Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1991
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    இளநீர்


    கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.

    இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.

    இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

    இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள் (ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.

    இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



    Sponsored Links
    Last edited by datchu; 7th Aug 2014 at 08:10 PM.
    jv_66, kkmathy and chitramumbai like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1992
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    மூட்டு வீக்கத்தை குறைக்கும் முள்ளங்கி


    அசைவ உணவுகளை விட சைவ உணவுகளான காய்கறியில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

    இதோ, சில காய்களின் சத்துக்களும், அதன் மருத்துவ குணங்களும்

    முள்ளங்கி

    நீர்ச்சத்து, கால்சியம் (calcium) , பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து உள்ளது. சிறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.

    இவை அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.

    காலிஃபிளவர்

    இதில், பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ உள்ளது. புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.

    மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.

    முட்டைக்கோஸ்

    சோடியம் (sodium), இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.

    இதனை, பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

    நார்த்தங்காய்

    அஜீரண கோளாறு உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். மேலும், வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

    வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்



    jv_66, kkmathy and chitramumbai like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1993
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    சீக்ரெட் ஆப் எனர்ஜி ………………….சிறுதானியம்

    ஊட்டச்சத்து குறைபாடு என்பது தேசிய அவமானம். இது தடுக்கப்பட வேண்டும் என்று பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங வருத்தம் தெரிவித்திருந்தார். நாட்டின் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்குவதில் சிறுதானியங்களின் பங்கு மிகப்பெரிதாக இருக்கும் என்கிறார் மதரை மனைவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் பானுமதி சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் பற்றி அவர் அளிக்கும் பயன்தரும் தகவல்கள்

    சிறுதானியங்கள் என்பது சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி, தினை , மக்காச்சோளம் ஆகியவை/ நெல் மற்றும் கோதுமையில் இருக்கும் சத்துக்களைவிட சிறுதானியங்களில் சத்துக்கள் மிக மிக அதிகம். இவற்றில் இரும்பு, சுண்ணாம்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்திருக்கின்றன . எனவே அவற்றைப் பக்குவப்படுத்தி நாம் விரும்பிய படி இட்லி, தோசை, அடை , சப்பாத்தி, புட்டு, இடியாப்பம், சாதம் என வகை வகையாய் செய்து அமர்க்களமாக சாப்பிடலாம்.

    இன்றைய சூழ்நிலையில் நமக்கு சிறுதானிய உணவு மிகவும் அத்தியாவாசியமானது. கேழ்வரகை மாவாக அரைத்து வைத்துக்கொண்டோமானால் களி , கூழ், புட்டு, அடை , தோசை செய்யலாம். இது நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த உணவு. வரகு அரிசி உணவுகள் மாதவிடாய் பிரச்னை உடைய பெண்களுக்கு ஏற்ற நல் உணவு. வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும். சாமையில் அதிரசம் முறுக்கு சூப் பாயசம் தயாரிக்கலாம்.

    குதிரைவாலி அரிசியை சாதமாக வடித்து குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான். நல்ல மணமாகவும் இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், தினையானது நல்லதொரு சிறுதானியம் இதிலும் உப்புமா கொழுக்கட்டை என்று வித விதமாகச் செய்யலாம். இது குழந்தைகள் உடலை வலுவாக்கும். தினையை வறுத்து மாவாக்கி அதனுடன் தேன் ஏலக்காய்பொடி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாகத் தயாரித்தால் உடலுக்கு வலுச்சேர்க்கும் அற்புதமான இனிப்பு ரெடி.

    வரகு அரிசி உளுத்தம்பருப்பு வெந்தயம் சேர்த்து ஊறவைத்து இட்லிக்கு அரைத்து வைத்துக்கொண்டால் மறுநாள் சூப்பர் வரகு இட்லி தயார். குதிரைவாலி மாவு கோதுமைமாவு சரிசமமாக எடுத்துக்கொண்டு சிட்டிகை உப்பு போட்டு சப்பாத்தி மாவாகப் பிசைந்து சத்தான குதிரைவாலி தயாரித்து சாப்பிடலாம். இன்றைக்கு மாறி போய்விட்ட நமது உணவுப் பழக்க வழக்கங்களால் நீரிழிவு இரத்த அழுத்தம் மலச்சிக்கல் உடல் பருமன் கேன்சர் சிறுநீரகக் கோளாறுகள் இதய நோய் வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் சிறுதானியங்கள் அனைத்துமே நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் அற்புத குணமுள்ளவை எனவே அவற்றைப் பயன்படுத்துவதில் பெண்கள் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறார் பானுமதி
    நாமும் அதை பின்பற்றுவோம் நலமடைவோம்.


    நன்றி மங்கையர் மலர்


    jv_66, kkmathy and chitramumbai like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1994
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    வெல்டன் வெந்தயம்

    வெந்தயம் இதனை ஆங்கிலத்தில் Fenugreek என்றும் இந்தியில் மேதி என்றும் சொல்வார்கள். இது உணவுப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது ஈரமான மண்ணுள்ள சூழலில் இது சுலபமாக வளரும். வெந்தயம் ஒரு மா மருந்து என 1400 வருடங்களுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார்.

    ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்.. இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது. இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன் படுத்துவார்கள்.

    பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும் அது 50 -110 மில்லி நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும். ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும். இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது.

    பொதுவாக வெந்தயத்தை உளுந்துடன் ஊற வைத்து இட்லி தோசைக்கு மாவு அரைப்போம். வெந்தயக் குழம்பு செய்வோம். வயிற்றுச்சூடு குறைய வெந்தயத்தை முதல் நாள் இரவு நீரில் ஊற வைத்து மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவோம். இரண்டு பல் பூண்டுடன் வெந்தயப் பவுடர் ஒரு டீஸ்பூன் கலந்து இரு வேளை சாப்பிட சளி அகலும். இதன் பொடியுடன் சிறிது பால் கலந்து குழைத்து சாப்பிட்டுவர வெள்ளைபடுதல் குணமாகும்.

    வெந்தயகீரையைக் கூட்டு வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும். சிறிது வென்னீரில் வெந்தயப்பொடி ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும். பொடியை மோரில் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும். மேலும் பயத்தம்பருப்பு சேர்த்து வெந்தயக்கீரை கூட்டு செய்தும் சாப்பிடலாம்.

    இந்தக் கீரையுடன் வாழைத்தண்டு சேர்த்து சாப்பிட தீயக்கொழுப்புகள் அகலும். வெந்தயம் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து சூப்பாக அருந்த அம்மைத் தொற்று பரவாமலிருக்கும். வெந்தயத்தோடு திப்பிலி சுக்கு தூதுவளை சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் நாள்பட்ட இருமல் மறையும். சின்ன வெங்காயம் வெந்தயம் மணத்தக்காளி சேர்த்து வேக வைத்து அந்தச் சாற்றை அருந்தினால் வாய்ப்புண் குணமாகும். அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சி வைத்து சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

    வெந்தயத்தை வெல்லத்துடன் சேர்த்து களி செய்து சாப்பிட மாதவிடாய் வயிற்றுவலி குணமாகும். கோதுமை மாவில் வெந்தயக் கீரை சீரகம் சேர்த்து அடை சப்பாத்தி செய்து சாப்பிட மலச்சிக்கல் அகலும். வெந்தயத்தை முதல் நாளிரவு தயிரில் ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற விட்டு குளிக்க தலைமுடி பளபளப்பாகும். முடி உதிர்வதும் குறையும், சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும் துவரம் பருப்புடன் சேர்த்து வேக வைத்து கடைந்து சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும். நிஜமாகவே வெல்டன் வெந்தயம் தானே?


    jv_66, kkmathy and chitramumbai like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1995
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    சீரகம் செய்யும் அதிசயங்கள்

    சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த நீரைக் குடித்தால் தலை சுற்றல் மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸூடன் சீரகம் கலந்து பருகினால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

    அகத்திக் கீரையுடன் சீரகம் சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் மன நோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

    கொஞ்சம் சீரகத்துடன் கொட்டை பாக்களவு வெல்லம் சேர்த்து சாப்பிட நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்துடன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து பின்பு உலர்த்தி பொடியாக்கி ஒரு டப்பாவில் வைத்துக்கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

    மோருடன் சீரகம் இஞ்சி சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத்தொல்லை நீங்கும். சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒரு நாள் ஊற வைத்துக் கொள்ளவும் இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாக குணமாகும்.

    சுக்கு சீரகம் மிளகு திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்து கொண்டு தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புக்களையும் சீராக இயங்கச் செய்யும். உடலைக் குளிர்ச்சியாகவும் தேகத்தை பள பளப்பாகவும் வைக்கும் ஆற்றலும் சீரகத்துக்கு உண்டு.

    சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை நாலு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் குடித்தால் வயிற்றுப்பொருமல் போய்விடும்.

    ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.

    சிறிது சீரகத்துடன் கீழா நெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.

    சமையலுக்கு சுவையும் மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பதில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. செரிக்காமை வாயுத்தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

    சிறிது சீரகம் மிளகு பொடித்து எண்ணெயிலிட்டு காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் கண் எரிச்சல் கண்ணிலிருந்து நீர் வடிதல் நிற்கும்.

    சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்படும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்


    jv_66 and chitramumbai like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1996
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    கொளுத்தவனுக்கு கொள்ளு!


    உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது ஆண்களுக்கு கம்பீரத்தையும், பெண்களுக்கு அழகையும் தரும்.

    எடை அதிகரித்தால் மூட்டுவலி, இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களும் கூடவே வந்து விடும்.

    இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி.

    உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு பயன்படுத்துவது நல்லது. கொள்ளு பருப்பை ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்டநீர் வெளியேறும்.

    ஊளைச்சதையை குறைக்கும் குணம் கொள்ளுக்கு உண்டு.கொள்ளு பருப்பை வேக வைத்து உண்ணலாம். வறுத்தும் சாப்பிடலாம்.

    கொள்ளை வேகவைத்து தண்ணீரை குடித்தால் ஜலதோஷம் கட்டுப்படும். அரிசியும் கொள்ளுபருப்பும் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம்.

    கேரட்டை துருவி தேன் விட்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

    கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடியை தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் போட்டு தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

    தினமும் 5 கப் காய்கறி அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். கீரை வகைகள் அல்லது கொடியில் காய்க்கும் பீன்ஸ், அவரை, பூசணி, புடலங்காய் போன்றவற்றை அதிகம் சேர்க்கவும்.

    ஆனால் மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை கூட்டும். பப்பாளி, முள்ளங்கி உடல் எடையை குறைக்கும்.

    வாழைத்தண்டு, அருகம்பூல் சாறு நல்ல பலன்தரும். தினமும் காலை இஞ்சி சாறுடன், தேன்கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை குறையும்.



    jv_66, kkmathy and chitramumbai like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1997
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    நுங்கு! நன்மைகள் ஏராளம்... தாராளம்!

    கிராமங்களில் சர்வ சாதாரணமாகக் கிடைப்பதாலும், நகரங்களில் தெருவோரத்தில் விற்கப்படுவதாலுமே பல பொருட்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. அவற்றில் முக்கியமான ஒன்று நுங்கு..!

    வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றில் நுங்கின் மகத்துவம் அளப்பரியது! அவற்றில் சில…

    கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
    நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

    நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் நுங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம்! நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

    சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
    ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.

    நுங்கில் ‘அந்த்யூசைன்’ எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

    வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.


    jv_66, chitramumbai and ammu_mari like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1998
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    நரம்புத் தளர்ச்சி நீங்க பாட்டி வைத்தியம்


    அரைக்கீரை சாற்றில் மிளகை ஊற வைத்து உலர்த்தித் தூளாக்கி தினமும் 5 சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்றவை சரியாகும்.

    கானாம்வாழைக் கீரை சாறில் ஜாதிக்காயை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், ஆண்மைக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்.

    ஆரைக்கீரைச் சாறு எடுத்து, தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மிலி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்



    jv_66, chitramumbai and ammu_mari like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1999
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள் :-


    கத்தரிக்காயின் தாவரவியல் பெயர் சொலானம் மெலோஞ்சினா என்பதாகும். சொலானாசியே என்ற குடும்ப வகையைச் சேர்ந்த கத்தரிக்காய், முட்டை செடி மற்றும் ஆபர்ஜீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் கத்தரிக்காய் கிடைத்தாலும், முட்டை வடிவம் அல்லது நீளமாக இருக்கும் கத்தரிக்காய்கள் தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.

    கத்தரிக்காயின் தோல்கள் மிகவும் பளபளப்பாக இருக்கும். அதன் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். உள்ளே, அதன் விதைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல அடர்ந்து வரிசையாகக் காணப்படும்

    டைப் 2 சர்க்கரை வியாதிக்கு...

    கத்தரிக்காயில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இல்லாததால், இரத்தத்தில் குளூகோஸ் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள பீனால்கள் மற்றும் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ் ஆகியவை குளூகோஸ் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே இது டைப் 2 சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு அருமருந்தாகும்.

    இதய நலனுக்கு...

    கத்தரிக்காயில் உள்ள ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் ஆகியவை நெஞ்சு வலி ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்றன. இதில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டம் இதயத்தில் சீராகப் பாய உதவுகின்றன.

    மூளைக்கு...

    கத்தரிக்காயில் உள்ள ஃபைட்டோநியூட்ரியெண்ட்ஸ், மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், ஞாபக சக்தியை கூர்மையாக வைத்திருக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது. அதிக மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கவும் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் பி-காம்ப்ளக்ஸுகள் உதவுகின்றன.

    இரும்புச்சத்து ....

    இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாக இருந்தால் உடலுக்குக் கெடுதிதான். கத்தரிக்காயில் உள்ள நாசுனின் என்ற வேதிப் பொருள் உடலில் உள்ள அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தை நீக்க உதவுகிறது.

    உடல் எடை குறைய....

    கத்தரிக்காயில் நீர்ச்சத்து மிகவும் அதிகம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அடித்து வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள மெட்டபாலிசம் ஸ்பைக் கலோரிகளை எரிக்க வல்லது. இப்படிப்பட்ட கத்தரிக்காயை நிறைய சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறையும்.

    செரிமானத்திற்கு...

    தக்காளி மற்றும் கத்தரிக்காயினால் தயாரிக்கப்பட்ட சூப், செரிமானத்திற்கு நன்றாக உதவுகிறது. எரிச்சல், வாயு, ஹெமொராய்டுகள், கொலிட்டிஸ், பேதி உள்ளிட்ட பல விதமான வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதால், செரிமானத்திற்கு கத்தரிக்காய் ஒரு அருமையான மருந்துதான்.

    பாக்டீரியா எதிர்ப்பான் ...

    கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.

    சருமத்திற்கு...

    கத்தரிக்காயில் மினரல்கள், வைட்டமின்கள், சில நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அவை நம்முடைய தோலை ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. தோல்களில் தோன்றும் மருக்கள் உள்ளிட்டவற்றைப் போக்கவும் கத்தரிக்காய் பயன்படுகிறது.

    கேசத்திற்கு...

    கத்தரிக்காயில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள், மற்றும் அதிகமான நீர்ச்சத்து ஆகியவை தலை முடியின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவியாக உள்ளது. தலை முடி நீண்டு, அடர்ந்து, வலிமையாக வளர இவை உதவுகின்றன. மேலும், மயிர்க் கால்களின் வளர்ச்சிக்கும், தலைமுடியின் பளபளப்புக்கும் இதில் உள்ள என்சைம்கள் துணைபுரிகின்றன.

    சளிக்கு...

    நேரடியாக நெருப்பில் வாட்டப்பட்ட கத்தரிக்காயின் மேல் உப்பை நன்றாகத் தடவி சாப்பிட்டால் சளி பறந்து போகுமாம்!

    மலேரியா காய்ச்சல் ....

    மலேரியா காய்ச்சலால் அவதிப்படுபவர்கள், வெறும் வயிற்றில் சர்க்கரை கலந்த சுட்ட கத்தரிக்காயை காலையில் சாப்பிட்டால் அது மண்ணீரலுக்கு நல்லது.

    தூக்கமின்மை ....

    தூக்கமின்மை இருந்தால், தினமும் மாலையில் சுட்ட கத்தரிக்காயை சாப்பிட்டு வந்தால், இரவில் நன்றாகத் தூங்கலாம்.

    மூல வியாதிக்கு...

    பைல்ஸ் என்னும் மூல வியாதிகளைப் போக்குவதற்கு கத்தரிக்காயின் பச்சைக் காம்புகள் அந்தக் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    வலி, வீக்கத்திற்கு...

    கத்தரிக்காய்களைப் பாதிப் பாதியாக வெட்டி, மஞ்சள் கலந்து நன்றாக சுட வைத்து, அதை வீக்கம் மற்றும் வலு உள்ள இடங்களில் மருந்தாகக் கட்டுவது நல்லது.

    உடல் நாற்றத்தைப் போக்க...

    கத்தரிக்காய் ஜூஸை உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தடவி வந்தால் உடலில் ஏற்படும் துர்நாற்றம் விலகும்.

    மாற்று மருந்து

    காளான் விஷத்தை முறிக்க மாற்று மருந்தாகக் கத்தரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

    தோல் வெடிப்புகளுக்கு...

    மஞ்சள் கத்தரியுடன் பெட்ரோலியம் ஜெல்லியை சேர்த்து பாதம் மற்றும் விரல்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கு மருந்தாகத் தடவினால், அந்த வெடிப்புகள் மறையும்.

    குடல் புற்றுநோய்க்கு...

    கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் பலவிதமான வேதிப் பொருட்கள், பெருங்குடல் புற்றுநோயைத் தீர்க்க வல்லவையாக உள்ளன.

    புகைப் பழக்கத்தை ஒழிக்க...

    கத்தரிக்காயில் சிறிதளவு நிக்கோட்டின் இருப்பதால், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து மெல்ல விடுபடலாம்.

    இரத்த அழுத்தத்திற்கு...

    கத்தரிக்காயில் சோடியம் மிகமிகக் குறைவு என்பதால், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.

    வேதிப் பொருள்கள் ....

    கத்தரிக்காயில் புரதம், வைட்டமின் சி, இரும்புச்சத்து ஆகியவை போதுமான அளவில் உள்ளன. மேலும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் உள்ளன.

    ஆஸ்துமா....

    ஆஸ்துமா, கல்லடைப்பு, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு கத்தரிக்காய் அருமருந்தாக உள்ளது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #2000
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    ஓட்ஸ் அவசியமா..??

    இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

    10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

    ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் கொஞ்சம் ஐரோப்பிய நாடுகளிலும் விளையும் ஒரு பயிர்.அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. சில கிராம் மட்டுமே (ஒரு ஸ்பூன்) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டும் குணம் மட்டுமே இதற்கு உண்டு.

    அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் க்கு சமம். ஒரு கிலோ ராகி மாவு 35 ரூபாய். 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய்.

    எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது இல்லை )ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் mnc கொள்ளை உள்ளது. சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் ,மருத்துவர் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கிவிட்டன.[குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் quaker பிராண்ட். குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்ததுபோல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.

    அங்கிருந்து இங்கு வர ஆகும் எரிபொருள் செலவு, mnc நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை நம் தலையில் கட்டுகின்றன.

    அதைவிட ராகி,கம்பு,சோளம்,திணை,வரகு,சாமை .. எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு. சிந்தியுங்கள்.......


    san321, jv_66, kkmathy and 2 others like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter