவர், தசை மற்றும் கிட்னி பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கூறிய ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகள் அனைத்து சிக்கன்களிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37-131.75 மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பது தெரியவந்தது.

    குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற சிக்கன் கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட (ஆக்சிடெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின்) மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

    கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வாளரகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால், சிக்கன் கறி சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

    இதனையும் சி.எஸ்.இ. ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.

    எனவே இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் தாறுமாறாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது


    Tamil Hindu



    jv_66 and thenuraj like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1964
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    ஆண்டிபயாடிக் மருந்துகள் உயிரையும் பறிக்கலாம்!

    கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவச் சாதனை என்று போற்றப்படுவது, நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் என்று அழைக்கப்படும் ‘ஆண்டிபயாடிக்’குகளைக் கண்டுபிடித்ததுதான்.


    உலகின் முதல் ஆண்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தியது. பென்சிலினைக் கண்டறிந்த அலெக்சாண்டர் ஃபிளமிங்குக்கு 1928-ல் நோபல் பரிசு கிடைத்தது.

    உலக அளவில் 1930-க்கு முன்னால் சிறிய வெட்டுக்காயம், சாதாரண சளிகூடப் பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தன. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் அசுர வேகத்தில் பரவி, பல்லாயிரம் மனித உயிர்களைப் பலி வாங்கிய வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆண்டிபயாடிக்கின் வரவு மனிதக் குலத்தை மிகப் பெரிய அழிவிலிருந்து காப்பாற்றியது.

    எழுபது ஆண்டுகளுக்கு முன், எது மனிதனின் அற்புதக் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டதோ, அதே ஆண்டிபயாடிக் இப்போது முனை மழுங்கிய வாளாக நோயால் வாடும் மருந்தாக தன் சக்தியை இழந்து கொண்டிருக்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆண்டிபயாடிக் ஆய்வு முடிவின் அறிக்கை இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

    ‘இப்போது நடைமுறையில் உள்ள பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் சவால் விடுகின்றன; நோய்களுக்கு எதிராக இந்த மருந்துகள் நடத்தும் தாக்குதலுக்கு அவை பெரும் தடையாக நிற்கின்றன; ஆண்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு, பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன.

    இதனால் நிமோனியா, கொனோரியா, காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்ற சாதாரண நோய்களுக்குக் கொடுக்கப்படுகிற ஆண்டிபயாட்டிக்குகள்கூட செயல்திறனை இழந்து நிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆண்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    காரணம் என்ன?

    ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால் அல்லது விட்டுவிட்டுச் சாப்பிட்டால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லாக் கிருமிகளும் சாகாமல் போகலாம். அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க, எஞ்சியுள்ள கிருமிகள் தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிவிடும். இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். ஆனால், இவற்றின் பக்கவிளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும்.
    மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்

    கடந்த ஒரு நூற்றாண்டாக மிரளவைத்துக் கொண்டிருக்கும் காசநோய், இதற்கு நல்ல உதாரணம். காசநோய் முற்றிலும் குணமடையக் குறைந்தது 6 மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும்.

    ஆனால், மருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நம்பி பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். இதனால் காசநோய்க் கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடும் திறனைப் பெற்றுவிடுகின்றன.

    அதன் பிறகு ஏற்கெனவே கொடுத்துவந்த மருந்துகளால், இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது உருமாறிவிடுகிறது. இதற்கு வழக்கமான 6 மாத சிகிச்சை போதாது. 2 வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டும் 70 லட்சத்துக்கு மேற்பட்ட காச நோயாளிகள் இந்த நிலைமையில் உள்ளனர்.

    இரட்டை முனைக் கத்தி!

    ஆண்டிபயாடிக் என்பது இரட்டை முனைக் கத்தி போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இதில் இரண்டாவது கருத்துக்குச் சரியான உதாரணம் இது: நம் நாட்டில் சாதாரணச் சளிக்கு வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய அமாக்ஸிசிலின் மருந்து அதீதமாக (Over dose) பயன்படுத்தப்பட்ட காரணத்தால், அது பலன் தரும் திறனை இழந்துவிட்டது. அதற்குப் பதிலாக அதைவிட வீரியம் நிறைந்த ஆண்டிபயாடிக்குகளைத்தான் அலோபதி மருத்துவம் இப்போது பயன்படுத்துகிறது. இவற்றின் விலையோ அதிகம். பக்கவிளைவுகளும் கூடுதல்.

    அலட்சியம் வேண்டாம்!

    ஆண்டிபயாடிக் விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாகவே இருக்கிறோம் என்பதை இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆண்டிபயாடிக் சிகிச்சையை முறை தவறிப் பயன்படுத்தும்போது, எதிர்ப்பு சக்தி உடைய கிருமிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, ஆண்டிபயாடிக் மருந்துகளையே பயனற்றவையாக ஆக்கிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.

    இந்தியாவில் இந்த நிலைமை மிகவும் மோசம். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக்கூடப் பல மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் நோயாளிகளும் இதுபோன்ற ஆண்டிபயாடிக் சிகிச்சையை விரும்புகிறார்கள். மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காகச் சாதாரண நோய்களுக்குக்கூட அதிக வீரியமுள்ள ஆண்டிபயாட்டிக்குளை வலிந்து பரிந்துரைக்கின்றன.

    நகரங்களில் தனியார் மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும் இந்தியாவில் அதிகமான ஆண்டிபயாடிக் பயன்பாட்டுக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் 50 சதவீத ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் நோயாளிகளும் அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை.

    இந்திய நிலைமை




    இந்தியாவில்தான் காலரா, டைஃபாய்டு, காசநோய் போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகம். எனவே, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் ஆண்டிபயாடிக்குகளின் பயன்பாடும் மிக அதிகம். இப்போதுள்ள நிலைமையில் வழக்கமான ஆண்டிபயாடிக்குகளுக்கு தடுப்பாற்றலைக் கிருமிகள் பெற்றுவிட்டால், அந்த ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாமல் போகும்போது என்ன செய்வது?

    1987-க்குப் பிறகு நம் நாட்டில் புதிய ஆண்டிபயாட்டிக் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய மருந்துகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேல்நாடுகளைத்தான் நாம் நம்பி இருக்க வேண்டும். இறக்குமதி ஆகும் மருந்துகளின் விலை மிக அதிகம். இந்த நிலைமை நீடித்தால், புதிய ஆண்டிபயாடிக்குகள் இல்லாத ஒரு யுகத்தை நம்மால் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!

    நம் கடமை என்ன?

    பொதுச் சுகாதாரம் குறைவதுதான் நோய் தொற்றுவதற்கான முக்கியக் காரணம். எனவே, சுய சுத்தம் காப்பதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேணுவதும் நமது மிகப் பெரிய கடமைகள். சுத்தமான குடிநீருக்கும் சுகாதாரமான உணவுக்கும் உத்தரவாதம் வேண்டும். நோய் வந்துவிட்டால் சுயமருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெறுவதுதான் நல்லது. முதலில் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அவர் பரிந்துரைத்தால், சிறப்பு நிபுணரிடம் மேல் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும்.

    ஆண்டிபயாடிக் விஷயத்தில் மருத்துவர் சொல்லும் கால அளவையும் மருந்தின் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்டிபயாடிக் விஷயத்தில் மருத்துவர்களும் நோயாளிகளுக்குச் சரியான வழிகாட்டுதலைத் தர வேண்டும். மருந்துகளை எழுதிக் கொடுக்கும்போது, மருத்துவருக்குரிய கோட்பாட்டின்படி நடந்துகொள்ள வேண்டும்.

    Contd......


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1965
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    ஒருங்கிணைந்த மருத்துவம்!




    எல்லா நோய்களுக்கும் அலோபதி சிகிச்சைதான் சிறந்தது என்பதில்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளிலும் நோய் குணமாகும். வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். இதை மறந்தாலோ அல்லது மறுத்தாலோ சாதாரண நோய்களுக்குக்கூடப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். இது, மனித குலத்துக்கு நுண்ணுயிரிகள் விடுக்கும் எச்சரிக்கை.

    சுயமருத்துவம் உயிரையும் பறிக்கலாம்!

    மேல்நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் வீரியமுள்ள மருந்தையும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்துக் கடைகளில் தாராளமாக வாங்க முடியும். மக்கள் சுயமருத்துவம் செய்துகொள்வதற்கு இது வழி அமைக்கிறது. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனையைக் கூட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு ஆண்டிபயாடிக் மருந்துகளின் விற்பனையை ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆண்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது 2011-ல் வெளியாகியிருக்கும் உலகச் சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம்.

    இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண சளி, இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது அந்த நிறுவனம்.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1966
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Info

    நீங்கள் சாப்பிடும் சிக்கன் நீங்கள் உட்கொள்ளும் மருந்தை செயல்படாமல் தடுக்கும் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !!




    நான் வெஜ் பிரியரா நீங்கள் !!! அதுவும் சிக்கனை விரும்பி சாப்பிடுபவரா !! கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய பதிவு இது .

    சி.எஸ்.இ என்னும் விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் நடத்திய ஆய்வில் சிக்கனில் அதிக அளவு ஆண்டி பயாடிக் இருப்பது தெரிய வந்துள்ளது . மேலும் நாம் உண்ணும் இரண்டில் ஒரு கோழியில் அதிக அளவு ஆண்டி பயாடிக் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது .

    டில்லி மற்றும் அதனை சுத்தி உள்ள இடங்களில் நடந்த இந்த ஆய்வின் முடிவில் மொத்தம் 70 கோழி மாதிரிகளில் , நாம் அடிக்கடி பயன்படுத்தும் 6 ஆண்டிபயாட்டிக் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது . மேலும் 17 சதவீத மாதிரிகளில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட ஆண்டிபயாட்டிக் மாதிரிகள் கலந்து இருப்பதையும் கண்டறிந்தனர் .


    ஏன் கோழியில் ஆண்டிபயாட்டிக் சேர்க்கின்றனர் ??

    பதில் மிகவும் சுலபம் . ஆண்டிபயாட்டிக் சேர்ப்பதனால் கோழிகள் விரைவில் வளர்ந்து அதிக எடை அடைந்து விடுகிறது . இதனால் உரிமையாளர்கள் அதிக நாட்கள் காத்துக் கிடக்க வேண்டியதில்லை . அவர்களுக்கு லாபமும் விரைவில் கிடைத்து விடுகிறது .

    இதனால் நமக்கு என்ன பிரச்சனை ??

    கோழிகளிடம் அதிக அளவு ஆண்டிபயாட்டிக் கொடுக்கப்படுவதால் , கோழி மிகவும் சத்தான ஒன்றாக மாறிவிடுகிறது . மேலும் அந்த கோழி ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிரான ஒன்றாக மாறி விடுகிறது . அதை நாம் உட்கொள்ளும் போது அதே போன்று நமது உடலும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிரான ஒன்றாக மாறி விடுகிறது .

    ஒரு சிறிய பாகத்தை மட்டும் தவிர்த்து விட்டு சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு . கோழியில் இருக்கும் சிறிய பாக்டரீயா நமது உடலுக்குள் புகுந்த உடன் அந்த பாக்டரீயா நமது உடலில் வளர்ந்து விடுகிறது . இது கோழிகளுக்கு மட்டுமில்லை அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் இப்படி தான் நடக்கிறது .

    ஒரு ஆண்டிற்கு 240 கோடி கோழிகள் இந்தியர்களால் உட்கொள்ளப்படுகிறது . அப்படி என்றால் எவ்வளவு ஆண்டி பயாட்டிக் என்பதை நீங்களே கணக்கிட்டு பாருங்கள் .

    jv_66 and Sriramajayam like this.

  7. #1967
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info



    ரத்த வங்கி


    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி 28554548, 28554425
    ஜீவன் ரத்த வங்கி 28330300
    கே.ஜே.மருத்துவமனை 26411513
    குமரன் மருத்துவமனை 26411860
    லயன்ஸ் ரத்த வங்கி 28414959, 28415959


    அவசர சேவை

    அபோலோ பாய்சன்
    இன்ஃபர்மேஷன் சென்டர் 28294343
    ஸ்பேஸ்டிக்ஸ் சொசைட்டி 24342604


    • அரசு மருத்துவமனைகள்

      அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை 26214844
      அரசு பல்மருத்துவக் கல்லூரி 25340441
      பொது மருத்துவமனை 25330300
      அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை 24014450
      இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்டு ஹெல்த்அன்டு ஹாஸ்பிட்டல் ஃபார் சில்ட்ரன் 28251982
      இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் 26421085
      இந்தியன் மெடிசின் அன்டு ஹோமியோபதி 26216244
      கஸ்தூரிபா மருத்துவமனை 28545001
      கீழ்ப்பாக்கம் மருத்துவமனை 28255331
      ராயப்பேட்டை மருத்துவமனை 28533051
      ஸ்டான்லி மருத்துவமனை 25261345
      ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் 51222, 20131
      திருவட்டீஸ்வரா நெஞ்சக நோய் மருத்துவமனை 26477626


      தனியார் மருத்துவமனைகள்

      அப்போலோ மருத்துவமனை 28290200
      அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 24363572
      ஏ.கே.என் நர்சிங் ஹோம் 26440665
      ஆயிஷா மருத்துவமனை 26427271
      பாலாஜி மருத்துவமனை 22343863
      பில்ராத் மருத்துவமனை 26441777
      பி.ஆர்.எஸ் மருத்துவமனை 28255505
      சைல்டு டிரஸ்ட் மருத்துவமனை 28259601
      கேன்சர் இன்ஸ்டிடியூட் 22350131
      சி.எஸ்.ஐ கல்யாணி மருத்துவமனை 28541101
      டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை 8276233
      டாக்டர் துரைசாமி கண் மருத்துவமனை 24341044


      24 மணி நேர ஆம்புலன்ஸ்

      அப்போலோ மருத்துவமனை 1066
      தேவகி மருத்துவமனை 24992607
      மியாட் மருத்துவமனை 4847802
      செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை 28554251


    jv_66, thenuraj and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1968
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    அழிந்து வரும் சரிவிகித உணவு கலாச்சாரம்





    அறிவியல், கணிதம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு முன்னோடியாக விளங்கிய இனம் தமிழினம். செய்யும் வேலைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சரிவிகித உணவு வகைகளையே நம்மவர்கள் உட்கொண்டு வந்தனர்.


    சரிவிகித உணவிற்கு எடுத்துக்காட்டாய் சாதம், பருப்பு, ரசம், காய்கறிகளின் கூட்டு, பொறியலை துவக்கப்பள்ளி பாடங்களில் படித்தது நினைவில் இருக்க கூடும். சாதத்தில் கார்போஹைட்ரேட்டும், பருப்பில் புரோட்டீனும், காய்கறிகளில் வைட்டமின், மினரல், பைபர் உள்ளிட்ட சத்துகளும் அடங்கியிருந்தாலேயே இது சரிவிகித உணவு என கூறப்பட்டது. இந்த சரிவிகித உணவு முறையுடனான தமிழனின் உறவு தற்போது முறியும் தருவாயில் இருக்கிறது. முன்னதாக ராகி, கம்பு, சோள வகை உணவுகளுடனான தமிழனின் உறவு முறிந்து பல வருடங்கள் கடந்து விட்டன.



    தற்போது பெருகி வரும் பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு உணவு கலாச்சாரத்தால் கவரப்பட்ட தமிழ் இனம் மெல்ல மெல்ல அதன் சுவைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது. ருசிக்கு சாப்பிடும் எண்ணமும், சோம்பேறித்தனமும் மேல்நாட்டு உணவு வகைகள் இங்கு காலூன்ற காரணமாகி விட்டன. இதன் விளைவாக வீதிக்கு வீதி தமிழன் பாஸ்ட் புட், தமிழன் பீட்சா கார்னர் போன்ற பெருமை மிகு பெயர்களை தாங்கிய உணவு விடுதிகள் இங்கு பெருகி விட்டன. பெருகியும் வருகின்றன.



    இந்த நூற்றாண்டின் பிரபல நோய்களாக விளங்கும் சுகர், பிபி உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையே இந்த மேலை நாட்டு உணவு கலாச்சாரம் தான். அதனால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாத்து தப்பி பிழைப்பதற்காக, பாரம்பரிய உணவு முறைகளுடனான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழினம் வந்திருக்கிறது.



    மேலைநாட்டு உணவு முறைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உணவு முறையியலாளர்கள் கூறுகையில், கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்ஸ், புரோட்டீன்ஸ், பைபர் போன்ற அனைத்து சத்துகளும் அடங்கிய சரிவிகித உணவே ஒருவரது வாழ்நாளை தீர்மானிக்கும். மேற்கத்திய உணவு வகைகளின் மூலம் மேற்கண்ட சத்துகள் எதுவும் நமது உடலுக்கு கிடைக்காது.



    இதன் சுவைக்கு அடிமையாகி தொடர்ச்சியாக இந்த உணவுகளை உண்ணும் போது, ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் ஏற்படும். உதாரணமாக விட்டமின்-ஏ குறைபாட்டால், கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். செய்யும் வேலைகளுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதினால் உடல்பருமனும் ஏற்படும். உடல்பருமனே 25 முதல் 30 வயதிற்குள்ளாக சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணம்.



    இந்த உணவு முறை மாற்றத்தால் பெண்கள் பூப்பெய்தும் வயதில் கூட மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதனால் பெண்கள் சராசரியாக பூப்பெய்த வேண்டிய 14 வயதிற்கு முன்னதாக, அதவாது 11-12 வயதிலேயே பூப்பெய்தி விடுகின்றனர். மேல்நாட்டு உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் மிதமிஞ்சிய வளர்ச்சியால், ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து, இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.



    மேலும் கூடுதல் சுவை மற்றும் நிறத்திற்காகவும், நூடுல்ஸ் வகைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயன பொருட்களாலும் அல்சர், குடல் புற்றுநோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். பீட்சா தயாராகும் மைதாவில் நார்ச்சத்து இல்லாததால், மேற்கண்ட நோய்களுடன் இலவச இணைப்பாக மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் கிடைக்கும். இதை எல்லாம் தவிர்க்க கலோரி, கொழுப்பு சத்துகள் குறைவாகவும், புரதம், இரும்பு, நார்ச்சத்துகள் அதிகமாவும் உள்ள நமது பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றில் மேற்கண்ட சத்துகள் முழுமையாக உள்ளன. இதனுடன் தினந்தோறும் பழங்கள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடுவதன் மூலமும் ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என்றனர்.



    மருத்துவதுறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால், எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். ஆனால் நலமுடன் வாழ்கிறோமா?


    Sriramajayam and vaishnnavi like this.

  9. #1969
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    பயன்_தரும்_குறிப்புகள்

    1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

    2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

    3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

    4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

    5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

    6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

    7. கடுமையான இரும*ல் இரு*ந்தா*ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

    8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை*த்து அழு**த்*தி வரவு*ம். வ*லி குறையு*ம்.

    9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ*ட்டு குளிக்கவும். *விரை*வி*ல் தழு*ம்புக*ள் மறையு*ம்.

    10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா*ல் *விரை*வி*ல் இரும**ல் *நி*ற்கு*ம். கா*ய்*ச்ச*ல் குறையு*ம்.

    11. காரட் மற்றும் தக்கா*ளி*ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட*ல் வ*லிமை பெரும்.

    12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.


    Sriramajayam and vaishnnavi like this.

  10. #1970
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

    *அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

    *நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

    *கடுக்காய் பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

    *வில்வம் பொடி:- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

    *அமுக்கலா பொடி:- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

    *சிறுகுறிஞான் பொடி:- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

    *நவால் பொடி:- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

    *வல்லாரை பொடி:- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

    *தூதுவளை பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

    *துளசி பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

    *ஆவரம்பூ பொடி:- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

    *கண்டங்கத்திரி பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

    *ரோஜாபூ பொடி:- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

    *ஓரிதழ் தாமரை பொடி:- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

    *ஜாதிக்காய் பொடி:- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

    *திப்பிலி பொடி:- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

    *வெந்தய பொடி:- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

    *நிலவாகை பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

    *நாயுருவி பொடி:- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

    *கறிவேப்பிலை பொடி:- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

    *வேப்பிலை பொடி:- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

    *திரிபலா பொடி:- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

    *அதிமதுரம் பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

    *துத்தி இலை பொடி:- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

    *செம்பருத்திபூ பொடி:- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

    *கரிசலாங்கண்ணி பொடி:- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

    *சிறியாநங்கை பொடி:- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

    *கீழாநெல்லி பொடி:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

    *முடக்கத்தான் பொடி:- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

    *கோரைகிழங்கு பொடி:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

    *குப்பைமேனி பொடி:- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

    *பொன்னாங்கண்ணி பொடி:- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

    *முருஙகைவிதை பொடி:- ஆண்மை சக்தி கூடும்.

    *லவங்கபட்டை பொடி:- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

    *வாதநாராயணன் பொடி:- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

    *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

    *வாழைத்தண்டு பொடி:- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

    *மணத்தக்காளி பொடி:- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

    *சித்தரத்தை பொடி:- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

    *பொடுதலை பொடி:- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

    *சுக்கு பொடி:- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

    *ஆடாதொடை பொடி:- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

    *கருஞ்சீரகப்பொடி:- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

    *வெட்டி வேர் பொடி:- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

    *வெள்ளருக்கு பொடி:- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

    *நன்னாரி பொடி:- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

    *நெருஞ்சில் பொடி:- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

    *பிரசவ சாமான் பொடி:- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

    *கஸ்தூரி மஞ்சள் பொடி:- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

    *பூலாங்கிழங்கு பொடி:- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

    *வசம்பு பொடி:- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

    *சோற்று கற்றாலை பொடி:- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

    *மருதாணி பொடி:- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

    *கருவேலம்பட்டை பொடி:- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்


    Sriramajayam and vaishnnavi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter