Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2001
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Today's Medical Info

    விலை குறைந்த பட்ஸ் வாங்கும்முன் இதை படித்து பகிருங்கள்.. அவை எதிலிருந்து செய்யப்படுகின்றது என்று தெரிந்தால் அதை கண்டிப்பாக வாங்க மாட்டோம்

    *** Cotton Ear Buds... (Must read it) ***

    Please do not show sympathy to people selling buds on roadside or at Signals. Just wanted to warn you people not to buy those packs of ear-buds you get at the roadside.

    It's made from cotton that has already been used in hospitals.. They take all the dirty, blood- and pus-filled cotton, wash it, bleach it and use it to make ear buds. So, unless you want to become the first person in the world to get Herpes Zoster Oticus (a viral infection of the inner, middle, and external ear) of the ear and that too from a cottonbud, DON'T BUY THEM!!

    Use Branded Ear Buds only to stay away from any such Possible Problem..

    Please share to all your near and dear ones....!









    Sponsored Links
    rajisugu, datchu, thenuraj and 2 others like this.
    Jayanthy





  2. #2002
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    இது டென்ஷன் யுகம்..



    ஒரே டென்ஷனா இருக்கு ...' என்று ஐந்து வயது பிள்ளைகள் கூட அடிக்கடிச் சொல்லும் காலமிது. டென்ஷன் - நவீனம் வளர்த்தெடுத்த நோய்களில் ஒன்று. முன்பு எப்போதாவது என்று இருந்த டென்ஷன், பிறகு அவ்வப்போது ஆகி, இன்று அடிக்கடி என்றாகி விட்டது.

    மனிதன் தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூன்யம் இது. இதிலிருந்து நவீன மனிதனால் முற்றிலும் விடுபட முடியாது. மாறாக, டென்ஷனை மேலாண்மை (management) செய்ய முடியும். அதற்கு டென்ஷன் என்றால் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்..

    டென்ஷன் என்பது பொருளின் இறுக்கத்தைக் குறிக்கும். உலகில் சில பொருட்கள் இயல்பில் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும். உலோகங்கள், மரங்கள், கற்கள் முதலியவை அப்படி இறுக்கமாக இருந்தால் தான் தாக்குப் பிடிக்க முடியும். காகிதம் , நூல், செடி கொடி முதலியவை நிகழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்கலாம். சில பொருட்கள் இரண்டுக்கும் உரியவை. சான்று..: பிளாஸ்டிக் மற்றும் களிமண் பொருட்கள்.

    பொருளியல் பண்புகளான இவை, நம் உடலுக்கும் பொருந்தும். நமது உடல், இறுகு பொருட்களும் நெகிழ் பொருட்களும் கலந்த கலவை. எலும்பு, தசை, நார், தோல், ரத்தக் குழாய் ஆகியவற்றின் கூட்டுப் படைப்பு ஆகும். இவற்றில் சில நெகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சில இறுக்கமாக இருக்க வேண்டும். நெகிழ்ச்சி உறுப்புகள் இறுகக் கூடாது. அதேபோல் இறுகுஉறுப்புகள் நெகிழ கூடாது. எலும்பு நெகிழ்ந்தால்(எலும்புருக்கி ) அல்லது ரத்தக் குழாய் இறுகினால்(BP) அது நோயாகும்.

    இந்தப் பண்பு மனதுக்கும் பொருந்தும். நமது மனம் இளகியும் இறுகியும் இருக்க வேண்டும். நோக்கத்திற்கு ஏற்ப இது அமையும். பசி தாகம் எடுக்கும்போதும் உறக்கம் காமம் உந்தும்போதும் மனம் இறுகிவிடும். ஒற்றைக் குறிக்கோள் என்றால் மனம் இறுகத்தான் வேண்டும். மாறாக, எதை உண்பது எங்கே படுப்பது எனும்போது கொஞ்சம் இளகத்தான் வேண்டும். விலங்குகள் அப்படித்தான் வாழ்கின்றன. அதனால் அவற்றுக்கு இயற்கை இறுகுதன்மையே உள்ளது. இது ஆபத்தில்லாதது.

    மனிதனிடம் செயற்கை இறுகு தன்மையே அதிகமாக உள்ளது. இதைத்தான் சாப்பிடவேண்டும் இங்கேதான் படுக்க வேண்டும் என்கிற எண்ணம் மனிதனிடம் மிகுதி. அப்படி அமையாவிடில் டென்ஷன் தான். எனவே டென்ஷன் என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்வது. அப்படி ஏற்படுத்திக் கொள்ள சமுகமே கற்றுத் தருகிறது. எனவே டென்ஷனை சமூகத் தயாரிப்பு என்பேன்.


    ஒரு எண்ணத்தை செயல்படுத்த விடாமல் (அலுவலகம் போதல், ரயில் பிடித்தல் ) சில
    எண்ணங்கள் அல்லது சூழல் நெருக்கும்போது டென்சன் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள்.. ஒன்று, அந்த எண்ணம் மீது நாம் ஏற்படுத்திக் கொள்ளகிற அதீத அவா. மற்றொன்று, சூழலுக்கு ஏற்ப எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாமை அல்லது எண்ணத்தை மாற்றிக்கொள்ள விடாமல் சூழல் ஏற்பட்டமை..

    மாலை 6 மணிக்கு ரயில் அல்லது பஸ் பிடிக்க வேண்டும்.. போகும் வழியில் சிக்னல் தடங்கல் .. அப்போது டென்ஷன் ஏற்படுவது இயல்பு. குறிப்பிட்ட நேரத்துக்குள் கொடுத்த வேலையை (ப்ராஜெக்ட்) செய்ய முடியாமல் போனாலோ எடுத்த பணியை (படிப்பு) முடிக்காமல் போனாலோ மனிதனுக்கு நிச்சியம் டென்ஷன்தான்.

    யாரேனும் நமக்கு ஒத்துப் போகவில்லை என்றாலும் டென்ஷன் வரும். அச்சுழல் இருமனங்களின் நெகிழ்ச்சி குறைபாடே காரணமாகும். இப்படி பல டென்ஷன்கள்..

    ஒவ்வொரு மனிதனிடமும் டென்ஷன் பட்டியல் கட்டாயம் இருக்கும். அவற்றை நாம் முழுவதும் போக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. மாறாக பாதிப்பு ஏற்படா வண்ணம் ஓரளவுக்கு நாம் எதிர்க் கொள்ளலாம்.

    பெரும்பாலான டென்ஷன்கள் கால மேலாண்மை (time management) குறைபாடு காரணமாகிறது.
    இதிலிருந்து மீள நேரத்தைத் திட்டமிட வேண்டும். முன்கூட்டியே செயல்பட்டால் கடைசி நேர டென்ஷன் வராது. மின் கட்டணம் கட்டக் கடைசி நாள் பாராமல் சில நாள் முன்பே கட்டிவிட்டால் டென்ஷன் கிடையாது.

    இன்னொரு டென்ஷன்.. பிறரால் வருவது. அந்த நபர் உங்கள் பாஸ், நண்பர், உறவினர், பேருந்தில் பக்கத்தில் வந்து அமரும் குடிக்காரர் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களிடமிருந்து விலகி நின்றால் டென்ஷன் குறையும்.

    சிலருக்கு வாழ்க்கைத் துணையே டென்ஷன் காரணி ஆகலாம். இதற்கு மணவிலக்கு ஒரு தீர்வு என்று நாம் நினைத்தாலும் குழந்தை எதிர்க்காலம் கருதி சகித்துக் கொள்வோரே மிகுதி. இத்தகு சகிப்புத்தன்மை கூட டென்ஷனை எதிர்க்கொள்ள ஒரு சிறந்த வழி. அந்த சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள தியானம் உதவும். தியானம் கைக்கூடாதோர்க்கு பக்தி பலன் தரும்.


    உண்மையில் டென்ஷன் குறைப்புக்கு நல்ல மருந்து தியானமே ஆகும். இது நவீன உளவியல் கண்ட உண்மை. அலோபதி போன்ற மாற்று மருந்து, புகைப்பழக்கம், குடிப்பழக்கம், என பல செயல்பாடுகளில் மனிதன் ஈடுபட்டாலும், அவை தற்காலிக அமைதியையே தரும். மாறாக,
    தியானம் உங்களுக்கு நிரந்தரத் தீர்வு தரும்,

    TAKE IT EASY எனும் மனநிலைக்கு தியானம் உங்களை அமைத்துவிடும். அதற்காக உங்களின் ஆசைகளை துறக்க வைக்கும் என்பதையும் மறந்து விட வேண்டாம். முற்றும் துறந்த துறவிக்கு டென்ஷன் கிடையாது. துறக்க ஆசைகள் ஏதும் இல்லாது குழந்தைக்கும் டென்ஷன் கிடையாது. தனிமை வாழ்வுக்கு டென்ஷன் இல்லை என்று சித்தர்கள் உணர்ந்திருந்தனர் போலும். ஆனால் மணவாழ்வில், சமூக வாழ்வுவில் டென்ஷன் தவிர்க்க இயலாது.

    நமது மனோ சக்தி சுதந்திரமாக (free flow of energy ) செயல்பட வேண்டும். அதுவே மனத்துக்கு ஆரோக்கியம் ஆகும். மனோசக்தி வழியில் ஏற்படுகின்ற அடைப்பு , தடை, நெருக்கடி எல்லாம் உள சிக்கல்களை உருவாக்கும். அவற்றுள் டென்ஷனும் ஒன்று. இந்த அடைப்பு , தடை, நெருக்கடி எல்லாம் சமூக வாழ்வில் ஏற்படுபவை. மனிதன் தமக்குத் தாமே போட்டுக் கொண்ட சுருக்குகள். அவற்றுள் பல நிர்ப்பந்தங்களால் ஆனவை.

    சமூகத்தில் மனிதன் நோயாளியாகத்தான் வாழ வேண்டி உள்ளது. இதை ஃ ப்ராய்ட் 70 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் முறைப்படி கண்டு கூறினார்.. மேலும், இந்த மனிதனின் நிலை நாளுக்குநாள் மோசமாகிப் போகும் என்று கூறும் ஃ ப்ராய்ட், மனிதனின் எதிர்க்காலம் கவலைக்கிடமானது என்பார். உண்மைத்தான். டென்ஷனைக் கொண்டு தை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். நம்மைவிட நம் முன்னோர்களிடம் குறைந்த டென்ஷனே இருந்தது. எதிர்க்காலத்தில் இது இன்னும் கூடும்.

    நேரத்தை நன்கு திட்டமிட்டால் அல்லது வேண்டாதோரிடமிருந்து (மனதளவில்) விலகி இருந்தால் பெருவாரியான டென்ஷனை தவிர்க்க முடியும் என்பது என் நம்பிக்கை.


    jv_66, kkmathy, thenuraj and 2 others like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #2003
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Info

    மூளையைப் பற்றி 3 கட்டுக்கதைகள்

    நரம்பியல்-உடற்செயலியல் நிபுணரான பியரி பிளாரென்ஸ் என்ற பிரெஞ்சுக்காரர் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூளையின் செயல்களை அறிய புதுவகை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். புறா, கோழி, தவளை போன்ற உயிரிகளின் மூளையிலிருந்து பெருமளவு திசுக்களை அகற்றி, அவற்றின் செயல்களைக் கூர்ந்து ஆராய்ந்தார். மூளையின் முன் பகுதி, பின் பகுதி, மேல் பகுதி அல்லது பக்கவாட்டுப் பகுதியிலிருந்து சிறிதளவு திசுக்களை அகற்றினாலும் அவற்றின் செயல்களில் மாற்றம் அதிகமில்லை, செயல்பாட்டுக்கு அதன் மூளை மடலில் சிறு பகுதியே போதும் என்று குறிப்பெழுதினார். அதிலிருந்துதான் நாம் நம்முடைய மூளையின் 10% பகுதியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்ற கட்டுக்கதை உலவத் தொடங்கியது.

    சார்லஸ் எட்வர்ட் பிரௌன் செக்வார்ட் என்ற அறிவியல் அறிஞரும் 1876-ல் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். ஒரு சிலர் மட்டுமே மூளையை முழுதாகப் பயன்படுத்துகின்றனர், பெரும் பாலானவர்கள் மூளையின் பெரும் பகுதியைப் பயன்படுத்துவதே இல்லை என்றுகூட எழுதிவிட்டார்.

    பியரி பிளாரென்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியை மிகவும் கொடூரமாகவே நடத்தியிருக்கிறார். அதை விடப் பரிதாபம், சில பிராணிகளின் மூளையை வெட்டி ஆராய்ச்சி செய்துவிட்டு அப்படித்தான் மனிதர்களுக்கும் இருக்கும் என்ற அனுமானத்துக்கு வந்துவிட்டார். இப்போது மூளை நரம்பியல் நிபுணர்களும் பிற அறிஞர்களும் இந்தக் கட்டுக் கதைகளை அடியோடு மறுக்கின்றனர்.

    இரண்டாவது கட்டுக்கதை

    அதே போல மற்றொரு கட்டுக்கதை மூளையின் வலது, இடது பகுதிகள் வெவ்வேறு செயல்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்பது. இடது மூளை தர்க்கரீதியாக ஆராய்வதாகவும் எதையும் விரிவாக ஆராய்வதாகவும் வலது பகுதி கற்பனைவளம் ஊற்றெடுக்கக் காரணமாக இருப்பதாகவும் கருதி

    வருகின்றனர். 1860-ல் ஒருவருடைய மூளையை ஆய்வு செய்து கண்டுபிடித்ததாகக் கூறப்படும் முடிவுகளிலிருந்து இந்த கட்டுக்கதை உருவானது. மூளையின் இடதுபுறத்தில் காயம் பட்டால் ஒருவருடைய மொழியாற்றலில் பாதிப்பு நேரும் என்று அப்போதிலிருந்து கருதப்படுகிறது. மூளையின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளில் ஒட்டுமொத்தமான செயல்திறனில் ஓரளவுக்குப் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என்றாலும், குறிப்பாக இடதுபுறம் முழுக்க இந்தச் செயல்களுக்குப் பொறுப்பு, வலதுபுறம் முழுக்க இந்த வேலைகளைச் செய்கிறது என்பது சரியல்ல. எல்லா செயல்களிலும் மூளையின் இரு பகுதி களும் இணைந்தே செயல்புரிகின்றன.

    பிரதிசெயல் நியூரான்கள்

    சமீபகாலமாக மூளை நியூரான்கள் குறித்துப் புதிய கட்டுக்கதைகள் உலவத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பிரதிசெயல் நியூரான்கள் என்று அழைக்கின்றனர். ஒரு குரங்கு வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுவதைப் பார்த்து, இன்னொரு குரங்கு அதைச் செய்கிறது. இதற்குக் காரணம், பிரதிசெயல் நியூரான்கள் என்கின்றனர். முதல் குரங்கின் செயலை இரண்டாவது குரங்கு தன்னுடைய மூளையில் ஒருமுறை ஒத்திகை பார்ப்ப

    தால் இது நடக்கிறது என்கின்றனர். மனிதர்களிடமும் இத்தகைய குணாதிசயங்கள் இருப்பதால் சிறப்பாக சில துறைகளில் அது பிரதிபலிக்கிறது என்கின்றனர். ஒருவர் பேசுவதைப் போல மற்றொருவர் பேசுவது, ஒருவரைப் போலவே இன்னொருவர் செய்துகாட்டுவது, ஒருவருக்கு நேரிடும் துயரத்துக்கு வருத்தம் தெரிவிப்பது போன்றவற்றுக்குப் பிரதிசெயல் நியூரான்களே காரணம் என்கின்றனர். இந்தத் திறன் குறைந்த வர்களை மூளை பாதிப்புக்குள்ளானோர் என்று வகைப்படுத்துகின்றனர். பிற குழந்தைகளைப் போலப் பேசுவது, படிப்பது, புரிந்து கொள்வது ஆகியவற்றில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பிரதிசெயல் நியூரான்கள் செயல்பாடு குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர். நம்மால் செய்ய முடிந்ததை, அனுபவிக்க முடிந்ததை மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்கின்றனர்.

    சில மாணவர்கள் கும்பலாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் தன்னுடைய சாப்பாட்டில் கரப்பான்பூச்சி இருப்பதாகக் கூறினால், அதைப் பார்க்காவிட்டாலும் கேட்ட மாத்திரத்தில் சிலருக்குக் குமட்டல் ஏற்படுகிறது. இதற்குக் காரணம், பிரதிசெயல் நியூரான்கள்தான் என்கின்றனர். பிரதிசெயல் நியூரான்கள் இல்லாததால் இந்தக் கோளாறு ஏற்படவில்லை, அதன் இயக்கம் சீராக இல்லாததால்தான் இந்தக் கோளாறு என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். வயது முதிர்ச்சியின்போது மூளையில் ஏற்படும் கோளாறு காரணமாகப் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிரதிசெயல் நியூரான்கள் இல்லாததால் அல்ல, அதன் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுதான். எனவே, மூன்றாவது கட்டுக்கதையும் தகர்கிறது.


    jv_66, thenuraj, sumitra and 1 others like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #2004
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    பேரீச்சம்பழம்

    தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.


    jv_66, datchu, sumitra and 1 others like this.

  5. #2005
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Info

    எளிய பாட்டி வைத்தியம்:-

    1. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

    2. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.


    3. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.


    4. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

    5. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

    6. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

    7. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

    8. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

    9. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

    10. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

    11. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

    12. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்


    jv_66, datchu, kkmathy and 2 others like this.

  6. #2006
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Info

    பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க!



    இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது.

    இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில் வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

    குறிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்து வந்தால், உடல் பருமன் குறையும். இங்கு கலோரி குறைவாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு வாருங்கள்.



    காளான்

    காளானில் வைட்டமின் டி மற்றும் செலினியம் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டால் மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.


    வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்திருப்பதால், இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களான வைட்டமின் கே, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும். மேலும் உடல் எடையும் குறையும்.


    அஸ்பாரகஸ்

    அஸ்பாரகஸில் கலோரிகளே கிடையாது. மேலும் இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. அதுமட்டுமின்றி, அஸ்பாரகஸில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது.


    தர்பூசணி

    தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.


    தக்காளி

    சாலட் செய்யும் போது, அதில் மறக்காமல் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும்.


    செலரி

    செலரியில் கலோரிகள் சுத்தமாக இல்லை. மேலும் இதில் வைட்டமின் கே போதிய அளவில் நிறைந்துள்ளது. அத்துடன் இதில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதுவும் அடிக்கடி பசி எடுப்பதை தடுத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.


    ப்ராக்கோலி

    இந்த சூப்பர் உணவுப் பொருளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலும் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவது மிகவும் சிறந்தது.


    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, கலோரிகள் இல்லாததால் உடல் எடையும் குறையும்.


    குடைமிளகாய்

    குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனையும் உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.


    பரங்கிக்காய்

    பரங்கிக்காயில் நீர்ச்சது அதிகம் இருப்பதுடன், வைட்டமின்களும், இதர சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகளும் இல்லை. ஆகவே எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.


    பச்சை இலைக்காய்கறிகள்

    பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கடுகு கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அமிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.

    jv_66, datchu, kkmathy and 2 others like this.

  7. #2007
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    உடல் சூட்டைத் தணிக்கும் முருங்கைப்பூ!

    முருங்கைப்பூ நமது நாட்டில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மருந்து மூலப்பொருளாகும்.


    முருங்கை மரத்தின் இலை, பட்டை, வேர், காய் அனைத்தையுமே ஒவ்வொரு வகையில் மருத்துவச்சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன. கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் முருங்கைப்பூவையும் பிரண்டையையும் வகைக்கு ஒரு படி வீதம் சேகரித்து கொள்ள வேண்டும். சிறு துண்டு தேங்காயை அவற்றுடன் சேர்த்து புட்டு அவிப்பது போல் அவிக்க வேண்டும்.

    பின்னர் இதை பிழிந்து கொடுக்க வயிற்று வலி குணமாகும். நன்கு காய்ச்சிய பசுவின் பாலில் நாலைந்து முருங்கைப் பூக்களைப் போட்டு நாள்தோறும்- சாப்பிட்டு வந்தால் தாது நல்ல புஷ்டி பெறும். முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, பசு வெண்ணெய், ஆகியவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் மேகநோய் எனப்படும் பெண் சீக்கு குணமாகிவிடும். மேநோய்க்கு வேறொரு பக்குவமும் செய்து சாப்பிடலாம். முருங்கைப்பூவை சாறெடுத்துக்கொள்ள வேண்டும்.


    இந்தச் சாற்றில் அரைக்கால் படி அளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் கூட்டி நூறு கிராம் அளவுக்கு வெல்லம் சேர்த்து மூன்று நாட்கள் சாப்பிட்டாலே மேகநோய் தணிந்து விடும். உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ நல்ல முறையில் பயன்படும். முருங்கைப்பூவை கஷாயம் முறையில் பக்குவம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு உடனேயே சரிபடும். பெண்களுக்கு பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிராபத்து ஏற்படக்கூடும்.


    இதற்கு முருங்கைப்பூ பெரிதும் பயன்படுகிறது. முருங்கைப்பூவை நன்றாக அரைத்து ஒரு தேங்காய் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பசுவின் பாலும் தேங்காய் பாலும் படிக்கு அரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 25 கிராம் வெல்லத்தை கூட்டி எல்லாவற்றையும் சேர்த்து காய்ச்சி இலேகிய பதத்தில் இறக்கிவிடவேண்டும். இந்த லேகியத்தை எலுமிச்சை அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடவேண்டும். இவ்வாறு ஒரு வருடம் சாப்பிட்டால் பெரும்பாடு என்னும் உதிரப்போக்கு குணமாகிவிடும்


    jv_66, datchu, sumitra and 1 others like this.

  8. #2008
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    இஞ்சி சாறு சாப்பிடுவதால் சளி, இருமல்விலகும். புளியேப்பம், வாயுப்பொருமல்விலகும். வயிறுஉப்புசம், வயிற்றுவலி, தொப்பை இவைஅனைத்தும்குறையும். தொண்டைவலி, தலைவலி, விக்கல்இவைகள்குறையும்.



    தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒருடம்ளர் மோரில்கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.


    இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்திகூடும். உற்சாகம்ஏற்படும். இளமைபெருகும். இஞ்சிசாறுடன், வெங்காயசாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்தவர நீரிழிவுகுறையும்


    இஞ்சிசாறோடு, தேன்கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டிவீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொப்பை எனும் பெருவயிறு கரைந்துவிடும்


    ஒரு கப் தேநீரில் கொஞ்சம் இஞ்சி, கருமிளகு, கிராம்பு, பிரிஞ்ஜிஇலை, இவை அனைத்தும் சிறிதளவு போட்டு ஒரு நாளைக்கு இரண்டு முறைப் பருகினால் ஜலதோஷம் காணாமல் போய்விடும்.தேநீரில் இஞ்சியை போட்டு குடித்தால் நல்லது


    ஒரு மேஜைக் கரண்டி அளவு தேனில் ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி சாறும் ஒரு மேஜைக்கரண்டி இடித்த ஜீரகப் பொடியும் கலந்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் அதிகரத்தக் கொதிப்பிலிருந்து விடுப்படலாம்.


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #2009
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: இணையத்தில் படித்தது / பிடித்தது / சுட்டது

    இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) சுற்றுலாவுக்கோ,வேலைக்கோ,உறவினரை பார்க்கவோ வருகின்றவர்கள் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரைகளை கொண்டுவர வேண்டாம். இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பல மாத்திரைகளை அமீரகத்தில் தடை செய்திருக்கிறார்கள்.அது தெரியாமல் விலை குறைவாக கிடைக்கிறதே என்ற காரணத்தால் இந்தியாவில் இருந்து தடை செய்யப்பட்ட மருந்துகளை வாங்கி வருபவர்கள் கடும் சிறை தண்டனைக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் 'Tramadol' மருந்துகளை கொண்டு வந்த இந்தியர்கள் 6 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தற்போது அபுதாபி சிறையில் உள்ளனர். இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் 'கசகசா' போதை பொருட்கள் தயாரிக்க உதவும் மூலப்பொருள் என்பதால் அதுவும் UAEல் தடைசெய்யப்பட பொருள்.கசகசாவை கொண்டு வந்தால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை. அப்படி ஏதேனும் மருந்து மாத்திரைகளை UAEக்குள் கொண்டு வந்தே தீர வேண்டும் என்ற நிலை இருந்தால் துபாய் கஸ்டம்ஸ் இணையதளத்திற்கு போய் 'UAEயில் தடை செய்யப்பட்ட மருந்துகள்' பெயர்களை படித்துவிட்டு பிறகு தடை செய்யப்படாத மருந்துகளை மட்டும் எடுத்து வரலாம். - நம்பிக்கை ராஜ்


  10. #2010
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: இணையத்தில் படித்தது / பிடித்தது / சுட்டது

    "யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது போல" என்றொரு வாசகம்,தெரிந்தே செய்யப்படும் தவறுகளுக்கு ஒப்புமையாகச் சொல்லப்படுகிறது.அது மிகத் தவறு.சூரிய வெப்பத்தால் ஏற்படும், Sun-Burn என்னும் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ளவே யானை தன் தலையில் மட்டுமல்ல உடல்முழுவதும் மண்ணை அள்ளிப் பூசிக்கொள்கிறது. யானை தன் கால்களால் கேட்கும் சக்தி கொண்டது.ஒரு யானை கால்களை ஆட்டி.பூமியில் தட்டி தட்டி ஏற்படுத்தும் அதிர்வலைகளை,மற்றொரு யானை--எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்-அந்த அதிர்வலைகளை புரிந்து கொள்ளும். அதே போல் கால்களை தட்டி பதிலையும் சொல்லிவிடும்.மிகச் சிறந்த Cryptographic Communication இது. யானையின் காதுகள் மிகப் பெரிதாக இருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு.யானை தன் காதுகளை கொண்டே தன் உடல் வெப்பநிலையையை கட்டுப்படுத்துகிறது. எனவே தான் யானைகள் காதுகளை ஆட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெண் யானையின் கர்பகாலம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். யானைகள் குழுவாக வாழும் தன்மை கொண்டவை.புதிதாக பிறந்த யானைக் குட்டியை குழுவின் அனைத்து மூத்த யானைகளும் கவனித்துக் கொள்ளும்.அதே போல் குழுவை விட்டு பிரிந்து,பின் நீண்ட நாட்கள் கழித்து குழுவிற்கு திரும்பும் யானையை,மற்ற யானைகள் சேர்ந்து வரவேற்று கொண்டாடும்.மனிதனை விட மிக அதிக பாசப்பினைப்பைக் கொண்டவை. யானைகள் உயிர் சூழியல் சங்கிலியில் மிக முக்கிய இடத்தைக் கொண்டுள்ளன.யானைகள் தங்கள் பெரிய பாதங்களைக் கொண்டு தடம் பதித்து நடக்குமிடங்களினால் ஏற்படும் சிறு சிறு பள்ளங்களில் மழை நீரும்,மற்ற வழிகளில் சேரும் நீரும் தேங்கிக் கொள்ளும்.இது பல நுண்ணுயிரிகளுக்கு நீராதாரமாக உதவுகிறது. அதிதீவிர சைவமான யானைகளுக்கு இயற்கை எதிரிகள் natural Predators என்று யாருமே இல்லை. தன் பல்வேறு சுயநலத் தேவைகளுக்காக யானையையும்,அவற்றின் வாழ்விடமான காட்டையும் சீரழிக்கும் மனிதனைத் தவிர. இன்று சர்வதேச யானைகள் தினம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter